Advertisment

Tamil Breaking News Highlights: ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

Tamil Nadu News Update Today- 17 September 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pakistan violates Indian airspace

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

  • Sep 17, 2024 23:53 IST
    லெபனான் நாட்டில் மீண்டும் கலவரம்

    லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் வெடித்து சிதறியுள்ள நிலையில, ஹெஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ள்ளது.



  • Sep 17, 2024 21:50 IST
    புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாளை பந்த் அறிவிப்பு - அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



  • Sep 17, 2024 21:48 IST
    ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் மரணம்

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தில் ஏரியில் குளிக்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த மோகன் (12), வர்ஷா (6), தன்ஷியா (5), கார்த்திகா (10) 4 குழந்தைகள் ஆகிய சுழலில் சிக்கி  உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 17, 2024 21:47 IST
    பட்டாம்மாளுக்கு பெரியார் விருது: குடும்பத்தினர் நெகிழ்ச்சி

    திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் பாப்பம்மாள் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் 'பெரியார் விருது' பெற்ற அவரின் குடும்பத்தினர் "பாட்டி எப்படி இருக்காங்க..? அவங்கள பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொன்னாரு" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளனர்.



  • Sep 17, 2024 20:27 IST
    கோவையில் மதநல்லிணக்க மிலாடி நபி!

    கோவையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்கள் இணைந்து அன்னதானம் வழங்கி மதநல்லிணக்கத்துடன் மிலாடி நபி கொண்டாடியுள்ளனர்!



  • Sep 17, 2024 19:46 IST
    "அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    திமுக முப்பெரும் விழாவில் விருது வென்றவர்களுக்கு எனது பாராட்டை தெரிவிப்பதுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்குரியவர்கள் என்பதையும் கூறிக்கொள்கிறேன். பெரியார் விருது பெற்ற பாப்பம்மாள், கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 108 வயதிலும் கழகத்தின் அடையாளமாக இருக்கிறார். 

    கலைஞர் அவர்களால் ஆழ்வார் என்றும், என்னால் திராவிட ஆழ்வார் என்றும் அழைக்கப்படும் ஜெகத்ரட்சகன் கலைஞர் விருது பெற்றுள்ளார். இதயத்தின் ஒரு பக்கத்தை கழகத்திற்கும் மறு பக்கத்தை ஆழ்வார்களுக்கும் ஒதுக்கியவர். எத்தனையோ மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் இன்னமும் அவருக்கு வருகிறது. ஆனாலும், எதற்கும் சமரசம் செய்யாதவர். 

    கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, சமூகநீதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாநிலத்தை முன்னேற்றியுள்ளோம். எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டது என்றால், இல்லை. ஆனால், எல்லா நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் மாநிலத்தை முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் அரசு செயல்பட்டுவருகிறது. மாநில சுய ஆட்சி என்பது நம் உயிர்நாடி. அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்" என்று தி.மு.க முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். 

     



  • Sep 17, 2024 19:27 IST
    "தமிழ்நாடும், தி.மு.க-வும் எனது இரு கண்கள்": தி.மு.க பவள விழாவில் ஸ்டாலின் பேச்சு 

    "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக14 நாட்கள் அமெரிக்க பயணம், நானும் தம்பி டி.ஆர்.பி. ராஜாவும் சென்றோம். சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என்றுதான் கூற வேண்டும். இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.

    எண்ணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அமெரிக்க வாழ் மக்கள் கொடுத்த வரவேற்பு மறக்கவே முடியாது. தொண்டர்களில் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. தமிழ்நாடும், திமுகவும் எனது இரு கண்கள் என செயல்பட்டுவரும் இந்நேரத்தில் பவள விழாவில் பங்கேற்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். 



  • Sep 17, 2024 19:09 IST
    துரைமுருகன் பேச்சு

    “இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் என்னுடன் களத்தில் நின்றவர்கள், இன்று திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுகிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி” என்று தி.மு.க ‘முப்பெரும் விழா’ 2024 நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் பேசினார். 



  • Sep 17, 2024 19:08 IST
    தி.மு.க பவள விழா - விருது வழங்கிய ஸ்டாலின் 

    தி.மு.க முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் விருதாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

    பாப்பம்பாள் - பெரியார் விருது
    மிசா ராமநாதன் - அண்ணா விருது
    ஜெகத்ரட்சகன் - கலைஞர் விருது
    தமிழ்தாசன் - பாவேந்தர் விருது
    வி.பி.ராஜன் - பேராசிரியர் விருது
    எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - மு.க.ஸ்டாலின் விருது ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். 



  • Sep 17, 2024 18:45 IST
    மரியாதை 


    தி.மு.க முப்பெரும் விழா மற்றும் பவள விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் ஆகியோரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 



  • Sep 17, 2024 18:44 IST
    தி.மு.க பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாட்டம் தொடங்கியது

    தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி 'பேரறிஞர்'அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது தி.மு.க பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

     



  • Sep 17, 2024 18:24 IST
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா 

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி அசத்திய இந்தியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 



  • Sep 17, 2024 17:55 IST
    ஆட்சி அமைக்க உரிமை கோரல் கடிதம் - ஆளுநரிடம் வழங்கிய புதிய முதல்வர் அதிஷி சிங்

    டெல்லி துணை நிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரல் கடிதத்தை, புதிய முதலமைச்சராக தேர்வாகியுள்ள அதிஷி சிங், துணை நிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். 



  • Sep 17, 2024 17:18 IST
    டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்



  • Sep 17, 2024 16:46 IST
    பள்ளிகளுக்கு விடுமுறை 

    புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை இந்திய கூட்டணி கட்சிகள் பந்த் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Sep 17, 2024 16:17 IST
    நிபா வைரஸ் பாதிப்பு: 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

    நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரியில் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த 6 மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொள்ள சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் மலப்புரத்தில் செப்டம்பர் 9-ம் தேதி 24 வயது ஆண் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Sep 17, 2024 15:35 IST
    பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை

    பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உரிய அனுமதி பெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள்து. எனினும், பொது இடம், நடைபாதை, ரயில்வே தடம் மற்றும் நீர்வழிப்பார்தை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.



  • Sep 17, 2024 15:31 IST
    த.வெ.க. தலைவர் விஜய் பெரியார் திடலுக்கு வந்து பெரியார் சிலைக்கு மரியாதை

    த.வெ.க. தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு நேரில் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



  • Sep 17, 2024 14:42 IST
    மகாவிஷ்ணு சர்ச்சை எதிரொலி: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்

    சென்னையில் அரசுப்பளியில் மகாவிஷ்ணு பேசிய சர்ச்சை விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தஞ்சை சரபோஜி மன்னர் நூலக நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 



  • Sep 17, 2024 14:35 IST
    டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் - புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி

    டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி: “டெல்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்; கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வர் ஆக்குவதே எங்களின் இலக்கு; சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது; அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது வைத்த நம்பிக்கைக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 17, 2024 14:32 IST
    சி.ஜே.ஐ வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தியில் பங்கேற்பு; பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கிறார்கள் - மோடி

    பிரதமர் மோடி: “தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர்; அதிகாரப் பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்; விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது காங்கிரஸுக்கும் சில கட்சிகளுக்கும்  பிடிக்கவில்லை; சுதந்திரத்திற்காக போராடியபோது விநாயகர் சதுர்த்தி மூலமே மக்கள் ஒன்றிணைந்தனர்” என்று கூறினார்.



  • Sep 17, 2024 14:04 IST
    மதுரை மகளிர் விடுதி தீ விபத்து; மேலும் ஒருவர் மரணம்

    மதுரையில், மகளிர் விடுதி தீ விபத்தில் படுகாயம் அடைந்து கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலாளர் புஷ்பா உயிரிழந்துள்ளார்



  • Sep 17, 2024 13:41 IST
    சிவசேனா எம்.எல்.ஏ. மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு

    இடஒதுக்கீடு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு தருவதாக மகாராஷ்டிரா மாநில ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்வாட் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர் 



  • Sep 17, 2024 13:16 IST
    பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை

    அதிகளவு போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன



  • Sep 17, 2024 12:50 IST
    நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்பதே எங்கள் இலக்கு - அமித்ஷா

    நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்பதே எங்கள் இலக்கு என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்



  • Sep 17, 2024 12:41 IST
    தமிழாசிரியர் பணிக்கான தகுதி விவகாரம் - ராமதாஸ் கண்டனம்

    வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டுமா? என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Sep 17, 2024 12:07 IST
    டெல்லி முதல்வராகும் அதிஷி

    செவ்வாயன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிஷியை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர், அதாவது அவர் டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்பார். டெல்லி லெப்டினன்ட் கவர்னரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியளவில் அதிஷி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Sep 17, 2024 11:41 IST
    பிரதமர் மோடி பிறந்தநாள்; அன்புமணி வாழ்த்து

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என எக்ஸ் தளத்தில் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Sep 17, 2024 11:33 IST
    4 பேர் உயிரிழப்பு

    திருநெல்வேலி, தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



  • Sep 17, 2024 10:37 IST
    சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: விஜய் அறிக்கை

    பெரியார் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்

    விஜய் அறிக்கை

     



  • Sep 17, 2024 10:36 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6865-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,920-க்கும் விற்பனை



  • Sep 17, 2024 10:28 IST
    பிரதமர் மோடி பிறந்தநாள்: விஜய் வாழ்த்து



  • Sep 17, 2024 09:55 IST
    ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

    கடந்த இரண்டு நாள்களாக அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, நீக்கி செவ்வாய்க்கிழமை முதல் அருவிகள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.



  • Sep 17, 2024 09:55 IST
    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

    இன்று (செப். 17) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,014 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,083 கன அடியாக குறைந்துள்ளது.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 110.77 அடியிலிருந்து 110.05 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 78.47 டிஎம்சியாக உள்ளது.



  • Sep 17, 2024 09:17 IST
    கேரளாவில் நிஃபா வைரஸ் தொடர்பு பட்டியலில் 175 பேர்

    கேரளாவில் நிஃபா வைரஸூக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரத்தில் நிபா வைரஸ் தொடர்பு பட்டியலில் 175 பேர் உள்ளனர்.

    பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.



  • Sep 17, 2024 08:39 IST
    பிரதமர் மோடி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்



  • Sep 17, 2024 08:29 IST
    அகதிகளை ஏற்றி வந்த படகோட்டி உட்பட 3 பேர் கைது

    ராமேஸ்வரம், இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த படகோட்டி உட்பட 3 பேர் கைது

    சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர் அவர்களை மடக்கிப் பிடித்து மண்டபம் கடலோர காவல் படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 17, 2024 07:50 IST
    இன்று மாலை திமுக பவள விழா



  • Sep 17, 2024 07:40 IST
    தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

    தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. தோ்வெழுதிய முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை அவரவா் பயின்ற ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தோ்வா்கள் தங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பித்த மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்.



  • Sep 17, 2024 07:39 IST
    கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகள் ஏற்பு

    கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக போராடி வரும் மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் ம‌ம்தா பானர்ஜி அறிவிப்பு

    கொல்கத்தா காவல் ஆணையர், மேற்கு இணை ஆணையர் நீக்கம்

    சுகாதாரத்துறையில் 2 அதிகாரிகளை நீக்கவும் முடிவு

    - ம‌ம்தா பானர்ஜி அறிவிப்பு



  • Sep 17, 2024 07:38 IST
    பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    பெளா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment