Petrol Diesel Price:
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63, டீசலின் விலை ரூ.94.24 ஆகவும் விற்கப்படுகிறது.
சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர்
வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்னும் திட்டம் ஆய்வுக்கு பின் வெளியே வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், வஞ்சூரை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி யாழினி பேனா வழங்கினார் .
ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 3179 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியின் நீரிருப்பு 463 மில்லியன் கன அடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கோவை தடாகம் காப்புக்காடு பகுதியில் வனத்துறை ரோந்துப்பணியின் போது பெண் யானையின் சடலம், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த யானையின் நாளை உடற்கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட உள்ளது
வேலூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பயணித்த ரயிலில், பெண் ஒருவர் தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவலம் – முகுந்தராயபுரம் இடையே தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், 7 நிமிடம் தாமதமாக புறப்பட்டது
சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ₨25 ஆயிரம் அபராதம் என புதுச்சேரி போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” எ ன மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார்
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் (71), சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார். ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார்
நாட்டில் எந்த உயர் நீதிமன்றங்களிலும் தற்போது தலைமை நீதிபதி பொறுப்பில் பெண்கள் இல்லை ஒட்டுமொத்தமாக உள்ள 775 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், 106 பேர் பெண்கள் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் என தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், இரட்டை இலை கோரி யாரும் அணுகவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பொது சிவில் சட்டம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என பதிலளித்துள்ளார்.
அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுகு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளது.
ஓசூர் சம்பவத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழாக்களுக்கு அனுமதி மறுக்கும் முன்பு முழுமையாக விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதையும் மீறி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மாவட்ட எஸ்.பி.க்களும், சரக டி.ஐ.ஜி-க்களும் தான் பொறுப்பு என சட்டம் ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள வீட்டை காலி செய்ய, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த பார்வையாளர் முருகன் உயிரிழந்தார்.
அதானி குழுமத்துக்கு முன்னணி வழங்கிய கடன் தொகை விவரங்கள் வருமாறு:
எஸ்.பி.ஐ வங்கி – ரூ. 21,375 கோடி கடன் வழங்கியுள்ளது.
இண்டஸ்இண்ட் வங்கி – ரூ. 14,500 கோடி கடன் வழங்கியுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி – ரூ. 7,000 கோடி கடன் வழங்கியுள்ளது.
அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுந்த நிலையில், கடன் விவரங்களை வங்கிகள் வெளியிட்டு வருகின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக உச்ச, உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை முறையே 81, 1.2 லட்சமாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அதே போல, கீழமை நீதிமன்றங்களில் 2, 76, 208 வழக்குகள் 25 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாக கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு, எருதுவிடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. தடை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி தவறானது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மதுபான கேளிக்கை விடுதிகளை மூடக்கோரியும், மூடப்பட்டுள்ள நியாய விலை கடைகளை மீண்டும் திறக்க கோரியும், 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள வீட்டை காலி செய்ய, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை ரூ.44 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.44,040க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எஸ்.பி.ஐ வங்கி – ரூ. 21,375 கோடி,
பஞ்சாப் நேஷ்னல் வங்கி – ரூ. 7,000 கோடி,
இண்டஸ்இண்ட் வங்கி – ரூ. 14,500 கோடி
அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், கடன் விவரங்களை வங்கிகள் வெளியிட்டு வருகின்றன.
திருவள்ளூர், அருகே போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பலியான சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனை கழிவறையில் வைத்து கட்டையால் தாக்கியதில் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது.
போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேர் கைதாக்கியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். சிறுவன் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“கிருஷ்ணகிரி, சூளகிரியில் அனுமதியின்றி திடீரென மறியலில் ஈடுபட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வீடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சியிரின் அனுமதியின்றி எருதுவிடும் நிகழ்ச்சியை நடத்த முயன்றதே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அனுமதி வாங்கியிருந்தால் காவல்துறை தலையிட்டிருக்காது. வீடியோ ஆதாரத்தை வைத்து வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வோம்” என்று – மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் விளக்கமளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேட்டு தெரு பகுதி நகை பட்டறையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் வேட்பாளர் மேனகா வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு முன் கையில் கரும்பு ஏந்தியபடி நாம் தமிழர் கட்சியினர் பேரணி நடத்தினர். நாம் தமிழர் வேட்பாளர், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மக்களுக்கான திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தேன். நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும். பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உள்ளது. அரசு நிதி மட்டுமின்றி, கடன் வாங்கியும் திட்டங்களுக்காக செலவிடுகிறோம். திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என வேலூர் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். பாஜக-வின் ஆதரவு குறித்து நானும் பாஜக தலைமையும் விரைவில் அறிவிப்போம் என மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காமன் தொட்டி கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல் நடைபெற்றது. இதில் போலீசார் மீது கல்வீச்சு நடந்ததால் கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது
புதுச்சேரி குடியிருப்பு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி, குடிமைப்பெருள் வழங்கல் துறையை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 பூத்கள் உள்ளன. போலியான வாக்குகள் செலுத்த முயற்சி நடக்கிறது. வாக்குகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநில உரிமை, ஜிஎஸ்டி உரிமை குறித்தெல்லாம் குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி பேசியதில் 50% கூட நான் பேசவில்லை -சென்னையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதால் மக்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கின்றனர்; உண்மையை கண்டறிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் – காங். தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு கண்டித்து 5,000க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கான செயல் திட்டம் வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் காப்புக்காடு அருகே குவாரி அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்திய அரசாணையை எதிர்த்து வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான 3ம் நாள் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. பகல் 12 மணிக்கு மேல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது
அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டியின் தரவரிசை உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் (57) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் சுமார் ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு சரிந்த நிலையில், தொழிலதிபர் கவுதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்து 15 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்” – மநீம தலைவர் கமல்ஹாசன்
சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு. ரூ. 5,800 கோடி மதிப்பீட்டில், மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல். இபிஎஸ் தொடர்ந்த வழக்கு வரும் 3ம் தேதி விசாரணைக்கு வருகிறது.