/tamil-ie/media/media_files/uploads/2022/12/984865-exams-ani.jpg)
பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்
சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில் நட்சத்திரம் நகர்கிறது உள்பட 12 படங்கள் வெளியாகிறது.
உதயநிதிக்கு அமைச்சர் பாராட்டு
உழைப்பு அதற்கு பெயர்தான் உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிடும் காலம் வரும் வரை சிறப்போடு பணியாற்றுவார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
- 21:58 (IST) 15 Dec 20222023-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி 2023ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
- 21:15 (IST) 15 Dec 2022பழனி முருகன் கோயிலுக்கு ஜன. 27-ம் தேதி குடமுழுக்கு - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
பழனி முருகன் கோயிலில் ஜனவரி 27ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 20:27 (IST) 15 Dec 2022புதிய அமைப்பு உருவாக்கப்படும் வரை உயர் நீதிமன்றங்களில் காலி பணியிடங்கள் பிரச்சினை நீடிக்கும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு: புதிய அமைப்பு உருவாக்கப்படும் வரை உயர் நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்கள் பிரச்சினை நீடிக்கும் என்று கூறினார்.
- 19:47 (IST) 15 Dec 2022மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டுவிழாவை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டுவிழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உலகில் உள்ள இசை கலைஞர்களை சென்னைக்கு அழைக்கும் வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
- 18:39 (IST) 15 Dec 2022சென்னை நேரு விளையாட்டு அரங்கில் உதயநிதி ஸ்டாலின், ஆய்வு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- 18:22 (IST) 15 Dec 2022பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் 40 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
பாறை இடுக்கில் இருந்து செல்போனை எடுக்க முயன்றபோது தவறி விழுந்த நபர் 40 மணி நேரத்திற்கும் மேலாக பாறைகளுக்கு இடையே குகையில் சிக்கிய நபரை போராடி மீட்ட அதிகாரிகள்
- 18:11 (IST) 15 Dec 2022அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 17:39 (IST) 15 Dec 2022கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் ஒப்படைக்காவிட்டால் விசாரிக்க உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை; விடுதி வார்டனின் செல்போனில்தான் பேசினார் என்று பெற்றோர் தரப்பு கூறியுள்ளது
- 17:36 (IST) 15 Dec 20222023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு பின் நடத்த திட்டம்
2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் ஆனால் இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் பொங்கலுக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
- 16:48 (IST) 15 Dec 2022பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இந்த மசோதா வழிவகை செய்கிறது
- 16:26 (IST) 15 Dec 2022அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
- 16:02 (IST) 15 Dec 2022நடமாடும் எரியூட்டும் சேவை; ஈரோட்டில் தனியார் நிறுவனம் அறிமுகம்
ஈரோடு, கிராமபுறத்தில் வசிக்கும் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடமாடும் எரியூட்டும் சேவையை தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
- 15:41 (IST) 15 Dec 2022தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆரோவில் அறக்கட்டளை நிர்வாக குழு தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
- 15:26 (IST) 15 Dec 2022டெல்லி ஆசிட் வீச்சு - அமேசான், பிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்
டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிளிப்கார்ட்டில் ஆசிட் வாங்கியது தெரியவந்ததையடுத்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
- 15:11 (IST) 15 Dec 2022ஷ்ரத்தா கொலை வழக்கு - டெல்லி காவல்துறை புதிய தகவல்
டெல்லி, ஷ்ரத்தா கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் புதிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட சில எலும்பு மாதிரிகள் ஷ்ரத்தா தந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது
- 14:09 (IST) 15 Dec 2022உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 15, 2022
- 14:07 (IST) 15 Dec 2022உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 15, 2022
- 14:07 (IST) 15 Dec 2022வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 13:44 (IST) 15 Dec 2022அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள்
அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தான் என்னுடைய முதல் பணியாக இருக்கும்; விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 13:08 (IST) 15 Dec 202231ஆம் தேதி வரை அவகாசம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
- 12:57 (IST) 15 Dec 2022"வரும் 31ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க அவகாசம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி!
"மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்
சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள். தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்" என்று - அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
- 12:39 (IST) 15 Dec 2022உதயநிதி திறமையாக பணியாற்றுவார்
கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 192 பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது; முதல்வர் உதயநிதிக்கு அருமையான துறையை ஒதுக்கியுள்ளார். அவர் திறம்பட பணியாற்றுவார் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
- 11:31 (IST) 15 Dec 2022ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் ஒருவர் பலி
சென்னை, சூளைமேட்டில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ்குமார்(52) என்பவர் உடல் கருகி உயிரிழப்பு
- 11:30 (IST) 15 Dec 202211 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கி வைப்பு
எரிசக்தித் துறை சார்பில் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கி வைப்பு
சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- 10:52 (IST) 15 Dec 2022கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம்
“பேருந்து நிலைய கட்டுமான பணிகள் பாதிப்பு“ புயல், மழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் பாதிப்பு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர் பாபு பேட்டி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல். பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு - அமைச்சர் சேகர் பாபு
- 10:36 (IST) 15 Dec 2022பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் - 104.65 அடி, நீர்இருப்பு - 32.5 டிஎம்சி, நீர்வரத்து - 4,768 கனஅடி, நீர் வெளியேற்றம் - 6,500 கனஅடி
- 09:25 (IST) 15 Dec 2022FIFA - இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
- 09:25 (IST) 15 Dec 2022ஈபிஎஸ்க்கு எதிரான வழக்கு - இன்று விசாரணை
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.