Advertisment

News Highlights: சசிகலா விடுதலை அதிமுக.வில் மாற்றத்தை உருவாக்காது- முதல்வர் பழனிச்சாமி

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
Nov 18, 2020 09:15 IST
sasikala vk sasikala release date jail, sasikala political plan, சசிகலா அரசியல் திட்டம், sasikala letter to advocate raja senthoor pandian

சசிகலா

Tamil News Today Updates:  அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவை மேம்படுத்த இணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்காக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கோயிலுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் இருப்போர் அச்சமடைந்தனர். புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட தற்போது வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேச மாட்டோம் எனவும், கள எதார்த்தத்தின் அடிப்படையிலேயே தொகுதி பங்கீடு கோரப்படும் எனவும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கமளித்துள்ளார். விருத்தாசலம் சிறையில் உயிரிழந்த செல்வ முருகன் மீது, பொய்வழக்கு போடப்பட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.Highlights

  21:30 (IST)18 Nov 2020

  திமுக போல காங்கிஸும் 234 தொகுதிகளில் சர்வே எடுத்து வைத்துள்ளோம் - கார்த்தி சிதம்பரம்

  மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய, சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “திமுக எப்படி ஐ-பேக் மூலம் சர்வே எடுத்து வைத்து இருக்கிறார்களோ, அதேபோல காங்கிரஸ் கட்சியும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்து வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

  20:28 (IST)18 Nov 2020

  ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட மரங்களை வெட்ட ஐகோர்ட் அனுமதி

  நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் எதுவும் இல்லாததால் 1,838 தைல மரங்களை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

  19:30 (IST)18 Nov 2020

  தமிழகத்தில் இன்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா; 18 பேர் பலி

  தமிழகத்தில் இன்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 18 பேர் உயிரிழ்ந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  19:17 (IST)18 Nov 2020

  சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதல்வர் பழனிசாமி

  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம் சசிகலாவின் விடுதலை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.

  18:13 (IST)18 Nov 2020

  மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைவதில் பெருமை - முதல்வர் பழனிசாமி

  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நீட் தேர்வால் ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்துதான் தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறவே 7.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இணைவதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறினார்.

  17:35 (IST)18 Nov 2020

  கல்விக் கட்டணம் வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி

  “நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28க்குள் வசூலித்து கொள்ளலாம் என்று கல்விக் கட்டணம் வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முழு கட்டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவ. 27க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  17:11 (IST)18 Nov 2020

  திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி; பத்கர்களுக்கு அனுமதி இல்லை

  திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி முருகன் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சூரசம்ஹார நிகழ்ச்சியில் பத்கர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  15:19 (IST)18 Nov 2020

  மத்திய அரசின் நீதி துறையில் பணியிடங்கள்

  மத்திய அரசின் நீதி துறையில் தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளில் நேர்முக உதவியாளர் (பிராந்திய மொழிகள்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  மேலும் விவரங்களுக்கு

  15:06 (IST)18 Nov 2020

  பெரியார் பல்கலைக்கழகம் - தேசிய மாணவர் படை இயக்ககம் இடையே ஒப்பந்தம்

  இந்திய இராணுவ அதிகாரிகள் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மை மற்றும் பட்டயப் படிப்புகளைப் பயின்று பட்டம் பெற வழிசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

  14:59 (IST)18 Nov 2020

  நாடகக் கலைஞர்களுக்கு தமிழக அரசு சிறப்பு அனுமதி

  நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி

  14:59 (IST)18 Nov 2020

  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று சென்னை வந்தடைந்தார்

  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தடைந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் குடியரசுத் துணைத் தலைவரை வரவேற்றனர். வரும் 19 ஆம் தேதியன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தண்ணீர் பாதுகாப்பு உறுதிமொழி நாள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். டிசம்பர் 2 ஆம் தேதி இந்திய விமானப்படை விமானம் மூலம் வெங்கய்யா நாயுடு டெல்லி திரும்புகிறார்.

  14:54 (IST)18 Nov 2020

  அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி ( 1941-2020) இன்று காலமானார்

  ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி ( 1941-2020) இன்று காலமானார்

  14:47 (IST)18 Nov 2020

  வரவர ராவை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு

  சிறையில் உள்ள கவிஞர் வரவர ராவை நானாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

  14:45 (IST)18 Nov 2020

  தொழிலாளர்கள் குடும்பத்துடன் "ஆலை நுழைவு போராட்டம்

  திருவண்ணாமலை, போளூரில் இயங்கி வரும் தரணி சர்க்கரை ஆலையை இயக்கி தொழிலாளர்களை பணிக்கு அழைத்திட வலியுறுத்தியும், 9 மாத நிலுவை ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை வழங்கிட வலியுறுத்தியும்! தரணி சர்க்கரை ஆலை எம்ப்ளாயீஸ் யூனியன் (CITU) சார்பில் தமிழ்நாடு சர்க்கரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வி.குமார் தலைமையில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் "ஆலை நுழைவு போராட்டம்" நடத்தினர்.

  13:45 (IST)18 Nov 2020

  ஸ்டாலின் வலியுறுத்தல்

  மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உடனே மாற்றி வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

  13:38 (IST)18 Nov 2020

  சசிகலா வங்கி வரைவோலை விபரம்

  சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம். பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை எடுத்துள்ளார், வசந்தா தேவி என்ற பெயரில் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது. ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்துள்ளார். விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது. 

  13:31 (IST)18 Nov 2020

  திருவண்ணாமலை தேர் திருவிழா

  கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தேர் திருவிழாவை மாடவீதிகளில் நடத்த உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

  12:35 (IST)18 Nov 2020

  பொதுத்தேர்வு குறித்த முடிவுகள்

  பள்ளி பொதுத்தோ்வு குறித்து டிசம்பா் இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

  12:30 (IST)18 Nov 2020

  மு.க.ஸ்டாலின் கேள்வி

  பிற மாநில மாணவர்களின் பெயர்கள் மருத்துவ தரவரிசை பட்டியலில் இடம்பெற்றது எப்படி? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

  12:16 (IST)18 Nov 2020

  சூரப்பாவிடம் விசாரணை

  அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல்

  12:09 (IST)18 Nov 2020

  விஜய் கட்சித் தலைவர் ராஜினாமா

  நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்துள்ளார். 

  11:17 (IST)18 Nov 2020

  கால்நடை மருத்துவ கலந்தாய்வு

  கால்நடை மருத்துப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு. 15,580 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு 13,901 பேர் தகுதி பெற்றுள்ளனர். விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

  11:15 (IST)18 Nov 2020

  யூசிஜி திட்டவட்டம்

  கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டுமென யு.ஜி.சி. திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 

  10:41 (IST)18 Nov 2020

  குஷ்பூ விளக்கம்

  தாங்கள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருந்ததாகவும், எங்கிருந்தோ வந்த கண்டெய்னர் தங்கள் கார் மீது மோதியதாகவும் நடிகை குஷ்பூ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

  10:08 (IST)18 Nov 2020

  குஷ்பூ கார் விபத்து

  மதுராந்தகம் அருகே நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து, இதில் குஷ்புவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல். 

  09:43 (IST)18 Nov 2020

  மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

  தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

  09:29 (IST)18 Nov 2020

  கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை

  சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை விட அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

  09:28 (IST)18 Nov 2020

  வராகநதியில் வெள்ளப் பெருக்கு

  தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

  09:27 (IST)18 Nov 2020

  அமெரிக்காவில் கொரோனா

  அமெரிக்காவில் புதிதாக 1.55 லட்சம் பேருக்கு கொரோனா. ஒரே நாளில் 1,572 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  இதையடுத்து அமெரிக்காவில் மொத்தம் 1.16 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2.54 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்

  09:26 (IST)18 Nov 2020

  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்

  சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.27 அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 505 கனஅடியாக உள்ளது. 

  09:22 (IST)18 Nov 2020

  இன்று மருத்துவ கலந்தாய்வு

  தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நவம்பர் 21-ல் நடைபெறும். 34,424 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 

  Tamil News: செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, செல்வமுருகன் மனைவி உறவினர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், செல்வமுருகன் மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நகைக்கடை ஒன்றில் முருகனை போலீசார் மிரட்டும் சிசிடிவி காட்சி உள்ளிட்ட சில ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், அவர் செல்வமுருகன் மீது போலீசார் திட்டமிட்டே திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
  #Covid 19 #Rain In Tamilnadu #Coronavirus #Mbbs Counselling
  Advertisment

  Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

  Follow us:
  Advertisment