பெட்ரோல்- டீசல் விலை
சென்னையில் 39 வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டிஎன்பில் : இன்று 2 போட்டிகள்
டிஎன்பிஎல் ; பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன . இரவு 7.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மகாராஷ்டிரா அரசியல்
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக வலியுறுத்தியது. இந்நிலையில் நேற்று பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்நிலையில் ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள். ஆளுநர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் : ஓபிஎஸ் கடிதத்தை இபிஎஸ் ஏற்கவில்லை எனத் தகவல்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் ஓபிஎஸ் கடிதத்தை இபிஎஸ் ஏற்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒப்புதல் கிடைக்காததால் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழகத்தில் கொரோனா வரும் நிலையில், பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடர்ந்திருந்த வழக்கில் இந்த கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடத்தக்கூடாது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட ஒ.பி எஸ்., இ.பி.எஸ். ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு ஜூலை 4க்குள் பதிலளிக்க ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஆளுநர் பகத்சிங் கோசியாரி இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இருப்பார் என பா.ஜ.க தலைவர் ஜெ.பி,நட்டா மற்றும் அமித் ஷா தெரிவித்துள்ளனர்
நாளை தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். கொரோனாவால் ரோகித் ஷர்மா விலகியுள்ள நிலையில், இந்திய அணியை பும்ரா வழிநடத்துகிறார்
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம். மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி. தமிழகத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை. பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை என குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் டிஎஸ்-இஓ உள்ளிட்ட 3 செயற்கைகோளுடன் ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வழி நடத்துவார் என்றும், துணைக்கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, முதல்வருடன் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆதரவு கோருகிறார் மேலும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கோருகிறார் யஷ்வந்த் சின்ஹா
மகாராஷ்டிரா முதல்வராக இன்று இரவு 7 மணிக்கு பட்னாவிஸ் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அதே நேரத்தில் சிவசேனா கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் போல் வருமானம் வந்தால்தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்.அன்னிய மரங்களால் வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விட கூடும் – நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா முதல்வராக இன்று இரவு 7 மணிக்கு பட்னாவிஸ் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் மாளிகைக்கு தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் சிண்டே வருகின்றனர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 3 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேருக்கு 12 ஆண்டுகளும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறப்பு மருத்துவக்குழு விசாரணைக்கு ஈரோடு மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிறையில் உள்ள சிறுமியின் தாயார் உள்ளிட்ட 4 பேரிடம் ஜூலை 4ந் தேதி மருத்துவக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
புதுச்சேரியில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவுக்கு 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக எனக்கு எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல. பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல. கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? என ஓபிஎஸ்க்கு, எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்பு, யஷ்வந்த சின்கா வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 87 வேட்பு மனுக்களில் 79 மனுக்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டன.
தமிழகத்தில் 2,381 மையங்களில், எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வர்த்தக சீர்திருத்தங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி: சின்னம் தொடர்பான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் உரிமையை இழக்கிறார்; கட்சியில் இருந்து கொண்டே பொதுக்குழு, செயற்குழு நடத்த இடையூறு செய்தார் ஓபிஎஸ்; பொதுக்குழு நடத்துவதை விரும்பாத ஓபிஎஸ் கற்பனை கடிதத்தை எழுதியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மனு தாக்கல் செய்தார். தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசு உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பல்வேறு மாவட்டங்களில் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ல் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4ம் தேதி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ராணிப்பேட்டை அரசு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் ஆய்வு செய்தார் முதலமைச்சர். ஆய்வின் போது பணியில் இல்லாத விடுதி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விடுதி கண்காணிப்பாளர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் முதலவர்.
மத்திய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4ம் தேதி வரை கெடு விதித்துள்ளது மத்திய அரசு. உத்தரவுகளை பின்பற்றாவிடில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராணிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். வகுப்பறையில் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்
பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் நாளை முதல் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காலை 09.15 மணி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தினை திறந்து வைக்கிறார். காலை 09.30 மணி இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார். காலை 10.45 மணி இராணிப்பேட்டை பிஞ்சி ஏரியினை பொழுதுபோக்கு இடமாக மாற்றும் பணிகள் மற்றும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிடுகிறார்.