Advertisment

Tamil News Updates: 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Petrol Diesel Price, Petrol Price and Diesel Price in Chennai on 22nd September

IE tamil Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2603 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 382 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு 535 கனஅடி தண்ணீர் திறப்பு. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 454 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Mar 14, 2024 22:17 IST
    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு

    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார்.



  • Mar 14, 2024 22:17 IST
    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு

    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார்.



  • Mar 14, 2024 22:15 IST
    தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 11,562 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது பா.ஜ.க

    தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 11,562 கோடியை பா.ஜ.க நன்கொடையாக பெற்றுள்ளது என்று எஸ்.பி.ஐ அளித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.



  • Mar 14, 2024 22:10 IST
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஆந்திராவில் திருப்பதியில் லேசான நில அதிர்வு 

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் திருப்பதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. 



  • Mar 14, 2024 21:38 IST
    வழுக்கி விழுந்ததில் மம்தா பானர்ஜிக்கு தலையில் காயம்; மருத்துவமனையில் அனுமதி

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தனது இல்லத்தில் வழுக்கி விழுந்ததில் அவரது நெற்றியில் பெரிய காயம் ஏற்பட்டதாக டி.எம்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹரிஷ் சட்டர்ஜியின் தெரு இல்லத்திற்கு ஒரு நிகழ்வில் இருந்து திரும்பியபோது அவர் தவறி விழுந்ததாக டி.எம்.சி வட்டாரங்கள் தெரிவித்தன. “அவர் தனது அறைக்குள் நடந்து கொண்டிருந்தார், அவர் திடீரென்று வழுக்கி கீழே விழுந்தார், அவருடைய தலை ஒரு கண்ணாடி ஷோகேஸில் மோதியது. இது அவரது நெற்றியில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டு அதிக இரத்தப்போக்குக்கு வழிவகுத்தது” என்று ஒரு மூத்த டி.எம்.சி தலைவர் கூறினார்.



  • Mar 14, 2024 21:31 IST
    சென்னையில் உணரப்பட்ட நில அதிர்வு?

    திருப்பதி அருகே இன்றிரவு 8.43 மணிக்கு 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு சென்னை சுற்றுப் பகுதியில் உணரப்பட்டதாக தகவல்.



  • Mar 14, 2024 21:29 IST
    தேர்தல் பத்திரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது. தேர்தல் பத்திரங்கள்  தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள நிலையில், தலைமை நீதிபதி அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.



  • Mar 14, 2024 21:26 IST
    மம்தா பானர்ஜிக்கு தலையில் காயம்: விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காயம் அடைந்திருப்பது அதிர்ச்சியும் கவலையும் தருகிறது. கடினமான தருணத்தில் இருந்து அவர் மீண்டு விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Mar 14, 2024 21:04 IST
    அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கக் கூடிய கட்சி பா.ஜ.க; அண்ணாமலை


    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    இதில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கக் கூடிய கட்சி பா.ஜ.க” என்றார்.



  • Mar 14, 2024 21:00 IST
    சென்னை பாஜக நிர்வாகி கைது

     

    சென்னையில் பொது இடத்தில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டி, அதனை சமூக வலைதளத்தில் பகிருந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.



  • Mar 14, 2024 20:37 IST
    மாநகராட்சி பணிகளில் வெளிப்படைத் தன்மை; அண்ணாமலை வலியுறுத்தல்

     

    'மாநகராட்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும், இது போன்ற பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.

     



  • Mar 14, 2024 20:04 IST
    அகதிகள் முகாம் குடியுரிமை; நீதிமன்றம் முக்கிய உத்தரவு

     

    அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Mar 14, 2024 19:46 IST
    அஜித் புதிய படம் அறிவிப்பு வெளியீடு

    நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு குட் பேட் அக்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 2025 பொங்கலுக்கு வெளியாகிறது.



  • Mar 14, 2024 19:04 IST
    ஜாபர் சாதிக்குக்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லை; ஆர்.எஸ் பாரதி

     

    “ஜாபர் சாதிக்கிற்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை; போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகின்றது.
    அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் இபிஎஸ் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தலில் திமுக பெறப்போகும் வெற்றியால் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன” என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.



  • Mar 14, 2024 18:48 IST
    17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்டவர் போட்டோவை வெளியிட்ட காவலர் மீது நடவடிக்கை

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதானவர்கள் காவல் நிலையத்தில், கைவிலங்கிட்டு அமர்ந்திருந்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட காவலர் ராமராஜ், ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை வழக்கில் அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி தினேஷ் உள்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்



  • Mar 14, 2024 18:44 IST
    அஜித்தின் அடுத்த படம் ''குட் பேட் அக்லி''

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் அடுத்து மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்போது குட் பேட் அக்லி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலை வெளியிட்டுள்ளார். 



  • Mar 14, 2024 18:01 IST
    குடியுரிமை சட்டம் குறித்து மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை மனு பொதுப்படையாக உள்ளது, முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.



  • Mar 14, 2024 18:00 IST
    என்னை முதல்வராக ஆக்கியது வடசென்னை தான் : மு.க.ஸ்டாலின் உருக்கம்

    "சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன்" "பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்படும் என கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், என்னை எம்எல்ஏவாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியது வடசென்னை தான் என கூறியுள்ளார்.



  • Mar 14, 2024 17:32 IST
    சமூக ஆர்வலர் கொலை வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை ரத்து

    2012ல், திருவண்ணாமலையில் கனிமவள கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்ப்பட்டு, 8 பேரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ​மேல்முறையீட்டு வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • Mar 14, 2024 17:29 IST
    நாளை மறுநாள் முதல் பேடிஎம் பாஸ்ட் டேக் வேலை செய்யாது என அறிவிப்பு

    நாளை மறுநாள் முதல் பேடிஎம் பாஸ்ட் டேக் வேலை செய்யாது என்பதால் பயனாளர்கள் பாஸ்ட் டேக்கை வேறு வங்கி கணக்குக்கு மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை அறிவுறுத்தல்



  • Mar 14, 2024 16:56 IST
    ஜாபர் சாதிக் குடோனுக்கு சீல்; மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை

    சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக்கின் குடோனில் சோதனையிட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கின் குடோனிற்கு சீல் வைத்தனர். வீட்டை குடோன் போல நடத்தி வந்த நிலையில், வீட்டின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனையில், போதைப் பொருளை எடை போடும் மிஷின், பேக்கிங் மிஷின், புகைப்படங்கள் சிலவற்றை கைப்பற்றி உள்ளனர்



  • Mar 14, 2024 16:39 IST
    மும்பை 42-வது முறையாக சாம்பியன்

    42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று மும்பை அணி அசத்தியுள்ளது. 169 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி, இந்த வெற்றியை ருசித்துள்ளது



  • Mar 14, 2024 16:19 IST
    இ.பி.எஸ்-க்கு எதிராக தி.மு.க மான நஷ்ட ஈடு வழக்கு

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி தி.மு.க தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் தி.மு.க.,வை தொடர்பு படுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது



  • Mar 14, 2024 15:55 IST
    கனிம வள கொள்ளை; தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

    கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியது. இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் கொண்ட சிறப்பு குழு எடுத்த நடவடிக்கைகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



  • Mar 14, 2024 15:33 IST
    நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.40 கோடி முடக்கம் - தமிழ்நாடு அரசு

    நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 40 கோடி முடக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 கோடிக்கு மேலான நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். நிதி நிறுவன மோசடியில் ஏமாறும் மக்களின் நிலை வேதனை அளிக்கிறது என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்



  • Mar 14, 2024 15:14 IST
    ஜெயின் கோயில் அருகே இருக்கும் இறைச்சிக் கடையை அகற்றக் கோரிய வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி

    சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோயில் அருகே இருக்கும் இறைச்சிக் கடையை அகற்றக் கோரி அதன் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “சட்டமோ, விதிகளோ தடை விதிக்காத நிலையில் அதனை எப்படி அகற்ற உத்தரவிட முடியும்?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்



  • Mar 14, 2024 14:54 IST
    விளாத்திகுளம் அருகே பெண் வெட்டிக்கொலை

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை

    சொத்து பிரச்சினை, திருமணம் தாண்டிய உறவை கைவிடாததால் சொந்த அண்ணியை இளைஞர் வெட்டிக் கொன்றதாக தகவல் 



  • Mar 14, 2024 14:35 IST
    ஜாபர் சாதிக் கூட்டாளியிடம் தீவிர விசாரணை

    ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2018ம் ஆண்டே ரூ. 25 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தி உள்ளது அம்பலம்

    2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தகவல்

    2019ம் ஆண்டு ரூ.1.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் அம்பலம்



  • Mar 14, 2024 14:29 IST
    செல்லூர் ராஜு பேட்டி

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டும். தேர்தலுக்காக மேடைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்துபேசும் அவர், முதலில் அண்ணாமலையிடம் அதனை பேச வேண்டும்.

    அண்ணாமலை ஏன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவறாக பேசினார் என கேள்வி கேட்க வேண்டும்

    - செல்லூர் ராஜு பேட்டி



  • Mar 14, 2024 14:19 IST
    புதிய தேர்தல் ஆணையர் யார்?

    புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், பி.எஸ். சாந்து ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி



  • Mar 14, 2024 14:19 IST
    புதிய தேர்தல் ஆணையர் யார்?

    புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், பி.எஸ். சாந்து ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி



  • Mar 14, 2024 13:58 IST
    மு.க.ஸ்டாலின் கடிதம்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்



  • Mar 14, 2024 13:53 IST
    ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழு, வியாழன் அன்று மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு முதல் கட்டமாக தேர்தலை நடத்த பரிந்துரைத்தது

    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்- ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை



  • Mar 14, 2024 13:44 IST
    செல்லூர் ராஜூ பேட்டி

    தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிப்போடுவதை பார்த்தால் எங்கேயோ தவறு நடைபெறுகிறது

    - செல்லூர் ராஜூ பேட்டி



  • Mar 14, 2024 13:44 IST
    டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

    சில மாநிலங்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை

    இலங்கையில் உள்ள தமிழர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டது

    இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை மட்டுமே நோக்கமாக வைத்து சி.ஏ.ஏ. சட்டம் அமலுக்கு வந்துள்ளது

    திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி



  • Mar 14, 2024 13:21 IST
    தேர்தல் அறிக்கை உரிய நேரத்தில் வரும்

    மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை உரிய நேரத்தில் வரும்

    - துரைமுருகன்



  • Mar 14, 2024 13:21 IST
    ஜெயக்குமார் பேட்டி

    அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர் ஓபிஎஸ். சின்னம் குறித்து அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை

    -அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பேட்டி



  • Mar 14, 2024 12:54 IST
    தி.மலையில் போலீசார் குவிப்பு 

    திருவண்ணாமலை, நாயுடு மங்கலத்தில் வன்னியர் சங்க சின்னமான அக்னி கலசம் அகற்றப்பட்ட விவகாரம்.

    திருவண்ணாமலையில் இருந்து 2, 4 சக்கர வாகனங்களில் வன்னியர் சங்கத்தினர் பேரணி. வன்னியர் சங்க பேரணியை முன்னிட்டு 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிப்பு 



  • Mar 14, 2024 12:52 IST
    ஜாபர் சாதிக் குடோனில் சோதனை

    சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

    ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா நேற்று கைது செய்யப்பட்டார்

    சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பெருங்குடியில் உள்ள குடோனில் சோதனை

    2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்



  • Mar 14, 2024 12:52 IST
    ஜாபர் சாதிக் குடோனில் சோதனை

    சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

    ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா நேற்று கைது செய்யப்பட்டார்

    சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பெருங்குடியில் உள்ள குடோனில் சோதனை

    2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்



  • Mar 14, 2024 12:52 IST
    அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

    ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்த ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள்.

    ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அதிமுகவில் இணைந்தனர். திமுக, மதிமுக நிர்வாகிகள் உள்பட 300 பேர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் மேலும் அதிமுகவை வலுப்படுத்தி வரும் ஈபிஎஸ்



  • Mar 14, 2024 12:27 IST
    விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் ஆலோசனை

    விவசாயிகள் போராட்டம் - அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் ஆலோசனை

    குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கூடியது. 

    'கிசான் மஸ்தூர் மகா பஞ்சாயத்' பஞ்சாபில் இருந்து 800 பேருந்துகள், லாரிகள், ரயில்கள் மூலம் விவசாயிகள் டெல்லி வருகை

    ஆலோசனையில் 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போக்குவரத்து மாற்றம் - ஏராளமான போலீசார் குவிப்பு



  • Mar 14, 2024 12:11 IST
    கரும்பு விவசாயி சின்னத்தை முறைப்படி வாங்கியுள்ளோம்

    கரும்பு விவசாயி சின்னத்தை முறைப்படி வாங்கியுள்ளோம் - பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் யோகி ஆர்.கே.ஜெயக்குமார் பேட்டி 



  • Mar 14, 2024 12:08 IST
    இ.பி.எஸ், அண்ணாமலை மீது ஸ்டாலின் வழக்கு

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்

    முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை



  • Mar 14, 2024 12:05 IST
    தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

    தி.மு.க போட்டியிட உள்ள 21 தொகுதிகள் மற்றும் காங்கிரஸ், மதிமுகவுக்கு ஒதுக்க உள்ள தொகுதிகள் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை



  • Mar 14, 2024 12:02 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல்: அறிக்கை சமர்ப்பிப்பு

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான ஆய்வறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

    ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய இக்குழு பரிந்துரை.



  • Mar 14, 2024 11:50 IST
    அ.தி.மு.க தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு

    ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. சின்னம்  தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தவிடக் கோரி ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி  டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு 



  • Mar 14, 2024 11:38 IST
    கோயில் இடிதாங்கியில் சிக்கிய பருந்து மீட்பு

    ராமநாதசுவாமி கோயிலின் இடிதாங்கியில் சிக்கிய பருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.

    ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலின் கோபுரங்களில் இடிதாங்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளது

     இந்நிலையில், ராஜகோபுரத்தின் மேல் உள்ள இடிதாங்கியில் பருந்து ஒன்று சிக்கிக்கொண்டது

    இதுகுறித்து, கோயில் நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின்பேரில், பருந்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

    பருந்தை மீட்கும் வரை சக பருந்துகள் வானில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது



  • Mar 14, 2024 11:14 IST
    புதுவையில் புதிய அமைச்சர் பதவியேற்பு

    புதுச்சேரியின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு எம்.எல்.ஏ. திருமுருகன் பதவியேற்பு

    திருமுருகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு

    மக்களவை தேர்தலுக்கு முன் காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் நடவடிக்கை



  • Mar 14, 2024 11:09 IST
    சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

    சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை ராயப்பேட்டை பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment