Advertisment

Tamil News Breaking Highlights: இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

Tamil Nadu News Update Today- 18 September 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs BAN 1st Test Live Score MA Chidambaram Stadium Chennai  updates in tamil

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்

இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் பெற்று, அனுமதிக்கப்பட்ட கால வரையறைக்குப் பிறகு படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Sep 18, 2024 23:46 IST
    திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

    கடந்த ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட திருப்பதி கோயில் பிரசாதங்கள் தரமற்று இருந்தன எனவும் விமர்சனம் செய்துள்ளார்.



  • Sep 18, 2024 20:59 IST
    பிரதமர் தோல்வியை மறைக்க மக்களை திசை திருப்புகிறார்: சித்தாராமையா!

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல. நடைமுறையில் செயல்படுத்த சாத்தியமில்லாதது. எதிர்கட்சிகளிடம் எவ்வித ஆலோசனையும் இல்லாமல், இதற்கு அவசரமாக ஒப்புதல் அளித்திருப்பது, பிரதமர் மோடி அரசின் வன்ம நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள், அரங்கேறி வரும் நிலையில், இதற்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பிரதமர் தோல்வியை மறைக்க ஒரே நாடு ஒரே தேர்தல் விதியை காட்சி மக்களை திசைதிருப்புகிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.



  • Sep 18, 2024 20:46 IST
    கடல் குகை செட் அமைத்து கடல்கன்னி கண்காட்சி: கோவை மக்கள் உற்சாகம்!

    கோவையில் முதன்முறையாக  வ.உ.சி. மைதானத்தில் கடல் குகை செட் அமைத்து  கடல் கன்னி மற்றும் மீன்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடல் கன்னிகளுடனும், கலர் மீன்களுடனும் செல்ஃபி எடுத்து பொதுமக்கள் உற்சாகம்.



  • Sep 18, 2024 20:44 IST
    காதல் ஜோடியை தாக்கிய விவகாரம்: நா.த.க நிர்வாகிக்கு சிறை

    மணப்பாறையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை தாக்கிய நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி அருணகிரியை, செப்டம்பர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க மணப்பாறை நீதிமன்றம் உத்தரவு.



  • Sep 18, 2024 19:49 IST
    தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் அபராதம்: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

    வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை எளிய மீனவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அதீத தண்டனைகளை விதிப்பதும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டை அடித்து இழிவுபடுத்துவது என இலங்கை அரசின் தொடர்ச்சியான எதேச்சதிகாரப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.



  • Sep 18, 2024 19:16 IST
    எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

    எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பாக ரூ.290 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Sep 18, 2024 19:13 IST
    எல்லை தாண்டி மீன் பிடிப்பு -  35 பாம்பன் மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 



  • Sep 18, 2024 19:09 IST
    ரிக்கி பாண்டிங் நியமனம்

    பஞ்சாப் கிங்ஸ்-ன் புதிய பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



  • Sep 18, 2024 19:02 IST
    சிவகங்கையில் இரட்டை கொலை - பரபரப்பு

    சிவகங்கை அருகே மாமியார், மாமியாரின் தாயாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் சேர்ந்து வாழ, இருவரும் இடையூறாக இருந்ததாக கூறி இளைஞர் பசுபதி என்பவர் கொலை செய்துள்ளார். 



  • Sep 18, 2024 18:57 IST
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • Sep 18, 2024 18:15 IST
    நடிகர் தனுஷ் விவகாரம்: ஃபெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

    தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் தனுஷ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக ஃபெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. 

    ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் செயலுக்கு கண்டனம். ஏனெனில், நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுந்தால், பேசித் தீர்வு காண இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை நினைவுபடுத்துகிறோம். மேலும், ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது. 

    தமிழ்த் திரையுலகின் தொழிலாளிகளுக்கு மிகக் கடுமையான இன்னல்கள் ஏற்படும் போது அனைவருக்கும் முன்பாக தென்னிந்திய நடிகர் சங்கமே ஃபெப்சி தொழிவாளர்களுக்குமான நலத்திட்டங்களையும் முன்னெடுத்து, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. கொரோனா உள்ளிட்ட காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்த அளப்பரிய உதவிகள் பறைசாற்றும் அதை ஃபெப்சி நிர்வாகமும் மறுக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்”

    ஃபெப்சி நிர்வாகத்தை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டிக்க வேண்டும். ஃபெப்சி நிர்வாகம் தங்களை அதிகார மையமாக சித்தரித்துக் கொண்டு, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்; அந்த கவனத்தை ஃபெப்சி அமைப்பு சார்ந்த நலனில் செலுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும். 

    திரைத்துறையில் நிலவும் பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்க முற்படும் ஃபெப்சி நிர்வாகத்தின் வரம்பு கடந்த செயல்பாடுகளையும், வீண் சர்ச்சை ஏற்படுத்தும் அறிக்கைகளையும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Sep 18, 2024 18:10 IST
    லெபனான் பேஜர்கள் வெடி விபத்து 

    லெபனான் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்து சிதறிய சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தகவல் தெரிவித்துள்ளார். 



  • Sep 18, 2024 18:10 IST
    அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர்

    விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு வத்திராயிருப்பைச் சேர்ந்த முருகக்கனி என்பவர் ரூ.2 லட்சம் மதிப்பில் நன்கொடை அளித்துள்ளார்.  ரூ.2 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளை ஊர்மக்களுடன் இணைந்து பள்ளிக்கு கல்வி சீராக வழங்கினார்



  • Sep 18, 2024 18:07 IST
    சாதி மறுப்பு திருமணத்திற்கு முயன்ற இளைஞர் மீது நா.த.க நிர்வாகி தாக்குதல்

    கைதாகியுள்ள அருணகிரி கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மணப்பாறையில் நா.த.க சார்பில் போட்டியிட்டவர், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து ரூ. 20,000 பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார் அருணகிரி. 



  • Sep 18, 2024 17:18 IST
    ஜாபர் சாதிக் வழக்கு - 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  

     



  • Sep 18, 2024 17:08 IST
    திருவள்ளுவர் பிறந்தநாள் வழக்கு - ஐகோர்ட் அதிரடி கருத்து

    "வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை" என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. 



  • Sep 18, 2024 17:05 IST
    இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

    வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Sep 18, 2024 16:22 IST
    சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    சந்திராயன் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிலவில் இருந்து பாறைகள், மண்ணை பூமிக்கு கொண்டுவந்து ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 4 செயல்படுத்தப்பட உள்ளது. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



  • Sep 18, 2024 16:19 IST
    ‘ஒரு தேசம், ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு பொருத்தமற்றது, சாத்தியமில்லை - டி. ராஜா

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா: “‘ஒரு தேசம், ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு பொருத்தமற்றது மற்றும் சாத்தியமற்றது; தற்போதைய அரசியலமைப்பின் கீழ் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்; நாடாளுமன்றம் கூடும் போது, ​​‘ஒரு தேசம், ஒரே தேர்தல்’ பற்றிய விவரங்களை பெற வேண்டும்; ‘ஒரு தேசம், ஒரே தேர்தல்’ ஏற்படுத்தும் பின்விளைவுகளை நாம் ஆராய வேண்டும்” என்று கூறினார்.



  • Sep 18, 2024 16:13 IST
    ஆட்சியில் பங்கு கோரிக்கையை சி.பி.எம் வலியுறுத்தப்போவது இல்லை - கே. பாலகிருஷ்ணன்

    வி.சி.க-வின் மதுஒழிப்பு மாநாடு தொடர்பான கேள்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் பதிலளிக்கையில், “ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தப்போவது இல்லை” என்று கூறினார்.



  • Sep 18, 2024 15:52 IST
    ஒரு நாடு, ஒரே தேர்தல் முறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.



  • Sep 18, 2024 14:33 IST
    பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது; விஜய் செய்தது நல்ல விஷயம் - உதயநிதி ஸ்டாலின்

     

    பெரியார் சிலைக்கு த.வெ.க தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது; விஜய் செய்தது நல்ல விஷயம்; அவருக்கு என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 18, 2024 14:30 IST
    துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

    துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக பேசப்படுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். அது முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு” என்று கூறினார்.



  • Sep 18, 2024 13:50 IST
    வாகன தணிக்கையின் போது சிக்கினார், காக்கா தோப்பு பாலாஜி - காவல் இணை ஆணையர்

    காக்கா தோப்பு பாலாஜி வாகன தணிக்கையின் போது சிக்கினார். போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்ப முயன்றார். தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார். காக்கா தோப்பு பாலாஜி மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காக்கா தோப்பு பாலாஜி காரில் இருந்த பெரிய பையில் கஞ்சா, ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காக்கா தோப்பு பாலாஜி மீது 6 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. காக்கா தோப்பு பாலாஜி வந்த கார் யார் பெயரில் பதிவாகி உள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. காக்கா தோப்பு பாலாஜி உடன் வந்த சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது என காவல் இணை ஆணையர் ப்ரவேஷ்குமார் தெரிவித்துள்ளார்



  • Sep 18, 2024 13:15 IST
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் தி.மு.க.,வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற்ற நிலையில், வரும் 28 ம் தேதி தி.மு.க பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து கட்சித் தலைவர்களும் மேடையில் பங்கேற்கும் வகையில் பொதுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது



  • Sep 18, 2024 12:46 IST
    ஜம்மு காஷ்மீர் தேர்தல் - காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குகள் பதிவு

    ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளன



  • Sep 18, 2024 12:41 IST
    இலங்கை கடற்படை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி அபராதம்

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.3.50 கோடி அபராதம் விதித்தது. மேலும் இந்த மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து, இலங்கை நீதிமன்றம் முன்பு தூத்துக்குடி மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்



  • Sep 18, 2024 12:01 IST
    அமெரிக்க வரும் பிரதமர் மோடி அடுத்த வாரம் என்னை சந்திக்க உள்ளார் - ட்ரம்ப்

    அமெரிக்க வரும் பிரதமர் மோடி அடுத்த வாரம் தன்னை சந்திக்க உள்ளார் என்றும் மோடி ஒரு அருமையான மனிதர் என்றும் அமெரிக்காவில் மிஷ்கின் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் 



  • Sep 18, 2024 11:54 IST
    ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்; ஸ்டாலின் கண்டனம்

    எனது சகோதரர் ராகுல் காந்திக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு பலரைத் தெளிவாக அமைதிப்படுத்தியுள்ளது. மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தனது பாட்டிக்கு நேர்ந்த கதியே ராகுல் காந்தி சந்திக்க நேரிடும் என்ற மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Sep 18, 2024 11:39 IST
    சேது விரைவு ரயிலில் இருந்து மூன்று பெட்டிகள் தானாக கழன்றது குறித்து விசாரணை

    ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்பட்ட சேது விரைவு ரயிலில் இருந்து மூன்று பெட்டிகள் தானாக கழன்றது குறித்து திருச்சி ரயில்நிலையத்தில் தெற்கு ரயில்வே விசாரணையை தொடங்கியது. ரயில் பெட்டிகள் தானாக எப்படி பிரிந்து சென்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணி காரணமாக, சுமார் அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டது



  • Sep 18, 2024 11:19 IST
    10வது நாளை எட்டிய சாம்சங் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

    காஞ்சிபுரம் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, CITU தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி தொடங்கிய சாம்சங் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 10வது நாளை எட்டியது



  • Sep 18, 2024 10:56 IST
    பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

    நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்



  • Sep 18, 2024 10:30 IST
    காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

    ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குப்பதிவாகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது



  • Sep 18, 2024 10:03 IST
    புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம்

    புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம்

    தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் ஆகியவை இயங்காத நிலையில், திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன



  • Sep 18, 2024 09:11 IST
    இயக்குனர் மோகன் ஜி வருத்தம்

    விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நடிகர் விஜய், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது வருத்தமாக இருக்கிறது

    - இயக்குனர் மோகன் ஜி     



  • Sep 18, 2024 09:00 IST
    கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Sep 18, 2024 08:16 IST
    ராயப்பேட்டை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்ட ரவுடி பாலாஜி உடல்

    என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் சென்னை ராயப்பேட்டை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

    ராயப்பேட்டை துணை ஆணையர் இளங்கோவன் தலைமையில் ர். 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன



  • Sep 18, 2024 08:04 IST
    மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று போராட்டம்: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை INDIA கூட்டணி சார்பில் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.



  • Sep 18, 2024 08:03 IST
    ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

    யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    இன்று முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



  • Sep 18, 2024 08:03 IST
    சாம்சங் விவகாரம்: இன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆா்ப்பாட்டம்

    சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது



  • Sep 18, 2024 08:02 IST
    திமுக முப்பெரும் விழா: ஏஐ தொழில்நுட்பத்தில் கருணாநிதி உரை

    திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.



  • Sep 18, 2024 08:02 IST
    தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, புதன் முதல் செவ்வாய்க்கிழமை (செப்.18-23) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment