Advertisment

Tamil News Update: சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்.. இளைஞர் கைது

Tamil News , Petrol price Today, Milk Price Hike, AIADMK, Madurai army jawan killed – 12 August 2022 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
Aug 12, 2022 08:20 IST
Tamil News updates

Tamil News updates

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட, 9 கிலோ 590 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இதுதொடர்பாக, போதை பொருள் கடத்தி வந்த இளைஞனை சுங்கத்துறையினர் விசாரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம்

ஜம்மு - காஷ்மீர், ரஜோரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

publive-image

69 பேருக்கு நிபந்தனை ஜாமின்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரத்தில் கைதாகி சிறையில் உள்ள 174 பேரில் 69 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. மீதமுள்ள 105 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக பி.காம் 2ஆம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது என அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பால் விலை உயர்வு

தமிழகத்தில் இன்று  முதல் தனியார் பால் விலை, லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்தது. சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது நடப்பாண்டில் 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 21:18 (IST) 12 Aug 2022
  முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை

  முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ₨14.96 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ள நிலையில், 1.68 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி பொருட்கள், ஹார்ட் டிஸ்குகள் கண்டறியப்பட்டுள்ளது • 21:13 (IST) 12 Aug 2022
  தமிழக பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

  தமிழக பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி மோசடி ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நில அபகரிப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. • 20:34 (IST) 12 Aug 2022
  'தண்டோரா' முறைக்கு தடை விதித்து அரசாணை

  அரசின் முக்கிய செய்திகளை பொதுமக்களிடம் சேர்க்கும் 'தண்டோரா' முறைக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மிதிவண்டி அல்லது ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. • 19:47 (IST) 12 Aug 2022
  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக நன்கொடை வசூலிப்பதை கண்கானிக்க கோரி மனு

  விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகளை அமைத்திட வேண்டும் சிலைகள் வைப்பதையும், நீர்நிலைகளில் கரைப்பதையும் முறைப்படுத்த எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக நன்கொடை வசூலிப்பதையும் கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. • 19:29 (IST) 12 Aug 2022
  அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு

  அண்ணா திமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

  இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. • 19:26 (IST) 12 Aug 2022
  கூடுதல் கட்டண புகார்- கோயம்பேட்டில் அதிகாரிகள் விசாரணை

  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

  இந்த நிலையில் ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். • 18:50 (IST) 12 Aug 2022
  ரஜினிகாந்த் வீட்டில் தேசியக் கொடி ஏற்றம்

  நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லங்கள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் தேசிய கொடியை முகப்பு பக்கமாக வைக்கும் ஹர் கர் திரங்கா யாத்திரையும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

  இந்த நிலையில் ரஜினிகாந்த் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. • 18:47 (IST) 12 Aug 2022
  பாரதியார் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் மரியாதை

  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் மரியாதை செலுத்தினார். • 17:47 (IST) 12 Aug 2022
  உள்ளாட்சி தலைவர்கள் கொடியேற்ற உத்தரவு

  நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தலைமை செயலர் இறையன்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

  அந்தக் கடிதத்தில், “அனைத்து உள்ளாட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே தேசியக் கொடி ஏற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். • 17:42 (IST) 12 Aug 2022
  பால் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை

  தனியார் நிறுவனங்களில் கடந்த 6 மாதங்களில் 3 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே பால் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். • 16:56 (IST) 12 Aug 2022
  சிவாஜி மகள்கள் தொடர்ந்த வழக்கு; தீர்ப்பை தள்ளி வைத்தது ஐகோர்ட்

  சாந்தி திரையரங்குகளின் சொத்துக்களை விற்பனை செய்ய தடை கோரி நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. • 15:58 (IST) 12 Aug 2022
  எடப்பாடி பழனிசாமி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்துக்கு புகார்

  எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதால், உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். • 15:36 (IST) 12 Aug 2022
  முன்னேறிய மாவட்டம் - பின் தங்கிய மாவட்டம் வேறுபாடு இருக்கக்கூடாது என விருப்பம்; திட்டக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

  தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் - பின் தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என விரும்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார். மேலும், மின் வாகனம், தொழில் 4.O, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில், துணி நூல், கைத்தறி, சுற்றுலா ஆகியவற்றுக்கான கொள்கைகளை வகுக்க மாநில திட்டக்குழுவுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். • 14:21 (IST) 12 Aug 2022
  தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் சிபிசிஐடி காவல் நீட்டிப்பு

  கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் சிபிசிஐடி காவல் நீட்டிப்பு. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவு • 14:18 (IST) 12 Aug 2022
  துணை வேந்தர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி ஆலோசனை

  அனைத்து பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி ஆலோசனை. மாநிலக் கல்வி கொள்கை, வேலைவாய்ப்பு, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்கிறார். துணை வேந்தர்கள் கூட்டத்தை ஆளுநர் அண்மையில் நடத்திய நிலையில், தற்போது முதல்வர் ஆலோசனை • 14:17 (IST) 12 Aug 2022
  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் • 12:34 (IST) 12 Aug 2022
  ஸ்ரீமதி பிறந்தநாள் ; மரக்கன்றுகள் வழங்குவதற்கு தடை விதித்த காவல்துறை

  கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி பிறந்தநாள் இன்று. குடும்பத்தினர் மரக்கன்றுகள் வழங்குவதற்கு தடை விதித்த காவல்துறை . பள்ளி மாணவி ஸ்ரீமதியின் சொந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது • 12:29 (IST) 12 Aug 2022
  மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம்

  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம் தொடக்கம் . சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில் நடைபெறும் கூட்டம் . குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் பங்கேற்பு  📷 • 12:28 (IST) 12 Aug 2022
  11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை

  11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம் . மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் . 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை - கல்வித்துறை அதிகாரிகள் • 12:28 (IST) 12 Aug 2022
  11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை

  11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம் . மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் . 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை - கல்வித்துறை அதிகாரிகள் • 12:26 (IST) 12 Aug 2022
  மாட்டிறைச்சி உணவக அரங்குகள் அமைக்க யாரும் முன் வரவில்லை

  உணவு என்பது தனிமனித உரிமை. மாட்டிறைச்சி உணவக அரங்குகள் அமைக்க யாரும் முன் வரவில்லை - 'சிங்கார சென்னையில் உணவு திருவிழா 2022' திறந்து வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி • 11:48 (IST) 12 Aug 2022
  கலாசார நிகழ்வை உள்ளடக்கிய சிங்கார சென்னை உணவு திருவிழா 2022

  சென்னை தீவுத்திடலில் தொடங்கியது உணவு திருவிழா. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் . உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவுகள் குறித்து 150க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவு பொருட்களும் அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. • 11:45 (IST) 12 Aug 2022
  தமிழக காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

  தமிழக காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு. சிறப்பான விசாரணையை மேற்கொண்ட காவலர்களுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிப்பு. கூடுதல் எஸ்பி கனகேஸ்வரி, ஆய்வாளர் அமுதா, சசிகலா பாண்டி ஆகியோருக்கு விருது . • 10:51 (IST) 12 Aug 2022
  இந்தியாவில் மேலும் 16,561 பேருக்கு கொரோனா

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 16,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,053 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். 1.23 லட்சம் பேருக்கு கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர். • 10:13 (IST) 12 Aug 2022
  சேகர் ரெட்டிக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து

  2 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர் ரெட்டிக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • 09:55 (IST) 12 Aug 2022
  அண்ணா பல்கலை. கவுன்சில் கூட்டம்

  அண்ணா பல்கலைக்கழக அகாடமிக் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், பொறியியல் படிப்பில் புதிய பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. • 09:51 (IST) 12 Aug 2022
  உலக யானைகள் தினம்.. மோடி ட்வீட்

  ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி. கடந்த 8 ஆண்டுகளில் யானை காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன் என்ன உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். • 08:37 (IST) 12 Aug 2022
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி

  தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் • 08:21 (IST) 12 Aug 2022
  பவானி சாகர் அணையில் இருந்து நீர் திறப்பு

  பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், இன்று முதல் டிசம்பர் 9 வரை 120 நாட்களுக்கு நன்செய் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 1 லட்சம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறும் • 08:21 (IST) 12 Aug 2022
  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

  பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக பதிவான வழக்கில், நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர்.#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment