/tamil-ie/media/media_files/uploads/2022/12/Messi-11-1.jpg)
Tamil news updates
FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அர்ஜென்டினா அணி 4-2 என்ற பெனால்டி சூட் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு 3வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றது.
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே-க்கு கோல்டன் பூட் விருது, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு கோல்டன் பால் விருது, கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ்-க்கு கோல்டன் க்ளவுஸ் விருது, என்ஸோ பெர்னாண்டஸ்-க்கு இளம் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அவதார் 2 அதிரடி வசூல்
இந்தியாவில் 'அவதார் 2' முதல் நாளில் ₨41 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை 'அவெஞ்சர்ஸ்' படத்திற்கு பின் இந்தியாவில் பெரிய ஓபனர் என்ற இடத்தையும் ’அவதார் 2’ பிடித்தது .
மீண்டும் கொரோனா
சீனாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு மூக்கு வழியாக செலுத்தப்படும் ஸ்பிரே வடிவிலான தடுப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரம்.
- 21:21 (IST) 18 Dec 2022திணறும் பிரான்ஸ்; அர்ஜென்டினா 2-வது கோல்
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், பிரான்ஸ் அணி கோல் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. அர்ஜென்டினா 2-வது கோல் அடித்து முன்னிலையில் உள்ளது.
- 21:04 (IST) 18 Dec 2022அர்ஜென்டினா முதல் கோல்; பெனால்டியில் மெஸ்ஸி அசத்தல்
பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா முதல் கோலை அடித்துள்ளது. பெனால்டி வாய்ப்பை அருமையாக கோல் ஆக்கினார் கேப்டன் மெஸ்ஸி
- 21:01 (IST) 18 Dec 2022அர்ஜென்டினா முதல் கோல்; பெனால்டியில் மெஸ்ஸி அசத்தல்
பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா முதல் கோலை அடித்துள்ளது. பெனால்டி வாய்ப்பை அருமையாக கோல் ஆக்கினார் கேப்டன் மெஸ்ஸி
- 20:04 (IST) 18 Dec 2022இந்தியாவிலும் உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படும் - மோடி
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியை போல் இந்தியாவிலும் நடத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- 19:37 (IST) 18 Dec 2022அவரவர் மதத்தை பின்பற்றுவதே மதசார்பின்மை – அண்ணாமலை
அவரவர் மதத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதே மதசார்பின்மை. எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம் என பாஜகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறியுள்ளார்
- 19:15 (IST) 18 Dec 2022திருவள்ளூரில் மீனவர்களிடையே மோதல் - 4 பேர் காயம்
திருவள்ளூர், ஆண்டிக்குப்பம் பகுதியில் இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினரும் கற்கள் எறிந்து தாக்கிக் கொண்டதில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
- 19:05 (IST) 18 Dec 2022ராகுல் யாத்திரை.. கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு தனது கட்சியை சேர்ந்த ஒருவர் பதில் அளிப்பார்” என்றார்.
தீபிகா படுகோன் ஆடை பற்றி அரசியல் கேள்விக்கு, “அது நம்ம அரசியல் இல்லை” என்றார். ஆர்.டி.ஐ. தொடர்பான மற்றொரு கேள்விக்கு, “நாங்கள் கேட்டது 2 மணி நேரத்தில் நடந்துவிட்டது” என்றார்.
- 18:56 (IST) 18 Dec 2022சென்னை விமான நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த கார்
சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
. கார் தீ விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது.
- 18:52 (IST) 18 Dec 20221.15 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு
தமிழ்நாட்டில் 1.15 கோடி மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு மின் எண்-ஐ ஆதாருடன் இணைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டன.
- 18:45 (IST) 18 Dec 2022ஆவின் பால் விலையை குறைத்தவர் நாசர்.. மு.க. ஸ்டாலின்
அமைச்சர் நாசரின் இல்லத் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கடந்த ஆட்சியை விட பால் பொருள்கள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.
ஆவினில் பால் விலையை குறைத்தவர் நாசர்” எனக் கூறினார்.
- 18:34 (IST) 18 Dec 2022வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னையில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தவரை போலீசார் கோவையில் கைதுசெய்தனர்.
இது தொடர்பாக கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- 18:18 (IST) 18 Dec 2022பாகிஸ்தான் அமைச்சர் உருவப்படம் எரிப்பு.. ஈரோடு பாஜக தலைவர் மீது வழக்கு!
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ உருவப் படத்தை காலணியால் அடித்து தீ வைத்து எரித்ததாக ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் உள்பட 14 பேர் தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டி நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் உருவப்படம் எரிக்கப்பட்டுள்ளது.
- 17:57 (IST) 18 Dec 2022உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்லும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்லும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
- 17:46 (IST) 18 Dec 2022ஈரோட்டில் திருநங்கைகளுக்கு மணமகள் அலங்காரம்
ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் திருநங்கைகள் மணமகள் போல் அலங்காரம் செய்துகொண்டு ஒய்யார நடைபோட்டு அசத்தினர்.
- 17:37 (IST) 18 Dec 2022கன்னியாகுமரியில் வெறுப்பு அரசியல் அதிகரிப்பு.. மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெறுப்பு அரசியல் அதிகரித்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். மேலும் இந்த வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
- 17:20 (IST) 18 Dec 2022தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கடுமையான தாக்குதல் நடத்தி அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மீனவர்கள் மத்திய-மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 17:17 (IST) 18 Dec 2022சபரிமலையில் பெண்கள், குழந்தைகளுக்கு தனிவரிசை
சபரிமலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி வரிசையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- 17:06 (IST) 18 Dec 2022மதுராந்தகம் ஏரியில் தலைமை செயலர் ஆய்வு
மதுராந்தகம் ஏரியில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு நடத்தினார்.
அந்த ஏரியை ஆழப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
- 16:56 (IST) 18 Dec 2022ஹரியானாவில் பனி மூட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து
ஹரியானா, கர்னால் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பனி மூட்டத்தால் ஏற்பட்ட பயங்கர விபத்து ஏற்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்ததாக தகவல வெளியாகி உள்ளது.
- 16:55 (IST) 18 Dec 2022பீகாரில் திறக்கும் முன்பே இடிந்த பாலம்
பீகாரில் பெகுசாய் பகுதியில் உள்ள பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கந்தக் நதியின் குறுக்கே ரூ. 13 கோடி செலவில், 206 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது.
- 16:54 (IST) 18 Dec 2022தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 16:04 (IST) 18 Dec 2022‘எனக்கு கல்வி திறமை இருந்தாலும் முதல்வரின் ஊக்கம்தான் என் பணிக்கு காரணம்’ - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: “எனக்கு கல்வி, திறமை இருந்தாலும் முதலமைச்சர் தரும் ஆதரவும் ஊக்கமும் மட்டுமே என் பணிக்கு காரணம்; மத்திய அரசு ரத்து செய்த சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மாநில அரசு வழங்க முதலமைச்சரோடு கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
- 14:57 (IST) 18 Dec 2022ராகுல் நடைபயணத்தில் கமல் பங்கேற்பு
ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறும் யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்பு
- 14:21 (IST) 18 Dec 2022சாலை பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை
சாலை பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை
சென்னையில் சாலை மற்றம் தெருக்களின் பெயர் பலகையில் போஸ்டர், நோட்டீஸ் ஒட்டினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 14:21 (IST) 18 Dec 2022'துணிவு' படத்தின் 2வது சிங்கிள் வெளியானது
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தின் 2வது சிங்கிள் ’காசேதான் கடவுளடா’ வெளியானது
- 13:42 (IST) 18 Dec 2022'சிவாஜி சிலை செய்வதற்கான முழு நிதியையும் நான் ஏற்றுக்கொண்டேன்'
ஒரு முறை சிவாஜி சிலை செய்ய வேண்டும் என்று திரையுலகினர் என்னிடம் நிதி கேட்டனர்.
சிவாஜி சிலை செய்வதற்கான முழு நிதியையும் நான் ஏற்றுக்கொண்டேன்.
சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு
- 13:41 (IST) 18 Dec 20222024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் ம.நீ.ம
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்
சென்னை, அண்ணாநகரில் தனியார் ஹோட்டலில் செயற்குழு, மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
தேர்தல் கூட்டணி, வியூகம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை
- 13:06 (IST) 18 Dec 202221, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு
- 12:29 (IST) 18 Dec 2022ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது
ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது" "ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" "நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது" அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை
- 12:29 (IST) 18 Dec 2022தனி வரிசை ஏற்படுத்தவில்லை
சபரிமலையில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தனி வரிசை ஏற்படுத்தவில்லை என புகார் தனி வரிசை ஏற்படுத்தாததால் வயதானவர்கள், குழந்தைகள் அவதி தரிசனத்திற்காக சுமார் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை
- 10:52 (IST) 18 Dec 20227 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- 10:50 (IST) 18 Dec 2022வீழ்த்தியது இந்தியா
முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 513 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 324 ரன்களில் ஆல் ஆவுட் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை
- 10:20 (IST) 18 Dec 20222வது நாளாக சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் அடையாற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் மாயம். 2வது நாளாக சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள். 15 மணி நேரமாக சிறுவனை தேடும் பணி தொடர்கிறது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
- 10:09 (IST) 18 Dec 2022துணிவு' படத்தின் 2வது சிங்கிள் பாடல் இன்று வெளியீடு
துணிவு' படத்தின் 2வது சிங்கிள் பாடல் இன்று வெளியீடு. "காசேதான் கடவுளடா" பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பு
- 10:09 (IST) 18 Dec 2022குளோரின் வாயு கசிவு
கரூர், மூலக்காட்டனூர் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு. பல மணி நேர போராட்டத்துக்கு பின் சரி செய்த தீயணைப்பு வீரர்கள்
- 10:09 (IST) 18 Dec 2022கார்த்திகை மாதம் நிறைவு - காசிமேட்டில்
களைகட்டும் மீன் விற்பனை ஒரு மாதத்திற்கு பின் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதலே காசிமேட்டில் அலைமோதும் அசைவ பிரியர்கள் கூட்டம் மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதால் விலை சற்று குறைந்தது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.