Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 31, 2024 22:14 ISTசெத்தாலும் இனி விமான நிலையத்தில் பேச மாட்டேன் - டெல்லி செல்லும் அண்ணாமலை பேட்டி
கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இனிமேல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறிய நிலையில், டெல்லி செல்லும் அண்ணாமலையிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, “செத்தாலும் இனி விமான நிலையத்தில் பேசமாட்டேன், முயற்சி செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
-
Jul 31, 2024 21:56 ISTவயநாடு நிலச்சரிவு: இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
வயநாடு நிலச்சரிவு: இடைவிடாத பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. மாலையில் இருந்தே மழை பெய்து வரும் நிலையில், தற்போது இருள் காரணமாக மீட்புப் பணி நிறுத்தம். சூரல்மலையில் தற்காலிக இரும்புப் பாலம் கட்டும் பணி மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது!
-
Jul 31, 2024 21:22 ISTநீலகிரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வனிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
-
Jul 31, 2024 21:19 ISTகேரளா நிலச்சரிவு: நிவாரணப் பணிகளுக்கு கௌதம் அதானி ரூ. 5 கோடி நிதியுதவி
கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 263 பேர் உயிரிழந்த நிலையில், தொழிலதிபர் கௌதம் அதானி கேரள பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி வழங்கியுள்ளார்.
-
Jul 31, 2024 21:14 ISTஆகஸ்ட் 3-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 31, 2024 20:32 ISTகேரளா நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 263-ஆக உயர்வு
கேரளாவில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400கும் மேற்பட்ட குடியிருப்புகள் புதைந்து போயுள்ளன. மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 263-ஆக உயர்ந்துள்ளது.
-
Jul 31, 2024 20:28 ISTவயநாடு நிலச்சரிவு; நிவாரணப் பணிகு அ.தி.மு.க ரூ.1 கோடி நிதியுதவி - இ.பி.எஸ் அறிவிப்பு
கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு அ.தி.மு.க சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
Jul 31, 2024 19:02 ISTசென்னையில் 2 மருத்துவர்கள் கைது
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், உரிய சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளித்த இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் ரஷியாவில் படித்தவர் ஆவார். மற்றொருவர் சித்த மருத்துவத்துக்கு படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்துவந்துள்ளார்.
-
Jul 31, 2024 19:01 ISTஓகேனக்கல்; நீர்வரத்து அதிகரிப்பு
கேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை நிலவரப்படி தண்ணீர் வரத்து விநாடிக்கு 1.31 லட்சம் கன அடியாக உள்ளது. -
Jul 31, 2024 19:00 ISTகுமாரப்பாளையத்தில் புகுந்த காவிரி நீர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால், கரையோரம் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது.
-
Jul 31, 2024 18:59 ISTவயநாடு; உணவுப் பொருள்கள் அனுப்பி வைப்பு
வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போர்வை, ஸ்வெட்டர், ஆடைகள், அரிசி உள்ளிட்ட மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை நீலகிரி தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு கொண்டு செல்கின்றனர்.
-
Jul 31, 2024 18:03 ISTவயநாட்டில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள்; பினராய் விஜயன்
“கேரள மாநிலம் வயநாட்டில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஒவ்வொருவராக செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
எல்எல்ஹெச் மற்றும் எம்17 ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன” என அம்மாநில முதல் அமைச்சர் பினராய் விஜயன் கூறினார். -
Jul 31, 2024 18:00 ISTவயநாடு மக்களுக்கு ஆதரவு; ராகுல் காந்தி
“வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம். ராணுவம் சிறப்பான பணியை செய்துவருகிறது. உயர்ரக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
Jul 31, 2024 17:59 ISTவயநாடு நிலச்சரிவு; கேரளத்துக்கு விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் நடிகர் விக்ரம் கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார். -
Jul 31, 2024 17:57 ISTகேரளா; மலப்புரம் மாவட்டத்தில் 32 உடல்கள் மீட்பு
கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நிலப்பூர் பகுதியில் சாலியாறு ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 38 பேரின் உடல்கள் மேப்பாடிக்கு கொண்டுவரப்படுகின்றன. உடல்களை உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
Jul 31, 2024 17:07 ISTவயநாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழை; மீட்புப் பணிகள் பாதிப்பு
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
Jul 31, 2024 16:29 ISTவயநாடு நிலச்சரிவு: நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு 5கோடி நிதி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ₹5 கோடி நிவாரண நிதியை கேரளா முதலமைச்சர் பிரனாயி விஜயனை சந்தித்து காசோலையை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு!
-
Jul 31, 2024 15:57 ISTகேரளா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 200-ஆக உயர்வு
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jul 31, 2024 15:42 ISTசிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்
தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க அறிவிப்பாணை வெளியிட வேண்டும்" - முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்.
-
Jul 31, 2024 15:38 ISTகேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை
கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது. குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம். எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை - மத்திய அமைச்சர் அமித்ஷா
-
Jul 31, 2024 14:35 ISTசவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி; அதன் காரணமாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதி.
-
Jul 31, 2024 14:33 ISTமேகதாது - பிரதமரிடம் கர்நாடகா வலியுறுத்தல்
பிரதமர் மோடியுடன், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் டி.கே.சிவகுமார் வலியுறுத்தல்.
-
Jul 31, 2024 13:31 IST14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 31, 2024 13:30 ISTதிருமாவளவனுக்கு பிடிவாரண்ட்
மயிலாடுதுறையில் 2003ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது தொடர்பான வழக்கில் ஆஜர் ஆகாததால் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு.
-
Jul 31, 2024 13:29 ISTநீதிமன்றத்தில் நடிகை கௌதமி ஆஜர்
நில மோசடி தொடர்பான வழக்கில், நடிகை கௌதமி காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் நில மோசடி வழக்கில் கைதான அழகப்பன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கௌதமி நேரில் ஆஜராகி ஆட்சேபனை.
-
Jul 31, 2024 12:54 ISTஆளுநர் குறித்த கேள்விக்கு முதல்வர் பதில்
ஆளுநர் குறித்த கேள்விக்கு முதல்வர் பதில்
“நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல''
ஆளுநர் பதவி நீட்டிப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-
Jul 31, 2024 12:39 ISTதங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,420க்கும், ஒரு சவரன் ரூ.51,360க்கும் விற்பனை
-
Jul 31, 2024 12:15 ISTமேலும் ஒரு தமிழர் பலி
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவரின் உடல் மீட்பு
ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3வது நபரின் உடல் மீட்பு
-
Jul 31, 2024 11:53 ISTகுட்கா விவகாரம்; உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.
உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டுவதற்கு, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர்.
-
Jul 31, 2024 11:27 ISTஸ்டாலின் நிதியுதவி
வயநாடு நிலச்சரிவில் நீலகிரியைச் சேர்ந்த நபர் பலி ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி
கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த, நீலகிரி பந்தலூரை சேர்ந்த கல்யாண குமார் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
-
Jul 31, 2024 10:50 ISTவயநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது.
143 உடல்களுக்கான பிரேத பரிசோதனை நிறைவு
-
Jul 31, 2024 10:32 ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 68,168 கன அடியில் இருந்து 1.25 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 21,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
Jul 31, 2024 10:31 ISTகல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 3,400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் திறந்து வைத்து தண்ணீரில் நெல் மணிகள் மற்றும் மலர் தூவினர்.
-
Jul 31, 2024 10:30 ISTகாங்கிரஸ் நாடாளுமன்ற பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.
கூட்டம் தொடங்குவதற்கு முன் வயநாடு நிலச்சரிவியில் உயிரிழந்தவர்களுக்கும், டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழப்புக்கும் பொதுக் குழு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது
-
Jul 31, 2024 10:29 IST6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 31, 2024 10:19 ISTவட மற்றும் மத்திய கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 31, 2024 09:46 ISTகாவிரியில் 2,00,750 கனஅடி நீர்வரத்து
கர்நாடகா, கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,00,750 கனஅடியாக உள்ளது.
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 1,30,000 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70,750 கனஅடி நீரும் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. -
Jul 31, 2024 09:31 ISTகாங்.நாடாளுமன்றக் குழு ஆலோசனைக் கூட்டம்
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது.
-
Jul 31, 2024 09:05 ISTவயநாடு விரைகிறார் கேரள முதல்வர்
நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு இன்று செல்கிறார் பினராயி விஜயன். அவரது தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.
-
Jul 31, 2024 09:05 ISTமேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து நேற்றிரவு 81,500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை நீர் திறப்பு 1 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
-
Jul 31, 2024 09:05 ISTகேரளாவுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
கேரளாவுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
வயநாட்டில் நிலச்சரிவால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காலை முதலே அங்கு மழை பெய்து வருகிறது.
-
Jul 31, 2024 08:33 ISTசூரல்மாலாவில் தேடுதல் பணி மும்முரம்
வயநாட்டின் சூரல்மாலாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
#WATCH | Kerala: Rescue and search operation underway in Wayanad's Chooralmala after a landslide broke out yesterday early morning claiming the lives of 143 people
— ANI (@ANI) July 31, 2024
(latest visuals) pic.twitter.com/aqAG9uZMEP -
Jul 31, 2024 08:30 ISTசூரல்மாலாவில் மீட்பு பணிகள் தீவிரம்
வயநாட்டின் சூரல்மாலாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
(சமீபத்திய காட்சிகள்)
#WATCH | Kerala: Relief and rescue operation underway in Wayanad's Chooralmala after a landslide broke out yesterday early morning claiming the lives of 143 people
— ANI (@ANI) July 31, 2024
(latest visuals) pic.twitter.com/Cin8rzwAzJ -
Jul 31, 2024 08:28 ISTகேரள சட்டப்பேரவையில் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, கேரளாவில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
#WATCH | Thiruvananthapuram, Kerala: National flag at half-mast at Kerala Legislative Assembly, as two-day mourning is being observed in the state after Wayanad landslide claimed 143 lives. pic.twitter.com/Bbj1CZsiIr
— ANI (@ANI) July 31, 2024 -
Jul 31, 2024 08:24 ISTகேரள சுகாதாரத்துறை அமைச்சர் வாகனம் விபத்து
வயநாட்டுக்கு சென்ற கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது. சிறு காயங்களுடன் அவர், மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறை
-
Jul 31, 2024 08:17 ISTஎம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேருக்கு ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது
-
Jul 31, 2024 07:47 ISTதமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 31, 2024 07:30 ISTவயநாடு சென்றடைந்தது தமிழக மீட்பு குழு
மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.
வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
-
Jul 31, 2024 07:30 ISTமுக்கொம்பு வந்தது காவிரி நீர்
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது, விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்
கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும்கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
-
Jul 31, 2024 07:30 ISTமுழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, காவிரியில் 81,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டு வரலாற்றில் மேட்டூர் அணை இதுவரை 71 முறை 100 அடியை எட்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.