பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 223-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 26, 2024 21:52 ISTத.வெ.க முதல் மாநாடு: சர்ப்ரைஸ் விசிட்டாக திடலுக்கு வந்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் மாலை 6 மணியளவில் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததாகவும், கேரவனில், பொதுச்செயலாளர் ஆனந்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை நடைபெற உள்ள நிலையில் சர்ப்ரைஸ் விசிட்டாக விஜய் இப்போது வந்துள்ளார் என்றும், நாளை காலை 11 மணிக்கு, மாநாட்டு திடலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Oct 26, 2024 20:37 ISTத.வெ.க மாநாடு: விஜய் பாதுகாப்பு பணியில் 23 பவுன்சர்கள்
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மாநாட்டு திடலை சுற்றி ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட உள்ளது. மாநாடு திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்கஸ் லைட்டுகள் இரவை பகலாக மாற்றியுள்ளன. விஜய்யின் பாதுகாப்பு பணிக்காக எர்ணாகுளத்தில் இருந்து 23 பவுன்சர்கள் வந்துள்ளனர். தொண்டர்கள் இருக்கைக்கு நடுவே ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகள் மாநாட்டிற்கு வருவோர் எளிதாக சென்று அமரும் வகையில் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 20:35 ISTபாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த தொழிலாளி மரணம்
திருப்பூர் மாநகராட்சியில் அணைப்பாளையம் ரயில்வே தண்டவாளம் அருகே இந்திரா நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வரும் நிலையில், பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து மரணமடைந்தார். மாரிமுத்து உடல் மிதப்பதை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் உடலை மீட்ட போலீசார்
-
Oct 26, 2024 19:40 ISTமாநாடு பணிகள் தீவிரம்: தவெகவினர் 50 பேர் பாமகுவில் இணைந்ததாக தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸை நேரில் சந்தித்து இணைந்தனர்
-
Oct 26, 2024 19:37 ISTபொருந்தலாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாறு - பொருந்தலாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 65 அடி உயரம் கொண்ட அணை தற்போது 62 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. நீர் வரத்து 210 கனஅடியாக உள்ளது. இதனால் சண்முக நதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 19:35 ISTரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல வேண்டாம்: ரயில் நிலைத்தில் விழிப்புணர்வு
"ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல வேண்டாம்" என்பதை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் மாம்பலம் ரயில் நிலைத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு ஆணையர் ராஜய்யா, மாம்பலம் ஆர்பிஎப் ஆய்வாளர் பர்ஷா பர்வீன் உள்ளிட்டோர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
-
Oct 26, 2024 18:39 ISTத.வெ.க முதல் மாநாடு: தொண்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வரக்கூடாது. செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது, வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை "தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது என கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 18:38 ISTகார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 6 பேர் மரணம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே சிங்கள மலை என்ற பகுதியில் கார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 6 பேர் மரணமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து, சாலையோரத்தில் நின்றிருந்த லாரிக்கு அடியில் புகுந்தது. கார் முழுவதும் நசுங்கிய நிலையில் காரில் பயணித்த 6 பேரும் மரணமடைந்தவர்கள். உயிரிழந்தவர்கள் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோயில் பிரதிநிதிகள் என தகவல் வெளியாகிள்ளது.
-
Oct 26, 2024 17:46 ISTதாம்பரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை ஒட்டி தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி, அக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் இருந்து மாலை 05:10-க்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக நள்ளிரவு 1:20 மணிக்கு மதுரை சென்றடைகிறது. இதற்கான ஆன்லை புக்கிங் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
-
Oct 26, 2024 17:35 ISTதவெக மாநாடு - போக்குவரத்து மாற்றம்
தவெக மாநாடு காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள், திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள், திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் ஆகியவை செஞ்சி, திண்டிவனம் வழியாக வரலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. -
Oct 26, 2024 17:22 ISTதிற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டம், தொடர் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 17:17 ISTஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் - நீதிமன்றம் கண்டனம்
சென்னையில் 2 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தண்டையார்பேட்டையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் 1,700 ஆக்கிரமிப்புக்கள் இருப்பதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 17:05 ISTநேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி கடல் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலப்பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார்.
