பெட்ரோல், டீசல் விலை
663 நாட்களுக்குப் பிறகு கடந்த 14-ம் தேதி மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.1.88 மற்றும் டீசலுக்கு ரூ.1.90 குறைத்தது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75 காசுகளாகவும், டீசல் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2786 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 253 மில்லியன் கன அடியாக உள்ளது.
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 448 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 19, 2024 22:56 ISTதி.மு.க தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்? புதிய அறிவிப்பு
திமுக எம்.பி., கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mar 19, 2024 22:54 ISTபைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுங்கள்
"பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது. "பைக் சாகசம் செய்வோரை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பைக் ரேஸ், பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுங்கள் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பைக் கூறியுள்ளார்.
-
Mar 19, 2024 21:46 ISTஅ.ம.மு.க மற்றும் ஓபிஎஸ் உடன் பா.ஜ.க நாளை தொகுதி உடன்பாடு
கூட்டணி கட்சிகளுடன் நாளை தொகுதி உடன்பாடு மேற்கொள்கிறது பாஜக. அமமுக மற்றும் ஓபிஎஸ் உடன் பாஜக நாளை தொகுதி உடன்பாடு மேற்கொள்கிறது
-
Mar 19, 2024 21:45 ISTஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய தம்பதி கைது
2,500 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.90 கோடி மோசடி செய்த பிரீஜா - மதுசூதனன் தம்பதி கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1,620 கோடி வரை மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ளது. சென்னை செனாய் நகரில் ஏபிஎம் ஆக்ரோ என்ற ஹிஜாவு நிறுவனத்தின் துணை நிறுவனத்தினை தொடங்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் ஹிஜாவு மோசடி வழக்கில் தம்பதி கைது
-
Mar 19, 2024 21:45 ISTஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய தம்பதி கைது
2,500 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.90 கோடி மோசடி செய்த பிரீஜா - மதுசூதனன் தம்பதி கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1,620 கோடி வரை மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ளது. சென்னை செனாய் நகரில் ஏபிஎம் ஆக்ரோ என்ற ஹிஜாவு நிறுவனத்தின் துணை நிறுவனத்தினை தொடங்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதியர் ஹிஜாவு மோசடி வழக்கில் தம்பதி கைது
-
Mar 19, 2024 19:48 ISTபெங்களூரு பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா கைது
மதக் கலவரத்தை தூண்டியதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூரியாவை கைது செய்தது பெங்களூரு போலீஸ்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. -
Mar 19, 2024 19:09 ISTபுதுச்சேரியில் இருந்து விடைபெற்றார் தமிழிசை; காவலர்கள் மரியாதை
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த, தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
-
Mar 19, 2024 18:54 ISTநாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி : ப. சிதம்பரம் கருத்து
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்: “நாட்டில் உள்ள 135 கோடி மக்களின் ஒரே நம்பிக்கையாக ராகுல் காந்தி உள்ளார். பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய ஒரே தலைவர் ராகுல் காந்திதான். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நீதியை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் ராகுல் காந்தி” என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 19, 2024 18:51 ISTசரத்பவார் அணிக்கு இசைக் கருவி ஊதும் மனிதன் சின்னம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சரத்பவார் அணிக்கு இசைக் கருவி ஊதும் மனிதன் சின்னத்தைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த சரத் பவார் அணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
Mar 19, 2024 18:44 ISTமோடிக்குதான் தூக்கம் போய்விட்டது - அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்த்து, தி.மு.க-வுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்த நிலையில், அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடிக்குதான் தூக்கம் போய்விட்டது. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு தோல்வி என தெரிந்துவிட்டதால்தான் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். எங்கள் கையில் வெற்றிக்கனி உள்ளதால் நன்றக ஓய்வெடுத்து களப்பணி ஆற்றுவோம். ஆளுநர் ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ” என்று கூறினார்.
-
Mar 19, 2024 17:57 ISTவேட்புமனு தாக்கல் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு; வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டும் அனுமதி - தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் வழிக்காட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
-
Mar 19, 2024 17:34 ISTஅ.தி.மு.க (ஒ.பி.எஸ்) என்ற பெயர் கேட்ட ஓ.பி.எஸ்; நிராகரிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க மனு
அ.தி.மு.க கட்சி சார்பில் தேர்தல் ஆவணங்களில் தான் கையெப்பமிட வேண்டும் அல்லது தனக்கும் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும், தனக்கு அ.தி.மு.க (ஒ.பி.எஸ்) என்ற பெயர் அளிக்க வேண்டும் என்ற ஓ. பன்னீர்செல்வத்தின் மனுவை நிராகரிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பா. இராம்குமார் ஆதித்தன், கே. சி. சுரேன் பழனிச்சாமி மனு அளித்துள்ளனர்.
-
Mar 19, 2024 17:29 ISTஉதகையில் 2 சர்வதேச பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
உதகையில் உள்ள 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
Mar 19, 2024 17:26 IST‘அபத்தம், ஆதாரமற்றது’: அருணாச்சல பிரதேசம் மீது உரிமை கோரும் சீனாவைச் சாடிய இந்தியா
அருணாச்சலப் பிரதேசம் 'சீனாவின் உள்ளார்ந்த பகுதி' என்று சீன ராணுவம் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கருத்துக்கள் வந்துள்ளன. அருணாச்சலப் பிரதேசம் மீதான சீனாவின் சமீபத்திய கூற்றுக்கள் "அபத்தமானது" என்று வெளியுறவு அமைச்சகம், செவ்வாய்க்கிழமை கூறியது. அந்த மாநிலம் “எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும்” என்று கூறியுள்ளது.
“இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது அபத்தமான உரிமைகோரல்களை முன்வைத்து சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களை நாங்கள் கவனித்துள்ளோம். இது சம்பந்தமாக ஆதாரமற்ற வாதங்களைத் திரும்பத் திரும்பக் கூறுவது, அத்தகைய கூற்றுகளுக்கு எந்த செல்லுபடியையும் அளிக்காது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது. அதன் மக்கள் எங்கள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களிலிருந்து தொடர்ந்து பயனடைவார்கள்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Mar 19, 2024 16:53 ISTமோடியின் பிரசார நிகழ்ச்சிக்கு பள்ளி குழந்தைகள் அழைத்து வரப்பட்ட விவகாரம்; விசாரணை நிறைவு
பிரதமர் மோடியின் பிரசார நிகழ்ச்சிக்கு பள்ளி குழந்தைகள் அழைத்து வரப்பட்ட விவகாரத்தில் கோவை சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அழகுவடிவிடம் நடைபெற்ற 3 மணி நேரம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நிறைவடைந்த நிலையில் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Mar 19, 2024 16:30 ISTஅ.தி.மு.க விவகாரம்; தேர்தல் ஆணையத்தில் புதிய மனு
அ.தி.மு.க வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் போல, அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனுக்கே அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
Mar 19, 2024 16:00 ISTசி.ஏ.ஏ சட்டத்திற்கு தடை கோரி வழக்கு; 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை கோரிய இடையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி 20 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இடையீட்டு மனுக்களுக்கு பதில் அளிக்க அவகாசம் தேவை என மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். அப்படி என்றால் புதிய சட்டத்தின் கீழ் யாருக்கும் குடியுரிமை வழங்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளிக்கட்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்த 236 மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளோம்? உத்தரவிடாத மனுக்களுக்கும் உத்தரவிட வேண்டியுள்ளது என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்
-
Mar 19, 2024 15:51 ISTரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெகுநேரமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவர் வெங்கடேசன், மனைவியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Mar 19, 2024 15:35 ISTசீமான் வழக்கு; நடிகை விஜயலட்சுமி ஆஜராக அவகாசம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி நேரிலோ, காணொலி வாயிலாகவோ ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2024 15:14 ISTஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம் - ஸ்டாலின் அறிக்கை
ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம். ஒரே இலக்குடன் தி.மு.க.,வுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தியா கூட்டணி வெற்றி பெறவும், ஆட்சி மாற்றம் நிகழவும் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்
-
Mar 19, 2024 14:50 ISTதி.மு.க-வின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்
"சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்" "பாரதியார் சக்தியின் வடிவில் இந்திய அன்னையை பாடினார்" "சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு பாடம் புகட்டும், இது மோடியின் உத்தரவாதம்" "உங்களுடைய சேவகனான இந்த மோடி, பெண்களின் நலனுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்" "தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது" "இன்று பெண்கள் சக்தி மோடியின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறது" "அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நலத்திட்டங்கள் இன்னும் வேகமாக பெண்களுக்கு வந்து சேரும்" "ஜெயலலிதாவை திமுகவினர் எந்தவிதமாக நடத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும்" "திமுகவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்" "ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுக, காங்கிரஸ்" "திமுக, காங்கிரஸின் ஊழலை பற்றி பேசினால் ஒரு நாள் போதாது" "தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி நிதி வழங்கப்படுகிறது" "மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது"- மோடி
-
Mar 19, 2024 14:43 ISTகாங்கிரஸ், தி.மு.க கூட்டணி சக்தியை அழித்துவிடுவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியுமா?: மோடி
காங்கிரஸ், திமுக கூட்டணி சக்தியை அழித்துவிடுவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியுமா?" "இந்தியா கூட்டணி பலமுறை இந்து தர்மத்தை அவமதித்துள்ளது" "வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை" "பிற மதங்களை பற்றி இந்தியா கூட்டணி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை" "ஆனால் இந்து மதம் குறித்து பேச இந்தியா கூட்டணி ஒரு விநாடி கூட தயங்கியதில்லை" "நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததை இவர்கள் அவமதித்தார்கள்" "செங்கோல் இங்கிருக்கும் இந்து சமய மடங்களை குறிக்கிறது என்பதால் அதனை அவமதித்தார்கள்- மோடி
-
Mar 19, 2024 14:25 IST5வது தலைமுறையும் ஆட்சிக்கு வரவேண்டும் என தி.மு.க நினைக்கிறது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவினர் தொடர்ந்து இழிவுபடுத்தினர். 5வது தலைமுறையும் ஆட்சிக்கு வரவேண்டும் என தி.மு.க நினைக்கிறது; காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் எனக்கு உத்வேகம் அளித்தது.- மோடி
-
Mar 19, 2024 14:19 ISTசேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன் : பிரதமர் மோடி
பாரத அன்னை வாழ்க என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என பிரதமர் மோடி தமிழில் பேச்சு சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழில் பேச்சு இந்த முறை 400க்கு மேல், ஜூன் 4ல் 400க்கு மேல் என தமிழில் பிரதமர் மோடி முழக்கம்-
-
Mar 19, 2024 14:06 ISTபெண்கள் தான் பா.ஜ.க-வின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்கள்
தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது இலக்கு. பெண்கள் தான் பா.ஜ.க-வின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்கள்.சுப்பிரமணிய பாரதி வழியில் நானும் பெண் சக்திகளை வழிபடுகிறேன். "இந்து மதத்தைத் தவிர பிற மதங்களை திமுக - காங்கிரஸ் பேசுவதில்லை; I.N.D.I.A கூட்டணியில் இந்து மதத்திற்கு எதிராக பேசுகின்றனர்- பிரதமர் மோடி
-
Mar 19, 2024 13:54 ISTகாங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இந்து மதத்தை திட்டமிட்டு தாக்குகிறது
காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இந்து மதத்தை திட்டமிட்டு தாக்குகிறது. நேரம் கிடைக்கும்போது எல்லாம் இந்து மதத்தை தாக்கி வருகின்றனர்- பிரதமர் மோடி
-
Mar 19, 2024 13:47 ISTதமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கும், எனக்கும் கிடைக்கும் ஆதரவை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது;
“தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கும், எனக்கும் கிடைக்கும் ஆதரவை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது; தமிழ்நாடு வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும்” - சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
-
Mar 19, 2024 13:45 ISTராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும்: மோடி
பா.ம.க-வின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது; ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும்" - பிரதமர் நரேந்திர மோடி
-
Mar 19, 2024 13:44 ISTபிரதமர் மோடிக்கு வெள்ளி பேழையில் ஜவ்வரிசி பரிசு
சேலத்தில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் பிரதமர் மோடிக்கு வெள்ளி பேழையில் ஜவ்வரிசி பரிசு.
-
Mar 19, 2024 13:26 ISTசேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
-
Mar 19, 2024 13:25 ISTசேலம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
-
Mar 19, 2024 13:15 ISTசத்ய பிரத சாகு பேட்டி
மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக நாளை வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்படும்
பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் வரும் 30 தேதி தொடங்க உள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு புத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுத்து முடிக்கப்படும்
- தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி
-
Mar 19, 2024 13:13 ISTதிரெளபதி அம்மன் கோயிலை நீதிமன்றம் அனுமதி
சட்டம் ஒழுங்கு பிரச்னையால் கடந்தாண்டு மூடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை நியமிக்கவும் அறநிலையத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவு
அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் கோயில் மூடப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை
-
Mar 19, 2024 13:13 ISTஅன்புமணி ராமதாஸ் பேச்சு
மகிழ்ச்சியோடு பாஜக கூட்டணியில் இணைந்திருக்கிறோம் - சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
-
Mar 19, 2024 13:12 ISTமாம்பழம் சின்னத்தில் பாமக போட்டி
மக்களவை தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறது பாமக
ஆட்டோ ரிக்ஷா சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அச்சின்னம் நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
-
Mar 19, 2024 12:46 ISTமதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது;
அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்
-
Mar 19, 2024 12:46 ISTதூத்துக்குடி குழந்தை கடத்தல் சம்பவம்
தூத்துக்குடியில் கடந்த 9ம் தேதி சாலையில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் 4 மாத குழந்தை திருடப்பட்ட வழக்கில், இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் மேலும் 3 குழந்தைகள் அவர்களிடம் இருந்து மீட்பு
மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உடன் மாவட்ட எஸ்.பி. ஆலோசனை
-
Mar 19, 2024 12:14 ISTதமிமுன் அன்சாரி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு;
சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டுமானால், I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்
- மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
-
Mar 19, 2024 12:14 ISTநாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு
-
Mar 19, 2024 11:53 ISTபாமக மூழ்குகிற கப்பலில் ஏறியுள்ளது- செல்வப்பெருந்தகை
மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர்
வட இந்தியாவில் ஏதாவதொரு தொகுதியில் தமிழிசை போட்டியிடலாம்
பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது அவர்களின் விருப்பம்
பாமக மூழ்குகிற கப்பலில் ஏறியுள்ளது- செல்வப்பெருந்தகை
-
Mar 19, 2024 11:46 ISTபானை சின்னத்தில் போட்டி- திருமாவளவன்
சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிடுகிறேன்;
I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது;
மக்களவைத் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளோம்;
பாஜகவை வீழ்த்துவதுதான் மக்களின் வேட்கையாக உள்ளது
- திருமாவளவன் பேட்டி
-
Mar 19, 2024 11:45 ISTதிருமாவளவன் பேட்டி
இந்த தேர்தல் மக்களுக்கும் பாஜக தலைமையிலான சங் பரிவார் கும்பலுக்கும் இடையேயான யுத்தம்
திமுக அதிமுக எதிரெதிர் அணியாக இருந்தாலும் சமூகநீதி என்று வந்துவிட்டால் அவர்கள் ஒருங்கிணைந்த சிந்தனை உடையவர்கள்.. ஆனால் பாஜக அப்படி அல்ல
- தொல்.திருமாவளவன் பேட்டி
-
Mar 19, 2024 11:23 ISTமக்களவைத் தேர்தல் 2024 - திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர்
-
Mar 19, 2024 11:21 ISTகோவை மாவட்ட ஆட்சியர் உறுதி
கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்ததாக புகார்;
தேர்தல் பரப்புரையில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்;
மாணவர்களை ஈடுபடுத்தியது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளோம்;
விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி
-
Mar 19, 2024 11:20 ISTதேர்தல் ஆணையத்திடம் புகார்
தேர்தல் விதிகளை மீறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கோவையில் பிரச்சாரம் செய்துள்ளார்;
பள்ளி குழந்தைகளை தெருவில் நிறுத்தி வரவேற்பு வழங்குவது போல் செய்தது விதிமுறை மீறல்;
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்
- சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன்
-
Mar 19, 2024 11:20 ISTமோடி சேலம் வருகை
பிரதமர் மோடி மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார்
பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்…
பிரதமர் வருவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
-
Mar 19, 2024 11:19 ISTஅன்புமணி ராமதாஸ் பேட்டி
2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் கூட்டணி முடிவை எடுத்துள்ளோம்.
மக்கள் மனதில் ஆழமான ஒரு மாற்றம் வேண்டும் என்ற கருத்துக்கேற்ப இன்று கூட்டணி முடிவானது
- பாஜக-பாமக கூட்டணி ஒப்பந்தத்துக்குப்பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
-
Mar 19, 2024 11:01 ISTசேலம் வரும் மோடி: பலத்த பாதுகாப்பு
பிரதமர் வருவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.10 ஆண்டுகளுக்கு பின் சேலம் வரும் பிரதமர் மோடி. மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும். கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார் பிரதமர். பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
-
Mar 19, 2024 10:54 ISTBMW பைக்கில் வலம் வரும் மஞ்சு வாரியர்
கேரள மாநிலம் கொச்சியில் நடிகை மஞ்சு வாரியர் தனது BMW பைக்கில் வலம் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகர் அஜித்குமாருடன் துணிவு படத்தில் நடித்த போது, அவருடன் லடாக்கிற்கு பயணம் செய்த மஞ்சுவாரியர், பின்னர் பைக் ஓட்ட கற்றுக் கொண்டு, ஓட்டுநர் உரிமம் பெற்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் BMW GS 1250 என்ற பைக்கை வாங்கிய மஞ்சு வாரியர், கொச்சியில் ஜாலியாக உலா வரும் காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Mar 19, 2024 10:53 ISTஜார்க்கண்ட் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு
தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்புகளை, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார். புதுச்சேரி, தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசையின் ராஜினாமா ஏற்பு- குடியரசுத் தலைவர் முர்மு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.