பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்று
ஐபிஎல் – அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் மோதல்.
ஆன்மீகம்
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்க ஏற்பாடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தி.மு.க அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் மே 7, 8, 9 தேதிகளில் 1,222 இடங்களில் நடைபெற உள்ளது; காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் நகரில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
சூடானில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய தூதரகம் போர்ட் சூடானுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு இணங்க, கர்நாடக தேர்தல் பொறுப்பாளரும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவருமான அண்ணாமலையை கர்நாடக அ.இ.அ.தி.மு.க செயலாளர் எஸ்.டி. குமார் ஆதரவு தெரிவித்தார்.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக அபய் குமார் சிங் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பிரிவின் இயக்குநராக இருந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், அபய் குமார் சிங் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் 3 ஏ.டி.ஜி.பி. அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அழைப்பிதழ் அளித்து அழைப்பு விடுத்தார்.
மதுரையில், மே 4-ம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் மே 4-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 20 முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூத்த அமைச்சர்கள் பேசுவது சமூக ஊடகங்களில் பரவுவதைக் காண முடிகிறது; பொதுவெளியில் கவனத்துடன் பேச வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்.எல்.சி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கணேசன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு உடனான பேச்சுவார்த்தையில் பா.ம.க தலைவர் அன்புமணி, அ.தி.மு.க அருண்மொழித் தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னை தெரசா படம் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை வழங்கிய விவகாரத்தில், அண்ணாமலையார் கோயில் அர்ச்சகர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நெல்லையில் கடந்த 5 நாளில் 708 மிமீ மழை பதிவாகியுள்ளது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னை தெரசா படம் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை வழங்கிய விவகாரத்தில், அண்ணாமலையார் கோயில் அர்ச்சகர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டுள்ளார்
பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை. 2020லேயே பிரிந்து விட்டோம். என் கணவர் இறந்து விட்டார் என செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் என நடிகை வனிதா விஜயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சென்னை, தலைமைச் செயலகத்தில் என்.எல்.சி நிலஎடுப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், ராகுல் காந்தி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது
ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பயணத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவரது ரசிகனாக இங்கு வந்துள்ளேன் என கர்நாடகா சிவமோகாவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்
தென் பெண்ணையாறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 1 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. கர்நாடகா தேர்தலுக்குப் பின் தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது. 121 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், 114 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3ம் இடத்திலும் உள்ளன
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனே துணைத்தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டர் மீது கழுகு மோதி விபத்து ஏற்பட்டது.
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டை விட, இந்தாண்டு குறைவான அரசு பள்ளி மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து, 12,840 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்தாண்டு 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்
“உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்; அது தான் கிடைத்திருக்கிறது” கோலி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக்-ன் இன்ஸ்டா பதிவு
பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு எச்சரிக்கை நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
மே 6ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தகவல்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு தான் எழுதிய லோக் மாஜே சங்கதி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் அறிவிப்பு அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலும், மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் சரத் பவாரின் அறிவிப்பால் பரபரப்பு
ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் வேலூரை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் தற்கொலை
என்னுடைய மரணத்திற்கு காரணம் ஐஎஃப்எஸ் நிறுவனம் தான் என உருக்கமான கடிதம்
பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டு திருப்பி கொடுக்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள்
ரூ.12 லட்சம் வரை வட்டி கொடுத்து கடன் சுமையில் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக கடிதத்தில் உருக்கம்
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேசிடம் பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும் கடிதத்தில் தகவல்
தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைப்பதற்கான வரைவு, மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைத்தால் உடனே தீர்ப்பாயம் அமைக்கப்படும் – உச்ச நீதிமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சகம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு
திருநங்கைகளுக்கான 'மிஸ்கூவாகம் 2023' அழகி போட்டி நேற்று மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடக்கம்
விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'மிஸ்கூவாகம் 2023' அழகி போட்டி
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் – மெட்ரோ நிர்வாகம்
புதுக்கோட்டை : வடசேரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மயங்கி விழுந்தது
வாடி வாசலில் இருந்து வெளியே வரும்போது கட்டையில் மோதி மயங்கி கீழே விழுந்தது
உயிருக்கு ஆபத்தான நிலையில் காளை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
சென்னையில் ரூ. 372.74 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
4 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை செலுத்தி 5% ஊக்கத்தொகையாக ரூ.8.57 கோடி வழங்கப்பட்டுள்ளது – மாநகராட்சி
மகாராஷ்டிரா : கோல்ஹாப்பூரில் காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி(83) காலமானார்.
காந்தியின் மகனான மணிலால் காந்திக்கு பிறந்தவர் அருண் மணிலால் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
இடிந்து விழுந்த கட்டடத்தில் யாரும் வசிக்கவில்லை என தகவல்
100 ஆண்டு பழமையான கட்டடத்தை இடிக்க 3 மாதத்திற்கு முன்பே அனுமதி பெறப்பட்டுள்ளது
மாநகராட்சி சார்பில் தடுப்பு பலகை அமைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் இல்லை
சென்னையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை
ராயப்பேட்டை சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரால், பொதுமக்கள் அவதி தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது ஒரு கிராம் தங்கம் ரூ.5,615க்கும், சவரன் ரூ.44,920க்கும் விற்பனை
திருவள்ளூர், செங்குன்றம் அருகே தனியார் ரசாயனக் கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சு புகை
சுற்றுப்பகுதிகளில் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி
புகையை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ. 3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ 1, 500. குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ. 2000. பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம். பட்டியல் இனத்தவருக்கு சிறப்பு இலாகா, பட்ஜெட்டில் சிறப்பு நிதி. 200 யூனிட் மின்சாரம் இலவம் –
“தெலங்கானாவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்” “சிறுபான்மையினர் மீதான வன்மமே அமித்ஷாவின் பேச்சில் வெளிப்படுகிறது” “தேர்தல் அரசியல் லாபங்களுக்காக அமித்ஷா இவ்வாறு பேசியுள்ளார்” உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
“சமூக நீதிக்கும், மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடு தான் தலைநகர்” – உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் நாமக்கல், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு. ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில், தேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகிருந்தது இந்த தகவல் தவறானது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் .
கர்நாடக தேர்தல்; காங்கிரஸ் சார்பாக இன்று தேர்தல் அறிக்கை வெளியாகிறது . பாஜகவுக்கு போட்டியாக ஏராளமான இலவச அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு
சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் இருக்கும் என தகவல் .
சென்னையில் பட்டினப்பாக்கம், அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.