/tamil-ie/media/media_files/uploads/2022/11/in-chennai-rain_4-1.jpg)
பிரக்யானந்தாவுக்கு அர்ஜூனா விருது
இளம் செஸ் வீரர் பிரக்யானந்தாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜூனா விருது வழங்கினார்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய ஆட்டம்
நள்ளிரவு 12.30 மணிக்கு, லுஸைல் மைதானத்தில் சவுதி - மெக்சிகோ அணிகள் மோதல். நள்ளிரவு 12.30 மணிக்கு, விளையாட்டரங்கு 974ல் போலந்து - அர்ஜென்டினா அணிகள் மோதல். காலை 8.30 மணிக்கு, அல்-ஜனாப் மைதானத்தில் ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகள் மோதல்.
தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை
டெல்லியில் நடைபெற்ற 65வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி தமிழ்நாடு சார்பாக ஜூனியர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட நிலா தங்க பதக்கம் வென்றார்.
- 22:08 (IST) 30 Nov 2022தவறான பிரசாரங்களால் தன்னை தூக்கி நிறுத்திக் கொள்கிறார் மோடி - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி: தவறான பிரசாரங்களால் தன்னை தூக்கி நிறுத்திக் கொள்கிறார் மோடி. உண்மையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை. உலகப் பொருளாதாரம் வீழ்ந்திருக்கிறதாக சொல்கிறார்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இதுதான் இந்தியாவின் பின்னடைவுக்கு காரணம் என்று கூறினார்.
- 20:55 (IST) 30 Nov 2022டிசம்பர் 1-ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நாளை (டிசம்பர் 1) காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 20:43 (IST) 30 Nov 202218 மாத திமுக ஆட்சியில் செய்தது என்ன? மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
அதிமுக ஆட்சியை குறை கூறும் மு.க. ஸ்டாலின் 18 மாத ஆட்சியில் செய்தது என்ன என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக விவாதத்துக்கு எங்கும் வரத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
- 20:35 (IST) 30 Nov 2022சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ வெள்ளி கட்டிகள் கடத்தல்
சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ வெள்ளி கட்டிகள் கடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 20:17 (IST) 30 Nov 2022திருப்பதியில் ரூ.5 கோடி உண்டியல் வசூல்
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை (நவ.29) ஒரு நாளில் மட்டும் 69 ஆயிரத்து 211 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், ரூ.5 கோடியே 11 லட்சம் உண்டில் வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 20:00 (IST) 30 Nov 2022ஆளுனரை நாளை சந்திக்கிறார் ரகுபதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாளை ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசுகிறார்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.
- 19:48 (IST) 30 Nov 2022குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம்.. அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த வாக்குறுதியை டெல்லியில் அளித்த போது நகையாடினார்கள். ஆனால் செய்து காட்டினோம். பின்னர் இதே வாக்குறுதியை பஞ்சாப்பில் அளித்து வென்று காட்டினோம் என்றார்.
- 19:40 (IST) 30 Nov 2022சமூக நீதிக்கு கண்ணி வெடி... கி. வீரமணி
10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு வேட்டுவைக்கும் கண்ணி வெடி. இதனை தமிழக இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.
இது வேண்டுமென்றாலும் வடக்கில் வெற்றி பெறலாம். நம்மிடம் வெற்றி பெறாது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
- 19:39 (IST) 30 Nov 2022லட்சுமி யானை உடற்கூராய்வுக்குப் பின் நல்லடக்கம்
புதுச்சேரியில், யானை லட்சுமியின் உடற்கூறாய்வு நிறைவடைந்த நிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
- 19:25 (IST) 30 Nov 2022குஜராத்தில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் பிரித்து அனுப்பும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- 18:50 (IST) 30 Nov 2022எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு ரத்து : தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது என்ன?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை பயன்படுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும், நேரடியாக வழக்கு பதியாமல் தாமாக முன்வந்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிந்ததால் வழக்கு ரத்த செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ளது.
மேலும் வழக்கை தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால், அவரை வழக்கில் சேர்க்கலாம் என்று டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 பக்க தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 18:17 (IST) 30 Nov 2022எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி - முதல்வர் ஸ்டாலின்
ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்ஜிஆரின் பங்களிப்பு அதிமுகவை விட, திமுகவில் தான் அதிகம். எம்ஜிஆர் திமுகவில் அதிக காலம் இருந்தவர். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு அனுமதி வழங்கியது கருணாநிதி தான் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.
- 18:15 (IST) 30 Nov 2022எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி - முதல்வர் ஸ்டாலின்
ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்ஜிஆரின் பங்களிப்பு அதிமுகவை விட, திமுகவில் தான் அதிகம். எம்ஜிஆர் திமுகவில் அதிக காலம் இருந்தவர். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு அனுமதி வழங்கியது கருணாநிதி தான் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.
- 17:48 (IST) 30 Nov 2022ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து நாளை ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை காலை 11 மணிக்கு சந்திக்கிறார் இந்த சந்திப்பின்போது ரம்மி தடை சட்டம் திறத்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 17:45 (IST) 30 Nov 2022ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த முதல்வர், ஜானகி எம்.ஜி.ஆர் சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகடை வெளியிட்டார். பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் என்ற நூலையும் வெளியிட்டார்
- 17:44 (IST) 30 Nov 2022பள்ளி மாணவர்கள் பைகளில் ஆணறை, கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிப்பு
கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் பைகளில் செல்போன் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே 8,9,10 வகுப்பு மாணவர்கள் பையை சோதனை செய்தபோது அதில் மாணவர்கள் பையில் ஆணுறையும், மாணவிகள் பைகளில் கருத்தடை மாத்திரையும் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 17:25 (IST) 30 Nov 2022யானை லட்சுமி உடல் நல்லடக்கம்
புதுசசேரியில் மணகுள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று திடீரென மரணமடைந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், லட்சுமியின் உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாத மக்கள் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.
- 16:55 (IST) 30 Nov 2022பிரக்யானந்தாவுக்கு அர்ஜூனா விருது
இளம் செஸ் வீரர் பிரக்யானந்தாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜூனா விருது வழங்கினார்.
- 16:36 (IST) 30 Nov 2022சாகும் வரை சிறை
விழுப்புரத்தில் கடந்த 2019ம் ஆண்டு 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கவிதாஸ்(26) என்பவரை சாகும் வரை சிறையில் அடைக்க, விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 15:41 (IST) 30 Nov 2022வீராங்கனை பிரியா மரண விவகாரம்
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 2 மருத்துவர்களிடம் டிச. 6ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
- 15:02 (IST) 30 Nov 2022டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி வேலுமணி விடுவிப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அதேநேரம் சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி டீக்காராமன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- 14:38 (IST) 30 Nov 2022தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்; சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக சங்கர் நியமனம்
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில், புதிய ஏடிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்
- 14:27 (IST) 30 Nov 2022ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசு வழங்கினார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்
1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுப் பரிசை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்
- 14:03 (IST) 30 Nov 2022ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முடக்க பார்க்கின்றனர் - டிடிவி தினகரன்
அம்மா உணவகம் ஏழை, எளிய மக்கள், முதியவர்கள் பயன்பெற கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முடக்க பார்க்கின்றனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
- 13:54 (IST) 30 Nov 2022கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை ஒரு மாதத்துக்கு திறக்க ஐகோர்ட் அனுமதி
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் டிசம்பர் 5 முதல் ஒரு மாதத்துக்கு திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
- 13:40 (IST) 30 Nov 2022டி.பி.ஐ வளாகத்தில் அன்பழகன் உருவ சிலை நிறுவப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்தில் அன்பழகன் உருவ சிலை நிறுவப்படும் என பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
- 13:26 (IST) 30 Nov 2022பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்பதை ஏற்க முடியாது – பீட்டா
தமிழகத்தின் பாரம்பரிய காளைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிராக இல்லை, பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டு கலாசார வேரை கொண்டிருக்கவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என பீட்டா தெரிவித்துள்ளது
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை தமிழகம் இயற்றியிருப்பது உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. தமிழக அரசின் சட்டம் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பழைய மொந்தையில் புதிய கள்ளாக உள்ளது என்றும் பீட்டா தெரிவித்துள்ளது
- 12:54 (IST) 30 Nov 20225 நாட்களுக்கு மழை
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
- 12:54 (IST) 30 Nov 2022தமிழகத்தை சேர்ந்த 32 பேர் ஆந்திராவில் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேர் கைது
ரகசிய தகவலை அடுத்து ரேணிகுண்டா அருகே 10 கி.மீ. தூரம் லாரியை விரட்டிச் சென்று மடக்கி பிடித்த போலீசார்
திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைது
- 12:34 (IST) 30 Nov 20221,000 புதிய பேருந்துகள் - ரூ.420 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
- 12:33 (IST) 30 Nov 2022தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது - இ.பி.எஸ்
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. உண்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது தான் முதல்வரின் கடமை
எதிர்க்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் - ஈபிஎஸ்
சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
- 12:07 (IST) 30 Nov 2022உண்மையை கூற சுவாதிக்கு நீதிமன்றம் அவகாசம்
கோகுல்ராஜ் கொலை வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு
உண்மையை கூற சுவாதிக்கு வாய்ப்பளிக்க இரண்டு வாரம் அளிக்கப்படுகிறது - நீதிமன்றம்
சுவாதி பொய்யான சாட்சியம் அளித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- 12:06 (IST) 30 Nov 2022சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மீண்டும் எச்சரிக்கை
- 12:06 (IST) 30 Nov 2022லட்சுமி யானைக்கு பொதுமக்கள் அஞ்சலி
உயிரிழந்த புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி.
ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து யானைக்கு அஞ்சலி. மலர் தூவியும், மாலை அணிவித்தும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வரும் பக்தர்கள்
- 12:05 (IST) 30 Nov 2022குடிநீர் குழாயை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய்
கடலூர் அருகே குடிநீர் குழாயை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் போடப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பு
- 12:04 (IST) 30 Nov 2022வன்கொடுமைகளுக்கு எதிரான இயக்கத்திற்கு அழைப்பு
வன்கொடுமைகளுக்கு எதிரான இயக்கத்தில் கைகோர்க்க சென்னை மக்களுக்கு அழைப்பு
கைகளை உயர்த்தி வேண்டாம் என்பது போல் புகைப்படம் பதிவிட்டு மாநகராட்சி சார்பாக அழைப்பு
மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு
- 11:17 (IST) 30 Nov 2022சென்னையில் 96 வெளிநாட்டவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை: கடந்த 2 வருடங்களில் 96 வெளிநாட்டவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் - காவல்துறை
424 பிற மாநிலத்தவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக சென்னை காவல்துறை தகவல்
- 10:59 (IST) 30 Nov 2022ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது
யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வார் யானை லட்சுமி யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
- 10:57 (IST) 30 Nov 2022மீனவர்கள் அச்சம்
மரக்காணத்தில் கரையில் இருந்து 100 அடி வரை கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் எப்போதும் சீற்றத்துடன் காணப்படும் கடல் தற்போது அமைதியாக காட்சி அளித்து வருகிறது கடல் உள்வாங்கியதால் 19 மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
- 10:57 (IST) 30 Nov 2022குளிக்க தடை
தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- 10:57 (IST) 30 Nov 2022பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சி சுவாதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வருகை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்
- 10:56 (IST) 30 Nov 2022மலர்தூவி அஞ்சலி
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி அஞ்சலி
- 10:55 (IST) 30 Nov 2022பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை
பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை தமிழகத்தில் தான் உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
- 10:55 (IST) 30 Nov 2022சென்னை காவல்துறை தகவல்
சென்னையில் கடந்த 2 வருடங்களில் 96 வெளிநாட்டவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் 424 பிற மாநிலத்தவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக சென்னை காவல்துறை தகவல்
- 10:54 (IST) 30 Nov 2022சென்னை காவல்துறை தகவல்
சென்னையில் கடந்த 2 வருடங்களில் 96 வெளிநாட்டவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் 424 பிற மாநிலத்தவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக சென்னை காவல்துறை தகவல்
- 10:08 (IST) 30 Nov 2022திருப்பதியில் திருமலா விரைவு ரயிலில் தீ விபத்து
திருப்பதியில் திருமலா விரைவு ரயிலில் தீ விபத்து. பயணிகள் இன்றி திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து என தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.