Tamilnadu: பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2862 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 105 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 352 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 15, 2024 07:06 IST4வது கட்ட மக்களவைத் தேர்தலில் 68.24% வாக்குப்பதிவு
4வது கட்ட மக்களவைத் தேர்தலில் 68.24% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
May 14, 2024 23:36 ISTசென்னை, ஈ.சி.ஆரில் கார் விபத்து : 3 இளைஞர்கள் மரணம்
சென்னை, ஈ.சி.ஆரில் அதிவேகமாக வந்த கார், குறுக்கே வந்த மாடு மீது மோதிய பின் மரத்தில் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 14, 2024 21:49 ISTபேருந்தில் இரு பயணிகளிடையே மோதல் : போலீஸ் விசாரணை
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில், 17டி பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கூட்ட நெரிசல் காரணமாக இருக்கையில் அமர்வது தொடர்பான எழுந்த மோதலில் பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இரு பயணிகளுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 14, 2024 21:46 ISTசவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் தேவையற்றது : சீமான்
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊடகவிலயாலளா பெலிக்ஸ் ஜெரால்டு மீதான தொடர் ஒடுக்குமுறையை கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
May 14, 2024 21:42 ISTசூரிய காந்த புயலின் தரவுகளை சேகரித்துள்ளது ஆதித்யா எல் 1 விண்கலம்
மே 11-ந் தேதி பூமியை தாக்கி சூரிய காந்த புயலின் தாக்கம் தொடர்பான தரவுகளை ஆதித்யா எல் 1 விண்கலம் சேகரித்துள்ளது, 2003-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த புயல் தாக்கம் இது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
-
May 14, 2024 20:37 ISTசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
வைகாசி மாதத்தில் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மே 18-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மே 19-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 14, 2024 19:45 ISTகோவையை குளிர்வித்த கனமழை
வெயிலால் தகித்த கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
-
May 14, 2024 19:17 IST14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
May 14, 2024 18:45 ISTடெல்லி ஐ.டி அலுவலகத்தில் தீ - ஒருவர் பலி
டெல்லி, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த நபர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
May 14, 2024 18:44 ISTமோடி வேட்புமனு விவரம்: சொந்த வாகனம் இல்லை; அசையா சொத்து எதுவும் இல்லை
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், தனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை என தெரிவித்துள்லார். மேலும், ரூ. 2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள், ரொக்கமாக ரூ. 52,920 வைத்துள்ளதாகவும் மோடியின் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் பிரமானப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 14, 2024 17:53 ISTசவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல் - கோவை கோர்ட் உத்தரவு
பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக கைதான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 23-ம் தேதி வரை நீமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைபர் கிரைம் காவல்துறையின் ஒரு நாள் காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை மே 23-ம் தேதி வரை நீமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 14, 2024 17:47 ISTகாங்கிரஸ் ஊடகப் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
May 14, 2024 17:33 ISTமதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை இணை குற்றவாளியாக குறிப்பிட வேண்டும்: இ.டி
மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை அடுத்த குற்றப்பத்திரிகையில் இணை குற்றவாளியாக குறிப்பிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் போது, அமலாக்கத்துறை வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளார்.
கலால் கொள்கை வழக்கை விசாரித்த அமலாக்க இயக்குனரகம், தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தனது அடுத்த வழக்குப் புகாரில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் என்று தெரிவித்தது.
-
May 14, 2024 17:29 ISTடெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 21 வாகனங்களில் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
May 14, 2024 16:46 ISTதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில், திருவண்ணாமலை, நாமக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் இன்று (14.05.2024) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 14, 2024 16:24 ISTபிரதமருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்க மறுப்பு
பிரச்சாரங்களில் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் பிரதமரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
-
May 14, 2024 15:39 ISTஅடையாறு மாநகராட்சி மன்ற அலுவலகத்தில் சோதனை
சென்னை அடையாறு மாநகராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர். பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்றது. -
May 14, 2024 15:35 ISTமண்டி தொகுதியில் கங்கனா ரணாவத் வேட்புமனு
இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கங்கனா ரணாவத் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
May 14, 2024 15:11 ISTசண்டிகரில் வேட்புமனு தாக்கல் செய்த திவாரி
காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி சணடிகரில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, ஜூன் 4ஆம் தேதி புதிய உதயம் ஏற்படும் என்றார். -
May 14, 2024 15:03 ISTநாகை எம்.பி. மறைவு; தமிழச்சி தங்கப் பாண்டியன் இரங்கல்
நாகை எம்.பி.யின் மறைவுக்கு தமிழச்சி தங்க பாண்டியன இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர், திரு.செல்வராஜ் அவர்கள், மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர், திரு.செல்வராஜ் அவர்கள், மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.
— தமிழச்சி (@ThamizhachiTh) May 13, 2024
அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நான்கு முறை நாகப்பட்டினம் நாடாளுமன்ற… pic.twitter.com/zzK0fiigFZஅரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நான்கு முறை நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்டா பகுதி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்…
அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
May 14, 2024 14:42 ISTதயாநிதி மாறன் அவதூறு வழக்கு: பா.ஜ.க வேட்பாளர் ஆஜராக உத்தரவு
தி.மு.க.எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வினோஜ் இன்று ஆஜராகததால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
-
May 14, 2024 13:52 ISTகன்னியாகுமரியில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரியில் இன்று மிகக் கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு
சென்னை வானிலை மையம்
-
May 14, 2024 13:51 ISTபாபா ராம்தேவ் வழக்கு- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
தடையை மீறி விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில், பாபா ராம்தேவ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
-
May 14, 2024 13:15 ISTவாரணாசியில் மோடி ரோட் ஷோ
உத்தரபிரதேசம் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரோட் ஷோவை தொடங்கினார் பிரதமர் மோடி.
பிரதமர் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மற்றும் பிற கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
#WATCH | Prime Minister Narendra Modi leaves from the DM office in Varanasi after filing his nomination for #LokSabhaElections2024
— ANI (@ANI) May 14, 2024
Union Ministers, including Defence Minister Rajnath Singh and Home Minister Amit Shah, BJP national president JP Nadda, UP CM Yogi Adityanath, and… pic.twitter.com/cSjSAz5T3X -
May 14, 2024 12:51 ISTநடிகர் கவுண்டமணியின் நில வழக்கு
நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
-
May 14, 2024 12:47 ISTநாகை எம்.பி. செல்வராசுவின் உடல் நல்லடக்கம்
நாகை எம்.பி. செல்வராசுவின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
May 14, 2024 12:31 ISTவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்
உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்
#WATCH | Prime Minister Narendra Modi files nomination from Varanasi Lok Sabha seat for #LokSabhaElections2024 pic.twitter.com/lSgGcPiNjR
— ANI (@ANI) May 14, 2024 -
May 14, 2024 12:25 ISTடெல்லியில் 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் 4 மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து டெல்லி தீயணைப்பு படை மற்றும் வெடிகுண்டு படை வீரர்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ANI இன் படி, இந்த மருத்துவமனைகளில் தீப் சந்த் பந்து மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை மற்றும் ஹெட்கேவார் மருத்துவமனை ஆகியவை அடங்கும்.
-
May 14, 2024 12:16 ISTசவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெண் காவலர்களை அவதூறாக பேசியது மற்றும் கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
-
May 14, 2024 12:15 ISTபிரதமர் மோடி சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல்
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு முன் வாரணாசி கால பைரவர் கோயிலில் மோடி வழிபாடு.
-
May 14, 2024 12:13 ISTதேர்தல் பத்திரங்கள் முறைகேடு வழக்கு
தேர்தல் பத்திரங்கள் முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கக் கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையீடு.
தேர்தல் பத்திர முறைகேடு வழக்கில் விரைந்து விசாரணை நடத்துவது பற்றி தலைமை நீதிபதி முடிவு செய்வார் என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார்.
-
May 14, 2024 11:48 ISTசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டது.
-
May 14, 2024 11:48 ISTகள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர், செயலாளர் ஆகியோர் ஆஜராக வேண்டும் என தெரிவித்து வழக்கு விசாரணையை மே 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு
-
May 14, 2024 11:19 ISTஎழும்பூர் நீதிமன்றத்தில் இ.பி.எஸ் ஆஜர்
மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆஜர். 75% தொகுதி நிதியை தயாநிதி மாறன் பயன்படுத்தவிலை என்று பரப்புரையின் போது இ.பி.எஸ் பேச்சு. இதை எதிர்த்து அவர் மீது
தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல். -
May 14, 2024 11:15 ISTஇன்று இங்கு மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 14, 2024 11:15 ISTபாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பும் சிபிசிஐடி போலீஸ்
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் இருந்து ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜக நிர்வாகி முரளி ஆகியோருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு.
-
May 14, 2024 11:15 ISTபாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பும் சிபிசிஐடி போலீஸ்
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் இருந்து ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜக நிர்வாகி முரளி ஆகியோருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு.
-
May 14, 2024 11:13 ISTபெலிக்ஸ் வீட்டில் திருச்சி போலீஸ் சோதனை
பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் திருச்சி போலீஸ் சோதனை
சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு, அலுவலத்தில் திருச்சி போலீசார் சோதனை. ஆய்வாளர் தலைமையிலான 2 காவலர்கள் என மொத்தம் 5 பேர் சோதனை. சோதனையிட சென்ற போலீசாருக்கு அனுமதி மறுத்து பெலிக்ஸின் மனைவில் ஜேன் வாக்குவாதம்
-
May 14, 2024 11:08 ISTசென்னையில் ஒரே டிக்கெட் திட்டம்: விரைவில் அமல்
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தகவல்
-
May 14, 2024 11:07 ISTமருத்துவ பயிற்சி மைய முதல்வர் வீட்டில் ரெய்டு
சென்னை எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வர் பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனராக இருந்தபோது மருத்துவர் பழனி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார். நொளம்பூர் முகப்பேரில் உள்ள பழனி வீட்டில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
-
May 14, 2024 10:30 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,690க்கு விற்பனை
-
May 14, 2024 10:18 ISTபொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மஞ்சள் காய்ச்சல் பரவல் தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும். மஞ்சள் காய்ச்சல் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்திய 10 நாட்களுக்கு பிறகே ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
-
May 14, 2024 09:57 ISTஅரசு முன்னாள் அதிகாரி வீட்டில் சோதனை
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை முன்னாள் இணை இயக்குனர் பழனி, வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இன்று சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
May 14, 2024 09:53 ISTகரு நாகராஜன், விஜய ஆனந்த் மீது வழக்குப் பதிவு
தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், மாவட்ட தலைவர் விஜய ஆனந்த் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு.
-
May 14, 2024 09:51 ISTபொள்ளாச்சியில் 7.1 செ.மீ. மழை பதிவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 7.1 செ.மீ. மழை பதிவு. மாக்கினாம்பட்டியில் 7.8 செ.மீ., ஆழியாறு அணைப் பகுதியில் 6.2 செ.மீ., வால்பாறை சின்கோனா பகுதியில் 4.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
May 14, 2024 09:13 ISTமஞ்சள் காய்ச்சல்: அரசு உத்தரவு
ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவல் எதிரொலி. வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்
-
May 14, 2024 08:58 ISTதிறந்தவெளி கட்டுமான பணி: அரசு முக்கிய உத்தரவு
அதிக வெப்பம் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை. வெயிலில் தொழிலாளர் உடல்நலன் பாதிக்கப்படுவதை தடுக்க தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் நடவடிக்கை. மே இறுதி வரை திறந்தவெளி கட்டுமானப் பணி நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்க ஆணை
-
May 14, 2024 08:52 IST3-வது அணியாக குஜராத் வெளியேற்றம்
குஜராத் மற்றும் கொல்கத்தா இடையேயான போட்டி கைவிடப்பட்டதால், குஜராத் மூன்றாவது அணியாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றம்.
இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்ட நிலையில், குஜராத் அணி 13 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது
குஜராத் அணியால் இனி அதிகபட்சமாக 13 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால், மும்பை மற்றும் பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்தும் வெளியேறியது. அதேசமயம் 19 புள்ளிகள் பெற்ற கொல்கத்தா, புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் இருப்பதை உறுதிசெய்தது
இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு செல்ல கொல்கத்தா அணிக்கு, பிளே ஆஃப் சுற்றில் 2 வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
-
May 14, 2024 08:45 ISTஐ.பி.எல் இன்றைய போட்டி
ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதல். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிறது
-
May 14, 2024 08:44 IST11 மாவட்டங்களில் இன்று மழை
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம் தகவல் செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை. இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.