-
Oct 26, 2024 16:33 ISTவிஜய்க்கு கோரிக்கை விடுத்த முதியவர்
தவெக மாநாடுக்காக இடம் வழங்கிய முதியவர், அக்கட்சி தலைவர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, அந்த முதியவருக்கு விஜய் சார்பாக பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், பசுமாடு ஆரோக்கியமானதாக இல்லாததால், அதன் பால் கன்றுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகவும், 1 லிட்டர் பாலாவது கறக்கும் பசுவை வழங்க வேண்டுமெனவும் முதியவர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 16:04 ISTகூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாளை 6 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், நாளை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நலன் கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 15:59 ISTகோவை, மதுரை மெட்ரோவிற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்
கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை, நந்தனம் மெட்ரோ தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
Oct 26, 2024 15:37 IST5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
-
Oct 26, 2024 15:22 ISTசென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
"அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 26, 2024 15:19 IST"சென்னை நம் குழந்தை மாதிரி' - உதயநிதி பேச்சு
"சென்னை நம் குழந்தை மாதிரி.. தூய்மை பணியாளர்கள்தான் அதற்கு அம்மா..!" என்று கதை சொல்லி நெகிழ்ந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. சென்னையில் பெய்த மழையின்போது களப்பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Oct 26, 2024 15:18 ISTமனு பாக்கர் வைரல் பதிவு
“கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதி வாய்ந்தவரா?” என்று துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பதிவு செய்துள்ளார். இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது
-
Oct 26, 2024 15:12 ISTத.வெ.க மாநாடு - வாடகை வீட்டில் தங்கும் விஜய்
த.வெ.க மாநாடு பங்கேற்கும் அதன் தலைவர் விஜய், வாடகை வீட்டில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, விஜய் தங்கும் வீட்டிற்கு நிர்வாகிகள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு வந்து தங்கும் விஜய், மாநாட்டு பணிகளை கண்காணிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டில் இருந்து கேரவன் மூலம் மாநாடு திடலுக்கு செல்ல திட்டம் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
Oct 26, 2024 14:47 ISTநீலகிரி: திருடச் சென்ற வீட்டில் மாட்டிக் கொண்ட திருடன்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே திருடச் சென்ற வீட்டில் திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மக்கள் திரண்டதால் முதியவரை காப்பாற்றுவது போல் நடித்து திருடன் தப்பி ஓடியுள்ளார்.
கொலப்பள்ளியில் மூத்த தம்பதிகள் வசித்து வரும் வீட்டை நோட்டமிட்டு திருடன் புகுந்துள்ளார். கூச்சலிட்டதால் முதியவரின் கழுத்தை நெறித்த திருடன் - சப்தம் கேட்டு மக்கள் ஓடி வந்துள்ளார். மக்களை பார்த்ததும் பதறிய திருடன், முதியவரை காப்பாற்றுவது போல் நடித்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
-
Oct 26, 2024 14:46 ISTவெள்ளக்காடாக காட்சி அளிக்கும் மதுரை
மதுரை மகாலட்சுமி நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆத்திகுளம் கண்மாயிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் நீர் வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதால், துர்நாற்றம் வீசுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளார். தேங்கிய மழைநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
-
Oct 26, 2024 14:38 ISTதீபாவளி பண்டிகை: தி.நகரில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்க சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புத்தாடை, பட்டாசு, இனிப்பு, மின்சாதனப் பொருட்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
தி.நகரின் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் பார்க்கும் திசை எல்லாம் மக்கள் கூட்டமாக உள்ளது. தி.நகரில் மட்டும் 64 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல்துறை கண்காணித்து வருகிறது.
-
Oct 26, 2024 14:27 IST5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனையடுத்து, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
-
Oct 26, 2024 14:15 ISTஎம்.பி.சு.வெங்கடேசன் அரசுக்கு கோரிக்கை
"மாநகராட்சியின் வழக்கமாக ஏற்பாடுகளால் இந்த சவாலை சந்திக்க முடியாது. கூடுதல் நிர்வாக ஏற்பாடு வேண்டும்” என்று மதுரையில் பெய்து வரும் கனமழை குறித்து எம்.பி.சு.வெங்கடேசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Oct 26, 2024 14:11 ISTஇன்றே மாநாடு திடலுக்கு வருகிறாரா விஜய்?
த.வெ.க மாநாடு திடலுக்கு இன்றிரவு வர கட்சி தலைவர் விஜய் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய், மாநாடு திடலுக்கு உள்ளே தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. விஜய் தங்குவதற்கு ஏற்ப வி.ஐ.பி ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளது
-
Oct 26, 2024 13:39 ISTதமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ரியாசுதீன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.
-
Oct 26, 2024 13:26 ISTஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. 36 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் 3.1 ஓவரில் 1 விக்கெட்ட மட்டும் இழந்து 37 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.
-
Oct 26, 2024 12:58 ISTகனமழை எதிரொலி - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்
மதுரையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சார் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தேங்கியிள்ள நீரை அகற்ற மின்மோட்டார்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
Oct 26, 2024 12:52 ISTகார் விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழப்பு
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நடந்த கார் விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டத்தில், காரில் பயணித்த தம்பதி தீபக்அழகப்பன் மற்றும் தெய்வானை ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் அவர்களது 9 மாத குழந்தை உயிரிழந்தது. தீபாவளி கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
Oct 26, 2024 12:44 ISTதிருப்பதியில் வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனை
திருப்பதியில் செயல்பட்டு வரும் மூன்று தனியார் உணவக விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் மூலம் ஈ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2 நாள்களுக்கு முன்னர் திருப்பதியில் உள்ள பல உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போது சோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் பெறப்பட்ட தகவல் வதந்தி எனக் கண்டறியப்பட்டது.
-
Oct 26, 2024 12:11 ISTடானா புயல்: மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
டானா புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
-
Oct 26, 2024 12:09 ISTஸ்டாலினுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு!
நிறுவனத்தில் நடைபெற்றுவந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
Oct 26, 2024 12:03 ISTரயில் பிரேக் ஷூ-வால் பலி
ராமநாதபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது தண்டவாளம் வழியாக சென்ற விவசாயி சண்முகவேல் தலையில் விழுந்ததில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Oct 26, 2024 11:47 ISTதொப்புள் கொடி விவகாரம் - மன்னிப்பு கேட்ட இர்ஃபான்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் யூடியூபர் இர்ஃபான் விளக்கக் கடிதம் கொடுத்தார்.
எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை. மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் கடிதத்தில் விளக்கம் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை தெரிவித்தார்,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.
-
Oct 26, 2024 11:30 ISTகாலநிலை மாற்ற செயல் திட்டம் - டெண்டர்
தமிழகத்தில், அனைத்து மாநகராட்சிகளுக்கும் காலநிலை மாற்ற செயல் திட்டத்தை தயாரிக்க திட்டமிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் கோரியது
சுமார் 8.60 கோடி செலவில் 16 மாநகராட்சிகள், 5 நகராட்சிகளுக்கு காலநிலை மாற்ற செயல்திட்டத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர் உள்பட 16 மாநகராட்சிகள், ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி அல்லிநகரம், திருவாரூர் ஆகிய 5 நகராட்சிகள் காலநிலை மாற்ற செயல் திட்டத்தை தயாரிக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது
-
Oct 26, 2024 11:02 ISTஆர்.பி.ஐ-ல் எதிர்பாராமல் வெடித்த துப்பாக்கி குண்டு
சென்னை: ரிசர்வ் வங்கியில் நேற்று இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் முன்னெச்சரிக்கையாக கையில் துப்பாக்கியை எடுக்க, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தேசத்திற்கு இடமாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றாலும், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சுவற்றில் பட்டு விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. எச்சரிக்கை அலாரம் அடித்ததால் துப்பாக்கியில் பெண் காவலர் தர்ஷினி குண்டை லோடு செய்தார்.
வளாகத்தை சுற்றி பார்த்த போது, யாரும் இல்லை என்பதை உறுதி செய்த காவலர், லோடு செய்த தோட்டாவை எடுக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Oct 26, 2024 10:13 ISTரூ.59,000ஐ நெருங்கும் தங்கத்தின் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.7,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Oct 26, 2024 09:47 ISTஒரு நாள் மழைக்கே ஏன் இந்த பாதிப்பு- அரசுக்கு பிரேமலதா கேள்வி
மதுரை மழை பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும். முறையாக தூர்வாராததால் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்க உணவு, உடை, மருந்து வசதிகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். ஒரு நாள் மழைக்கே மதுரையில் ஏன் இந்த பாதிப்பு என்பதை அரசும், மாநகராட்சியும் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Oct 26, 2024 09:39 ISTதவெக மாநாடு - கொடியேற்ற நிர்வாகிகள் ஒத்திகை
தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை மாலை தொடங்குவதற்கு முன் 101 அடி உயர கம்பத்தில் தலைவர் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.
இதையொட்டி கொடி கம்பத்தில் தவெக நிர்வாகிகள், கொடியை ஏற்றி பார்த்து ஒத்திகை நடத்தினர்.
-
Oct 26, 2024 09:07 ISTவீடு திரும்பிய மாணவிகள்
சென்னை திருவெற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு நேற்று 39 மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அரசு பொது மருத்துவமனையில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தற்போது தனியார் மருத்துவமனையில் 3 பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் அவர்களும் வீடு திரும்புவர் என தெரிவிக்கப்படுள்ளது.
-
Oct 26, 2024 09:05 IST2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
Oct 26, 2024 07:55 ISTமதுரை கனமழை- அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஸ்டாலின்
மதுரை கனமழையில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள நிலவரம் பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை தொடர்பு கொண்டு மீட்பு, நிவாரணப் பணிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.