Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.9) முதல் செப்.14-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.9, 10 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Sep 08, 2024 23:31 IST
தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவுடன் ஸ்டாலின் காணொலி வழியாக ஆலோசனை
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார். தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாடுகள், மும்பெரும் விழா, தி.மு.க பவள விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் கையெழுத்தான முதலீடுகள் குறித்து அமைச்சர்களிடம் விவரங்களை முதல்வர் பகிர்ந்துகொண்டார்.
-
Sep 08, 2024 20:35 IST
சென்னையில் சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
சென்னையில் பிற்போக்குத்தனமாகப் பேசிய மகாவிஷ்ணு மீது தாய்க்கரங்கள் அமைப்பு சார்பில் மாநில மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகத்தில், புகார் மனு மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய புகாரில் மகாவிஷ்ணு ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Sep 08, 2024 19:06 IST
த.வெ.க அரசியல் கட்சியாக பதிவு செய்த தேர்தல் ஆணயம்; விஜய்க்கு சீமான் வாழ்த்து
தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத் தளபதி விஜய் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
Sep 08, 2024 18:18 IST
வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பரிதாப பலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Sep 08, 2024 16:56 IST
வெளிநாடு சென்று திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்று
வெளிநாடு சென்று இந்தியா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
-
Sep 08, 2024 16:34 IST
ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஸ்ரீகாக்குளம் பகுதியில் கனமழையால் மினிவேன் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது
-
Sep 08, 2024 16:00 IST
த.வெ.க. மாநாடு - 33 நிபந்தனைகள் என்ன?
மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள்? மாநாடு முழுவதும், பார்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும். மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 2 மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் உள்ளிட்ட 33 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது
-
Sep 08, 2024 15:22 IST
திரைத்துறையில் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் – நடிகர் சங்கம்
திரைத்துறையில் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். குற்றம் உறுதி செய்யப்படும் நடிகருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என நடிகை ரோஹிணி தெரிவித்துள்ளார்
-
Sep 08, 2024 14:43 IST
நடிகர் சங்கத்திலிருந்து கெட்டவர்கள் வெளியேறிவிட்டனர் - விஷால்
நடிகர் சங்கத்திற்குள் இருந்த கெட்டவர்கள் வெளியேறி விட்டதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் விஷால் கூறியுள்ளார்
-
Sep 08, 2024 14:11 IST
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலத்தை நீட்டிக்க தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
-
Sep 08, 2024 13:48 IST
மகாவிஷ்ணு விவகாரம் - நாளை விசாரணை அறிக்கை
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளரிடம், நாளை விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சமர்ப்பிக்க உள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நடந்தது என்ன என்பது குறித்து 3 நாட்களாக விரிவான விசாரணை நடத்தி வருகிறார்
-
Sep 08, 2024 13:46 IST
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை
நடிகர்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Sep 08, 2024 13:17 IST
தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அமெரிக்காவில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இரவு 7.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்
-
Sep 08, 2024 12:56 IST
ராமநாதபுரத்தில் பயணிகள் படகு சேவை திட்டம்
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தேவிபட்டினம், பாம்பன் கடற்பகுதிகளை உள்ளடக்கி பயணிகள் படகு சேவை திட்டம் தொடங்க உள்ளது. விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது
-
Sep 08, 2024 12:42 IST
ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்
-
Sep 08, 2024 12:20 IST
தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது - ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள். நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரம், மகிழ்ச்சியான முகங்கள் என் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள், அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள். வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள். திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள். உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Sep 08, 2024 12:00 IST
த.வெ.க. மாநில மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள த.வெ.க. மாநில மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக விழுப்புரம் டி.எஸ்.பி. தகவல்
-
Sep 08, 2024 11:52 IST
முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது: விஜய் அறிக்கை
— TVK Vijay (@tvkvijayhq) September 8, 2024
-
Sep 08, 2024 11:04 IST
தவெக மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை: விழுப்புரம் எஸ்.பி. விளக்கம்
தவெக மாநாட்டிற்கான அனுமதி தற்போதுவரை வழங்கப்படவில்லை. மாநாடு தொடர்பாக நேரில் ஆலோசனை நடத்த பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், விழுப்புரம் எஸ்.பி. விளக்கம்
-
Sep 08, 2024 10:53 IST
லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
28 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
Sep 08, 2024 10:49 IST
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியது.
தவெக மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதனை இன்று (செப். 8) காலை 11 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உறுதி செய்வார் என கூறப்படுகிறது.
-
Sep 08, 2024 10:07 IST
பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது
-
Sep 08, 2024 10:02 IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Sep 08, 2024 09:14 IST
மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
மகாவிஷ்ணு மீது ஏற்கெனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கத் தலைவர் சரவணன் அளித்த புகாரில் திருவொற்றியூர் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
-
Sep 08, 2024 08:16 IST
தமிழ் உடன்பிறப்புகளுடன்
#Chicago-வில் தமிழ் உடன்பிறப்புகளுடன்! pic.twitter.com/MwZC0hRWYf
— M.K.Stalin (@mkstalin) September 8, 2024 -
Sep 08, 2024 08:09 IST
அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Sep 08, 2024 07:39 IST
ராமேஸ்வரம் அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
ராமேஸ்வரம் பிரப்பன்வலசை என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Sep 08, 2024 07:28 IST
உள்ளாட்சி தோ்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்பு தோ்தலுக்காக வாக்குப் பெட்டிகளைத் தயார் நிலையில் வைக்குமாறு மாவட்டத் தோ்தல் அலுவலா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
Sep 08, 2024 07:27 IST
தவெக முதல் மாநாடு: இன்று அறிவிக்கிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அதன் தலைவரும் நடிகருமான விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 11.17 மணியளவில் மாநாடு தேதியை விஜய் அறிவிப்பார் என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
த.வெ.க. மாநாட்டிற்கு காவல்துறை இன்னும் அனுமதி வழங்காதது குறிப்பிடத்தக்கது.
-
Sep 08, 2024 07:27 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொலை குற்றத்தில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் அருள், பொன்னை பாலு , ராமு திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், செல்வராஜ் உள்ளிட்ட 10பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்துள்ளது.
-
Sep 08, 2024 07:27 IST
மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப்பள்ளிகளில் பிற்போக்குத்தனமாக பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணுவை செப்.20 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Sep 08, 2024 07:26 IST
சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, சட்டை அணிந்து மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
#Watch | “நான் இன்னும் தமிழ் மண்ணில்தான் இருக்கிறேன் என்ற உணர்வை தருகிறது...”
— Sun News (@sunnewstamil) September 8, 2024
- சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு#SunNews | #CMStalinInUS | #Chicago | #MKStalin | @mkstalin pic.twitter.com/8DacQRk8F7
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.