Advertisment

Tamil news today: புனித சவேரியார் பேராலய திருவிழா: கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 02 -12- 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Karthika Deepam in Church

Petrol price

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

குஜராத் தேர்தல்

 குஜராத்தில் 89 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவு. வரும் 5ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

அதிமுக போராட்டம்

கோவையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்.  திமுக அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.



  • 20:50 (IST) 02 Dec 2022
    தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதில் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ், வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக அபூர்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • 20:49 (IST) 02 Dec 2022
    மூதாட்டியிடம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

    விருதுநகர் நரிக்குடி அருகே பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மூதாட்டியிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • 20:47 (IST) 02 Dec 2022
    குஜராத் சட்டசபை தேர்தல் : இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி சாலை பேரணி

    குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி குஜராத் மற்றும் அகமதாபாத்தில் சாலை பேரணியில் ஈடுபட்டுள்ளார்.



  • 20:43 (IST) 02 Dec 2022
    கி.வீரமணி பிறந்தநாள் விழா - முதல்வர் பங்கேற்பு

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாள் விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



  • 19:16 (IST) 02 Dec 2022
    "அறநிலையத்துறையில் குறைபாடுகள் இருந்தால் பதில் அளிக்க தயார் - அமைச்சர் சேகர்பாபு

    இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா? குறைபாடுகள் இருந்தால் சுப்பிரமணியசாமி நீதிமன்றம் செல்லலாம். நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளிக்க தயார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்



  • 19:03 (IST) 02 Dec 2022
    வாட்டி வதைக்கும் கட்டண உயர்வு.. திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம் அறிவிப்பு

    முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த விடியா தி.மு.க.அரசு கடந்த 18 மாதங்களில்,150% வரை சொத்து வரி உயர்வு, நூதன முறையில் மின்கட்டண உயர்வு, பால் விலைஉயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை  வதைத்து வருவதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்,கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலுள்ள ஊராட்சிகளில் 09.12.2022 அன்றும்,

    நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 13.12.2022 அன்றும், ஒன்றியங்களில் 14.12.2022 அன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்,கழக உடன்பிறப்புகளும்,பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.



  • 18:32 (IST) 02 Dec 2022
    தமிழ்நாட்டில் மருத்துவ தகவல்கள் திருட்டு.. சீனா, பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை!

    தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் உள்ள தகவல்களை ஹேக்கர்கள் திருடி, டார்க் வெப்பில் விற்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுவரை 19 லட்சம் சைபர் தாக்குதல்கள் இந்திய மருத்துவமனைகள் மீது நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நடத்தப்பட்டுள்ளன.



  • 18:30 (IST) 02 Dec 2022
    திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை

    திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைதுசெய்தனர்.

    விசாரணையில் அவரின் பெயர் கலைமோகன் எனத் தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.



  • 18:17 (IST) 02 Dec 2022
    கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.



  • 18:14 (IST) 02 Dec 2022
    அரவக்குறிச்சியில் பரபரப்பு.. மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக் கூறி வசூல்

    அரவக்குறிச்சியில் மனநலன் பாதிக்கப்பட்ட முதியவரை அரளி சித்தர் எனக் கூறி சிலர் பண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரில் முதியவர் துன்புறுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அரளி சித்தரை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.



  • 18:14 (IST) 02 Dec 2022
    அரவக்குறிச்சியில் பரபரப்பு.. மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் எனக் கூறி வசூல்

    அரவக்குறிச்சியில் மனநலன் பாதிக்கப்பட்ட முதியவரை அரளி சித்தர் எனக் கூறி சிலர் பண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரில் முதியவர் துன்புறுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அரளி சித்தரை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.



  • 17:30 (IST) 02 Dec 2022
    கீர்த்தி சுரேஷ் பெயரில் பணம் சுருட்டல்.. பெண் கைது

    கீர்த்தி சுரேஷ் பெயரில் பொறியாளரிடம் ரூ.41 லட்சம் சுருட்டிய பெண்ணின் கணவரை தலைமறைவாகிவிட்டார்.

    பொறியாளரிடம் பணம் சுருட்டிய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • 17:19 (IST) 02 Dec 2022
    YMCA உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள YMCA உடற்பயிற்சி கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது புகார் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நடத்திவருகின்றனர்.



  • 17:06 (IST) 02 Dec 2022
    கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு

    சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட வடிவேலு, மாணவர்களுடன் குத்தாட்டம் போட்டார்.

    இது தொடர்பாக காணொலி காட்சிகள் வைரலாகிவருகின்றன.



  • 16:42 (IST) 02 Dec 2022
    ரேஷன் கடைகளில் ஆதார் எண் விவரங்களைக் கேட்கக்கூடாது - உணவுத்துறை அதிரடி உத்தரவு

    குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது. ஆதார் நகலை நுகர்வோரிடம் பெற கூடாது எனவும் ரேஷன் கடைகளுக்கு உத்தரவிட்டு உணவு பொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



  • 16:23 (IST) 02 Dec 2022
    சத்தீஸ்கர் சுரங்கத்தில் மண்சரிவு; 7 பேர் பலி

    சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரியில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.



  • 16:19 (IST) 02 Dec 2022
    தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்றக் கோரி ஐகோர்டில் மனு; தமிழக அரசுக்கு நோட்டீஸ்

    தாமிரபரணி ஆற்றின் பெயரை, பொருநை ஆறு என மாற்றம் செய்யக்கோரி மனு; 12 வாரங்களில் உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    தாமிரபரணி என்பது வடமொழிச்சொல், பொருநை என்றே சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பு வாதிட்டுள்ளது.



  • 15:56 (IST) 02 Dec 2022
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி

    மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியை வருணனை செய்துகொண்டிருக்கும் போது, இதயப்பகுதியில் ஏற்பட்ட வலியால், சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



  • 15:53 (IST) 02 Dec 2022
    போலி ஆவணங்களைக் காட்டி இழப்பீடு பெற்றவர்களிடம் ரூ.20.53 கோடி திரும்ப வசூல்; ஐகோர்டில் தமிழக அரசு பதில்

    சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்துகையில், போலி ஆவணங்களைக் காட்டி இழப்பீடு பெற்றவர்களுக்கு, வழங்கப்பட்ட ரூ.20.52 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.



  • 15:27 (IST) 02 Dec 2022
    முகவரித்துறையில் பொதுமக்கள் மனுக்கள் மீதான் நடவடிக்கை குறித்து கேட்டறிந்த ஸ்டாலின்

    முகவரித்துறையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச்செயலகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



  • 15:24 (IST) 02 Dec 2022
    தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம்

    தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதனால், புழுதி பறக்க 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜின் இயக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

    இன்ஜின் சோதனையை வேடிக்கை பார்த்ததோடு பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர். ரயில் இன்ஜினுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் வரவேற்றனர்.



  • 13:59 (IST) 02 Dec 2022
    சென்னை உயர்நீதிமன்றம் தடை

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், இபிஎஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



  • 13:34 (IST) 02 Dec 2022
    Tancet தேர்வு ஒத்தி

    பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த Tancet தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



  • 13:11 (IST) 02 Dec 2022
    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள்

    தி.மலையில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 2 மணிக்கு மேல் மலையேற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.



  • 13:10 (IST) 02 Dec 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:43 (IST) 02 Dec 2022
    வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    பறிமுதல் செய்த வாகனங்களுக்கு அதிக பட்ச அபராதம் விதிக்க வேண்டும்.



  • 12:32 (IST) 02 Dec 2022
    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஸ்டாலின் வாழ்த்து

    மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்கியும், தடையற்ற சூழலை அமைத்தும் அவர்களை நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் என உறுதி கொள்வோம்.

    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • 12:31 (IST) 02 Dec 2022
    கோவைக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது - ஈபிஎஸ்

    கோவை மாநகருக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

    கோவைக்கு மட்டும் 28 தடுப்பணைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன - ஈபிஎஸ்



  • 11:52 (IST) 02 Dec 2022
    அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

    அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு - அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • 11:52 (IST) 02 Dec 2022
    கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் நினைவரங்கம் திறப்பு

    கோவில்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • 11:51 (IST) 02 Dec 2022
    கோவில்களில் மருத்துவ மையம் - ஸ்டாலின் திறந்து வைப்பு

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்



  • 11:50 (IST) 02 Dec 2022
    பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்

    பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க வேண்டும்

    தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்

    பணி நிலைப்பு நடைமுறைகள் நிறைவடையும் வரை இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ. 5,000 வழங்க வேண்டும் - அன்புமணி



  • 11:14 (IST) 02 Dec 2022
    காவல்துறையினரும் ஹெல்மெட் அணிய வேண்டும்

    புதுச்சேரியில் காவல்துறையினரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமல் படுத்தப்பட்டது

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை தலைவர் உத்தரவு



  • 10:24 (IST) 02 Dec 2022
    ரம்மி குறித்த பாடப்பகுதி

    6ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி. அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு. ரம்மி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு .



  • 10:23 (IST) 02 Dec 2022
    மெட்ரோ ரயில் நிறுவனம்

    மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் ஆப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்கிறது மெட்ரோ ரயில் நிறுவனம்



  • 10:23 (IST) 02 Dec 2022
    ஹர்பிரீத் சிங்கை கைது

    பஞ்சாப், லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஹர்பிரீத் சிங்கை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை



  • 09:11 (IST) 02 Dec 2022
    இன்று விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை



  • 09:10 (IST) 02 Dec 2022
    நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

    நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு. அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழை - இந்திய வானிலை ஆய்வு மையம் .



  • 09:09 (IST) 02 Dec 2022
    திடீர் இயந்திரக் கோளாறு

    சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு . ஓடுபாதையில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment