Tamil News Today Updates: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவை மேம்படுத்த இணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்காக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கோயிலுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் இருப்போர் அச்சமடைந்தனர். புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட தற்போது வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேச மாட்டோம் எனவும், கள எதார்த்தத்தின் அடிப்படையிலேயே தொகுதி பங்கீடு கோரப்படும் எனவும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கமளித்துள்ளார். விருத்தாசலம் சிறையில் உயிரிழந்த செல்வ முருகன் மீது, பொய்வழக்கு போடப்பட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய, சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “திமுக எப்படி ஐ-பேக் மூலம் சர்வே எடுத்து வைத்து இருக்கிறார்களோ, அதேபோல காங்கிரஸ் கட்சியும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்து வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம் சசிகலாவின் விடுதலை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நீட் தேர்வால் ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்துதான் தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறவே 7.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இணைவதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறினார்.
“நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28க்குள் வசூலித்து கொள்ளலாம் என்று கல்விக் கட்டணம் வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முழு கட்டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவ. 27க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நீதி துறையில் தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளில் நேர்முக உதவியாளர் (பிராந்திய மொழிகள்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தடைந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் குடியரசுத் துணைத் தலைவரை வரவேற்றனர். வரும் 19 ஆம் தேதியன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தண்ணீர் பாதுகாப்பு உறுதிமொழி நாள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். டிசம்பர் 2 ஆம் தேதி இந்திய விமானப்படை விமானம் மூலம் வெங்கய்யா நாயுடு டெல்லி திரும்புகிறார்.
திருவண்ணாமலை, போளூரில் இயங்கி வரும் தரணி சர்க்கரை ஆலையை இயக்கி தொழிலாளர்களை பணிக்கு அழைத்திட வலியுறுத்தியும், 9 மாத நிலுவை ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை வழங்கிட வலியுறுத்தியும்! தரணி சர்க்கரை ஆலை எம்ப்ளாயீஸ் யூனியன் (CITU) சார்பில் தமிழ்நாடு சர்க்கரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வி.குமார் தலைமையில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் "ஆலை நுழைவு போராட்டம்" நடத்தினர்.
சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம். பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை எடுத்துள்ளார், வசந்தா தேவி என்ற பெயரில் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது. ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்துள்ளார். விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருந்ததாகவும், எங்கிருந்தோ வந்த கண்டெய்னர் தங்கள் கார் மீது மோதியதாகவும் நடிகை குஷ்பூ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Request the press to understand that a container rammed into me and not the other way. My car was on the move in the right lane and this container came from nowhere and rammed into me. Police are investigating n questioning the driver to rule out any foul play.
— KhushbuSundar ❤️ (@khushsundar) November 18, 2020
மதுராந்தகம் அருகே நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து, இதில் குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
Met with an accident near Melmarvathur..a tanker rammed into us.With your blessings and God's grace I am safe. Will continue my journey towards Cuddalore to participate in #VelYaatrai #Police are investigating the case. #LordMurugan has saved us. My husband's trust in him is seen pic.twitter.com/XvzWZVB8XR
— KhushbuSundar ❤️ (@khushsundar) November 18, 2020
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நவம்பர் 21-ல் நடைபெறும். 34,424 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights