Advertisment

Tamil News Highlights: தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு

Tamil News Live Updates- 17 Mar 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Selva Perunthagai

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

663 நாட்களுக்குப் பிறகு கடந்த 14-ம் தேதி மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.1.88 மற்றும் டீசலுக்கு ரூ.1.90 குறைத்தது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75 காசுகளாகவும், டீசல் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 72.08% நீர் இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம் - 81.78%, புழல் - 82.42%, பூண்டி - 62.7%, சோழவரம் - 27.38%, கண்ணன்கோட்டை - 90.2%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 • Mar 17, 2024 22:33 IST
  10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார் மோடி - டிடிவி தினகரன்

  10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார் • Mar 17, 2024 21:59 IST
  மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்ற பா.ஜ.க. பற்றி இ.பி.எஸ் அறிக்கை விடாதது ஏன்? - டி.ஆர்.பாலு

  மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்று அம்பலப்பட்டுள்ள பா.ஜ.க. பற்றி பழனிசாமி அறிக்கை விடாதது ஏன்?. ஒரு நிறுவனத்தை குறிப்பிட்டு, பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி  என தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார் • Mar 17, 2024 20:49 IST
  பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு

  பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார். • Mar 17, 2024 20:09 IST
  தேர்தல் அல்ல கொள்கை யுத்தம் - திருமாவளவன்

  நடைபெற உள்ளது சாதாரண தேர்தல் அல்ல, கொள்கை யுத்தம், பாசிச சக்திகளுக்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் போர். நாட்டின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி என வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார் • Mar 17, 2024 19:49 IST
  இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் அச்சத்தில் உள்ளார் - ஸ்டாலின்

  இந்திய கூட்டணியை கண்டு பிரதமர் அச்சத்தில் உள்ளார். பா.ஜ.க.,வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு என மும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார் • Mar 17, 2024 19:26 IST
  இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

  இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார் • Mar 17, 2024 19:12 IST
  தமிழ்நாட்டின் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டிய வெயில்

  மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. • Mar 17, 2024 18:50 IST
  சூதாட்ட நிறுவனத்திடம் ரூ.500 கோடி பெற்ற தி.மு.க: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார். • Mar 17, 2024 18:37 IST
  சாத்தான்குளத்தில் 2 இளைஞர்கள் கைது

   

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சாகத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். • Mar 17, 2024 18:01 IST
  மோடி கோவை வருகை; சரத் குமார் அழைப்பு


  பிரதமர் நரேந்திர மோடி கோயம்புத்தூர் வரும் நிலையில் மக்களுக்கு அழைப்பு விடுத்து நடிகர் சரத் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பா.ஜ.க.வினர் பகிர்ந்துவருகின்றனர். • Mar 17, 2024 17:29 IST
  அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை தேதிகள் மாற்றம்

   

  அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இங்குள்ள வாக்குகள் ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. • Mar 17, 2024 17:28 IST
  தேர்தல் பத்திரங்கள்: ரூ.6 கோடி பெற்ற அ.தி.மு.க


  தேர்தல் பத்திரங்கள் மூலமாக அ.தி.மு.க. பெற்ற ரூ.6 கோடியில் சி.எஸ்.கே அணி நிர்வாகம் ரூ.4 கோடிக்கும் மேல் அளித்துள்ளது. அப்போது பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ் தேர்தல் நிதி பத்திரங்களை வழங்கியுள்ளார். • Mar 17, 2024 16:35 IST
  ஆட்டோ சின்னம் கோரும் நாம் தமிழர் கட்சி?


  நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தை வழங்க கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகி உள்ளது. • Mar 17, 2024 16:21 IST
  தமிழ்நாட்டிற்கான தேர்தல் தேதி அறிவிப்பில் அரசியல் தலையீடு உள்ளது - திருமாவளவன் குற்றச்சாடு

  தமிழ்நாட்டிற்கான தேர்தல் தேதி அறிவிப்பில் அரசியல் தலையீடு உள்ளது என்றும் வேட்புமனு தாக்கலுக்கு குறைந்த நாட்களே உள்ளதை சுட்டிக்காட்டி வி.சி.க தலைவர் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். • Mar 17, 2024 16:18 IST
  தேர்தல் நிதி பத்திரங்கள் : தி.மு.க.வுக்கு 500 கோடி கொடுத்த ஒரே நிறுவனம்  தேர்தல் பத்திரங்கள் வழியாக அரசியல் கட்சிகள் நிதி திரட்டி வந்தன. இந்த விவகாரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.
  இந்த நிலையில் தி.மு.க. தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக பெற்ற ரூ.656.5 கோடியில் மார்டினின் ஃப்யூச்சல் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடி நிதி பெற்றுள்ளது.  • Mar 17, 2024 16:18 IST
  தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க-வுக்கு ரூ. 509 கோடி நன்கொடை தந்த மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம்

  தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க பெற்ற ரூ.656.5 கோடியில் -வுக்கு ரூ. 509 கோடியை மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் நன்கொடை தந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக காங்கிரஸ் கட்சி ரூ. 1,334.35 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. • Mar 17, 2024 16:14 IST
  சிக்கிம் அருணாசலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  சிக்கிம் அருணாசலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 தேதிக்கு பதில் ஜூன் 2-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. • Mar 17, 2024 15:37 IST
  அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

  கடந்த வாரம் வியாழக்கிழமை அதன் இணையதளத்தில் தரவுகளின் முதல் தொகுப்பைப் பதிவேற்றியபோது, வெளிப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக தொடர்ந்து மற்றும் திட்டவட்டமாக எடைபோடுவதாக தேர்தல் ஆணையம் கூறியது. ஏப்ரல் 12, 2019 மற்றும் நவம்பர் 2, 2023 அன்று உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளுக்கு இணங்க, ஏப்ரல் 12, 2019-க்கு முன் விற்கப்பட்ட மற்றும் பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. சீல் வைக்கப்பட்ட கவரில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கவரில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. • Mar 17, 2024 15:11 IST
  அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு: திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது

  குஜராத்தில் நடந்த ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வின்போது, திருடியதாக திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அம்பானி இல்ல திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 10 லட்சம், லேப்டாப் திருடப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 5 பேரை டெல்லியில் கைது செய்தனர். • Mar 17, 2024 14:29 IST
  குஜராத் பல்கலை. விடுதியில் ‘ரம்ஜான் தொழுகையில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்; 4 பேர் காயம்

  ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட விடுதியில் தொழுகை நடத்தும் போது தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலின் ஆரம்ப அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் சனிக்கிழமை இரவு நமாஸ் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 4 வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர். • Mar 17, 2024 13:32 IST
  பா.ஜ.க கையும் களவுமாக பிடிபட்டுள்ளது

  தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பா.ஜ.க கையும் களவுமாக பிடிபட்டுள்ளது தேர்தல் நிதி திரட்ட யார் யாருக்கு பாஜக அழுத்தம் கொடுத்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பல நிறுவனங்களிடமிருந்து பல ஆயிரம் கோடிகளை வசூலித்தது நிரூபணமாகியுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • Mar 17, 2024 12:18 IST
  கோவையில் பிரதமர் மோடி நாளை பேரணி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

  கோவையில் பிரதமர் மோடி நாளை பேரணி கோவையில் நாளை மாலை பேரணியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி இரவு கோவையில் தங்கியுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.  • Mar 17, 2024 12:15 IST
  பறக்கும் படையினர் தீவிர சோதனை

  தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதிரடி சோதனை ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி அருகே ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 1.95 லட்சம் ரூபாய் பணமும் வாணியம்பாடியில் 2 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல். • Mar 17, 2024 12:15 IST
  கடற்கொள்ளையர்களை சிறைபிடித்த இந்திய கடற்படையினர்

  கடந்த டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை மீட்ட இந்திய கடற்படையினர் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 35 கடற்கொள்ளையர்கள் சிறைபிடிப்பு 1400 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் நடைபெற்ற சம்பவம் சரக்கு கப்பலை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்து நேற்று மீட்டுள்ளனர் மீட்பு பணியின் போது கடற்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலில் இருந்த பல்கேரியா, மியான்மர், அங்காலா நாடுகளை சேர்ந்த 17 பேர் மீட்பு. • Mar 17, 2024 11:37 IST
  தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவி வருகிறது

  “இந்தியா கூட்டணி மக்களுக்கு எதிரான கூட்டணி; தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவி வருகிறது; இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுக்க முடியும்; மத்திய பாஜக அரசை அதானி, அம்பானி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திர பட்டியலில் அவர்கள் பெயர் இல்லாதது ஏமாற்றம் அளித்திருக்கும்” - வானதி சீனிவாசன் • Mar 17, 2024 11:36 IST
  காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி அளித்த நிதியே அதிகம்

  “நாளை கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது; காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி அளித்த நிதியே அதிகம்” - வானதி சீனிவாசன் • Mar 17, 2024 11:36 IST
  பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும்: வானதி சீனிவாசன்

  “பிரதமர் நரேந்திர மோடி பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்; பிரதமரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28 பைசா என விமர்சனம் செய்வதா?; பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும்” - கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேட்டி • Mar 17, 2024 11:28 IST
  ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு: மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

  திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, நகர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மது கடைகள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு! • Mar 17, 2024 10:58 IST
  ஓரிரு நாளில் கூட்டணி முடிவாகும்: ஓ.பி.எஸ்

  இரண்டு, மூன்று நாட்களில் கூட்டணி முடிவாகும். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதே நிலைப்பாடு தான் - ஓ.பன்னீர்செல்வம் • Mar 17, 2024 10:40 IST
  நிவாரணத் தொகை தருவது ‘பிச்சை': நிர்மலா சீதாராமன்

  அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை' எனக் குறிப்பிட்டு பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ரூ.500, ரூ.1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. 

  எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம வாழத் தேவையில்லை- நிர்மலா சீதாராமன் • Mar 17, 2024 10:11 IST
  கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு. அவருக்கு 9வது முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. கெஜ்ரிவால் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவு.  • Mar 17, 2024 09:53 IST
  மும்பை புறப்பட்டார் ஸ்டாலின்

  ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  இன்று மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் யாத்திரை நிறைவடைகிறது. அதில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். 

  இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.  • Mar 17, 2024 09:53 IST
  மும்பை புறப்பட்டார் ஸ்டாலின்

  ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  இன்று மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் யாத்திரை நிறைவடைகிறது. அதில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். 

  இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.  • Mar 17, 2024 09:20 IST
  தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் 

  தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட், அறைகள் வசதி செய்து தரப்படும். நேரில் வரும் தகுதி வாய்ந்த பக்தர்கள் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் டிக்கெட். தேர்தல் விதிமுறை அமலால் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களின் பேரில் ஒதுக்கீடு செய்ய இயலாது. விஜபி பிரேக் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய இயலாது- திருப்பதி தேவஸ்தானம்  • Mar 17, 2024 09:07 IST
  வேட்பாளர்கள் குற்றப் பின்னணி மக்களுக்கு தெரிய வேண்டும்

  குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து ஊடகங்கள் வழியாக 3 முறை மக்களுக்கு தகவல் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையம் • Mar 17, 2024 09:05 IST
  ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

  பேரூர் வேடப்பட்டி அருகே உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானையால், பொதுமக்கள் அச்சம். யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரம் • Mar 17, 2024 07:58 IST
  இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து சென்னை

  சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் 44 புறநகர் ரயில்கள் ரத்து. பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து • Mar 17, 2024 07:57 IST
  மகளிர் டி20 இறுதிப்போட்டி: டெல்லி Vs பெங்களூரு

  மகளிர் ப்ரீமியர் லிக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்களூரு அணிகள் இன்று மோதல். 

  WPL டி20 கிரிக்கெட் தொடர் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை

  டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது • Mar 17, 2024 07:56 IST
  கரும்பு விவசாயி சின்னம் வழக்கு: இன்று விசாரணை

  நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கு - இன்று விசாரணை என தகவல்

  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இன்று அவசர வழக்காக விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் .

  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் நவ்நீத் துக்கர் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை. 

  நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக் கிழமையான இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படும் என தகவல்Tamilnadu Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment