Advertisment

Tamil News Updates: டெல்லியில் சந்திரபாபு நாயுடு உடன் ஸ்டாலின் சந்திப்பு: இருமாநில உறவுகளை வலுப்படுத்த நம்பிக்கை

Tamil news updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
naidu stalin.jpg

இந்திய முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள்  நேற்று (ஜுன் 4)எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க கூட்டணி 293 இடங்களிலும்,  காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Advertisment

பிற கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றாலும் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க இன்று கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • Jun 05, 2024 22:00 IST
    உலகத் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து

    மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு, உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரிட்டன் பிரதமர்  உள்ளிட்டோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



  • Jun 05, 2024 21:30 IST
    விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சுனிதா வில்லியம்ஸ் தற்போது அட்லஸ் வி ராக்கெட்டில் வெற்றிகரமாக பயணித்துள்ளார்.  அட்லஸ் ராக்கெட்டில் இருந்து விண்வெளி வீரர்கள், அமர்ந்திருக்கும் ஸ்டார் லைனர் விண்கலம் தனியாக பிரிந்தது.



  • Jun 05, 2024 21:19 IST
    அமித்ஷா தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்டார் - காங். தலைவர் ஜெயராம் ரமேஷ்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்: “தன்னை சாணக்கியன் போல் காட்டிக்கொண்டு நாடகம் நடத்தி வந்த அமித்ஷாவுக்கு, தற்பொழுது ஒவ்வொரு கட்சியாக சென்றுஆதரவு கேட்டு கையேந்தும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சமயத்தில் அதிகாரத்தில் இருந்தவர், மக்களிடையே பொய்யை சொல்லி ஏமாற்றியவர், தொழில் அதிபர்களையே மிரட்டி வந்தவர் அமித்ஷா. அவர் இன்று பா.ஜ.வு-க்கு பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக்காக கட்சிகளிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டார்” என்று  விமர்சனம் செய்துள்ளார்.



  • Jun 05, 2024 18:58 IST
    அடுத்த 3 மணிநேரத்தில்.. 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    மதுரை, அரியலூர், கடலூர், நாகை, சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 05, 2024 18:55 IST
    என்.டி.ஏ கூட்டம் நிறைவு; ஆட்சியமைக்க உரிமை கோரும் பா.ஜ.க!

    டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. பா.ஜனதா ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. பா.ஜ.க.வுக்கு கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.



  • Jun 05, 2024 18:43 IST
    'கனிமொழி பா.ஜ.க.வில் இணைந்தால் பதவி விலகுகிறேன்': அண்ணாமலை

    “என் தந்தை முதலமைச்சரோ, எல்.எல்.ஏ.வோ கிடையாது. குப்புசாமி ஆடு மாடு மேய்த்தார். என்னிடம் பொறுமையாக செல் எனக் கூறியுள்ளார். கனிமொழி பா.ஜ.கவில் இணைந்தால் நான் பதவி விலகுகிறேன்” என கனிமொழி தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார்.



  • Jun 05, 2024 18:06 IST
    குடியரசு தலைவரை இன்று சந்திக்கும் என்.டி.ஏ தலைவர்கள்?


    3வது முறையாக ஆட்சியமைக்க உரிமைக் கோர என்.டி.ஏ தலைவர்கள் குடியரசுத் தலைவரை இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



  • Jun 05, 2024 17:47 IST
    மு.க. ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, மோடியை பாராட்டிய ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுள்ள மு.க. ஸ்டாலின், ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் மத்தியில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.



  • Jun 05, 2024 17:20 IST
    பா.ஜ.க சர்வாதிகார ஆட்சிக்கு கடிவாளம்; நாட்டை வழிநடத்தும் 40க்கு 40: மு.க. ஸ்டாலின்

    “அடக்குமுறை, வெறுப்புப் பிரசாரம் என அனைத்தையும் தகர்த்தெறிந்து ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வெற்றியைப் பெற்றுள்ளோம். பா.ஜ.க.வின் பத்தாண்டுகால சர்வாதிகார ஆட்சிக்குக் கடிவாளம் போட்டுள்ள இந்த வெற்றியை ஆர்ப்பாட்டமில்லாமல், மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்துக் கொண்டாடுவோம்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Jun 05, 2024 17:11 IST
    பா.ஜ.க பெரும்பான்மையை மக்கள் பறித்துவிட்டனர்; சிவசேனா சஞ்சய் ரவுத்

    “தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இருக்கிறார்கள்? மக்கள பா.ஜ.கவின் பெரும்பான்மையை பறித்துவிட்டனர்” என உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.



  • Jun 05, 2024 16:36 IST
    என்.டி.ஏ ஆலோசனை கூட்டம் தொடக்கம் 

    பிரதமர் மோடி தலைமையில் என்.டி.ஏ ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாகவும், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்க உள்ளார். இதேபோல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான்  உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 



  • Jun 05, 2024 16:33 IST
    துணை குடியரசுத் தலைவருடன் மோடி சந்திப்பு 

    தலைநகர் டெல்லியில் நரேந்திர மோடி இன்று மரியாதை நிமித்தமாக துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரை சந்தித்து பேசினார். 



  • Jun 05, 2024 16:01 IST
    கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு - டெல்லி சி.பி.ஐ கோர்ட் உத்தரவு 

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக ஜாமின் கோரிய நிலையில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Jun 05, 2024 15:43 IST
    தி.மு.க தொண்டர்களுக்கு தலைவைர் ஸ்டாலின் கடிதம் 

    தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள் வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. 

    மகத்தான வெற்றியை தி.மு.க-வுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்களும்தான். தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் பங்களிப்புடன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. 

    தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இந்தியா கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

     



  • Jun 05, 2024 15:37 IST
    பட்னாவிஸ் ராஜினாமா 

    மகாராஷ்டிரா துணை முதல்வர்  பதவியிலிருந்து விலகினார் தேவேந்திர பட்னாவிஸ். "தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சி பணியில் ஈடுபட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ள அவர், துணை முதல்வர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பா.ஜ.க தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 



  • Jun 05, 2024 15:36 IST
     கூட்டணி மாறுகிறாரா உத்தவ் தாக்கரே? 

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் பரபரப்பு நிலவி வருகிறது. பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், முக்கிய தலைவர்களை கூட்டணிக்கு இழுக்க இந்தியா கூட்டணி முயற்சி செய்து வருகிறது. 



  • Jun 05, 2024 14:38 IST
    கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம் : பிரேமலதா விஜயகாந்த்

    வாக்களித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம். தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க கடுமையாக உழைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும். தே.மு.தி.கவுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



  • Jun 05, 2024 14:35 IST
    பிரதமர் பதவியில் தொடரும் மோடி

    பிரதமர் மோடியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடருகிறார் பிரதமர் மோடி



  • Jun 05, 2024 14:24 IST
    பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி

    அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்துவிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jun 05, 2024 13:51 IST
    பிரதமர் மோடி தலைமையிலான 17-வது மக்களவை கலைப்பு

    பிரதமர் மோடி தலைமையிலான 17வது மக்களவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.



  • Jun 05, 2024 13:49 IST
    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

    "தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் "செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 05, 2024 13:23 IST
    டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை : முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி டெல்லி கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.



  • Jun 05, 2024 13:21 IST
    டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த மு.க.ஸ்டாலின்

     இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியுள்ளார். 



  • Jun 05, 2024 12:43 IST
    கேசவ விநாயகம் ஆஜர்

    தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்

    சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆஜராவதாக தெரிவித்த நிலையில் இன்று ஆஜராகினார் கேசவ விநாயகம்

    நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது சிபிசிஐடி

    4 கோடி பணம் பறிமுதல் தொடர்பான வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது சிபிசிஐடி



  • Jun 05, 2024 12:26 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,725க்கும், சவரன் ரூ.53,800க்கும் விற்பனை 



  • Jun 05, 2024 12:13 IST
    மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது

    பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அமைச்சரவை மற்றும் 17வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு.

    அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மோடி 2.0-வின் கடைசி அமைச்சரவை கூட்டம் இதுவாகும் 



  • Jun 05, 2024 12:12 IST
    நவீன் பட்நாயக் ராஜினாமா

    ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக். ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 51 இடங்களை மட்டுமே பெற்று பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை தழுவியது.

     நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது



  • Jun 05, 2024 12:10 IST
    பாஜக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம் 

    இன்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 

    கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்

    பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை 

    அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது



Lok Sabha Polls
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment