பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 107-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2754 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 124 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 02, 2024 21:35 ISTஉ.பி. ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி; ஸ்டாலின் இரங்கல்
உத்தரப் பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உ.பி. ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிகி பலர் உயிரிழந்தது வருத்தத்தை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்; துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jul 02, 2024 20:52 ISTடி.என்.பி.எஸ்.சி குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாட்டில் ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
Jul 02, 2024 20:49 ISTமயிலாப்பூர் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தில் 27 வாகனங்கள் ஜூலை 11-ம் தேதி ஏலம்
காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வரும் 11ம் தேதி மயிலாப்பூர் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 02, 2024 20:17 ISTஉ.பி ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 122 பேர் மரணம்; ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மோடி
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
-
Jul 02, 2024 18:46 ISTஉத்தரபிரதேசம் ஆன்மிக வழிபாடு நிகழ்ச்சியில் கூட்டநெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசம், ஹத்ராஸில் ஆன்மிக வழிபாடு நிகழ்ச்சியில் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 02, 2024 17:55 ISTராகுல்காந்தி ஒரு குழந்தை - பிரதமர்
ராகுல்காந்தி ஒரு குழந்தையை போன்று நடந்து கொள்கிறார். இந்த குழந்தை திடீரென்று. கட்டிப்பிடிக்கும். கண்ணடிக்கும் என பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
-
Jul 02, 2024 16:54 ISTமக்களவையில் எதிர்க்கட்சிகள் கூச்சல்
நாடாளுமன்ற மக்களவையில், மணிப்பூர், நீட் விவகாரத்தில் நியாயம் வேண்டும் நியாயம் வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
-
Jul 02, 2024 16:53 ISTகுடியரசுத் தலைவர் நாட்டுக்கும் எங்களுக்கும் வழிகாட்டி; பிரதமர் நரேந்திர மோடி
'ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்க நான் இங்கு வந்துள்ளேன். நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் விக்சித் பாரத் பற்றிய நமது உறுதியை விரிவாகக் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். அவர் எங்களுக்கும் நாட்டிற்கும் வழிகாட்டியுள்ளார்" எனப் பிரதமர் மோடி கூறினார்.
-
Jul 02, 2024 16:49 IST2014ல் நாடு விரக்தியில் இருந்தது; பிரதமர் நரேந்திர மோடி
“2014 இல் நாடு விரக்தியில் இருந்தது, மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தனர். மாற்றத்தின் சகாப்தம் தொடங்கியது” என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
-
Jul 02, 2024 16:22 ISTசிறையில் இருந்து மனைவிக்கு வீடியோ கால்; கஞ்சா கடத்தல்: எடப்பாடி பகீர் புகார்
'சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 2, 2024
விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம்… -
Jul 02, 2024 16:10 ISTதமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; ஜெய்சங்கருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
#JUSTIN | இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்#SunNews | #MKStalin | #SriLanka pic.twitter.com/ltc2TK07gM
— Sun News (@sunnewstamil) July 2, 2024 -
Jul 02, 2024 16:01 ISTசென்னையில் பரபரப்பு; தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து
சென்னை மாநகர பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Jul 02, 2024 14:48 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை. இடது கை ஆள்காட்டி விரலில் மை இருந்தால் அதற்கு மாற்றாக இடது கை நடு விரலில் மை வைக்கப்படும்
- தேர்தல் ஆணையம் விளக்கம்
-
Jul 02, 2024 14:24 ISTதமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவளிக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் எடுத்து நடத்த வேண்டும்.
- நெல்லையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
-
Jul 02, 2024 14:23 ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது;
நாளை (ஜூலை 03) முதல் ஜூலை 5-ம் தேதி வரை ‘https://tngasa.in’ என்ற இணையதளத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் -
Jul 02, 2024 13:49 ISTசிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு?
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 25% ஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க இயலாது - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்
சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயம் செய்வதில்லை என்பதால், அப்பள்ளிகளை 25% ஒதுக்கீட்டில் சேர்க்க இயலாது – அரசு
-
Jul 02, 2024 13:46 ISTசாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு, தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.
-
Jul 02, 2024 13:28 ISTஉதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 6,7,8ம் தேதி வரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
-
Jul 02, 2024 13:28 IST7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் முதமான மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 02, 2024 13:27 ISTநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது: ஓம்.பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எனது உரைகள் நீக்கப்பட்டுள்ளது, இது விதி 380-ன் வரம்பிற்குள் வராது. எனது உரையிலிருந்து சில பகுதிகளுக்கு நீக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.
மக்கள் பிரச்னைகளை அவையில் எழுப்ப வேண்டியது எனது கடமை அதைத்தான் நான் செய்தேன்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவை குறிப்பில் தனது உரை நீக்கப்பட்டது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்
-
Jul 02, 2024 13:12 ISTஅவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்
அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்" "அவை குறிப்பில் இருந்து தனது கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்திற்கு எதிரானது" - ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம்
-
Jul 02, 2024 13:11 ISTமகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு : 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் இம்மாதம் 15ம் தேதி முதல் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்க பட உள்ளதாக தகவல்
-
Jul 02, 2024 12:30 ISTவிஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல்
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்; ஏற்கனவே ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, மீண்டும் மனுத்தாக்கல்
-
Jul 02, 2024 12:04 ISTதனியார் பள்ளி ஆரிசியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வலியுறுத்தி ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியாவுக்கு விசிக எம் பி ரவிக்குமார் கடிதம்
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வலியுறுத்தி ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியாவுக்கு விசிக எம் பி ரவிக்குமார் கடிதம்!
-
Jul 02, 2024 12:02 ISTஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு: 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்!
-
Jul 02, 2024 11:52 ISTசென்னையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு - சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை
சென்னையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு - சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ₹3.07 கோடி கூடுதல் செலவாகிறது. அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுகிறது. சமீபத்தில் அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ₹5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
-
Jul 02, 2024 11:28 ISTசி.பி.ஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவரச வழக்காக இன்று விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவரச வழக்காக இன்று விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்
-
Jul 02, 2024 10:53 ISTமீனவர்கள் போராட்டம் தொடக்கம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
-
Jul 02, 2024 10:18 ISTதே.ஜ.கூ நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
-
Jul 02, 2024 10:17 ISTசீரியல் பல்பு மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, சீரியல் பல்புகளை பிடித்து விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி.
நொளம்பூர் கிராமத்தில், சுப நிகழ்ச்சிக்காக சென்ற போது சோகம் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
-
Jul 02, 2024 09:25 ISTராகுல் கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கம்
மக்களவையில் நேற்று இந்துக்கள் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கம்
இந்து மதம், பிரதமர் மோடி குறித்து ராகுல் தெரிவித்த பல்வேறு கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன
-
Jul 02, 2024 09:24 ISTலோக்சபாவில் பிரதமர் மோடி இன்று உரை
மக்களவை கூட்டத் தொடர்: பிரதமர் மோடி இன்று உரையாற்ற வாய்ப்பு
லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று பேச வாய்ப்புள்ளது. இந்து மதத்தின் பெயரால் அரசு வெறுப்புணர்வை பரப்புவதாக ராகுல் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று மோடி உரை
-
Jul 02, 2024 08:33 ISTதீபாவளி: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
தீபாவளிக்கு முன்தினமான அக்டோபர் 30, 2024ல் சொந்த ஊர் செல்ல இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
தீபாவளிக்கு முன்தினமான அக்டோபர் 30, 2024ல் சொந்த ஊர் செல்ல இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் . நேரடியாகவோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி செயலி மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
Jul 02, 2024 08:09 ISTஜூலை 5-ல் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடவுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.