பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல், டீசல் விலையில் தினமும் சற்று ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.61க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீரிருப்பு 45.54%ஆக உள்ளது. மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.354 டிஎம்சி நீரிருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 57.97% ; புழல் - 70.85% ; பூண்டி - 15.04% ; சோழவரம் - 10.54; கண்ணன்கோட்டை - 60.6%
-
Nov 24, 2024 21:44 ISTசெந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்த நா.த.க நிர்வாகிகள்
நா.த.க கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர்.
-
Nov 24, 2024 20:37 ISTரஜினி, விஜயகாந்த் படங்களில் நடித்த குணசித்திர நடிகர் தனபால் மரணம்
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. ரஜினிகாந்த் நடித்த நான் மகான் அல்ல, விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் உள்ளிட்ட 100-கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனபால் நடித்துள்ளார்.
-
Nov 24, 2024 19:57 ISTகலைத்துறையில் திராவிட கொள்கை பேசுபவர்... கலைஞர் விருதுக்கு தகுதி வாய்ந்த நபர் சத்யராஜ் - ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கலைத்துறையில் இருந்து சுயமரியாதை, பகுத்தறிவு என திராவிட கொள்கைகளை பேசுபவர், நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கியதில் மகிழ்ச்சி; மிக மிக தகுதி வாய்ந்த நபரான சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது” என்று பாராட்டினார்.
-
Nov 24, 2024 18:33 ISTஅ.தி.மு.க-வை முடக்க முடியாது - இபிஎஸ்
அ.தி.மு.க-வை முடக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க சோதனைகளை சந்திக்கும் போதெல்லாம், வெற்றி பெறுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலரும் தற்போது அ.தி.மு.க தொடர் தோல்வியை சந்திப்பதாக பேசுவதாகவும், தி.மு.க தொடர் தோல்வியை சந்திக்கவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Nov 24, 2024 17:39 ISTஜானகி நூற்றாண்டு விழா: ஏ.ஐ தொழில்நுட்பத்தில் பேசிய எம்.ஜி.ஆர்
சென்னையில் நடைபெறும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் பேசும்படியாக செய்யப்பட்டது.
-
Nov 24, 2024 16:34 ISTஅரசமைப்பு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஜன.26ம் தேதி காலை 11 மணியளவில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதுடன் பல்வேறு போட்டிகளை நடத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
-
Nov 24, 2024 16:32 ISTநாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் விலகல்
நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
-
Nov 24, 2024 15:51 ISTஅரசியலமைப்பு சட்ட தினம் – ஸ்டாலின் முக்கிய உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
-
Nov 24, 2024 15:11 ISTசதம் விளாசினார் விராட் கோலி!
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 30வது சதத்தை அடித்தார். கோலி சுமார் ஓராண்டு கழித்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார்
-
Nov 24, 2024 14:29 ISTஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு விளக்கம்
கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சினையாக இருந்துவிட கூடாது. எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன். எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரகுமான் உலகிலேயே தலைசிறந்த மனிதர். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம். எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் விரைவில் சென்னை திரும்புவேன் என சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்
-
Nov 24, 2024 14:14 ISTசென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Nov 24, 2024 13:50 ISTமிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை (நவ 25) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 24, 2024 13:41 ISTதி.மு.க - த.வெ.கவினர் இடையே வாக்குவாதம்
சென்னை, அயோத்திக்குப்பம் பகுதியில் தி.மு.க மற்றும் த.வெ.கவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் முகாமில் கட்சிக் கொடியுடன் இருந்த த.வெ.கவினரிடம் தி.மு.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
Nov 24, 2024 13:37 ISTஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறில்லை - வானதி ஸ்ரீனிவாசன்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறில்லை என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறே கிடையாது எனவும், கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பும், அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Nov 24, 2024 13:05 ISTதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களின் படகு - வலைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்ட கடல் எல்லைக்குள் நுழைந்து, தடை செய்யப்பட்ட இரட்டை சுருக்குமடி வலைகளில் மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களின் படகு மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Nov 24, 2024 12:55 ISTஜார்க்கண்ட் முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்!
தேர்தலில் பெரும்பான்மை பெற்ற ஜே.எம்.எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார்.
-
Nov 24, 2024 12:31 ISTஎம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து - நடிகர் ரஜினிகாந்த்
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து (Political Accident); அதில் அவருக்கு விருப்பம் இல்லை, வற்புறுத்தலின் பேரில் அரசியலுக்கு வந்து முதலமைச்சரானார் என முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் காணொலி காட்சி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்
-
Nov 24, 2024 12:08 ISTஉயிரிழந்த பாகனின் மனைவிக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணி வழங்கப்படும் - சேகர் பாபு
உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணி வழங்கப்படும். மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பாகன் உயிரிழந்த 10 நிமிடத்தில் யானை சுய நினைவுக்கு திரும்பிவிட்டது. தற்போது யானை தெய்வானை நலமுடன் உள்ளது. கோயிலில் நடந்த சம்பவத்தில் ஒளிவு மறைவின்றி அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 துறை சார்ந்த குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளது
-
Nov 24, 2024 11:56 ISTஅனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது
திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக சார்பில் வைகோ பங்கேற்றுள்ளனர். குளிர்கால கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
-
Nov 24, 2024 11:42 ISTஇபிஎஸ் தலைமையில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா
இபிஎஸ் தலைமையில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இபிஎஸ் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமி ஜானகி ராமச்சந்திரன் புகைப்படத்தை திறந்து வைத்தார்.
நடிகைகள் வெண்ணீராடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கடைசி வரை எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி, கட்சி நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி, ஜானகி ராமச்சந்திரன் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான்.
ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் பக்குவத்தை உணர்த்தியது என ரஜினி பேசினார்.
-
Nov 24, 2024 10:54 ISTதெய்வானை உடல்நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர் பாபு
தெய்வானையின் உடல்நலம் குறித்து அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்.
தெய்வானை சகஜமாக உணவு உண்பதாக அமைச்சரிடம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 21 நாட்கள் யானையை கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Nov 24, 2024 09:50 ISTஇன்று அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒட்டி, இன்று காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
நாளை முதல் வரும் டிசம்பர் 20ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
-
Nov 24, 2024 09:06 ISTதமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிக கனமழை பொழிய வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை நவ.25,26,27,28 ஆகிய 4 நாட்களில் மிக கனமழை பொழிய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
Nov 24, 2024 08:46 ISTஇ.பி.எஸ்க்கு உதயநிதி காட்டமான பதிலடி
மக்களுக்கான நல்ல திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல் கரப்பான் பூச்சி பெயரையா வைப்பார்கள்...? எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
-
Nov 24, 2024 08:46 ISTபெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்- தனி இணையதளம்
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து கூறியுள்ளது.
-
Nov 24, 2024 07:36 ISTஐபிஎல் மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சவுதி அரேபியாவில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது.
367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் என மொத்தமாக 577 வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளனர்
ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பட்லர், ஸ்டார்க் உள்ளிட்ட 81 வீரர்கள் அடிப்படைத் தொகையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளனர்
அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடியே 50 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் அணி 41 கோடி ரூபாயும் இருப்பு வைத்துள்ளது
சென்னை அணி ரூ.55 கோடியும், மும்பை அணி ரூ.45 கோடியும், பெங்களூரு அணி ரூ.83 கோடியும் இருப்பு வைத்துள்ளது
-
Nov 24, 2024 07:33 IST6 மாவட்டங்களில் மழை
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.