பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் தொடங்கிறது. இன்று தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
முதல்வர் சுற்றுப்பயணம்
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் இன்று வழங்குகிறார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மீனவர்களின் 5 படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு குற்றவாளி அப்தாப்-ஐ ஏற்றி சென்ற போலீஸ் வேன் மீது இந்து சேனாவை சேர்ந்தவர்கள் என்று கூறி 2 பேர் வாள்களை ஏந்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த்-க்கு காசோலை மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வர்த்தக நடவடிக்கைக்காக தரப்பட்ட பணத்தை திரும்ப தரவில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், வடுகந்தாங்கல் பகுதியில், பேனர் கட்டும்போது தி.மு.க பிரமுகர் வடுகந்தாங்கல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மார்க்கபந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், 2 பேர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்துள்ளனர்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா அணி முன்னேறி உள்ளது. ஸ்பெயினின் மலாகா நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியும் ஸ்பெயினும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்ற நிலையில், இத்தாலியை 2க்கு 1 என்ற கணக்கில் கனடா வீழ்த்தியது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னைக்கு திரவியமும், திருச்சிக்கு கோவிந்தராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே, தாய் மற்றும் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே தில்லையம்பூரில் கிராமத்தில், கோவிந்தராஜ் – லட்சுமி மூத்த தம்பதிக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். மனநலம் பாதிக்கபட்ட ராஜேந்திரன், தனது தாய் மற்றும் தந்தையை வெட்டி கொலை செய்துள்ளார்.
திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நடைபாதை கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வள்ளி என்பவரின் வளையல் கடையை அகற்ற தாமதமானதால், நகராட்சி ஊழியர்கள் கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
அப்போது, வள்ளி, சாலையில் அமர்ந்து கதறி அழுதது காண்போர் நெஞ்சை பதறச் செய்தது.
நீதிபதியை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் கோகுல் ராஜ் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கோகுல் ராஜ், ஆவண கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கு விசாரணையின்போது நீதிபதியை அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை காரணமாக நடைபாதை இடிந்து விழுந்தது.
இதில் வீடுகள் சேதமுற்றன. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் உ.பி அணிக்கு எதிரான கால் இறுதி போட்டியில் இரட்டை சதம் விளாசிய மகாராஷ்டிர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 49வது ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து இரட்டை சதத்தை எட்டி சாதனை படைத்தார்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் போலி நில ஆவணங்கள் காட்டி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. போலி நில ஆவணங்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெற உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவை மீறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவதில் போலி ஆவணங்களை காண்பித்து ₨20 கோடி வரை இழப்பீடு பெற்றுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, தெற்கு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்கள் கிடைக்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ள கனிமொழி எம்.பி ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்றுதான் என கூறியுள்ளார்.
சென்னையில், விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக 6 போலீசாருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அனுமதி கோரி ஆளுநரை சந்திப்பதற்கு தமிழக அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆளுநர் அதற்கு கூட நேரம் ஒதுக்கவில்லை. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம், கோண்டூரில் உள்ள மளிகை கடையில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேஸ்திரி மணிகண்டன், அய்யப்பன் ஆகியோரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் எனப்படும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இரவு 11.30க்கு புறப்படும். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக தாமதம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானது துரதிர்ஷ்டவசமானது. காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல. அளுநரின் செயல்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டம் தெரிவித்துள்ளது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து மகாராஷ்டிர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உலக சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் உ.பி. அணிக்கெதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து ருதுராஜ் சாதனை படைத்துள்ளார். மேலும், ஒரே ஓவரில் 7 சிக்சர்களையும் விளாசியுள்ளார். அதாவது 5வது பந்து நோ பால் ஆனதால், அதையும் சிக்ஸர் விளாசி சாதனை படைத்துள்ளார்
தமிழகத்தில் டிசம்பர் 2 வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
பெரம்பலூர், எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். எறையூர் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது. இதேபோல், பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட அனைத்திற்கும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஏன் தாமதப்படுத்துகிறார் என தெரியவில்லை
ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே கால்வாயில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து
எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது கால்வாயில் கவிழ்ந்து விபத்து
வாகனத்தில் இருந்த பள்ளி மாணவர்களை விரைந்து மீட்ட பொதுமக்கள்
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு என்ன பிரச்சினை?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இலவசங்கள் இன்றி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் – சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் – சீமான்
பல மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணில் இணைத்து கொள்ளலாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மின் வாரியத்திற்கு ரூ. 1.59 லட்சம் கோடி கடன் உள்ளது
கடந்த ஆண்டு மட்டும் ரூ. 11 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.
இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
மின் வாரியத்தை மேம்படுத்தவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் காயம்
காயமடைந்த குழந்தைகள் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மருத்துவமனைகளில் அனுமதி
பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு அனுமதி என புகார் சிபிஎம் போராட்டம்
சென்னை அண்ணா நகர் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்த அனுமதி என புகார்
அரசு உத்தரவை மீறி அனுமதி அளித்ததாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
வானவில் மன்றம் திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்
தெற்கு ரயில்வே கோட்டம் நிர்வாகத்தை கண்டித்து திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் . திருவாரூர்- மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள். டெல்டா மாவட்டங்களை தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு, மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு . திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்