Tamil News Updates: மழை நிலவரம்: ஆட்சியர்களுடன் ஸ்டாலின் பேச்சு; உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

Tamil Nadu News, Tamil News LIVE, ED official Ankit Tiwari arrest, Madurai ED Office Raids, Michaung cyclone, Chennai Rains – 2 January 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
news

Tamil news

Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடியவிடிய தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்பு பணிக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் படையினரை அனுமதிக்க தமிழ்நாடு காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

Advertisment
Advertisements

13 நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்.

  • Dec 02, 2023 22:37 IST

    அடுத்த 12 மணி நேரத்தில் புயல்; வானிலை ஆய்வு மையம்

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • Dec 02, 2023 22:26 IST

    பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

    குறைந்தபட்சம் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டானாவோவை சனிக்கிழமை பிற்பகுதியில் தாக்கியது, ஒரு மீட்டர் (3 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட சுனாமி அலைகளின் எச்சரிக்கையின் காரணமாக பிலிப்பைன்ஸின் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு ஜப்பானிய கடற்கரைகளுக்கு வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டது.

  • Dec 02, 2023 22:02 IST

    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை; மக்களுக்கு உதவ ஸ்டாலின் அறிவுறுத்தல்

    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு உதவ முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தி.மு.க நிர்வாகிகள் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் எனவும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

  • Dec 02, 2023 21:30 IST

    மருத்துவ மனையில் விஜயகாந்த்; புகைப்படங்களை வெளியிட்ட பிரேமலதா

    கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • Dec 02, 2023 21:06 IST

    ஆசிரியர் தேர்வு வாரிய கலந்தாய்வு ஒத்திவைப்பு

    தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

  • Dec 02, 2023 20:30 IST

    பயணிகள் குறைவு 7 சென்னையில் விமானங்கள் ரத்து

    மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குறைவால் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 28 விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன

  • Dec 02, 2023 20:16 IST

    மிக்ஜாம் புயல்: சென்னை பல்கலை. தேர்வுகள் தள்ளி வைப்பு!

    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

  • Dec 02, 2023 19:49 IST

    அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

    மிர்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக டிச.3, 4ஆம் தேதிகளில் நடக்க இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
    ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dec 02, 2023 19:17 IST

    சென்னையில் பரவலாக மழை பொழிவு

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. திநகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி மற்றும் சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துவருகிறது.

  • Dec 02, 2023 18:25 IST

    மிக்ஜாம் புயல்: 142 ரயில்கள் ரத்து

    மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக டிச.3,4,5ஆகிய தேதிகளில் சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • Dec 02, 2023 17:35 IST

    சென்னை: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

    சென்னையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    அதில், “மிக்ஜாம் புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரும்வரை வெளியே வர வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

  • Dec 02, 2023 17:00 IST

    "12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" -  வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • Dec 02, 2023 16:57 IST

    12 மாநகர பேரிடர் மீட்பு குழு தயார்!

    சென்னையில் புயலை எதிர்கொள்ள 12 மாநகர பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

  • Dec 02, 2023 16:56 IST

    மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

    புயல் எச்சரிக்கையாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

    தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். அவரச கால மருத்துவ குழுக்கள், நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான அளவு கிருமி நாசினி தயார் நிலையில் இருக்க வேண்டும். 

    நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

  • Dec 02, 2023 16:54 IST

    செங்கல்பட்டில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை!

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ம் தேதி பள்ளி - கல்லூரிகளுக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

  • Dec 02, 2023 16:54 IST

    அதுவரை வெளியே வர வேண்டாம் - சென்னை போலீஸ்!

    "புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம். புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம். கடல் அலை அதிகரிப்பு காரணமாக யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்" என்று சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

  • Dec 02, 2023 15:26 IST

    திருவள்ளூரில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

    திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் (4.12.2023) தேதி பள்ளி - கல்லூரிகளுக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

  • Dec 02, 2023 15:26 IST

    "இடைதரகர்கள் மூலம் என்னை மிரட்டினர்" - அப்பாபு

    சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடை தரகர்கள் மூலம் என்னை மிரட்டினர். ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள். பாஜக அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறிவைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர். 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள்" என்று  சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

  • Dec 02, 2023 14:24 IST

    அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த இடங்கள் தெரியுமா?

    "டிச.3ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. டிச.4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"

    டிச.4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • Dec 02, 2023 13:56 IST

    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

    ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்

    மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • Dec 02, 2023 13:53 IST

    சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

    சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்று 5-ம் தேதி கரையை கடக்கும்.  

  • Dec 02, 2023 13:24 IST

    இ.டி அலுவலகத்தில் சோதனை - ஆளுநர் தமிழிசை எதிர்ப்பு 

    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்ததற்கு தமிழிசை எதிர்ப்பு. தமிழ்நாடுஅரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை எடுத்துச் செல்கிறது- ஆளுநர் தமிழிசை 

  • Dec 02, 2023 13:21 IST

    நடிகை ஷீலா ராஜ்குமாருக்கு விவாகரத்து

    திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக `மண்டேலா' பட நாயகி ஷீலா ராஜ்குமார் X தளத்தில் பதிவு

  • Dec 02, 2023 13:21 IST

    நடிகை ஷீலா ராஜ்குமாருக்கு விவாகரத்து

    திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக `மண்டேலா' பட நாயகி ஷீலா ராஜ்குமார் X தளத்தில் பதிவு

  • Dec 02, 2023 13:07 IST

    புயல் எச்சரிக்கை: 18 பேரிடர் மீட்பு குழு தயார்

    தமிழகத்தில் `மிக்ஜாம்'  புயல் பாதிப்பை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வரும் தமிழக போலீசார். புயல் பாதிப்புகளை சமாளிக்க ஏடிஜிபி தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு தயார். 

    நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் பயிற்சி பெற்ற 900 போலீசார் 18 குழுக்களாக அனுப்பப்பட்டுள்ளனர். 

    சென்னை, கோவை, மணிமுத்தாறு பகுதிகளுக்கு தலா 3 குழுக்களும், கடலூருக்கு 2 குழுக்களும் அனுப்பி வைப்பு

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, பழனி பகுதிகளுக்கு தலா ஒரு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளது. 

    164 மீட்பு உபகரணங்கள் மற்றும் 20 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்

    புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட எஸ்பிக்கள் உடனும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு

    அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற 18,000 போலீசாரும் தயார் நிலை

  • Dec 02, 2023 12:52 IST

    டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை ஒட்டி டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. வரும் திங்கள் அன்று தொடங்க உள்ள குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதம். 

  • Dec 02, 2023 12:37 IST

    மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட இ.டி அதிகாரி

    அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.  அமலாக்கத்துறை அதிகாரி அரசு ஊழியர்களை பல வகைகளில் பணத்தை கேட்டு மிரட்டி இருப்பதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணிகளை மேற்கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சட்டத்திற்கு புறம்பாக மற்ற மருத்துவமனைகளுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். 

  • Dec 02, 2023 12:37 IST

    புதுச்சேரியில் 4-ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை

    புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வரும் 4ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை. ஏற்கனவே பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு

  • Dec 02, 2023 12:09 IST

    டாஸ்மாக் கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு

    தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது. 

    கடைகளை திறக்க உத்தர விடக் கோரி கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

  • Dec 02, 2023 11:47 IST

    டெல்லியில் மோசமான வானிலை: விமானங்கள் திருப்பி விடப்பட்டன

    டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிப்பு. காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.  

  • Dec 02, 2023 11:37 IST

    சாஸ்திரி பவனில் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு விலக்கப்பட்டது

    சென்னை சாஸ்திரி பவனில் போடப்பட்டிருந்த ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது

    சாஸ்திரி பவன் பிரதான நுழைவு வாயில் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகிறது

    ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தமிழக போலீசார் குழு பாதுகாப்பு பணியில் உள்ளனர்

  • Dec 02, 2023 11:12 IST

    கிராண்ட் மாஸ்டர் பட்டம்: வைஷாலிக்கு ஸ்டாலின் வாழ்த்து

    கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

    இந்தியாவின் 3வது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனதற்கு வாழ்த்துக்கள் - முதல்வர் ஸ்டாலின்

    உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி - சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு 

  • Dec 02, 2023 11:11 IST

    மாநில பேரிடர் மீட்பு படை கடலூர் வருகை

    புயலை எதிர்கொள்ளும் வகையில் மாநில பேரிடர் மீட்பு படை கடலூர் வருகை. சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 55 பேர் கடலூர் வருகை

    புயல், மழையில் இருந்து பொதுமக்களை காக்க பல்வேறு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு படையினர் ஆயத்தம்

  • Dec 02, 2023 10:58 IST

    எனது பிறந்தநாள் பரிசு- கீ.வீரமணி

    இந்த ஆட்சி திராவிட ஆட்சியின் சட்டத்தின் மூலமாக நடைபெறும் ஆட்சியாகும்;

    அமலாக்கத்துறையையும், ஆளுநரையும் சட்டப்போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தது தான் எனது பிறந்தநாள் பரிசு- திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி

  • Dec 02, 2023 10:57 IST

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    கி.வீரமணியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

    Credit: Sun News Twitter

  • Dec 02, 2023 10:34 IST

    வங்கதேசத்தில் நிலஅதிர்வு

    இன்று காலை 9:05 மணியளவில் வங்கதேசத்தில் நிலஅதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு

  • Dec 02, 2023 10:04 IST

    அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்

    அமலாக்கத்துறை அதிகாரி கைது - அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்

  • Dec 02, 2023 10:02 IST

    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து ரூ.47,320க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,915-க்கு விற்கப்படுகிறது

  • Dec 02, 2023 09:32 IST

    அடுத்த 24 மணி நேரத்தில் புயல்

    வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

  • Dec 02, 2023 08:57 IST

    அவகாசம் நீட்டிப்பு

    JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை

  • Dec 02, 2023 08:57 IST

    குற்றால அருவிகளில் குளிக்க தடை

    தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Dec 02, 2023 08:49 IST

    லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது- அண்ணாமலை

    லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை

  • Dec 02, 2023 08:48 IST

    'MELODI'

    பிரதமர் மோடி உடன்  எடுத்த செல்ஃபியை 'MELODI' என்ற ஹேஷ்டேக் உடன் பகிர்ந்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி

  • Dec 02, 2023 08:26 IST

    நாளை புயலாக மாற வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறுகிறது. நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்பு.

    டிச. 5ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

  • Dec 02, 2023 07:58 IST

    சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்

    மெட்ரோ ரயிலில் டிச.3-ம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிச.3-ம் தேதி க்யூஆர் குறியீடு மூலம் ரூ.5 செலுத்தி பயணச்சீட்டுகள் பெற்று ஒருவழிப்பாதைப் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் டிச.3-ம் தேதி மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆா் குறியீடு மூலம் பெறப்படும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: