பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 130-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பவானிசாகர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,261 கன அடியில் இருந்து 5,971 கனஅடியாக அதிகரிப்பு. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 85.42 அடியாக உயர்ந்துள்ள நிலையில், 1205 கன அடி நீர் வெளியேற்றம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 25, 2024 21:42 ISTகோவை, நெல்லை தேர்தல் தேதி அறிவிப்பு!
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், அதற்கான மறைமுக தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது
-
Jul 25, 2024 21:20 ISTகாஞ்சி மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் போர்க்கொடி
திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, காஞ்சிபுரம் மேயரை மாற்ற கோரும் எதிர்ப்பு கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். திமுகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், காஞ்சி மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Jul 25, 2024 21:16 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீஸ் கைது செய்தது !
-
Jul 25, 2024 19:46 ISTமேயர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவுரை
மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுத்திடவும் அறிவுறுத்தி இருக்கிறது.
"நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி பதவியிடங்களை நிரப்ப அறிவுரை" என்றும் கூறியுள்ளது.
-
Jul 25, 2024 19:06 ISTமத்திய அமைச்சர் இந்தியில் பேசியதால் எங்களுக்கு எதுவும் புரியவில்லை - துரைமுருகன்
மத்திய அமைச்சரை சந்தித்த பின் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்: “மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதால், அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. கர்நாடகாவில் இருந்து தற்போதைய சூழலில் தடையின்றி தண்ணீர் வருகிறது. புதிய அமைச்சரவை பதவியேற்றபின், துறை சார்ந்த அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சந்திப்பு நடந்தது. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம். முல்லைப் பெரியாறு பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தோம்” என்று கூறினார்.
-
Jul 25, 2024 18:27 ISTதமிழகத்திற்கு கிள்ளி கொடுக்ககூட மத்திய அரசுக்கு மனமில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்
லோக்சபாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன்: “தமிழகத்திற்கு கிள்ளி கொடுக்ககூட மத்திய அரசுக்கு மனமில்லை. பீகார், ஆந்திராவுக்கு அள்ளி, அள்ளி கொடுத்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. ஆந்திராவைத் தவிர ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் பட்ஜெட்டில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
-
Jul 25, 2024 18:06 ISTதமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? ராமரின் மாடலா? - சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடலா, ராமரின் மாடலா? ராமர் எங்கள் முன்னோடி என்ர ரகுபதியின் கருத்திற்கு தி.மு.க-வினர் அமைதி காப்பது ஏன்? ராமர் எங்களின் முன்னோடி என்ற பா.ஜ.க-வின் வர்ணாசிரம குரலை அப்படியே தி.மு.க பேச தொடங்கியுள்ளது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
Jul 25, 2024 17:21 ISTஆதிதிராவிடர் நலத்துறையை பெயர் மாற்றக் கோரி வழக்கு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க கோரிய வழக்கில், பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரை மீது என்ன முடிவெடுக்கப்பட்டது? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. துறையின் பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
-
Jul 25, 2024 17:17 ISTஅ.தி.மு.க ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ் ஆலோசனை
சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடைபெற்றது.
இதுவரை 26 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது. மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் 3,32,773 வாக்குகளை பெற்று 2ம் இடம் பெற்றிருந்தார்.
-
Jul 25, 2024 17:15 ISTகருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் அறியும் கும்பல் கைது
கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் அறியும் கும்பலை சுகாதாரத்துறை அதிகாரிகள் காரில் சென்று விரட்டிப் பிடித்தனர். தர்மபுரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் சென்ற கும்பலை சுகாதாரத்துறை அதிகாரிகள் விரட்டிப் பிடித்தனர்.
-
Jul 25, 2024 17:00 ISTநீர்வளத்துறை அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். -
Jul 25, 2024 16:47 ISTபா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலை மீண்டும் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
-
Jul 25, 2024 16:46 ISTமதகுகள் புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பு
டெல்டா மாவட்டங்களில் விரைவில் சம்பா நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ₹122.6 கோடி செலவில் கல்லணையின் மதகுகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
Jul 25, 2024 16:44 ISTரூ.1 கோடி பணப் பரிவர்த்தனை? அமீர் விளக்கம்
“ரூ.1 கோடி வரை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக கூறிய தகவல் உண்மை இல்லை. சட்ட விரோத பணப் பரிமாற்றத்திலோ செயல்களிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை” என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
-
Jul 25, 2024 16:42 ISTமத்திய அரசு நிதி ஒதுக்க தி.மு.க அழுத்தம் கொடுக்காதது ஏன்? ராஜேந்திர பாலாஜி
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நிதி ஒதுக்காதது தப்பு என்றால் திமுக அழுத்தம் கொடுக்காததும் தப்புதான். தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கக் கோரி தி.மு.க. ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
Jul 25, 2024 16:08 ISTஆசிரியர் சம்பளம்; ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் அல்லாத பணி இடங்களுக்கு வெறும் ரூ.6 ஆயிரம்தான் சம்பளமா? ரூ.6 ஆயிரம் சம்பளத்தில் ஒருவர் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? ஒரு நாளைக்கு ரூ.200 மட்டும் போதுமா? இதுபோன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன? என தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வியெழுப்பி உள்ளது.
-
Jul 25, 2024 14:53 ISTபெயர் மாற்ற திரௌபதி முர்மு முடிவு
குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ ஆகியவற்றின் பெயர்களை ‘கனத்தந்திர மண்டபம்’ மற்றும் ‘அசோக் மண்டபம்’ என மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முடிவு
-
Jul 25, 2024 14:21 ISTகர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம்
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
-
Jul 25, 2024 14:20 ISTகேரளாவில் இன்று கனமழை எச்சரிக்கை
கேரளாவில் வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jul 25, 2024 14:20 ISTநிபா வைரஸ் முன்னெச்சரிக்கை
நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோரிமேடு அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது
- புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவிப்பு
-
Jul 25, 2024 13:55 IST3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 25, 2024 13:54 ISTமாட்டு தொழுவத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
மருதமலை அடிவாரத்தில், மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து புல், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை உணவு பொருட்களை சாப்பிட்ட யானைகள்
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
-
Jul 25, 2024 13:32 ISTமுல்லை பெரியாறு அணை: ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பதில்
முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
அணைகளின் பாதுகாப்பு என்பது அணையின் உரிமையாளர்களான மாநில அரசுகளின் வசமே உள்ளது. அணையின் உரிமையாளரான தமிழக அரசின் நீர்வளத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது
அணையின் ஒட்டுமொத்த நிலை மற்றும் கட்டமைப்பு திருப்திகரமாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேரள எம்.பி. கேள்விக்கு ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தகவல்
-
Jul 25, 2024 13:28 ISTநிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
-
Jul 25, 2024 13:27 ISTசிவகாசியில் ஆணவக்கொலையில் உண்மையில்லை
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு
-
Jul 25, 2024 12:58 ISTகார்த்தி சிதம்பரம் பேச்சு சர்ச்சையான விவகாரம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பொறுப்பாளர் அஜோய் குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு
ஆட்சியில் பங்கு, அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சையான விவகாரம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பொறுப்பாளர் அஜோய் குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு என தகவல் சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது என கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார் 2026 தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார் பொது மேடைகளில் காங்கிரஸ் மாநிலத் தலைமை மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டும் - கார்த்தி சிதம்பரம்
-
Jul 25, 2024 12:57 ISTநீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்
நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் எதிர்ப்பு.
-
Jul 25, 2024 12:56 ISTஸ்டாலினுடன் ஐக்கிய அமீரக அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலினை ஐக்கிய அமீரக அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி இன்று சந்தித்தார்.
-
Jul 25, 2024 12:35 ISTபட்ஜெட்டை கண்டித்து தி.மு.க சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
-
Jul 25, 2024 12:34 ISTஅர்விந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிப்பு.
-
Jul 25, 2024 12:13 ISTஆகஸ்ட் 5ம் தேதி விசாரண : செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு
அடுத்த வாரம் முழுவதும் ‘லோக் அதாலத்’ வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
-
Jul 25, 2024 11:49 ISTமகாராஷ்டிராவில் வெளுத்து வாங்கும் கனமழை
மகாராஷ்டிராவில் வெளுத்து வாங்கும் கனமழை - மும்பை மாநகருக்கு ரெட் அலர்ட் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில்கள் தாமதம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால், கடும் போக்குவரத்து நெரிசல் தானே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
Jul 25, 2024 11:21 ISTகுட்கா வழக்கு : தி.மு.க தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக முந்தைய ஆட்சியில் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் ரத்தை எதிர்த்த மேல் முறையீடு முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் காலமானதால் அவருக்கு எதிரான வழக்கை கை விட்டது உயர் நீதிமன்றம் முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
-
Jul 25, 2024 11:10 IST1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்: சிவசங்கர்
“தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்” -சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்
-
Jul 25, 2024 11:08 ISTஎடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதி வாரியான நிர்வாகிகளுடனான 2ம் கட்ட ஆலோசனை கூட்டம்
சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதி வாரியான நிர்வாகிகளுடனான 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் தொடக்கம்; ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தென்காசி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்பு.
-
Jul 25, 2024 11:07 ISTகுற்றால அருவி பகுதியில் மது போதையில் நடனமாடிய இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்
குற்றால அருவி பகுதியில் மது போதையில் நடனமாடிய இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர் .மெயின் அருவி நடைபாதை பகுதியில் நள்ளிரவில் மது போதையில் குளிக்க வந்த சில இளைஞர்கள் ப்ளூடூத் ஸ்பீக்கரில் சத்தமாக பாடல் வைத்து நடனமாடினர் இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
-
Jul 25, 2024 10:40 IST’தமிழ்ப் புதல்வன்’ திட்டம் - நிதி ஒதுக்கீடு
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த ₹360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
இத்திட்டத்திற்கு தகுதி பெறுவதற்கான விதிமுறைகளும் வெளியீடு
-
Jul 25, 2024 10:39 ISTவிஷச் சாராய வழக்கு - குண்டர் சட்டம் பாய்கிறது
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் எதிரொலியாக 13 கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் - போலீசார் அதிரடி நடவடிக்கை
கள்ளச்சாராய வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது.
விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 11 முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது - சிபிசிஐடி போலீசார் திட்டம்
11 பேரும் கள்ளச்சாராய விற்பனை, கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து வந்துள்ளதாக போலீஸ் தகவல்.
-
Jul 25, 2024 10:08 ISTதங்கம் விலை மேலும் குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் சரிந்துள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை.
22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து 6 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி. மூன்றே நாளில் தங்கம் சவரனுக்கு 3040 ரூபாய் குறைந்துள்ளது.
இறக்குமதி வரி 10%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை
-
Jul 25, 2024 09:57 ISTதுரைமுருகன் டெல்லி பயணம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்
இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்
காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேச உள்ளதாக தகவல்
காவிரியில் உரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல்
-
Jul 25, 2024 09:57 ISTஅண்ணா பல்கலை.திடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்பு
தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அறிக்கை கேட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி
அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்பு
2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர்
நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிப்பு
-
Jul 25, 2024 09:05 ISTதமிழகத்திற்கு 56,757 கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 56,757 கனஅடி நீர் திறப்பு
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16,792 கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 39,965 கனஅடியும் என மொத்தம் 56,757 கனஅடி நீர் தமிழ்நாட்டிற்கு திறப்பு
-
Jul 25, 2024 08:53 ISTகாவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்.
பிருத்விராஜ் தற்போது 15 நாள் காவலில் சேலம் சிறையில் உள்ளார். அவரை இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
-
Jul 25, 2024 08:52 IST4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு, தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் - தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
-
Jul 25, 2024 07:47 ISTசெந்தில் பாலாஜி வழக்கு - இன்று மீண்டும் விசாரணை
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் செந்தில் பாலாஜி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை. நேற்றைய விசாரணையின் போது அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் பதிலோடு வர உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைப்பு
-
Jul 25, 2024 07:46 ISTநாளை தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை (ஜூலை 26) தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்;
இந்தியா சார்பில் 117 பேர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.