Advertisment

Tamil News Highlights: பிரதமர் பதவியை வகிக்க தகுதியற்றவர் மோடி: செல்வப்பெருந்தகை

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
congress legilature leader selvaperunthagai, செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, செல்வப்பெருந்தகை நேர்காணல், தமிழ்நாடு, tamil nadu congress, selvaperunthagai interview, selva perunthagai, congress leader selvaperunthagai, exclusive interview selvaperunthagai

Tamil news live

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

 சென்னையில் 38-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஏரிகளின்  நீர் நிலவம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2831 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 395 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 186 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 187 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 394 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Apr 22, 2024 21:58 IST
    பா.ஜ.க-வில் இருந்து கே.எஸ். ஈஸ்வரப்பா நீக்கம் 

    கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பா.ஜ.க தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது மகனுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மேலும், அவர் எடியூரப்பாவுக்கு எதிராக கடுமையாக அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 



  • Apr 22, 2024 21:05 IST
    கொல்கத்தாவில் 24 ஆயிரம் பணி இடங்கள் ரத்து

    கொல்கத்தாவில் ஆசிரியர் நியமன ஊழலில் தொடர்புடைய 24 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Apr 22, 2024 21:03 IST
    அரசியலுக்கு வருவேன்- நடிகர் விஷால்


    “அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.



  • Apr 22, 2024 19:56 IST
    பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

    தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது. தனது தோல்விகளால், மக்களிடம் எழுந்துள்ள கோபத்திற்கு அஞ்சி, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெறுப்பூட்டும் பேச்சை நாடியுள்ளார்.

    வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம். பிரதமர் மோடியின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காதை மூடிக்கொண்ட தேர்தல் ஆணையம், வெட்கமின்றி நடுநிலைமையை கைவிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.



  • Apr 22, 2024 19:51 IST
    ஈரோட்டில் அதிகப்பட்ச வெயில் பதிவு



    தமிழ்நாட்டில் ஈரோட்டில் அதிகப்பட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சேலம், வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.



  • Apr 22, 2024 18:51 IST
    மக்கள் மிரட்டப்பட்டதாக கூறி மறு வாக்குப்பதிவு கோரும் ஏ.சி.சண்முகம்

    வேலூர் மக்களவை தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு, வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். பீஞ்சமந்தி, தெண்டூர், தொங்குமலை, பேலம்பட்டு, ஜர்தான்கொல்லை உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளில் 5 மலை கிராமங்களிலும் வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாக ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.



  • Apr 22, 2024 17:17 IST
    கோயில் திருவிழாவுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி மரணம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் கல்யாண குமார் (19) மரணமடைந்தார்.



  • Apr 22, 2024 17:15 IST
    பெண் கொலை வழக்கில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

    கடலூரில் தேர்தலன்று நடந்த கொலை சம்பவத்துடன் திமுகவினரை தொடர்புபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் அளித்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Apr 22, 2024 16:52 IST
    பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் மரணம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் கல்யாண குமார் (19) உயிரிழந்துள்ளார்.



  • Apr 22, 2024 16:33 IST
    சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள்

    சிவகங்கையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பதிவான வழக்கில் முருகன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Apr 22, 2024 16:18 IST
    சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

    குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மற்ற வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானார் 



  • Apr 22, 2024 15:46 IST
    நான் இன்சுலின் கேட்கவில்லை என்பது தவறான தகவல்; சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம்

    நான் இன்சுலின் கேட்கவில்லை என்பது தவறான தகவல், தனது உடல்நிலை மோசமாகவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததும் தவறானது என திகார் சிறை கண்காணிப்பாளருக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்வதாக சிறை கண்காணிப்பாளர் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்



  • Apr 22, 2024 15:25 IST
    செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 34வது முறையாக நீட்டிப்பு

    செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 34வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகி வங்கி ஆவணங்களை பெற்று கொண்டார் 



  • Apr 22, 2024 15:07 IST
    அமலாக்கத் துறை வழக்கு; இன்று ஆஜராகிறார் செந்தில்பாலாஜி

    அமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகிறார். செந்தில்பாலாஜியை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர்



  • Apr 22, 2024 14:38 IST
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்- நீதிமன்றம் கட்டுப்பாடு

    கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிடிக்க வேண்டும். ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரையோ அடிக்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Apr 22, 2024 13:53 IST
    அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

    தமிழக  உள்  மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Apr 22, 2024 13:20 IST
    வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் குளறுபடி- சத்ய பிரத சாகு விளக்கம்

    தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

    செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது.

    தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்.



  • Apr 22, 2024 13:20 IST
    ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மே 1 வரை நீட்டித்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 22, 2024 13:01 IST
    கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    கேரளாவில் கொளுத்தும் வெயில் - 10 மாவட்டங்களுக்கு 25ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை

    பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை. கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கோடை வெப்பம் அதிகரித்துள்ளது.



  • Apr 22, 2024 13:00 IST
    கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கோரிய மனுதாரருக்கு அபராதம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி

    மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

    முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்ற வழக்குகளிலிருந்து கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க கோரி மனு

    பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை குறைபாட்டை கருத்தில்  கொண்டு ஜாமின் வழங்குமாறு மனுவில் கோரிக்கை

    பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு  தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. 



  • Apr 22, 2024 12:43 IST
    முல்லைப் பெரியாறு அணை: தமிழக அரசு பதில்

    முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டும் பகுதி குத்தகை பகுதிக்குள் இல்லை என்ற ஆய்வறிக்கையை  ஏற்க முடியாது

    இந்திய நில அளவைத்துறையின் ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

    நில அளவைத் துறையால் 1924ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தை ஆய்வுக்குழு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை

    மெகா வாகன நிறுத்துமிடம் கட்டும் இடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்ய ஆய்வுக்குழு தவறிவிட்டது

    எல்லையை நிர்ணயம் செய்யும் போது தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை - தமிழ்நாடு அரசு

    இந்திய நில அளவைத்துறை இந்த ஆய்வை தனியாகவே நடத்தியதோடு, விவரங்களை தமிழக அரசுக்கு தரவில்லை



  • Apr 22, 2024 12:08 IST
    தேர்தல் பணம் பறிமுதல்- இ.டி பதில்

    தேர்தலின் போது பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை விளக்கம்

    "தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது"

    சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்

    நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் ரூ.3.99 கோடி, நெல்லை திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ரூ.28.51 பறிமுதல் செய்தது தொடர்பான வழக்கு

    பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கோரி நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன் வழக்கு

    நாளை மறுநாளுக்குள் விரிவாக விளக்கமளிக்க   அமலாக்க துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Apr 22, 2024 12:06 IST
    வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

    வெப்ப அலைகளால் ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்கான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை.

     நாட்டின் சில பகுதிகளில் இயல்பான அதிகபட்ச வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகளின் முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு ஆலோசனை



  • Apr 22, 2024 12:04 IST
    கொடநாடு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

    உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    சயான், மனோஜ், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தின் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜர்.



  • Apr 22, 2024 12:03 IST
    கடலூர் கொலை: வதந்தி பரப்பிய 3 பேர் மீது வழக்கு

    கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வட இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தேர்தல் நாள் அன்று கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்

    தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி பரவியது

    போலீஸ் விசாரணையில் சொந்த பிரச்சனை காரணமாக கோமதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது



  • Apr 22, 2024 11:27 IST
    நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் தொடக்கம்

    தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் இன்று மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட முக்கிய பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  • Apr 22, 2024 11:26 IST
    சென்னை: ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக சரிவு

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்

    கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் 1.5 சதவீதம் வரை ஏரிகளில் நீர்மட்டம் சரிவு

    2015 போல் 2023ல் பெருமழை பெய்தும் வறட்சியை நோக்கிச் செல்லும் ஏரிகள்

    பெங்களூரைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?



  • Apr 22, 2024 10:49 IST
    தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. 



  • Apr 22, 2024 10:02 IST
    பரந்துர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு சம்மன்

    பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது வழக்கு. இன்று நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக, ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு வாக்குப்பதிவன்று அரசு ஊழியர்களை வாக்களிக்குமாறு அழைக்கச் சென்ற தாசில்தார் சுந்தரமூர்த்தியுடன் வாக்குவாதம் செய்ததால் நடவடிக்கை சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு 10 பேருக்கும் சம்மன் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 636வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மக்களவை தேர்தலில் பொதுமக்கள் யாரும் வாக்களிக்கவில்லை.



  • Apr 22, 2024 09:13 IST
    திருவண்ணாமலைக்கு 1,820 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டம்

    திருவண்ணாமலைக்கு 1,820 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டம் .சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.



  • Apr 22, 2024 08:42 IST
    ஆகாஷவாணி : பெயரை வைத்ததே காங்கிரஸ் தான்

    அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற பெயரை வைத்ததே காங்கிரஸ் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழிசை செளந்தரராஜன் பதில் காவி என்பது தியாகத்தின் வண்ணம்,தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி,காவி வண்ணத்தில் இலச்சினையை மாற்றுவது தவறில்லையே டி.டி பொதிகை என்ற பெயரை டி.டி தமிழ் என மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளனர் - தமிழிசை சௌந்தரராஜன்



  • Apr 22, 2024 08:19 IST
    மதுரை வந்தார் அழகர்

    வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்டு மதுரை மாநகருக்குள் வந்தடைந்தார் கள்ளழகர் மாநகரின் எல்லையான மூன்று மாவடி பகுதியில் 'கோவிந்தா' கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள்



  • Apr 22, 2024 07:50 IST
    கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் : தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்

    14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் முதலிடம். அமெரிக்காவின் நகரூராவை வீழ்த்தி தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியை பெற்றார், குகேஷ் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார், குகேஷ்.



  • Apr 22, 2024 07:48 IST
    மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

    முதல்கட்ட தேர்தலின்போது மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment