பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சுனாமி நினைவு தினம் இன்று
தமிழகத்தில் இன்று சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம். சுனாமி நினைவு தூணில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
பிரதமர் நேருவை புழந்த முதல்வர்
இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் கோபண்ணா எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. ஒற்றை மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர் அவர் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தொலைப்பேசியில் உரையாடினார். அப்போது ‘அமைதி பேச்சுவார்த்தைக்கு’ உதவ கோரிக்கை விடுத்தார்
சென்னை வந்த குருவாயூர் விரைவு ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து புரளியை கிளப்பிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
கர்நாடக அரசு கொரோனா பரவலை தடுக்க புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். திரையரங்குகளிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது
சபரிமலை கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளதையொட்டி, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி, டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 3000 உச்சவரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கப்படும்
இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பாகிஸ்தான் மீன்பிடி படகு பிடிப்பட்டுள்ளது. 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ரூ 300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை வழக்கம்போல் செயல்படும். அரையாண்டு பள்ளி தேர்வு விடுமுறை காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் பூங்கா மூடப்பட்டிருக்கும் நிலையில் நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.
3,552 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 18,671 பேர் தேர்ச்சி பெற்று, உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர் இதில், 15,158 பேர் ஆண்கள், 3,513 பேர் பெண்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
2023இல் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கண்காணிப்பாளராக எம்.பி. முகுல் வாஸ்னிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல்நிலைய சரக எல்லைக்குள் பிடிபட்ட 51 கிலோ கஞ்சா தீவைத்து எரித்து அழிக்கப்பட்டது.
வீடியோகான் முறைகேடு வழக்கில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோரை டிச.28ஆம் தேதிவரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி மெஹ்ரோலியில் தன்னுடன் வாழ்ந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த அப்ஃதாப் ஆமின் பூனவாலாவிடம் டெல்லி தடய அறிவியல் ஆய்வகத்தில் நாளை குரல் பரிசோதனை நடைபெறுகிறது.
நாட்டில் புதிதாக இன்று 196 பேர் கொரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3428 ஆக உள்ளது.
இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு 5 லட்சத்து 30 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் கொடுத்துள்ள புள்ளிவிவர அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தேசிய தலைநகர் டெல்லியில் மதர் டெய்ரி பால் லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை (டிச.27) முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 16 காசுகள் உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தைகளும் இன்று உயர்வில் வணிகத்தை நிறைவு செய்தன.
மார்ச் 2012 வரை வங்கியில் ரூ.1,730 கோடி மோசடி செய்ததாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் எம்.டி மற்றும் சி.இஓ சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சி.பி.ஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது.
இந்நிலையில், வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கிய கடன் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக மும்பையைச் சேர்ந்த வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை எண்ணூரில் நேற்று கடலில் குளிக்கச் சென்று வடமாநில இளைஞர்கள் நால்வர் மாயமான மூவரின் உடல் சடலமாக கரை ஒதுங்கியது.
மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கட்டுமான தொழிலாளர்களாக வேலை செய்யும் 16 பேர் நேற்று கடலுக்கு வந்த நிலையில், அலையில் சிக்கி நால்வர் மாயமானார்கள்.
மதுபோதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை அடித்து உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கையின் திருமணத்திற்காக கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாக விசாரணையில் தகவல். ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம். இயந்திரம் சேதம் அடைந்தது. ஏ.டி.எம்-ஐ உடைக்கும் காட்சிகள் வெளியானது.
இந்தியாவில் வரலாறு கற்பிக்கப்படும் விதம், சில கதைகளுக்கு மட்டுமே பொருத்தமானது என்றும், மக்களிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதாகக் கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
முதல் ‘வீர் பால் திவஸ்’ நிகழ்வில், குரு கோவிந்த் சிங்கின் மகன்களான ஜோராவர் சிங் மற்றும் ஃபதே சிங் ஆகியோருக்கு மோடி அஞ்சலி செலுத்தினார். இருவரையும் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, “சாஹிப்ஜாதேக்கள் தலைமுறைகளாக ஊக்கமளித்து வருகின்றனர். அத்தகைய வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு நம்பிக்கையுடன் நிரப்பப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வரலாறு என்ற பெயரில், தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கும் சில கதைகள் மட்டுமே நமக்கு கற்பிக்கப்படுகின்றன.
இந்தியாவை வெற்றியின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமானால், கடந்த காலத்தின் குறுகிய கண்ணோட்டங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும்” என்று கூறினார்.
சாஹின்சாட்கள் தூக்கிலிடப்பட்ட சூழ்நிலைகள் குறித்து பேசிய மோடி, “குரு கோவிந்த் சிங் ஔரங்கசீப்பின் பயங்கரவாதத்திற்கும், இந்தியாவை மாற்றும் அவரது நோக்கங்களுக்கும் எதிராக உறுதியாக நின்றார். ஔரங்கசீப்பும் அவரது மக்களும் குரு கோவிந்த் சிங்கின் பிள்ளைகளின் மதத்தை வாளின் பலத்தால் மாற்ற விரும்பினர்.” என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “பா.ஜ.க நினைப்பதை எல்லாம் தி.மு.க செய்கிறது. இல்லம் தேடி கல்வி, மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு எல்லாவற்றையும் விரைந்து செய்கிறது தி.மு.க; பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-க்கு விசுவாசமாக உள்ள கட்சியாக இருக்கிறது தி.மு.க. பா.ஜ.க-விர்கு ஒரே கோட்பாடுதான் பாகிஸ்தான், பக்கத்துநாடு பசுமாடு, ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான்” என்று விமர்சித்துப் பேசினார்.
முதலமைச்சரின் 'தகவல் பலகை (Dash Board)' தரவு ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்; வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி உடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நாளை (டிசம்பர் 27) சந்திக்கிறார்.
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 94.
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரிடமும் 2வது நாளாக போலீசார் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகியோரிடம் விசாரணை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 92,500 அபராதம் விதிப்பு
புகாரளித்த 9 பயணிகளுக்கு ரூ. 9,200 வசூலித்து கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து வழங்க கோரி நாகர்கோவில், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கைகளில் கரும்பு, தேங்காய் ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருவையாறில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து
அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட 30க்கும் மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிக்சை
செல்போன் பேசிக்கொண்டே தனியார் பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் விபத்து என தகவல்
திமுக அரசு பொங்கல் பரிசாக ரூ. 5,000 வழங்கலாம்.
அதிமுக ஆட்சியில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமின்றி பொங்கல் பரிசு வழங்கினோம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொளி மூலம் இன்று ஆலோசனை
ஒசூர் கெலமங்கலத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு
20க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதி
98-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து
தகைசால் தமிழர் விருது நல்லகண்ணுவுக்கு வழங்கியதால் அந்த விருதுக்கே பெருமை.
98 வயதிலும் கொள்கை, லட்சியத்திற்கு
இலக்கணமாக செயல்படுகிறார் நல்லகண்ணு- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு . சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
ஒசூர் கெலமங்கலத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு . 20க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி: சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி
சென்னை: நேப்பியர் பாலம் அருகே இன்று அதிகாலை பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் ஷேக் அஷ்ரப் மற்றும் கார்த்தி கைது!
மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக 2 நாட்களில் பதில் அளிக்கப்படும். வரும் 31-ம் தேதி தான் இணைப்பதற்கான கடைசி நாள்.
சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி சேதமடைந்தது .
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் எல்லா வீடுகளுக்கும் சென்று நீயாயவிலை கடை ஊழியர்கள் விநியோகம் செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் மீண்டும் உயர்வு. அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணங்கள் நிர்ணயம்
புதிய வகை கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் இன்னும் நீக்கப்படவில்லை . சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்