Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. 2,327 பணியிடங்களுக்கு 7.90 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 2,763 மையங்களும், சென்னையில் மட்டும் 251 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
-
Sep 13, 2024 21:19 ISTநான் இந்த பதவியில் இருக்க காரணம் இதுதான் - துரைமுருகன் விளக்கம்
அமைச்சர் துரைமுருகன் பேட்டி: “நான் இந்த பதவியில் இருக்க காரணம் கட்சியில் ஆடாமல் அசையாமல் இருந்ததால்தான். முதல்வராகி கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் கலைஞர் கருணாநிதி தேசிய அரசியலில் கவனம் பெற்றார். முதல்வர் ஸ்டாலினோ தேர்வான உடனேயே தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார்.” என்று கூறினார்.
-
Sep 13, 2024 20:24 IST`பாராலிம்பிக்ஸ் 2024'-ல் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன்; நேரில் அழைத்து உதயநிதி பாராட்டு
`பாராலிம்பிக்ஸ் - 2024'-ல் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்த மாற்றுத்திறன் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
-
Sep 13, 2024 20:13 ISTவீடியோ பதிவிற்குத்தான் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார் - கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார்
வீடியோவை வெளியிட்டதற்குதான் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார்; அன்னபூர்ணா சீனிவாசன் நிர்மலவிடம் மன்னிப்பு கேட்டதற்கு அண்ணாமலை வருந்தவில்லை; அன்னபூர்ணா உணவக உரிமையாளர் பேசும் வீடியோவிலேயே அவர் மிரட்டப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது என்று கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
-
Sep 13, 2024 19:34 ISTநெடுஞ்சாலையில் தமிழ்நாடு நம்பர் 1 - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
ஞ்சையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி: “தேசிய நெடுஞ்சாலையில் நாட்டில் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது; தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அமெரிக்காவில் உள்ளதுபோல் சாலைக் கட்டுமானத்தின் தரத்தைக் கொண்டுவருவோம்” என்று கூறினார்.
-
Sep 13, 2024 19:03 ISTஅன்னபூர்ணா விவகாரம் - ஹெச்.ராஜா பேட்டி
"பாஜகவிற்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அப்பாத்தாவுக்கு வரி, அம்பானிக்கு வரி இல்லை என திட்டமிட்டு பரப்புகிறார்கள். ராகுல் காந்தி, அமெரிக்காவில் யாருடன் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாடு கடத்த வேண்டுமென டிரம்பே கூறும் ஒருவரை ராகுல் சந்திக்கிறார்" என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
-
Sep 13, 2024 18:40 ISTசிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.
-
Sep 13, 2024 18:22 ISTஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு
வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி செப்டம்பர் 30 ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரியசாமி தொடர்ந்து ஆஜராகவில்லை என்பதால் குற்றச்சாட்டுப் பதிவை 9வது முறையாக ஒத்திவைத்தது எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம்.
-
Sep 13, 2024 18:18 ISTஅன்னபூர்ணா ஓனர் விவகாரம்: "பாசிசத்தின் உச்சம்" - ஜெயக்குமார் கடும் சாடல்
கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்.
மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை; தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்னைகளை கோரிக்கையாக முன் வைத்தார். அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
-
Sep 13, 2024 18:15 ISTகோவை மாநகராட்சி கூட்டத்தில் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம்
கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலாவின் செயல்பாட்டை கண்டிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் கூறியுள்ளார். காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் பேசியதற்கு சக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்
-
Sep 13, 2024 18:07 ISTஆந்திராவில் சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பலியாககியுள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மொகிலி மலை பாதையில் பேருந்து மற்றும் 2 லாரிகள் மோதிக் கொண்டன. பலமனேரில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற ஆந்திர அரசு பேருந்தின் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது. பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டபோது, அவ்வழியாக வந்த மற்றொரு லாரியும் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்தவர்கள் சித்தூர், பலமனேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
Sep 13, 2024 18:06 ISTஅந்தமான் தலைநகர் பெயர் மாற்றம் - அமித்ஷா அறிவிப்பு
அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது. நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு" என்று அவர் கூறியுள்ளார்.
-
Sep 13, 2024 17:49 ISTகார் மோதி பேருந்து நிலையத்தில் இருந்த 3 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த பாலப்பம்பட்டியில் கார் மோதி, பேருந்து நிலையத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மோகன்ராஜ் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜகோபால், ரங்கசாமி என்பவர்கள் உயிரிழந்தனர்.
-
Sep 13, 2024 17:32 ISTஜாமினில் விடுதலையாகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம்
6 மாதங்கள் சிறைவாசத்திற்கு பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாகிறார். கொட்டும் மழைக்கு நடுவே பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேள தாளங்களுடன் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம்
-
Sep 13, 2024 17:09 ISTதூய்மை பணியாளர்களுக்கு விருந்து: அமைச்சர் உதயநிதியின் நெகிழ்ச்சி செயல்
ஃபார்முலா 4 பந்தயத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருந்தளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் உணவு உண்ட சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Sep 13, 2024 16:34 ISTசரிவுடன் நிறைவடைந்த பங்கு வர்த்தகம்
வர்த்தக நேர நிறைவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 135 புள்ளிகள் குறைந்து 82,826 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36 புள்ளிகள் குறைந்து 25,352 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால், பங்கு வர்த்தகம் இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
-
Sep 13, 2024 16:33 IST'ரேஸ்-ஐ விமர்சித்தவர்களே காண டிக்கெட் கேட்டார்கள்' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
“கார் பந்தயத்தை விமர்சித்தவர்களே, பிறகு ரேஸ்-ஐ காண டிக்கெட் கேட்டார்கள், அந்த அளவிற்கு பந்தயத்தை மிகச் சிறப்பான முறையில் நடத்தி முடித்தோம். சாலையில் ஒரு பக்கம் போக்குவரத்தும், மறு பக்கம் கார் பந்தயமும் நடைபெறுவதைப் பார்த்து விமர்சிக்க நினைத்தவர்கள் கூட பாராட்டினார்கள்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Sep 13, 2024 16:32 ISTஓணம் பண்டிகை - சிறப்பு ரயில் இயக்கம்
வரும் 16ம் தேதி பிற்பகல் 12.50க்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். செப். 17, பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.50க்கு கொச்சுவேலி சென்றடையும். ஓணம் பண்டிகையை ஒட்டி, கொச்சுவேலி - சென்னை - கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம் எனத் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
Sep 13, 2024 15:17 ISTநிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் அனுபவத்தின் மூலம், பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அருவருப்பானதும் கூட. தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கூறியுள்ளார்.
-
Sep 13, 2024 15:10 ISTபாஜக காரர்கள் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள்: வி.சி.க எம்.பி எம்.பி ரவிக்குமார்
"அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜக காரர்கள் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
-
Sep 13, 2024 14:34 ISTதமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி: ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு
சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் ஏற்றுமதிக்கான கார் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும், ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருந்தார்.
-
Sep 13, 2024 14:31 ISTடி.என்.பி.எஸ்.சி குருப் 2 தேர்வு: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குருப் 2 தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 14) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 13, 2024 13:51 ISTஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவிப்பு
ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தை தமிழகத்திற்கு மீண்டும் கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஃபோர்டு உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைய முயற்சிகளை தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, 2021ல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது
-
Sep 13, 2024 13:42 ISTதமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Sep 13, 2024 13:14 IST’வணங்கான்’ தலைப்பு விவகாரம்; ஐகோர்ட் முக்கிய உத்தரவு
”வணங்கான்" தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Sep 13, 2024 13:00 ISTபாண்டி மெரினா கடற்கரை பொழுதுபோக்கு மைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு
வம்பாகீரபாளையத்தில் பாண்டி மெரினா கடற்கரை பொழுதுபோக்கு மைய விரிவாக்கத்திற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் சதுப்பு நில காடுகளை அழிக்க கூடாது என சோனம் பாளையம் 4 முனை சந்திப்பில் 3,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது
-
Sep 13, 2024 12:44 ISTநிர்மலா சீதாராமனிடம் உணவக உரிமையாளர் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோரினார் - வானதி சீனிவாசன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவக உரிமையாளர் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோரினார். நாங்கள் மிரட்டி அழைத்து வந்தோம் என்பதில் உண்மை இல்லை. யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமில்லை. ஹோட்டல் நிர்வாகத்தை பா.ஜ.க தரப்பில் இருந்து மிரட்டவில்லை. ஜி.எஸ்.டி.யால் நாடே பாதிக்கப்பட்டது போல் உணவக உரிமையாளர் பேசிய வீடியோ வைரலானது. ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர் பதில் அளித்தார் என கோவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
-
Sep 13, 2024 12:30 ISTசென்னையின் சில பகுதிகளில் மின் தடை ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னையில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில், இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்
-
Sep 13, 2024 12:05 ISTநிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி
கோவை அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார்; ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது. வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம், பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை; ஆனால் அதை செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து ,அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவெறுப்பானதும் கூட.
அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? தமிழ்நாட்டில்,கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும். அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும்; அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள்; மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Sep 13, 2024 11:40 ISTஅம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி
அம்மா உணவகத்தை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.21 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. 200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
-
Sep 13, 2024 11:28 ISTஅதிமுக வெற்றிபெற்றால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றிபெற்றால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும் - முன்னாள் எம்.பி. மைத்ரேயன்
-
Sep 13, 2024 10:56 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
-
Sep 13, 2024 10:33 ISTதமிழ்நாடு அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாக, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் செப்.24-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
இபிஎஸ் அறிவிப்பு
-
Sep 13, 2024 10:25 ISTஸ்டாலின் அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள்
மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக குழு, அமெரிக்காவில் மேற்கொண்ட பயணம் அற்புதமான நாட்கள். அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் ஆயிரக்கணக்கான கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளார். ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்க பயணம் இன்றுடன் முடிவடைந்தாலும், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இது ஆரம்பம் மட்டுமே!
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ட்வீட்
-
Sep 13, 2024 09:53 ISTதங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து 54,600 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து 6,825 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.91.50க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.95ஆக அதிகரித்துள்ளது
-
Sep 13, 2024 09:04 ISTகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்குவங்க கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Sep 13, 2024 08:49 IST75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்: ஸ்டாலின்
75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்!
— M.K.Stalin (@mkstalin) September 13, 2024
‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், ‘தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது’ என்ற தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது!… pic.twitter.com/2B2g1ccHfy -
Sep 13, 2024 08:22 ISTபத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
சாமோலி, உத்தரகாண்ட்: நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கமேடா, நந்த்பிரயாக் மற்றும் சின்கா ஆகிய இடங்களில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
(வீடியோ ஆதாரம்: சாமோலி போலீஸ்)
#WATCH | Chamoli, Uttarakhand: The Badrinath National Highway is blocked at Kameda, Nandprayag and Chhinka due to landside.
— ANI (@ANI) September 13, 2024
(Video Source: Chamoli Police) pic.twitter.com/iUwJEZ9Zjb -
Sep 13, 2024 07:46 ISTமகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் ஆய்வு
ஆன்மிக பேச்சாளர் மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூரில் உள்ள மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் நேற்று போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்று அவரை மீண்டும் சென்னை அழைத்து வருகின்றனர்.
-
Sep 13, 2024 07:34 ISTஅமெரிக்காவில் இருந்து நாளை சென்னை திரும்புகிறார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த மு.க.ஸ்டாலின், உலகின் முன்னனி நிறுவன உயர் அலுவலர்களை சந்தித்து பேசி ரூ.7,516 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு , சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
Goodbye, USA! pic.twitter.com/iCrayPZfT2
— M.K.Stalin (@mkstalin) September 13, 2024 -
Sep 13, 2024 07:34 ISTகுன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை உயிரிழப்பு
குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலெட்சுமி (54) உயிரிழந்தது. நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் யானைக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.