/tamil-ie/media/media_files/uploads/2021/01/rahul-gandhi-1.jpg)
Tamil news today: மூன்று நாள்கள் தேர்தல் பரப்புரைக்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்திருக்கிறார்
கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.நாட்டின் அடித்தளம் வேற்றுமையில் ஒற்றுமை. அனைத்து கலாச்சாரங்கள் மீது மரியாதை, வரலாறுகளை பற்றிய மரியாதை வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் , பி.ஜே.பி போன்றவை ஓரே நாடு, ஓரு மொழி, ஓரே கலாச்சாரம் என்கின்றனர்.இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றார்.
தி.மு.க.வின் அடுத்தகட்ட பிரசாரத்தை எந்த வகையில் முன்னெடுத்து செல்வது? மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? என்பதை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் இல்லத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் அறிவிக்கிறார்.
எனது ஆதரவாளர்கள் விரும்பினால் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ₨88.29-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ₨81.14-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் இன்று அறிமுகம் செய்கிறது.
குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவுடன் நடைமேடைகளில், தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், மொத்தமாக 300 ரயில்வே போலீசார், சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Live Blog
News In Tamil : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
72வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 72-வது குடியரசுத் தின வாழ்த்துக்கலைத் தெரிவித்த "பெருந்தொற்றை முறியடிக்க தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து தரப்பிலும் பாடுபட்ட நல்ல உள்ளங்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். கோவிட்_19 பெருந்தொற்றை முறியடிக்க நாட்டு மக்கள் குடும்பமாக இணைந்து செயல்பட்டனர். நமது விஞ்ஞானிகள் குறுகிய காலத்தில் தடுப்பு மருந்தை கொண்டு வந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்" என தனது குடியரசு உரையில் தெரிவித்தார்.
திருவொற்றியூரில் நடைபெறும் தமிழ் மொழி காக்க இன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் உரை! https://t.co/nAVNLdzc2a
— M.K.Stalin (@mkstalin) January 25, 2021
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். திருவொற்றியூரில் நடைபெற்றுவரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மற்றொரு முறைகேடு!
இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பெரியார் பேருந்து கட்டுமான பணியில் மணலுக்கு பதில் களிமண் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இவ்வித முறைகேடுகள் நடைபெறுவதற்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என மதுரை மத்தி தொகுதி எம். எல். ஏ பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் குறைப்புக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி வருகிறது. தற்போது 13வது வாரத் தவணையாக மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி வழங்கப்பட்டது. இதிலிருந்து 23 மாநிலங்களுக்கு ரூ. 5,516.60 கோடியும், தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்தார் . கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேல் என்பது கடவுளின்
கைப்பொருள் மட்டுமில்லை
இரும்புக் காலத்தில்
மனிதன் கண்டறிந்த
வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்
தமிழர்களின்
ஆதி ஆயுதம் வேல்
அது வேட்டைக்கும் உரியது
வழிபாட்டுக்கும் உரியது
போருக்கும் உரியது
மற்றும்
யாருக்கும் உரியது
என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
The aim of the alliance for the upcoming elections is to stop the RSS ideology from coming into Tamil Nadu.
- Shri @RahulGandhi speaks to the media at Tamil Nadu pic.twitter.com/ppSZmKxK8g
— Congress (@INCIndia) January 25, 2021
ஆர்எஸ்எஸ் சிந்தாந்தங்களை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுப்பதே வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் முக்கிய நோக்கம் என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது..சசிகலாவை, திட்டமிட்டபடி, 27 ஆம் தேதி விடுதலை செய்ய்பபடுவதற்கான பூர்வாங்க பணிகள், நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை குடியரசு தினம் என்பதால் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் அதிகம் இருக்கும் என்பதால் சசிகலாவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இன்றைய தினமே தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தலைமறைவாக உள்ள பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை கைது செய்ய மூன்று வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் உடன் பிரதமர் மோடி உரையாடல். குடியரசு தின அணிவகுப்பு, நமது அரசியலமைப்புக்கு செலுத்தும் மரியாதை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights