scorecardresearch
Live

Tamil News Highlights: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Tamil News , Petrol price Today, AIADMK, EPS Vs OPS, Cooking gas prices hiked: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News, Tamil News Today Latest Updates
Tamil News Headlines LIVE

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு எதிராக சசிகலா காட்டம்

பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர் என வி.கே. சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் 2,662 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் செவ்வாய் கிழமை, மேலும் 2,662 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  16,765 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மேலும் 1,060 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 6,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒருவர் உயிரிழந்தார்.

மின்வாரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து!

அரசு பணி ஆட்சேர்ப்பு பணிகளை டி.என்.பி.எஸ்.சி. மட்டுமே மேற்கொள்ளும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 5,318 காலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்தானது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு!

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,068.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. அதே நேரம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 8.50 குறைந்து, ரூ.2,177.50 ஆக விற்பனையாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
21:22 (IST) 6 Jul 2022
ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல; ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்க முடியாது – ஐகோர்ட் உத்தரவு

ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என தருமபுரம் ஆதினம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல; அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என தருமபுரம் ஆதினம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20:25 (IST) 6 Jul 2022
இளையராஜா, பி.டி உஷா ஆகியோருக்கு நியமன எம்.பி பதவி; மோடி வாழ்த்து

இசைஞானி இளையராஜா, முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் நியமன எம்.பி.களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

19:50 (IST) 6 Jul 2022
சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் – மத்திய உணவுத்துறை அமைச்சகம்

சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உணவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமையல் எண்ணெய் விலை 10% முதல் 15% வரை குறைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

19:20 (IST) 6 Jul 2022
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி மனு; ஐகோர்ட்டில் நாளை விசாரணை

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற ஈபிஎஸ் ரூ.5,000 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

18:49 (IST) 6 Jul 2022
பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கு ரத்து – ஐகோர்ட்

பொது அமைதியை குலைக்கும் வகையில் டிவிட்டர் பதிவிட்டதாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது

18:28 (IST) 6 Jul 2022
மோகன் சுப்பிரமணியன் நியமனம் – ஸ்டாலின் வாழ்த்து

தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. தனது பழுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி தெற்கு சூடானில் அமைதியும், நல்லிணக்கமும் தழைக்க சுப்பிரமணியன் பணியாற்றுவார் என நம்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

18:16 (IST) 6 Jul 2022
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது

17:57 (IST) 6 Jul 2022
மின்சார வாரிய தேர்வு ரத்து – தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

மின்சார வாரிய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட மின்வாரிய தேர்வுகளை நடத்த மின் வாரியத்திற்கு எந்த தடையும் கிடையாது. பழைய விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வுகளை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

17:41 (IST) 6 Jul 2022
பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்வதற்கான கால இடைவெளி குறைப்பு

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்

17:22 (IST) 6 Jul 2022
எஞ்ஜீனியரிங் செமஸ்டரில் 38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

பொறியியல் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது

17:12 (IST) 6 Jul 2022
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் நிறைவடையும் நிலையில் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்

16:48 (IST) 6 Jul 2022

மாநகராட்சி பொறியாளர்களிடம் விசாரணை!

கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி டெண்டர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்துகின்றனர்

16:43 (IST) 6 Jul 2022
கோவையில் தொடரும் வருமான வரித்துறை சோதனை!

கோவை பி.என்.புதூரில் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் மார்ச் மாதம், லஞ்ச ஒழிப்புத்துறை சந்திரசேகர் இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்நிலையில், இன்று 6 இடங்களில், 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

16:41 (IST) 6 Jul 2022
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீடுகளில் சோதனை!

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.கே அலுவலகம் மற்றும் உரிமையாளர் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

16:35 (IST) 6 Jul 2022
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப்.

16:25 (IST) 6 Jul 2022
+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி!

அரசுப் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்த HCL நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Tech Bee – Early Career Training நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து பங்கெடுக்க வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

16:07 (IST) 6 Jul 2022
பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் 100 பேர் வரை அமரக்கூடிய வகையில் 2,000 சதுர அடியில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மேடை பணியை நேரில் ஆய்வு செய்தார்.

15:48 (IST) 6 Jul 2022

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

15:29 (IST) 6 Jul 2022
தளபதி விஜய் குருதியகம்’ என்ற ரத்ததான செயலி தொடக்கம்!

சென்னை பனையூரில் நடந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில், 'தளபதி விஜய் குருதியகம்' என்ற ரத்ததான செயலி தொடதொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது. இதேபோல், விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், ட்விட்டர் பக்கங்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன

15:27 (IST) 6 Jul 2022
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை: ஓபிஎஸ் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்ற தலையீடு தேவையில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்த நிலையில், கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதத்தின் போது தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

14:27 (IST) 6 Jul 2022
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ்

ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்டு ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

14:26 (IST) 6 Jul 2022
வருகிற 8ம் தேதி பொன்னியின் செல்வன் டீசர்?

தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் டீசர், இந்தியாவில் 5 மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து வெளியிட இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது

14:14 (IST) 6 Jul 2022
மாமனார் மீது துணை நடிகை பாலியல் புகார்

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் நடிகை ஒருவர் தன்னை அடித்து துன்புறுத்துவது மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்வதாக மாமனார் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14:11 (IST) 6 Jul 2022
ஓபிஎஸ் மனு மீது விசாரணை 2.15 மணிக்கு தொடக்கம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

13:28 (IST) 6 Jul 2022
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டில் வருமான வரி சோதனை

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் தொடர்புடைய கோவை வடவள்ளி பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

13:25 (IST) 6 Jul 2022
நிலத்தடி நீருக்கு கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழத்திற்கு பொறுந்தாது – தமிழக அரசு

நிலத்தடி நீருக்கு ₨10,000 கட்டணம் என்ற மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

13:04 (IST) 6 Jul 2022
ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்

சென்னையில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததால் சென்னை மாநகராட்சி அதிரடி

12:30 (IST) 6 Jul 2022
ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை

அதிமுக பொதுக்குழு விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை – உச்சநீதிமன்றம்

11:49 (IST) 6 Jul 2022
அதிமுக பொதுக்குழு- நீதிபதிகள் அறிவுறுத்தல்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் . உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் – ஓபிஎஸ் தரப்பு வாதம்

11:47 (IST) 6 Jul 2022
அதிமுக பொதுக்குழு விவகாரம்- விசாரணை துவங்கியது

அதிமுக பொதுக்குழு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. உட்கட்சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது – ஈபிஎஸ் தரப்பு

10:59 (IST) 6 Jul 2022
ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் இ.பி,எஸ் தான் காரணம்!

அதிமுகவில் நிலவும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். அதிமுகவின் தலைவர், ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் தான், அதற்கு பிறகு தான் இபிஎஸ் என கோவை செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

10:41 (IST) 6 Jul 2022
தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.4,740க்கும் விற்பனையாகிறது.

09:59 (IST) 6 Jul 2022
ஐநா தூதரக புதிய படைத்தளபதியான இந்தியர்!

தெற்கு சூடானில் உள்ள ஐநா தூதரக புதிய படைத்தளபதியாக இந்திய லெப்டினென்ட் ஜெனரல் மோகன் நியமனம் செய்து, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ க்ரூடஸ் அறிவித்துள்ளார்.

09:37 (IST) 6 Jul 2022
2 தீவிரவாதிகள் சரண்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சரணடைந்தனர்.

09:36 (IST) 6 Jul 2022
17 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 16,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் உயிரிழந்தனர். கொரோனாவில் இருந்து மேலும் 15,394 பேர் குணமடைந்தனர். மேலும் 1.15 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

08:17 (IST) 6 Jul 2022
விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

சென்னை, பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது. மாவட்டத்திற்கு 6 நிர்வாகிகள் பங்கேற்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

08:17 (IST) 6 Jul 2022
நீலகிரி பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக, உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

08:11 (IST) 6 Jul 2022
சமயபுரம் கோயில் கும்பாபிஷேகம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

08:10 (IST) 6 Jul 2022
திருவட்டாறு பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா!

கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில், 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

08:10 (IST) 6 Jul 2022
ஆசிரியர் தகுதி தேர்வு தேதி!

2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் தாளுக்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

08:09 (IST) 6 Jul 2022
ஓபிஎஸ் மனு இன்று விசாரணை!

ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

08:09 (IST) 6 Jul 2022
இபிஎஸ் மனு மீது விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Web Title: Tamil news today live mk stalin aiadmk eps ops cooking gas prices hiked