பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 37-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்று 2 போட்டிகள்
17-வது ஐ.பி.எல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதல். கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் பலப்பரீட்சை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Apr 21, 2024 23:00 ISTஇந்தியா தவறான பாதையில் செல்லாது - ராகுல் காந்தி உறுதி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி: “முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏமாற்றம் கிடைத்த பிறகு, பொய்கள் பலன் தராததால் தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார். காங்கிரஸ் கட்சியின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள். இந்தியா தவறான பாதையில்” என்று கூறியுள்ளார்.
-
Apr 21, 2024 22:52 ISTகூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மிஸ் கூவாகம் போட்டி தொடங்கியது
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருநங்கைகள் சார்பில் கூவாகம் திருவிழா 2024 தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பொன்முடி, நடிகை அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
Apr 21, 2024 21:44 ISTதிருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று இரவு 11 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் - தெற்கு ரயில்வே
சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோர் வசதிக்காக திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்றிரவு 11 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் வழியாக சென்னை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 21, 2024 20:36 ISTசெவ்வாய்ப்பேட்டை லாக்-அப் மரணம் புகார்: காவல்துறை விளக்கம்
செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில், இறந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சாந்தகுமார் லாக்-அப் மரணம் தொடர்பான புகார் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில், இறந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சாந்தகுமாரின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. சாந்தகுமாரின் இறப்பிற்கான காரணம், பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரியவரும். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணை நியாயமாக நடைபெற வேண்டி, சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Apr 21, 2024 20:32 ISTகர்நாடகாவில் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
கர்நாடகாவின் உத்தர கன்னடா பகுதியில் உள்ள காளி ஆற்றில் மூழ்கி 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக நதியில் குதித்ததாகக் கூறப்படுகிறது. ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Apr 21, 2024 20:31 ISTதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விடுமுறை முடிந்ததால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்களால், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Apr 21, 2024 19:54 ISTஇலங்கை கார் பந்தயத்தில் விபத்து; 7 பேர் உயிரிழப்பு
இலங்கையில் தியத்தலாவ பகுதியில் நடைபெற்ற கார் பந்தய போட்டியின்போது, பந்தய கார் பாதையை விட்டு பார்வையாளர்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 1 குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
Apr 21, 2024 19:16 ISTதமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களிப்பு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் 39 தொகுதிகளில் 2.12 கோடி ஆண்கள் வாக்களித்துள்ள நிலையில், அதைவிட 8.6 லட்சம் அதிகமாக 2.21 கொடி பெண்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.
-
Apr 21, 2024 18:43 ISTதேர்தல் முடிவை மாற்ற முயற்சி; பா.ஜ.க மீது ஓமர் அப்துல்லா குற்றச்சாட்டு
“மாநிலத்தில் தேர்தல் முடிவை மாற்ற பாஜக முயற்சிக்கிறது ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியா கூட்டணி உடனும் நிற்கிறார்கள்” என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.
-
Apr 21, 2024 18:40 ISTகாங்கிரஸ் கவுன்சிலருக்கு ஜெ.பி நட்டா ஆறுதல்
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர நிரஞ்சன் ஹிரேமத்-ஐ பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி நட்டா சந்தித்துப் பேசினார்.
-
Apr 21, 2024 18:02 ISTநேருவால் முடியாததை மோடி செய்தார்: ஜெ.பி. நட்டா
கர்நாடக மாநிலம் தார்வார்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ஜவஹர்லால் நேரு கரீபி ஹட்டாவோ என்ற முழக்கத்தை முன்வைத்தபோது 50% வறுமை இருந்தது.
இந்திரா காந்தி கரீபி ஹட்டாவோ என்று சொன்னபோது 60% வறுமை இருந்தது. ராஜீவ் காந்தி, 1 ரூபாயில் ஏழைகளுக்கு 15 பைசா தான் சென்றடைந்ததாக ஒப்புக்கொண்டார்.60 ஆண்டுகளில் அவர்களால் செய்ய முடியாத வறுமையை ஒரே அடியில் முடித்துவிடுவேன் என்று ராகுல் காந்தி கூறுகிறார்.
80 கோடி மக்கள் ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பெறுகிறார்கள். இப்போது இந்தியாவில் தீவிர வறுமை 1% க்கும் குறைவாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் இமேஜ் இப்படித்தான் மாறிவிட்டது” என்றார். -
Apr 21, 2024 17:43 ISTபா.ஜனதா சென்ற காங்கிரஸ் தலைவர்கள்; மார்க்சிஸ்ட்
கிட்டத்தட்ட 90 சதவீத காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றுவிட்டனர் என ஆலப்புழா மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஏ.எம். ஆரிஃப் கூறியுள்ளார்.
-
Apr 21, 2024 16:34 ISTமதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்; ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு
மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
-
Apr 21, 2024 16:14 ISTகேரள போக்குவரத்து ஊழியர்கள் 97 பேர் சஸ்பெண்ட்
கேரள போக்குவரத்துத் துறையில் மதுபோதையில் பணியாற்றிய 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்காலிக ஊழியர்கள் 40 பேரை பணி நீக்கம் செய்தும் கேரள போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
-
Apr 21, 2024 15:49 IST’ஆடு ஜீவிதம்’ திரைப்படம் 25 நாட்களில் ரூ.150 கோடி வசூல்
பிரித்விராஜ் நடிப்பில் வெளியான `ஆடு ஜீவிதம்' திரைப்படம் 25 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்துள்ளது
-
Apr 21, 2024 15:28 ISTதமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
-
Apr 21, 2024 15:03 ISTசென்னை வாக்குப்பதிவு நிலவரம்
மக்களவை தேர்தலில் சென்னையில் 55.94% வாக்குப்பதிவு நடந்துள்ளது. 48.69 லட்சம் வாக்காளர்களில் 27.24 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். வடசென்னையில் 60.11%, தென் சென்னையில் 54.17%, மத்திய சென்னையில் 53.96% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
Apr 21, 2024 14:28 ISTதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24, 25 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 21, 2024 14:05 ISTதமிழக உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம்
தமிழக உள் மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 21, 2024 13:54 ISTமாற்று எரிபொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல்
விழுப்புரம் அருகே மாற்று எரிபொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல் வைத்த மாவட்ட நிர்வாகம் தொழிற்சாலையில் இருந்து நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசியதால், வாந்தி, குமட்டல் ஏற்பட்டு 28 பேர் மருத்துவமனையில் அனுமதி தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தலை புறக்கணித்த வேடம்பட்டு கிராம மக்கள் தொழிற்சாலையில் காட்டன் வேஸ்ட், காலாவதியான மருந்து, பழைய பேப்பர்களை கொண்டு எரிபொருள் தயாரிக்கப்பட்டது தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் ஆலைக்கு சீல்
-
Apr 21, 2024 13:53 ISTபெங்களூரு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஜிகினி தொழிற்பேட்டையில் தீ விபத்து
தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக பற்றிய தீ ஞாயிறு விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதம்.
-
Apr 21, 2024 12:57 ISTவிசாரணை கைதி மரணம் - இ.பி.எஸ் கண்டனம்
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் விசாரணைக் கைதி சாந்தகுமார் உயிரிழந்த விவகாரம். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் "பிரேத பரிசோதனையில் சாந்தகுமார் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் இருந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன" தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி "சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே காவல்துறையினர் நடக்க வேண்டும் என முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்".
-
Apr 21, 2024 12:25 ISTதூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறையை அடித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள். தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்.
