kPetrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சிவராத்திரி: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நீர் நிலவரம்
கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; ஏரிக்கு நீர்வரத்து 25 கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் நீர்இருப்பு 3048 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 கனஅடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
“அதிமுக வளர்ச்சிக்காக மயில்சாமி அயராது உழைத்தார்; நான் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட போது எனக்காக பிரசாரம் செய்தார்; எம்ஜிஆர் அவர்களின் புகழை எங்குச் சென்றாலும் பரப்பினார்; ஓபிஎஸ் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” – ஜேசிடி.பிரபாகர்
என்னோட ஒவ்வொரு திருமண நாளுக்கும், நேர்ல வந்து வாழ்த்துவாரு -நடிகர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரோபோ சங்கர் பேட்டி!
தென்னரசு வெற்றி பெற்றால் தான் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்கும். திமுக தமிழக அரசியலை பின்னோக்கி .இழுத்துச்செல்கிறது. ஒரு வேட்பாளருக்கு எதிராக பல அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு 27-ந் தேதி வரைதான் ராஜமரியாதை. என்று தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னையில் நடக்கும் சத்தியவாணி முத்து அம்மையார் நூற்றாண்டு விழாவில் பேசிய கனிமொழி எம்.பி. கலைஞரிடம் வாதாடி, அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி அமைத்து காட்டியவர் சத்யவாணி முத்து என பாராட்டியுள்ளார்.
திமுகவின் பெண் சிங்கமாக வாழ்ந்தவர் சத்தியவாணி முத்து. அரசியலுக்கு வரும் முன் பெண்களுக்கு வழிகாட்டியா திகழ்ந்தவர். போராட்ட குணம் தியாக உணர்வு கொண்டவராக இறுதி மூச்சுவரை திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து என முதல்வர் ஸ்டாலின் பாராடடியுள்ளார்.
நான் லாபத்திறகாகவோ ஆதாயத்திற்காகவே அரசியலுக்கு வரவில்லை. நல்லது நடக்க வேண்டும் என்ற அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள் என் பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம் என்று ஈரோடு பிரச்சாரத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நடிப்பு திறமையால் பல கோடி மக்களை மகிழ்வித்த மயில்சாமி மறைவு அதிர்ச்சியளிக்கிறது மயில்சாமி குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்டரில் இரங்கல்
தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்-தெலங்கானா ராஷ்டிர சமிதி) செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்எல்ஏ ஜி சயன்னா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுக்கோலில் 3.0 எனப் பதிவாகி இருந்தது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பரப்புரைக்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் 4ஆவது போட்டிக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தப் பட்டியலில் துணை கேப்டன் என யாரையும் பிசிசிஐ குறிப்பிடவில்லை. இதனால், கே.எல் ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதா? என்ற கேள்வியெழுந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பட்டியலில் 8முறையுடன் சச்சின் தெண்டுல்கரை ஜடேஜா சமன் செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் அனில் கும்ளே (9 முறை) முதலிடத்தில் உள்ளார்.
பீகாரில் காண்டாமிருகங்களை அழிவில் இருந்து காப்பாற்றவும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சம்பரான் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பாஜக ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்துள்ளது” என்றார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் ஹரியானா முதல் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், சிப்ஸ் பாக்கெட்-ஐ சாப்பிட்டு முடிப்பதற்குள் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா முடித்துவிட்டார் என வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த நடிகர் மயில்சாமி நல்ல நடிகர் என்பதை விட, சிறந்த சமூக சேவகர் என்று கூறுவது பொருத்தமானதாக இருக்கும் என்று மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூரி கூறினார்.
சென்னை அருகே தனியார் பேருந்து தடுப்பில் மோதி சரிந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை பரப்புரை செய்கிறார்.
காந்திசிலை கருங்கல்பாளையம் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கும், சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் மாலை 5.30 மணிக்கும், சம்பத் நகர் பகுதியில் மாலை 6 மணிக்கும், வீரப்பன் சத்திரம் பகுதியில் மாலை 6.30 மணிக்கும், அக்ரஹாரம் பகுதில் மாலை 7 மணிக்கும் கமல்ஹாசன் பரப்புரை செய்கிறார்.
