Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சியில் அமைகிறது ஜபில் நிறுவனத்தில் தொழிற்சாலை
Key investments secured for Tamil Nadu’s industrial progress!
— M.K.Stalin (@mkstalin) September 10, 2024
🔹A significant investment of ₹2000 crores at Tiruchirapalli by Jabil, a global leader in EMS. This will create 5000 jobs and create a new cluster for electronics manufacturing.
🔹 Rockwell Automation expanding its… pic.twitter.com/XhVkBZ1827
திருச்சியில் ரூ.2,000 கோடி மதிப்பில் ஜபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆப்பிள், ஹெச்பி, சிஸ்கோ நிறுவனங்களுக்கு மின்னணு உற்பத்தி பொருட்களை வழங்குகிறது ஜபிஎல்.
-
Sep 10, 2024 21:43 ISTஇருமொழி கொள்கை தமிழை உள்ளடக்கிய கற்றலுக்கு முன்னுரிமை; தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்
மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்: “தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எப்பொழுதும் உறுதியாக உள்ளோம்; எங்களின் இருமொழிக் கொள்கை எப்போது தமிழகை உள்ளடக்கிய கற்றலுக்கே முன்னுரிமை அளிக்கிறது. எஸ்.எஸ் திட்டத்தில் நிலுவையில் உள்ள நிதியை என்.இ.பி நிபந்தனைகளின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
-
Sep 10, 2024 20:36 ISTமது குடித்து இறப்பவருக்கு அரசே ரூ.10 லட்சம் இழப்பீடு தருவது ஏற்புடையது அல்ல - திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன்: “சாராயம் குடித்து இறந்துபோனவர்களுக்கு அரசே ரூ.10 லட்சம் தருவது ஏற்புடையது அல்ல; அரசே மதுபானக்கடை நடத்தி குடிப்பழக்கத்திற்கு பழக்கப்படுத்தி அதுவே பாழாக்கி வருகிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்; தமிழகத்தில் மதுக்கடைகளைப் படிப்படியாக குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Sep 10, 2024 18:42 ISTபள்ளி மாணவி வன்கொடுமை: ஜிம் மாஸ்டர் கைது
கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி முகாம் நடத்தி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த டேனியல் அருள்ராஜ் என்ற ஜிம் மாஸ்டர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Sep 10, 2024 18:37 ISTராமநாதபுரம், சிவகங்கை வீரத்திற்கு மட்டுமல்ல... விளையாட்டுக்கும் பெயர்பெற்றவை - உதயநிதி
அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு: “ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் வீரத்திற்கு மட்டுமல்ல, விளையாட்டிற்கும் பெயர் போனவை; மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு என்றும் துணை நிற்கும்” என்று கூறினார்.
-
Sep 10, 2024 16:56 ISTஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்
மதுரை கே.கே நகர் பகுதியில் ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க ஒரே நேரத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர்.
-
Sep 10, 2024 16:55 ISTஉயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 பேர் பரிந்துரை
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது, இந்த பட்டியலில், நீதிபதிகள் ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோர் உள்ளனர். இதில் என்.ஜோதிராமன் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக உள்ளார்.
-
Sep 10, 2024 16:54 ISTதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
பழனி கோயில் அடிவாரப் பகுதிகளில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள், வீடுகள் மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்பட்ட நிலையில், அங்கு கடை வைத்திருந்தவர்கள், வசித்தவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
-
Sep 10, 2024 16:53 ISTசென்னையில் 3 நாட்களில் 334 பேர் போதை தடுப்பு நடவடிக்கையில் கைது
சென்னை மாநகர போலீசார் கடந்த 3 நாட்கள் நடத்திய போதை தடுப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 பேர் கைது.
-
Sep 10, 2024 16:52 ISTவணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் மரணம்
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.
-
Sep 10, 2024 16:06 ISTதிமுக கூட்டணியில் எவ்வித சிக்கலும் இல்லை: மா.சுப்பிரமணியன்
மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்தது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் திமுக கூட்டணியில் எவ்வித சிக்கலும் இல்லை இன்னும் பல தேர்தல்களுக்கு இந்த கூட்டணி தொடரும்" என்று கூறியுள்ளார்.
-
Sep 10, 2024 16:05 ISTவந்தே பாரத் ரயிலை யார் ஓட்டுவது? மோதிக்கொண்ட டிரைவர்கள்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து உத்திரபிரதேசத்தின் ஆக்ராவிற்கு செல்லும் புதிய வந்தே பாரத் ரயிலை ஓட்டுவதற்கு, லோகோபைலட்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக 3 டிரைவர்கள் இஞ்சின் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்து உள்ளே செல்ல முயன்ற நிலையில், அதிகாரிகள் டிரைவர்களை கட்டுப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Sep 10, 2024 16:02 ISTநிலவில் அனுமின் நிலையம்:இந்தியா - சீனா இணைந்து செயல்படுமா?
நிலவில் அனுமின் நிலையம் அமைக்க ரஷ்ய வின்வெளி மையம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இந்தியா சீனா இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2036-க்குள் இந்த அனுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும், ரஷ்யா – சீனா இணைந்து உருவாக்கி வரும் இந்த சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை இந்த அனுமின் நிலையம் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 10, 2024 15:57 ISTஅமெரிக்காவில் இருந்து மாணவர் வீடியோ வைரல்
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் "நான் இங்க இருக்குறதுக்கு முழுக்க முழுக்க திமுகதான் காரணம். அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலினின் திட்டங்களால் நான் பயன்பெற்றுள்ளேன். ஆனா, நிறைய பேருக்கு அந்த புரிதலே இல்ல" என்று பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Sep 10, 2024 14:51 ISTமாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் நோட்டீஸ்
மகாவிஷ்ணு - மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் நோட்டீஸ்
சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர், சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு, மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் நோட்டீஸ்
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் நோட்டீஸ்
-
Sep 10, 2024 14:34 ISTஆதார் மையத்தில் குவிந்த பொதுமக்கள்
மதுரை கே.கே.நகரில் உள்ள ஆதார் மையத்தில் குவிந்த பொதுமக்கள்
ஆதார் கார்டுகளை கட்டணமின்றி புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம்
ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு
கடும் வெயிலில் பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருப்பு
கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
-
Sep 10, 2024 14:33 ISTசீதாராம் யெச்சூரி எஸ்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எஸ்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்
-
Sep 10, 2024 13:53 ISTஉதயநிதி பதில்
விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது அவர்களின் விருப்பம்
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக பங்கேற்கலாம் என்ற திருமாவளவனின் அழைப்பிற்கு அமைச்சர் உதயநிதி பதில்
-
Sep 10, 2024 13:38 ISTஹேமா கமிட்டி: கேரள ஐகோர்ட் கேள்வி
ஹேமா கமிட்டி அறிக்கை: நடவடிக்கை எடுப்பதில் என்ன தாமதம்? - கேரள ஐகோர்ட் கேள்வி
ஹேமா கமிட்டி அறிக்கையின் படி நடவடிக்கை எடுப்பதில் என்ன தாமதம்? கேரள அரசுக்க உயர் நீதிமன்றம் கேள்வி. ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைக்கு அரசு பதிலளிக்காதது ஆச்சரியம். அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கு உயர் நீதிமன்றம் ஆணை
-
Sep 10, 2024 13:01 ISTமுதலமைச்சர் கோப்பை: இன்று தொடக்கம்
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்
-
Sep 10, 2024 12:58 ISTஹேமா கமிட்டி அறிக்கை: மாநில அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான மனுக்களை விசாரித்த கேரளா உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து, அரசு ஏன் இத்தனை காலம் மௌனம் காத்தது? ஏன் ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை? என்று - நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், 2019ல் அறிக்கை கிடைத்தும் ஏன் இவ்வளவு தாமதம்? சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை என்று நீதிபதிகள் விமர்சனம் செய்துள்ளனர்.
-
Sep 10, 2024 12:56 ISTத.வெ.க உறுப்பினர்கள் உயிரிழப்பு
"தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றை கடக்கும் போது உயிரிழந்த ஐவரும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள், அவர்கள்தம் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை கட்சி செய்யும்" என்று த.வெ.க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் குமார் தெரிவித்துள்ளார்.
-
Sep 10, 2024 12:54 ISTசென்னை: சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில், வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குடியிருந்த வீட்டிற்கு பலகாரங்கள் எடுத்து சென்ற போது சிறுமிக்கு விபரீதம் நேர்ந்துள்ளது. தெரு நாய்களுடன் நின்றிருந்த, லாப்ரடர் வகை நாய் திடீரென சிறுமி மீது பாய்ந்து கடித்து குதறியது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், நாயிடம் இருந்து சிறுமியை மீட்டனர். நாய் கடித்து கையில் பலத்த காயம் அடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Sep 10, 2024 12:52 ISTபள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: வழக்கு தள்ளிவைப்பு
தஞ்சாவூர்: மைக்கேல்பட்டி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்ட சகாயமேரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
Sep 10, 2024 12:47 ISTதமிழ்நாடு அரசு பெருமிதம்
"அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3,238 வகுப்பறைகள், 21 அறிவியல் ஆய்வகங்கள், (Infrastructure Facility) உட்கட்டமைப்புகள் மேம்பாடு. ரூ.551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பயனடையும் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
மத்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பிற மாநிலங்களின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பாராட்டு பெற்றுள்ளது" என்று அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது.
-
Sep 10, 2024 12:46 ISTபுதுச்சேரியில் 18 ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி சார்பில் வரும் 18ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 10, 2024 12:33 ISTதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கவில்லை. 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பணிக்கு வந்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது.
-
Sep 10, 2024 12:32 ISTமது ஒழிப்பு மாநாடு - அதிமுகவுக்கு விசிக அழைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்தான் அதிமுக பங்கேற்கலாம் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் இந்த திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
Sep 10, 2024 12:23 ISTஉலக தற்கொலை தடுப்பு தினம்
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
-
Sep 10, 2024 12:06 ISTவாணியம்பாடி: அரசுப் பேருந்தை மறித்து போராட்டம்
வாணியம்பாடி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அப்போது, பொதுமக்கள் அரசுப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள் வகுப்புக்கு நேரம் ஆவதாக போராட்டக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் செய்த மாணவர்களை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரமாக பேருந்து சாலையிலேயே நிற்பதால் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
-
Sep 10, 2024 12:05 ISTதங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் 6,680 ரூபாய்க்கும், ஒரு சவரன் 53,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Sep 10, 2024 11:24 ISTபுதுச்சேரி உருளையன்பேட்டையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தங்கும் விடுதி: எம்.எல்.ஏ நேரு எதிர்ப்பு
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தங்கும் விடுதிக்கு அனுமதி அளித்ததற்கு தொகுதி எம்எல்ஏ நேரு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட அம்மன் கோவில் வீதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில் தங்கும் விடுதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், தங்கும் விடுதிக்கான அனுமதியை நகராட்சி உள்ளிட்டவை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அப்பகுதியில் தங்கும் விடுதி அமைத்தால்,தங்களது அமைதி பாதிக்கப்படும் என கூறி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட கட்டடத்தை முற்றுகையிட்டனா்.இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ நேரு அங்கு வந்து அப்பகுதி மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
மேலும்,புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி மற்றும் உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினா். அப்போது பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ள விடுதிக்கு அனுமதி தர எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்களின் கோரிக்கையை பரிசளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது
-
Sep 10, 2024 11:23 IST2025 பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு
"2025 பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு செப்டம்பர் 12ம் தேதி முதல் தொடங்கப்படும்" என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனவரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முன்பதிவை தெற்கு ரயில்வே அறிவித்தது.
-
Sep 10, 2024 10:47 ISTபழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்துவதாகக் கூறி அரசு ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது;
இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
-
Sep 10, 2024 10:02 ISTஇமானுவேல் சேகரனார் நினைவுநாள்: 6,200 போலீசார் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாள் நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 6,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு
-
Sep 10, 2024 09:53 ISTபள்ளி வேலைநாட்கள் குறைப்பு: திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு
நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நாட்களை 210 ஆக குறைத்தது பள்ளிக்கல்வித்துறை
இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிப்பு
-
Sep 10, 2024 09:51 ISTதங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.6680-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.53,440-க்கும் விற்பனையாகிறது.
-
Sep 10, 2024 09:08 ISTமேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 10,706 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.583 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியே மொத்தம் விநாடிக்கு 23,000 கன அடி நீர் வெளியேற்றம்
-
Sep 10, 2024 08:44 IST3 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஆகஸ்ட் 20ம் தேதி வழங்கப்பட்ட பணி மாறுதலில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்
-
Sep 10, 2024 08:15 IST3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
-
Sep 10, 2024 07:40 ISTகாலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியானது.
அதன்படி, 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப். 20-ஆம் தேதி தொடங்கி செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்.19 முதல் செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 10, 2024 07:35 ISTஸ்டாலின் அமெரிக்க பயணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
திருச்சியில் ரூ.2,000 கோடி மதிப்பில் ஜபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆலை விரிவாக்கப் பணிக்களுக்காக ராக்வெல் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீடு.
இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவவும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
Key investments secured for Tamil Nadu’s industrial progress!
— M.K.Stalin (@mkstalin) September 10, 2024
🔹A significant investment of ₹2000 crores at Tiruchirapalli by Jabil, a global leader in EMS. This will create 5000 jobs and create a new cluster for electronics manufacturing.
🔹 Rockwell Automation expanding its… pic.twitter.com/XhVkBZ1827- மு.க. ஸ்டாலின்
-
Sep 10, 2024 07:28 ISTதமிழகத்தில் இன்று முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் புரி அருகே நேற்று மதியம் கரையை கடந்தது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.10) முதல் 15-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Sep 10, 2024 07:27 ISTபழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருது
திமுக முப்பெரும் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டு முதல் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது வழங்க உள்ளதாக திமுக அறிவிப்பு
முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு இந்தாண்டு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.