/indian-express-tamil/media/media_files/2025/09/11/thirumavalavan-3-2025-09-11-14-28-25.png)
Today Latest Live News Update in Tamil 11 September 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
- Sep 11, 2025 14:25 IST
அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங்களுக்கு பா.ஜ.க-தான் காரணம் - திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி: “அ.தி.மு.க சுதந்திரமாக செயல்படவில்லை, அ.தி.மு.க தலைவர்களும் சுதந்திரமாக இயங்கமுடியவில்லை. அ.தி.மு.க மீது வி.சி.க-வுக்கு எந்த காழ்ப்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடும் இந்த கருத்தை நான் சொல்லவில்லை. அ.தி.மு.க-விலே ஒரு குழப்பம் நிலவுகிறது என்றால் அதற்கு யார் காரணம் என்றால் பா.ஜ.க-தான் காரணம் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சசிகலா செயல்பட முடியாமல் முடக்கப்பட்டதற்கு யார் காரணம்? ஓ.பி.எஸ் தனிமைப்பட்டு நிற்பதற்கு யார் காரணம்? டி.டி.வி தினகரன் தனிக்கட்சி தொடங்கி தனித்து இயங்குவதற்கு யார் காரணம், செங்கோட்டையன் அ.தி.மு.க தலைமைக்கு எதிராகப் பேசும் அளவுக்கு உருவாக்கியது யார்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே பதில் பா.ஜ.க.தான்.” என்று கூறினார்.
- Sep 11, 2025 14:15 IST
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமினை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்திக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமினை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதல் தொடர்பாக பெண் வீட்டாரும், இளைஞர் வீட்டாரும் சமரசத்தை எட்டியுள்ளதாக ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.
- Sep 11, 2025 13:48 IST
டெல்லியில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை - டி.டி.வி. தினகரன்
டெல்லியில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி தினகரன், “டெல்லியில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை” என்று கூறினார்.
- Sep 11, 2025 13:35 IST
எல்லா அதிகாரமும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது - பா.ம.க பொதுச் செயலாளர் முரளி சங்கர்
டாக்டர் ராமதாஸ் தரப்பு பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் தைலாபுரத்தில் பேட்டி: “வழக்கறிஞர் பாலு தவறான தகவல்களைப் பொதுமக்களிடம் பரப்பி வருகின்றார். டாக்டர் ராமசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் பாலுவை வன்மையாக கண்டிக்கிறோம். எச்சரிக்கிறோம். கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளோம். டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி அடுத்தகட்ட முடிவு எடுப்போம்” என்று கூறினார்.
- Sep 11, 2025 13:02 IST
கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு நடைபெறும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், முதலீட்டு வாய்ப்புகளையும் இந்த மாநாடு வழங்கும் என்றும் அவர் கூறினார். - Sep 11, 2025 12:56 IST
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு - சுப்ரீம் கோர்ட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்.14ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக போட்டிக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
- Sep 11, 2025 12:54 IST
‘இதைவிட முக்கிய வேலை இருக்கிறது’; பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அன்புமணி பதில்
பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அன்புமணி பதில் அளிக்கையில், “எல்லா கேள்விகளுக்கும் வழக்கறிஞர் பாலு பதிலளிப்பார். இதை விட முக்கியமான வேலை எனக்கு இருக்கிறது” என்று கூறினார்.
- Sep 11, 2025 12:52 IST
அபராதம் செலுத்தினால்தான் வாகன இன்சூரன்ஸ் புதுப்பிப்பு - காவல்துறை புதிய திட்டம்
அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே வாகனங்களின் இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்று விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அபராதம் செலுத்தினால் மட்டுமே வாகனத்தை விற்கவோ, பெயர் மாற்றமோ செய்ய முடியும் என்பது பழைய நடைமுறை ஆகும்.
- Sep 11, 2025 12:44 IST
பா.ம.க விதிகளின்படி நிறுவனருக்கு, நிர்வாகத்தில் அதிகாரம் இல்லை - வழக்கறிஞர் பாலு
சென்னையில் அன்புமணியின் ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு பேட்டி: “பா.ம.க விதிகளின்படி நிறுவனருக்கு, நிர்வாகத்தில் அதிகாரம் இல்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸின் எந்த அறிவிப்பும் அன்புமணியைக் கட்டுப்படுத்தாது” என்று கூறியுள்ளார்.
- Sep 11, 2025 12:15 IST
பா.ம.க-வில் இருந்து நீக்கம்: அன்புமணி ராமதாஸ் அவசர ஆலோசனை
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் உள்ள பா.ம.க. நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ராமதாஸின் இந்த அதிரடி அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Sep 11, 2025 11:47 IST
இமானுவேல் சேகரன் நினைவு நாளில், அந்த தியாகியின் நினைவைப் போற்றி வணங்குவோம் – ஸ்டாலின் புகழாரம்
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்! அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!
— M.K.Stalin (@mkstalin) September 11, 2025
அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப்… pic.twitter.com/7FqZFab54u - Sep 11, 2025 11:45 IST
ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் உறுதிமொழி ஏற்கும் - ஸ்டாலின்
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக உறுதிமொழி ஏற்க உள்ளனர் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#ஓரணியில்_தமிழ்நாடு
— M.K.Stalin (@mkstalin) September 11, 2025
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது #OraniyilTamilNadu இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக… pic.twitter.com/41tiAbSuME - Sep 11, 2025 11:36 IST
அன்புமணி பேசுவது எல்லாம் பொய், என்னையே உளவு பார்த்தவர் - ராமதாஸ்
அன்புமணி பேசுவது எல்லாம் பொய், என்னையே உளவு பார்த்தவர் அன்புமணி. யாரை, யார் வேவு பார்ப்பது, வேவு பார்க்க என்ன உள்ளது. மகனின் செயல், தந்தையின் செயலைவிட உயர்ந்து இருக்க கூடாது. இரா. என்ற இன்சியலை மட்டும் அன்புமணி போட்டுக் கொள்ளலாம். அன்புமணியால் பா.ம.க அழிகிறதே என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தான் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அன்புமணி கட்டுப்பாடுகள் விதிப்பதா? நானே தலைவர், எனக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது. அன்புமணியுடன் உள்ளவர்கள் தவறை உணர்ந்தால் மன்னிக்க தயாராக இருக்கிறேன். அன்புமணி அறிவான பிள்ளைதான், தற்போது சரியில்லை. இது குடும்பம், தந்தை, மகன் சம்பந்தப்பட்டது அல்ல, கட்சி தொடர்புடையது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
- Sep 11, 2025 11:22 IST
அன்புமணி நீக்கம் பா.ம.க.,வுக்கு பின்னடைவு இல்லை – ராமதாஸ்
அன்புமணி நீக்கப்பட்டது கட்சிக்கு பின்னடைவு இல்லை. இறுதி மூச்சுவரை கோலூன்றியாவது மக்களுக்காக பாடுபடுவேன். செயல் தலைவர் பதவியை யாருக்கு கொடுப்பது என பின்னர் முடிவு செய்யப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
- Sep 11, 2025 11:02 IST
அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் - ராமதாஸ்
தேவைப்பட்டால் அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சி இந்த பா.ம.க. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. மகனாகவே இருந்தாலும் இந்தக் கட்சியை உரிமைக் கொண்டாட உரிமையில்லை. ஒரு பயிரிட்டால் களை முளைக்கத்தான் செய்யும். அதற்காக யாரும் பயிரிடாமல் இல்லை. களையை நீக்கி விட்டோம். குந்தகம் விளைப்பிப்போரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- Sep 11, 2025 11:01 IST
நிர்வாகிகளை மன்னிக்கத் தயார் - ராமதாஸ்
அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும், அவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன். அன்புமணியோடு இருந்தால் பலன் கிடைக்கும் என்று அவர்கள் அங்கு இருந்திருக்கலாம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- Sep 11, 2025 10:48 IST
பா.ம.க நிர்வாகிகள் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது - ராமதாஸ்
பா.ம.க அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி தொடர்பு வைத்தால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- Sep 11, 2025 10:35 IST
பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க.,வில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- Sep 11, 2025 10:14 IST
சார்லி கிர்க் படுகொலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் தண்டிப்பேன் - டிரம்ப் ஆவேசம்
சார்லி கிர்க் மீதான துப்பாக்கிச்சூடு அரசியல் படுகொலை, அமெரிக்காவிற்கு இருண்ட தருணம். சார்லி கிர்க் படுகொலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு தண்டிப்பேன் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்
- Sep 11, 2025 10:13 IST
சார்லி கிர்க் கொலை - பராக் ஒபாமா கண்டனம்
சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை யார் தூண்டியது என்பது எங்களுக்கு தெரியவில்லை. இழிவான வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை சார்லியின் குடும்பத்தினருக்காகவும், அவரது மனைவி மற்றும் 2 இளம் குழந்தைகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்
- Sep 11, 2025 09:58 IST
மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் பெயர்: சீமான்
"மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். அதுதான் எங்களுக்கும் பெருமை, நாடகத்தின் நிலைப்பாடும் இதுதான்."
விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் இவ்வாறு பதிலளித்தார்
- Sep 11, 2025 09:32 IST
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையைச் செலுத்தினால் தான் இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும்: காவல்துறை
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையைச் செலுத்தினால் தான், இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டுவந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவைத் தொகை சுமார் 300 கோடி ரூபாய் வரை செலுத்தப்படாமல் உள்ளதால், நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, கம்பி வலை கொண்டு வாகனங்களை நிறுத்தி சென்னை மாநகரக் காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
- Sep 11, 2025 09:24 IST
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
டெல்லியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது
- Sep 11, 2025 09:15 IST
ஆசிய கோப்பை - இன்று வங்கதேசம், ஹாங்காங் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் : அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேசம் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
- Sep 11, 2025 08:58 IST
தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
அரசு ஊழியர்கள் அனைவரும் இன்று கட்டாயம் பணிக்கு வரவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
- Sep 11, 2025 08:54 IST
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். முதலில், இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமை வாரணாசியில் சந்தித்துப் பேசுகிறார். அதன் பின்னர், இன்று மாலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார்.
- Sep 11, 2025 08:52 IST
மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை.. செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எனக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்.
- டெல்லி செல்லும் முன் மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
- Sep 11, 2025 08:25 IST
மு.க. ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி பயணம்
மு.க. ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஓசூரில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமையவிருக்கும் புதிய நிறுவனத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
- Sep 11, 2025 08:18 IST
நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு பயணம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு செல்கிறார். நயினார் மீது டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த பயணம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
- Sep 11, 2025 08:17 IST
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- Sep 11, 2025 08:14 IST
அதிகாரத்தில் முன்னாள் நீதிபதி
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, இடைக்கால அரசை வழிநடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தேர்வு செய்யப்பட்டார். போராட்டக் குழுவினருடன் ராணுவம் தரப்பில் ஆன்லைன் மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- Sep 11, 2025 07:42 IST
நீலகிரி வியாபாரிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்
நீலகிரி: ஊருக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து கூடலூர் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- Sep 11, 2025 07:41 IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
- Sep 11, 2025 07:40 IST
சபரீசனின் தந்தை காலமானார்
மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நலக் குறைவால் நள்ளிரவு காலமானார். சென்னை ஒ.எம்.ஆர்-இல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரது உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலணியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- Sep 11, 2025 07:40 IST
ஒசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு
ஓசூரில் இன்று நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.