-
Apr 21, 2024 11:57 ISTகஞ்சா போதையில் போலீசார் மீது தாக்குதல் : 3 பேர் கைது
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் போலீசாரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது பிரேம், ராகுல், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி உமாபதியை தீவிரமாக தேடி வரும் போலீசார் கஞ்சா போன்ற போதை பொருட்கள் எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்து விசாரணை நேற்று 2 இளைஞர்களை தாக்கிய வழக்கில், விசாரணை நடத்த சென்ற போலீசார் மீது, கஞ்சா போதையில் இருந்தவர்கள் தாக்குதல்.
-
Apr 21, 2024 11:24 ISTகேரளாவில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை
கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை; அதை உணர்ந்து கேரளாவை அவமதித்து பொய்களை கூறி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி; பாஜகவை தோற்கடிப்பதே இடது ஜனநாயக முன்னணியின் நோக்கம்; கேரளாவின் ஊழல் பீகார் போன்றது என ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களை பிரதமர் மோடி இழிவுபடுத்தியுள்ளார்; கேரள மாநிலத்தின் சாதனைகளை பொய்களால் மூடி மறைக்க முயல்கிறார் பிரதமர் மோடி- பினராயி விஜயன்
-
Apr 21, 2024 11:21 ISTநிதி ஆயோக்கின் பொறுப்பில் இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார்
கேரளாவுக்கு எதிராகப் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரே குரல் எழுப்புகின்றனர்; நிதி ஆயோக்கின் பொறுப்பில் இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார்; சங்பரிவார் அமைப்புகளை நேரடியாக எதிர்க்க ராகுல் காந்தி முயற்சிக்கவில்லை - கேரள மாநிலம் காசர்கோட்டில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி
-
Apr 21, 2024 10:09 ISTவிஜய்க்காக 10,000 வரிகள் கொண்ட கவிதை எழுதிய இளைஞர்
திருப்பத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்.
தீவிர விஜய் ரசிகரான இவர், கடந்த 16-ம் தேதி நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளுடன் முழு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
இதனையொட்டி, அவரை கவுரவிக்கும் விதமாக யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில், கில்லி திரைப்படத்தின் மறுவெளியீட்டு தினத்தன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
-
Apr 21, 2024 10:08 ISTமதுரை புறப்படும் கள்ளழகர்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று அழகர்கோயிலில் இருந்து மதுரை புறப்படுகிறார் கள்ளழகர். நாளை மறுநாள் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
-
Apr 21, 2024 10:02 ISTதேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை: பிரேமலதா
தேர்தல் ஆணையம் மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. 1.90 கோடி பேர் வாக்களிக்காதது அரசுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனரோ என எண்ணத் தோன்றுகிறது. சென்னை போன்ற மாநகரங்களில் இருப்போர் வாக்களிப்பதை விரும்பவில்லை என்பது வேதனையளிக்கிறது- தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா
-
Apr 21, 2024 09:17 ISTமீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் புது தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.
-
Apr 21, 2024 08:34 ISTதிருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு நாளை( 22,23) ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
-
Apr 21, 2024 08:34 ISTதிருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்
சித்ரா பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்கு நாளை( 22,23) ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
-
Apr 21, 2024 08:12 ISTமதுரையில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு. அவர் கையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
வெளிநாட்டில் பணியாற்றியபோது இவருக்கு மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குண்டு வீசப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்.
-
Apr 21, 2024 07:44 ISTமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
இன்று உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். திருக்கல்யாணத்தைக் காண அதிகாலையில் இருந்தே குவிந்த மீனாட்சி பக்தர்கள்.
வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்காரம். சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 8.35க்கு மேல் 8.59க்குள் ரிஷப லக்கனத்தில் திருக்கல்யாணம்.
#JustIn | மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண காலையிலேயே குவிந்த பக்தர்கள்!#SunNews | #Madurai | #MeenatchiThirukalyanam pic.twitter.com/bPgXnV88w2
— Sun News (@sunnewstamil) April 21, 2024 -
Apr 21, 2024 07:42 IST3 மாவட்டங்களில் மழை
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.