கே.பி.முனுசாமி ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம்: இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அந்த ஆடியோவில், தான் எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக ஒரு இடத்தில்கூட கே.பி.முனுசாமி கூறவில்லை. அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம்: அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை. அரசியலில் கொடுக்கல் வாங்கல் சகஜம்; இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம், மேற்கு கமெங் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளது.
நடிகர் மயில்சாமி மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், பலகுரல் கலைஞரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரும், அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவருமான அன்புச் சகோதரர் திரு ஆர்.மயில்சாமி அவர்கள் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மக்களின் மனங்களில் நீங்க இடம் பிடித்த இவருடைய இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், பலகுரல் கலைஞரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரும், அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தவருமான அன்புச் சகோதரர் திரு ஆர்.மயில்சாமி அவர்கள் pic.twitter.com/pLK9wg4XPe
— O Panneerselvam (@OfficeOfOPS) February 19, 2023
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில், சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.எஸ்.பி கோமதி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் குழு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தி 46 பெண்கள் உட்பட 167 பேரை போலீசார் மீட்டனர்; ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி உள்ளிட்ட 9 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், காளை குத்தியதில் கண்டனுரைச் சிவா (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடிகர் மயில்சாமி மறைவுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடிகர் மயில்சாமி மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், பல பத்தாண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர். பிறரை மகிழ்வித்து மகிழும் தனது கலைத்திறன் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்றவர். அவரது மறைவு கலைத்துறைக்குப் பேரிழப்பாகும்; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் மயில்சாமி உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் மயில்சாமி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் அஞ்சலி
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா(82) உடல்நலக்குறைவால் தஞ்சாவூரில் காலமானார் .
கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றியவர்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கைது
ஷர்மிளா மேற்கொண்டு வரும் பாதயாத்திரை ரத்தாகியும், பாதயாத்திரையை தொடர்ந்து மேற்கொள்வதாக கூறியதால் கைது
பாதயாத்திரையின் போது, இரு கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால், பாதயாத்திரையை ரத்து செய்தது காவல்துறை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது
வருவாய்த்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்குகிறார்கள்.
இன்று முதல் வரும் 24?ம் தேதி வரை பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெறும்
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸி. அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
9 ஆஸி. பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து
மோசமாக வானிலை காரணமாக குன்னூர் பயணம் ரத்து
கோவையில் இருந்து டெல்லிக்கு நண்பகல் 12.15 மணிக்கு செல்ல உள்ளதாக தகவல்
நல்ல நடிகர், எல்லோரிடமும் நன்றாக பழக கூடியவர்
நடிகர் மயில்சாமி உடலுக்கு கண்ணீர் மல்க நடிகர் செந்தில் அஞ்சலி
சென்னை, சாலிகிராமத்தில் நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அஞ்சலி
பணமோ, பதவியோ தேவையில்லை, மனம் தான் தேவை என்பதற்கு சிறந்த உதாரணம் மயில்சாமி – நடிகர் பார்த்திபன்
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி -கமல் ட்வீட்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் இருவருக்கும், வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக பதிலளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ். 7.2.2023 அன்று அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்த நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்.
பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த மயில்சாமி, தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மயில்சாமி மறைவுக்கு நடிகர்கள் ஆனந்தராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் இரங்கல்
மயில்சாமி மறைவுக்கு இயக்குநர் ரமேஷ் கண்ணா, நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் இரங்கல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இன்று பிரசாரம். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார் .
நடிகர் மயில்சாமி ஒரு கொடைவள்ளல், சக நடிகர்களுக்கு அனைத்து உதவியும் செய்வார் – இயக்குநர் மனோபாலா
நடிகர் மயில்சாமி மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல். சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் – தமிழிசை செளந்தரராஜன்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) மாரடைப்பால் காலமானார்.