Advertisment

Tamil News Today: முதல்வர் ஸ்டாலின் இன்று குடும்பத்தினருடன் கொடைக்கானல் பயணம்

Tamil Nadu News Update Today- 28 April 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

Petrol and Diesel Price சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது: காவல்துறை எச்சரிக்கை

வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது. மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை. நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Apr 28, 2024 21:19 IST
    சங்கரன்கோவில் அருகே கார் விபத்து

     

    சங்கரன் கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் உள்ள ஓடைக்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    காரில் உள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் தீவிரமாக நடந்துவருகின்றன.



  • Apr 28, 2024 20:49 IST
    மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

    “தமிழ்நாட்டுக்கு நீதியும், நிதியும் கிடைத்துள்ளது: பா.ஜனதா கட்சிக்கு தோல்வி பயம் இல்லை” என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு நிதியும், நீதியும் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய நிலையில் தமிழிசை இவ்வாறு பதிலளித்துள்ளார்.



  • Apr 28, 2024 20:48 IST
    கிருஷ்ணகிரியில் பரிதாபம்; கார் மோதிய விபத்தில் 2 கைக் குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு


    கிருஷ்ணகிரி பெரியபணகமுட்லு என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார், இரண்டு பைக்குகள் மீது மோதிய விபத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த 2 கைக் குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கார் டிரைவர் தப்பி ஒடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.



  • Apr 28, 2024 19:37 IST
    ஒடிசாவை காங்கிரஸ் ஆள நேரம் வந்துவிட்டது; ராகுல் காந்தி

    “ஒடிசாவை காங்கிரஸ் ஆளும் நேரம் வந்துவிட்டது. மோடி, நவீன் பட்நாயக், வி.கே. பாண்டியன் ஆகியோர் ஒடிசாவை ஆண்டது போதும்.
    பா.ஜ.கவும், பிஜூ ஜனதா தளமும் ஒருவரையொருவர் திருணம் செய்துள்ளனர்” என ராகுல் காந்தி கூறினார்.



  • Apr 28, 2024 19:32 IST
    அரபிக் கடலில் சிக்கிய பாகிஸ்தான் படகு; ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்

    குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு மேற்கே அரபிக் கடலில் ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் போதைப் பொருள் கொண்டுவரப்பட்ட படகு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த படகு ஆகும்.



  • Apr 28, 2024 17:38 IST
    இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் யார் - அமித்ஷா கேள்வி

    உ.பி.-யில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரை: “நாட்டை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது யார்? ; நாட்டை பாதுகாப்பது யார்? பிரதமர் மோடியால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும். இந்தியா கூட்டணி வென்றால் அதன் பிரதமர் யார்? இந்த நாட்டை யார் வழி நடத்துவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Apr 28, 2024 16:57 IST
    குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 14 பாகிஸ்தானியர்கள் கைது

    குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப் பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு, இணைந்து நடத்திய சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Apr 28, 2024 16:46 IST
    பாலியல் புகார்: தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு

    பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணி எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • Apr 28, 2024 15:37 IST
    மே 1 வரை குமரியில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

    கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மே 1ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Apr 28, 2024 15:36 IST
    முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் மீது பாலியல் வழக்கு

    பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணி எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • Apr 28, 2024 15:07 IST
    5 வயது சிறுவனின் விருப்பதை நிறைவேற்றிய மராட்டிய முதல்வர்

    5 வயது சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அச்சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நெகிழ வைத்தார்.  கோலாப்பூரில் உள்ள அனந்த்புரம் குடியிருப்பு பகுதியில் ரிதன் சார்லா என்ற சிறுவன் தனது 5வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என விருப்பம் விருப்பம் தெரிவித்தான்.

    இந்நிலையில், கோலாப்பூரில் பிரதமர் மோடியின் பேரணியைத் தொடர்ந்து சிறுவன் ரிதனின் பிறந்த நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு சிறுவனுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்வித்தார் குடியிருப்புவாசிகள் முதல்வருடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்



  • Apr 28, 2024 14:24 IST
    மீண்டும் நாகை - இலங்கை இடையே படகு போக்குவரத்து

    மே 13-ந் தேதி முதல் நாகையில் இருந்து மீண்டும் இலங்கைக்கு படகு பயணம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



  • Apr 28, 2024 14:23 IST
    பெட்டியில் வந்த குட்டி!

    அமெரிக்காவில், அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் தவறுதலாக பூனைக்குட்டி வைத்து அனுப்பப்பட்ட நிலையில், 6 நாட்கள், நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் கடந்து, உணவு, தண்ணீர் இன்றியும் பூனை பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது.



  • Apr 28, 2024 14:22 IST
    வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Apr 28, 2024 13:54 IST
    ஊட்டி மலர் கண்காட்சி தேதி மாற்றம்

    ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ந் தேதி தொடங்கி மே 20-ந் தேதி நிறைவடையும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே மே 17ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • Apr 28, 2024 13:50 IST
    விஜயகாந்த்துக்கு பத்ம பூஷண் : பிரேமலதா விஜயகாந்த் தகவல்

    விஜயகாந்திற்கு வரும் 9ஆம் தேதி பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. விருதை பெற நானும், எனது மகன் விஜய பிரபாகரனும் டெல்லி செல்ல உள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.



  • Apr 28, 2024 13:27 IST
    தேவகவுடா பேரன் மீதான பாலியல் வழக்கு: கர்நாடக அரசு அதிரடி

    சிறப்பு தணிக்கை குழு விசாரிக்க உத்தரவு. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கு. வழக்கை சிறப்பு தணிக்கை குழு விசாரிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு. பிரஜ்வல் ரேவன்னா ஜெர்மனி தப்பிச் சென்றுள்ளதாக தகவல். 



  • Apr 28, 2024 12:54 IST
    நம்பர் பிளேட்டுகள் ஒட்டுவதில் கட்டுப்பாடு

    தனிநபர் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள் ஒட்டுவதில் கட்டுப்பாடு

    தனிநபர் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், பிரஸ்,  தலைமைச் செயலகம் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தால் மே 2-ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை. பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்புவதாக தெரிவிப்பு



  • Apr 28, 2024 12:54 IST
    நம்பர் பிளேட்டுகள் ஒட்டுவதில் கட்டுப்பாடு

    தனிநபர் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள் ஒட்டுவதில் கட்டுப்பாடு

    தனிநபர் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், பிரஸ்,  தலைமைச் செயலகம் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தால் மே 2-ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை. பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்புவதாக தெரிவிப்பு



  • Apr 28, 2024 12:32 IST
    திருச்செந்தூர் கோயிலில் அலைமோதும் கூட்டம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசிக்கும் பக்தர்கள். கடலில் புனித நீராடி, பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர். 



  • Apr 28, 2024 12:23 IST
    குகேஷ்க்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய ஸ்டாலின்

    FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ்க்கு ₹75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 



  • Apr 28, 2024 12:23 IST
    குகேஷ்க்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய ஸ்டாலின்

    FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ்க்கு ₹75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 



  • Apr 28, 2024 12:10 IST
    நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்க அறிக்கை

    நீலகிரி: வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி கேமரா ஒளிபரப்பு தடைபட்ட விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார். 

    சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து செயல்பட்டுள்ளன. அதனை ஒளிபரப்பும் டிவி திரைகளில் மட்டுமே கோளாறு ஏற்பட்டுள்ளது என தெரிவிப்பு. 



  • Apr 28, 2024 11:22 IST
    பராமரிப்புப் பணி - குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    சென்னை, நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் 30ம் தேதி பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது மண்டலம் 13, 14, 15க்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 30ம் தேதி நிறுத்தம் மே 1ம் தேதி காலை 9 மணி வரை நிறுத்தப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு.



  • Apr 28, 2024 10:46 IST
    அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா

    டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்தர் சிங் லவ்லி. 



  • Apr 28, 2024 10:12 IST
    ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், மிகக் கடுமையான வெப்ப அலை வீசும்

    ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை'' - இந்திய வானிலை மையம் தகவல்



  • Apr 28, 2024 09:01 IST
    5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் மே2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். 



  • Apr 28, 2024 09:00 IST
    பிரதமர் மோடி இன்று கர்நாடகா பயணம்

    கர்நாடகாவில் வரும் 7ம் தேதி நடைபெறும் 2ம் கட்ட மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் கர்நாடகா பயணம்.



  • Apr 28, 2024 08:59 IST
    29ம் தேதி ரோப்கார் சேவை இல்லை

    பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் 29ம் தேதி ரோப்கார் சேவை இயங்காது என அறிவிப்பு மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு. 



  • Apr 28, 2024 08:02 IST
    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட  மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்  



  • Apr 28, 2024 07:53 IST
    மணிப்பூரில் மறு தேர்தல் அறிவிப்பு

    மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ம் தேதி மறு வக்குப்பதிவு நடைபெறும் என அறவிப்பு. உக்ருல், ஷங்ஷாக், கரோங், ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.

     



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment