Advertisment

Tamil News Updates: பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

அனைத்து செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
budget 2019 live streaming online, budget 2019 live streaming, மத்திய பட்ஜெட், budget 2019 live

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 618-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும்,  டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஏரிகளின் நீர் நிலமை

 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2701 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 778 மில்லியன் கன அடியாக உள்ளது! 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 494 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 31, 2024 06:52 IST
    பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

    நரேந்திர மோடி அரசின் 2வது ஆட்சிக் காலத்தின் இடைக்கால பட்ஜெட் நாளை (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
    இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் உரை இன்று தொடங்குகிறது; இந்தக் கூட்டத் தொடர் பிப்.9ஆம் தேதிவரை நடைபெறும்.



  • Jan 30, 2024 22:49 IST
    ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நடிகர் பாலா வழங்கினார்.



  • Jan 30, 2024 20:59 IST
    U 19 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

    U 19 உலக கோப்பை: நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியுள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 213 ரன்களை குவித்தது. அதன் பின் 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியை 81 ரன்களுக்குள் சுருக்கி ஆல் அவுட் ஆக்கி வெற்றி பெற்றது.



  • Jan 30, 2024 20:34 IST
    தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு

    பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை நடத்திய சோதனை 8 மணிநேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றுள்ளது. அரசு வேலைக்கு லஞ்சமாக நிலத்தை பெற்றதாக பதிவான வழக்கில் விசாரணை நடைபெற்றது. நேற்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தேஜஸ்வி யாதவை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது



  • Jan 30, 2024 20:05 IST
    சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை!

    சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.



  • Jan 30, 2024 19:48 IST
    ஆருத்ரா வழக்கு; மோசடி செய்து சினிமாவில் முதலீடு

    ஆருத்ரா பிக்சர்ஸ் பெயரில் எடுக்கப்பட்ட பட தயாரிப்புகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கைமாற்றப்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



  • Jan 30, 2024 19:29 IST
    நடிகர் தனுஷின் படப்பிடிப்பு அனுமதி ரத்து

    நடிகர் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பக்தர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பை நிறுத்த கோரி காவல் நிலையத்தில் பா.ஜ.க மனு அளித்தது. புகாரை தொடர்ந்து படப்பிடிப்பிற்கு அளித்த அனுமதியை திருப்பதி மாநகர காவல்துறை ரத்து செய்தது



  • Jan 30, 2024 19:09 IST
    சேலத்தில் போலி அதிகாரி கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

    அரசு வேலை வாங்கி தருவதாகவும், பணி மாறுதல் பெற்று தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த கணக்கு நிர்வாகத் துறை போலி அதிகாரி திருமால் மற்றும் அவருடைய நண்பரான ஓய்வு பெற்ற மின் அதிகாரி கருப்பையா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்



  • Jan 30, 2024 18:42 IST
    தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமின் கோரி மனு நாளை விசாரணை

    தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகள் பணிப் பெண்ணை துன்புறுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 



  • Jan 30, 2024 18:40 IST
     சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு

    காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. போராட்டத்தில் பங்குபெற்ற பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 



  • Jan 30, 2024 18:39 IST
    MYV3 ads மோசடி விவகாரம் - 5000 பேர் மீது வழக்கு

    கோவை நீலாம்பூரில் MYV3 ads நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்ட 5,000 பேர் மீது பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் உட்பட
    3 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 



  • Jan 30, 2024 18:20 IST
     'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' - நாளை முதல் அமல் 

    முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. 



  • Jan 30, 2024 17:50 IST
    உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: தமிழ்நாடு அரசு வேண்டுகோள் 

     

    அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும், பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 



  • Jan 30, 2024 17:04 IST
    முன்னாள் மாணவர் அளித்த ரூ.110 கோடி நன்கொடை; சென்னை ஐ.ஐ.டி-யில்  ஏ.ஐ ஆராய்ச்சிப் பள்ளி தொடக்கம்

    சென்னை ஐ.ஐ.டி-யில்  முதல்முறையாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி ஆராய்ச்சிப் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி என்பவர் கொடுத்த ரூ.110 கோடி நன்கொடையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிப் பள்ளி இந்தியாவில் ஏ.ஐ துறையில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.



  • Jan 30, 2024 16:43 IST
    தமிழகத்தில்  முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் மாநாடு அமைந்தது - ஸ்டாலின்

    “தமிழகத்தில்  முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய ஸ்பெயின் மாநாடு அமைந்தது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  



  • Jan 30, 2024 16:17 IST
    சென்னை ஆட்டோக்களின் பர்மிட்கள் சி.எம்.டி.ஏ எல்லை வரை நீட்டிப்பு

    போக்குவரத்துத் துறை சென்னை ஆட்டோக்களின் பர்மிட்களை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (CMDA) எல்லை வரை நீட்டித்தது. இதன் மூலம், சென்னை பர்மிட்கள் ஆட்டோக்களை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை வரை இயக்கலாம்.



  • Jan 30, 2024 16:11 IST
     'ப்ளூ ஸ்டார்' வெற்றி கொண்டாட்டம்: கீர்த்தி பாண்டியன் குறித்து மனம் திறந்த நடிகர் அசோக் செல்வன்

     'ப்ளூ ஸ்டார்' படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்து நடிகர் அசோக் செல்வன் மனம் திறந்து பேசியுள்ளார்.  “'ப்ளூ ஸ்டார்' படப்பிடிப்பின்போது, நானும் கீர்த்தியும் காதலர்களாக இருந்தோம், அதனால், கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்தது. அப்பொழுது  திருமணம் குறித்த பயம் எனக்கு இருந்தது. நம்மால் முடியுமா என்றெல்லாம் தோன்றியது. ஆனால், கீர்த்திதான் எனக்கானவள் என்ற உணர்வு வந்த பிறகு, பயம் பொய்விட்டது. திருமணம் செய்வதற்கான தைரியத்தைக் கொடுத்ததும் அவர்தான்” என்று அசோக் செல்வன் கூறியுள்ளார்.



  • Jan 30, 2024 16:05 IST
    தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கைது

    2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஒய்வூதியம் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக இருக்க பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் முகமை மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.



  • Jan 30, 2024 16:03 IST
    செந்தில் பாலாஜி ஜாமின் மனு : கைது செய்யப்பட்டவர் 230 நாட்கள் அமைச்சராக நீடிக்கிறார் - நீதிபதி கருத்து

    செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கடைநிலை அரசு ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதேபோல் கைது செய்யப்பட்டவர் 230 நாட்களாக அமைச்சராக நீடிக்கிறார் என்று கூறினார். மெலும், செந்தில் பாலாஜியின் மனுவை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.



  • Jan 30, 2024 15:45 IST
    செந்தில் பாலாஜியின்  ஜாமின் மனு: இ.டி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமின் மனுவை ஆராய்ந்ததில் கடந்தமுறை மறுத்ததற்கான சூழல்கள் மாறியதாகத் தெரியவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.



  • Jan 30, 2024 14:41 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது : டி.ஆர்.பாலு

    ஆளுநரின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினோம்" "சிஏஏ சட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினோம்" "ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது, அது குறித்தும் விவாதிக்க வலியுறுத்தினோம்" "சேது சமுத்திர திட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினோம்" அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேட்டி



  • Jan 30, 2024 14:16 IST
    சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

    "தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு தொடர்பாக நடிகர் இளவரசு அளித்த புகாரில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.



  • Jan 30, 2024 14:14 IST
    சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா? கே.எஸ்.அழகிரி கேள்வி

    ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டால் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது. சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா? காங்கிரசுக்கு பெற்று தாருங்கள் என நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். சென்னையில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்



  • Jan 30, 2024 14:11 IST
    ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    "மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன! 130க்கும் மேற்பட்ட Fortune 500 நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • Jan 30, 2024 13:19 IST
    கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை

    கேரளாவின் ஆலப்புழாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்,  15 பேருக்கு மரண தண்டனை விதித்து, மாவேலிக்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு



  • Jan 30, 2024 13:16 IST
    பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி ஆறுதல்

    சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி ஆறுதல்



  • Jan 30, 2024 13:15 IST
    தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கக்கு மழை வாய்ப்பு

    தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 30, 2024 13:15 IST
    ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் சஸ்பெண்ட்

    ஐஆர்எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் சஸ்பெண்ட் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று பணியிடை நீக்கம்



  • Jan 30, 2024 12:34 IST
    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமநத் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமநத் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் ஹேமநத் சோரன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜ்பவன், ஹேமந்த் சோரன் வீடு உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Jan 30, 2024 12:32 IST
    காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

    டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி



  • Jan 30, 2024 12:32 IST
    நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது



  • Jan 30, 2024 11:47 IST
    இந்து அல்லாதோருக்கு பழனி கோயிலுக்குள் அனுமதியில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    இந்து அல்லோதோர் , இந்துக் கடவுள் மீது நம்பிக்கை அல்லாதோரை பழனி முருகன் கோயில்  கொடுமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது. இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பாதாகயை பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி



  • Jan 30, 2024 11:41 IST
    குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்

    குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கோரிக்கை



  • Jan 30, 2024 11:22 IST
    லாலு பிரசாத் யாதவ்விடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை : 9 மணி நேரத்திற்குப் பின் நிறைவு

    லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதற்காகக் கூறி வேலை பெற்றவர்களிடம் இருந்து நிலங்களை லஞ்சமாகப் பெற்று, குறைந்த விலைக்கு அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு மாற்றி எழுதித் தந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  இந்த சோதனையில், ரூ70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கக் கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது!



  • Jan 30, 2024 11:19 IST
    சைபீரியா செல்லும் தக் லைஃப் படக்குழு : கமல்ஹாசன் பங்கேற்பதாக தகவல்

    மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு சைபீரியா செல்கிறது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jan 30, 2024 11:12 IST
    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மந்த நிலை

    இன்று முதல் SETC, TNSTC, ஆம்னி என அனைத்து வகை பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து பாதிப்பு காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.



  • Jan 30, 2024 10:50 IST
    திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக ஆலோசனை

    திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக ஆலோசனை.  தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பங்கேற்பு



  • Jan 30, 2024 10:15 IST
    காந்தியின் நினைவு தினம் - திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

    காந்தியின் நினைவு தினம் - திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு



  • Jan 30, 2024 09:45 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கோயம்பேட்டில் இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்" "வடசென்னை மக்களின் சிரமத்தை தவிர்க்க மாதவரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து" "80% பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கம்" "மாதவரத்தில் இருந்து திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்து" வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம் மாதவரத்தில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில் 160 பேருந்துகள் இயக்கம் அமைச்சர் சிவசங்கர்



  • Jan 30, 2024 09:19 IST
    காந்தி நனைவு நாள்: கமல்ஹாசபுகழாரம்

    ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம்; அவர்களில் முதன்மையானவர் காந்தி - கமல்ஹாசன்



  • Jan 30, 2024 09:16 IST
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம். தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பு! மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது.



  • Jan 30, 2024 08:22 IST
    இன்று முதலீட்டாளர்களை சந்திக்கும் முதல்வர்

    இன்று முதலீட்டாளர்களை சந்திக்கும் முதல்வர் ஸ்பெயினில் முதலீட்டாளர்களை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது



  • Jan 30, 2024 08:05 IST
    குரூப்-4 போட்டித் தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும்

    குரூப்-4 போட்டித் தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு குரூப்-4 போட்டித் தேர்வு மூலம் 6244 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment