பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய குற்றவாளி கைது
மதுரவாயல் கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பியை கைது செய்தது காவல்துறை. 1,000 லிட்டர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்றது விசாரணையில் அம்பலம்.
ஐ.பி.எல்
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம். அரசியல் சாசன அமர்வு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது
எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விருதுநகரைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கழக அரசு சார்பிலும் – நம் ஏற்பாட்டிலும் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு மேலாக உறுதியுடன் எவரெஸ்ட் ஏறும் சகோதரி வெற்றிச்சரித்திரம் படைக்கட்டும்.
விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மரக்காணம், செங்கல்பட்டில் நடந்த விஷச்சாராய சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை ஆளுநர் கோரி இருக்கிறார் கைதானவர்களின் விவரம், விசாரணை முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்தும் அறிக்கை கோரி உள்ளார்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறும் போலி நிறுவனங்களை நம்ப வேண்டாம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வ.உ.சி துறைமுக ஆணையம் அறிவிப்பு செய்தித்தாள் அல்லது துறைமுக இணையதளம் வழியாகவே ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகும் – துறைமுக ஆணையம்
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருதியும், பால் உற்பத்தியை பெருக்கவும் கறவை மாடுகளுக்காக காப்பீட்டுத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
அனுமதி பெறாத பால் குளிரூட்டு நிலையங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஒன்றிய அரசால் இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தல் செய்யப்பட்டுள்ளது.
33,000 டன் உரம் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, குடோனில் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது; 150 டன் உரத்தை குடோனில் இறக்காமல் ஒரு கும்பல் வெளிச்சந்தைக்கு கடத்திச் சென்று விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள PlayOff போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என CSK நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள தனது சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.-யான டி.கே.சுரேஷ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா புகார் மற்றும் கொடநாடு கொலை நடந்த போது பதவி விலகாத இ.பி.எஸ், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அரசியலுக்காக பதவி விலக சொல்கிறார் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் 71 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
சென்னை, தாம்பரம் அருகே ரூ.535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் திடீரென பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 லாரிகளில், விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு கொண்டு செல்லும்போது பழுது ஏற்பட்டது. பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
சேலம், கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
காரிப் பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உரத்தின் விலை அதிகரிக்கப்படாது எனவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. யூரியாவுக்கு ரூ.70,000 கோடியும், டி-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு ரூ.38,000 கோடியும் அரசு செலவிடும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்
நீலகிரி, ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை இயக்குவதால், வன விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என மனு அளிக்கப்பட்ட நிலையில், விலங்குகள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தினால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்படக் கூடாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது
வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்
பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை கையாளுவது தொடர்பாக விரிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இது சம்பந்தமாக அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்
நாளைக்குள் கர்நாடக முதல்வர் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முதல்வர் முடிவு குறித்த வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அடுத்த 3 நாட்களுக்குள் அமைச்சரவை உருவாக்கப்படும் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்
கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக வாரந்தோறும் திங்கட்கிழமை கூட்டம் நடத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது; 2020 – 21 இல் மின் நுகர்வு 16,481 மெகாவாட்; ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது- சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
விருதுநகர், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசுக்கடை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமாகின.
இந்த மாத தொடக்கத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகள் குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றுள்ளார்.
அதானி குழும புகார் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து ஆக.14 ஆம் தேதிக்கு முன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும் நாளையும் 2 – 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும்
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு – வானிலை மையம்
சபரிமலை கோவில் மரபுகளை மீறி பொன்னம்பலமேட்டில் பூஜை செய்த விவகாரம்
பொன்னம்பலமேட்டில் பூஜை செய்தது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறை
நாராயணசாமி உள்பட 7 பேர் தலைமறைவு- 7 பேரை தேடும் வனத்துறை
சென்னையை சேர்ந்த நாராயணசாமி சபரிமலை கோவில் கீழ்சாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும் என தகவல்
திருப்பத்தூர் மாவட்டம் அண்ணான்பட்டியில் 5வது நாளாக முகாமிட்டுள்ள 2 யானைகள்
யானைகளை ஆந்திர வனப்பகுதிக்கு விரட்ட முயற்சி
டெல்லியில், இன்று ராகுல் காந்தியை சந்திக்கவுள்ள சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார்
கர்நாடக முதல்வரை தீர்மானிப்பதில் 4வது நாளாக இழுபறி நீடிப்பதை தொடர்ந்து சந்திப்பு
திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் பரமேஸ்வரன் (17) தூக்கிட்டு தற்கொலை
அரசு ஊழியர்களுக்கு 38%ஆக இருந்த அகவிலைப்படி 42%ஆக உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உலகப்புகழ்பெற்ற ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில், தமிழ் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்- மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்வீட்
புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலைப்படிப்புகளுக்கு செண்டாக் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கேரளாவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்ட திருத்தம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டதிருத்தம்
விழுப்புரத்தில் மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 2 பேர் கைது . புதுச்சேரியை சேர்ந்த பர்கத் அலி மற்றும் ஏழுமலை ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைவு . ஒரு சவரன் ரூ. 45,360-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 5,670-க்கும் விற்பனை
விருதுநகர், அருப்புக்கோட்டை பெரிய கடை வீதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு . சென்னையில் 8 இடங்களில் நடைபெற்ற சோதனை நேற்று இரவு நிறைவு .
சென்னை, புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் . போலீசார் ரோந்து பணியின் போது மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் .
சென்னை, ஆவடியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கோபால் என்பவர் உயிரிழப்பு . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோபால் உயிரிழந்தார்
நாமக்கல் : ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு / கடந்த 13ம் தேதி வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் . கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ராஜேஷ்(19) உயிரிழப்பு