Advertisment

Tamil News Updates: 2026 சட்டமன்ற தேர்தல்; தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவில் உதயநிதி

Tamil Nadu News Update Today- 20 July 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
udhaya

Tamil news today live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 61,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜூலை 20) காலை வினாடிக்கு 61,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 5வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

  • Jul 20, 2024 20:46 IST
    2026 சட்டமன்ற தேர்தல்; தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவில் உதயநிதி


    2026 சட்டமன்ற தேர்தல் திமுக ஒருங்கிணைப்பு குழுவில் கே.என். நேரு, ஆர்.எஸ் பாரதி, எ.வ வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Jul 20, 2024 19:52 IST
    ஆம்ஸ்ராங் கொலை வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது

    பகுஜன் திராவிட கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ராங் கொலை வழக்கில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருக்கும், ஹரிதரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய செல்போன், திருவள்ளூர் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.



  • Jul 20, 2024 18:28 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான ரவுடி அஞ்சலையை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த திட்டம்

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி அஞ்சலையை இன்று இரவு 7 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜர் படுத்த போலீசார் திட்டம்!



  • Jul 20, 2024 18:26 IST
    5 கட மான்கள் வனப் பகுதியில் விடுவிக்கபட்டதாக தகவல்

    பூங்காவில் உள்ள வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்ததை அடுத்து, கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 கட மான்கள் காட்டுக்குள் விடப்பட்டன.  இதில் கடந்த மே மாதம் 26 புள்ளி மான்களும், ஜூலை 7, 12ம் தேதிகளில் 11 கட மான்களும் விடுவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து தற்போது 5 கட மான்கள் பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன.



  • Jul 20, 2024 18:23 IST
    தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப முடிவு

    சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு



  • Jul 20, 2024 18:23 IST
    தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் ஆலையை இயக்க எந்த தடையும் இல்லை

    தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் ஆலையை இயக்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் சி.வி.கணேசன் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.



  • Jul 20, 2024 18:21 IST
    வெள்ளேரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

    கூடலூர் அடுத்த வெள்ளேரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உட்பட இருவரை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.



  • Jul 20, 2024 16:54 IST
    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போலீஸ் அதிகாரிகளுடன் ஏ.டி.ஜி.பி ஆலோசனை

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி வருகிறார். 3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள புதுச்சேரி மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்தும், சட்டம் - ஒழுங்கு குறித்தும், கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

    கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பொதுமக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

     



  • Jul 20, 2024 16:52 IST
    தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டி.எஸ்.பி-க்கள் இடமாற்றம்

    திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம். ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி இடமாற்றம். 

    மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமனம். தாம்பரம் காவல் ஆணையரக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம். நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம். 



  • Jul 20, 2024 16:07 IST
     ஆர்ம்ஸ்ட்ராங் கொலை - நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பேரணி 

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உயிரிழப்பிற்கு, உரிய நீதி கிடைக்க வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 



  • Jul 20, 2024 16:06 IST
    தேர்தல் பரப்புரையை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி 

    ஹரியானா சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா தொடங்கினார். 



  • Jul 20, 2024 16:05 IST
    எதிர்க்கட்சித் தலைவரான ராப்ரி தேவி 

    முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான ராப்ரி தேவி பீகார் மாநில சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவரானார். 



  • Jul 20, 2024 16:05 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை: வெளியாகிய புதிய தகவல்கள் 

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் வேலூரில் வைத்து அருள், பொன்னை பாலுவை மூளை சலவை செய்துள்ளார். அதற்காக பாலு, தங்க பிரேஸ்லெட்டை வைத்து ரூ.3.50 லட்சம் பணமாக்கியுள்ளார் - முதல் திட்டம் வேலூரில் இருந்து தொடங்கியுள்ளது. சம்போ செந்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹரிஹரனுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கோடாரி ஒன்றை வாங்கி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அதனை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது

     



  • Jul 20, 2024 15:47 IST
    'தனி வாக்கு வங்கி இருக்கு' - சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேச்சு

    "கூட்டணியால் ஜெயித்தோம் என்பதற்காக, காங்கிரஸ் கட்சிக்கு பலமில்லை என யாரும் நினைக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சிக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது, தனித்து நிற்கும்போது கனிசமான வாக்குகளை பெற்றது" என்று சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். 



  • Jul 20, 2024 15:32 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - வெளியாகிய புதிய தகவல்கள்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

    புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார். கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளதால் அவரது 2 வங்கிக் கணக்கு விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை அஞ்சலை மூளைச் சலவை செய்ததாகவும், ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Jul 20, 2024 15:29 IST
    தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டி.எஸ்.பி-க்கள் இடமாற்றம்

    திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



  • Jul 20, 2024 14:38 IST
    'தி.மு.க அரசின் மிரட்டல்களுக்கு பாமக ஒருபோதும் பணியாது' - அன்புமணி கண்டனம்

    “சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு பதிவதா?, தி.மு.க அரசின் மிரட்டல்களுக்கு பாமக ஒருபோதும் பணியாது” என்று கூறி பா.ம.க  தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

     

     



  • Jul 20, 2024 14:38 IST
    டி.டி.வி தினகரன் வலியுறுத்தல் 

    "முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையல் கூடங்களாக மாறியிருக்கும் அம்மா உணவகங்கள் – பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடித் திட்டமான அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன்மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தரமான உணவுகளை வழங்குவதோடு, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளை உடனடியாக களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 



  • Jul 20, 2024 14:27 IST
    778 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் - மத்திய அரசு


    வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பினர் - மத்திய அரசு

    "டாக்கா, சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்"

     



  • Jul 20, 2024 13:47 IST
    மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும்: போக்குவரத்து துறை

     "மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கைகளுக்கு மேல் ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்"

    "ஸ்டிக்கர்கள் கிழிந்த முறையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்"

    "மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்"

    "மாற்றுத்திறனாளிகள், அவர்களது துணையாளர்  ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்"

    "மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும்" - ஓட்டுநர் நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்



  • Jul 20, 2024 13:05 IST
    டெல்லி செல்லும் ஸ்டாலின்

    27ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள  வரும் 27ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றப்பின் முதல் முறையாக ஸ்டாலின் அவரை சந்திக்க உள்ளார். 



  • Jul 20, 2024 12:47 IST
    வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி- ஸ்டாலின் 

    முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் அயலக தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளது. 

    வங்கதேசத்தின் நிலையை தொடர்ந்து கண்காணித்து அங்குள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயார். வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி- முதல்வர் ஸ்டாலின் 



  • Jul 20, 2024 12:46 IST
    இ.பி.எஸ்ஸூக்கு மேயர் பிரியா கண்டனம்

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம்

    திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை -  மக்கள் அறிவர்.

    அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்- மேயர் பிரியா கண்டனம்



  • Jul 20, 2024 12:19 IST
    துணை முதல்வர் பதவி என்பது வதந்தியே: உதயநிதி

    எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க உள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன - கவனித்து வருகிறேன். 

    அனைத்து அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும் இளைஞரணி பதவிதான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.  நான் துணை முதலமைச்சராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி. பத்திரிகைகளில் வரும் வதந்தகளை நம்பவேண்டாம்- தி.மு.க இளைஞரணி ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்



  • Jul 20, 2024 12:03 IST
    நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசியதேர்வு முகமை

    உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக வெளியிட்டது தேசியதேர்வு முகமை



  • Jul 20, 2024 11:51 IST
    மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாம்

    நீலகிரி, கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை



  • Jul 20, 2024 11:47 IST
    மூடிய அம்மா உணவகங்களை திறக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்

    அதிமுக ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டன. 
    மக்களுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, தொடங்கி தரத்துடன் இயக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்

    - எடப்பாடி பழனிசாமி அறிக்கை    



  • Jul 20, 2024 11:13 IST
    இந்தியாவில் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது

    Crowd Strike சிக்கல்: இந்தியாவில் விமான சேவைகள் சரிசெய்யப்பட்டு, அனைத்து செயல்பாடுகளும் இயல்புநிலைக்கு திரும்பியதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.



  • Jul 20, 2024 10:58 IST
    10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jul 20, 2024 10:38 IST
    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரிப்பு

    தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை வினாடிக்கு 61,000 கனஅடியாக இருந்து நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு



  • Jul 20, 2024 10:37 IST
    இயல்பு நிலைக்கு திரும்பிய மதுரை விமான நிலையம்

    மதுரை விமான நிலையத்தில் மைக்ரோசாப்ஃட் இணையதள குளறுபடி காரணமாக இன்று (ஜூலை 20) சென்னை, பெங்களூரு விமானங்கள் ரத்தான நிலையில் தற்போது இணையதள பிரச்னை சீரானதை தொடர்ந்து போர்டிங் பாஸ்களைபெற்று துபாய் விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் விமான நிலையத்திற்குள் சென்றனர்.



  • Jul 20, 2024 10:36 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,835-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,680-க்கும் விற்பனையாகிறது



  • Jul 20, 2024 10:34 IST
    பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    திருநெல்வேலி, தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1390.231 கனஅடியாக  நீர்வரத்து அதிகரிப்பு; 


    பாபநாசம் அணையின் நீர்மட்டம் 117.20 அடியை எட்டியுள்ளது. 



  • Jul 20, 2024 09:56 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனைவி மனு

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு?

    வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் கணவர் நாகேந்திரனை மருத்துவப் பரிசோதனைக்கு சென்னை அழைத்து வரும் போது என்கவுன்டர் செய்ய போலீசார் திட்டம்

    - வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நகேந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்



  • Jul 20, 2024 09:21 IST
    இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை விமான நிலையம்

    Crowd Strike அப்டேட் காரணமாக மைக்ரோசாஃப்ட் இணையதளம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் இன்று 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

    தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு சென்னை விமான நிலையத்தில் வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படுகின்றன.



  • Jul 20, 2024 09:21 IST
    மீன் பதன ஆலையில் வாயு கசிவு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

    தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் தனியார் மீன் பதன ஆலை அம்மோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் முரளி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட ஆலையில் ஆய்வு



  • Jul 20, 2024 08:50 IST
    அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு

    சென்னை எழும்பூரில்  மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மிது வழக்குப்பதிவு

    அரசு வழங்கிய டிவி, மின்விசிறியை உடைத்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jul 20, 2024 08:44 IST
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 53,098 கனஅடியாக அதிகரிப்பு

    சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 44,353 கனஅடியில் இருந்து 53,098 கனஅடியாக உயர்ந்துள்ளது

    நீர்மட்டம் - 61.31 அடியாக உயர்வு

    நீர் இருப்பு - 25.647 டிஎம்சி

    நீர் வெளியேற்றம் -  1,000 கனஅடி



  • Jul 20, 2024 08:43 IST
    3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடல்

    நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவிப்பு



  • Jul 20, 2024 08:01 IST
    நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: 21 பேர் மீது வழக்குப்பதிவு

    சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர்.



  • Jul 20, 2024 07:41 IST
    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jul 20, 2024 07:41 IST
    சென்னையில் இன்று 2வது நாளாக விமான சேவை பாதிப்பு

    Crowd Strike அப்டேட் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் இயங்காத நிலையில் உலகம் முழுவதும் விமான சேவைகள் முடங்கியுள்ளன.

    நேற்று உலகம் முழுவதும் 1,400 விமானங்கள் ரத்தானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    சென்னையில் இன்று 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.



  • Jul 20, 2024 07:40 IST
    தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு

    தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

    மூச்சுத் திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மோனியா வாயு கசிவு விவகாரம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Jul 20, 2024 07:40 IST
    கனமழை: நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    கனமழை காரணமாக நீலகிரியில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



  • Jul 20, 2024 07:39 IST
    குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு

    செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நாள் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறால் இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் நடவடிக்கை



  • Jul 20, 2024 07:39 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அஞ்சலை கைது

    பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment