Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியானது.
அதன்படி, 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப். 20-ஆம் தேதி தொடங்கி செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்.19 முதல் செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 09, 2024 21:34 ISTதேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் - உதயநிதி உறுதி
தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் உறுதியாகக் கூறினார்.
-
Sep 09, 2024 21:32 ISTவீடுகளின் முன்பு No Parking போர்டு, தடுப்புகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை - ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி No Parking போர்டு அல்லது தடுப்புகள் வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிட காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
-
Sep 09, 2024 21:29 ISTசர்ச்சை சொற்பொழிவு: பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியைக்கு நாளை வரை கெடு - பள்ளிக்கல்வி இயக்குநர்
சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விவகாரத்தில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி நாளைக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
-
Sep 09, 2024 21:25 ISTசர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கு சிக்கல்: சைதாப்பேட்டை காவல் நிலையம் கோர்ட்டில் மனு
மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் மகாவிஷ்ணுவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Sep 09, 2024 21:20 ISTதாய்நாட்டை இழிவுபடுத்தியுள்ளார் ராகுல் காந்தி - அண்ணாமலை விமர்சனம்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “அன்னிய மண்ணில் இருந்து தாய்நாட்டை ராகுல் காந்தி இழிவுபடுத்தி உள்ளார்; இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா அல்லது காங்கிரஸா? ராகுலின் பாட்டி இந்திரா காந்தி காலத்தில் முதல் தேசிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமாக இருந்தது; 2022 தேசிய கல்விக் கொள்கைதான் முதல் முறையாக தாய்மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 09, 2024 20:10 ISTபுற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு - நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: “புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மருத்துவ சுகாதாரக் காப்பீட்டு வரி விகிதம் குறைப்பது குறித்து அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 09, 2024 20:08 ISTசர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அசோக் நகர் பள்ளியில் விசாரணை
சர்ச்சை சொற்பொழிவு குறித்து அசோக் நகர் பள்ளியில் விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பேட்டி: “அசோக் நகர் சர்ச்சை சொற்பொழிவு தொடர்பாக 2-3 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது; அசோக் நகர் சைதாப்பேட்டை பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு பற்றி விசாரணை அறிக்கை தரப்படும்” என்று கூறினார். -
Sep 09, 2024 19:26 IST2025 பொங்கள் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப். 12-ம் தேதி தொடங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
2025 பொங்கள் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது; ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 12-ம் தேதியும் ஜனவரி 11-ம் தேதிக்கு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜனவரி 12-ம் தேதிக்கு செப்டம்பர் 14, ஜனவரி 13-ம் தேதிக்கு செப்டம்பர் 15-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Sep 09, 2024 19:22 ISTதமிழகத்தில் ஹெச்.பி கணினி தயாரிப்பு ஆலை அமைக்க ஒப்பந்தம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தமிழகத்தில் ஹெச்.பி கணினி தயாரிப்பு ஆலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது; சென்னை ஒரகடத்தில் அமையும் வேலையால் தொடக்கத்தில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
Sep 09, 2024 18:44 ISTஇந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இளைஞருக்கு ‘எம் பாக்ஸ்’ என்கிற குரங்கம்மை தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade 2 வகை தொற்று இருப்பதால் அச்சம் கொள்ளத்தேவையில்லை Clade 1 வகை எம் பாக்ஸ் மட்டுமே ஆபத்தானது என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
Sep 09, 2024 17:17 ISTசரக்கு ரயில் என்ஜின் மூலம் இழுத்து வரப்பட்ட வந்தே பாரத் ரயில்
டெல்லி-ஹவுரா தடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில் சரக்கு ரயில் என்ஜின் மூலம் இழுத்து வரப்பட்டது, சுமார் 4 மணிநேரம் போராடியும் கோளாறை சரி செய்ய முடியாத சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Sep 09, 2024 17:16 ISTபுதிய கல்வி கொள்கை: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை
அரசியல் ஆதாயத்தை தவிர்த்து விட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Sep 09, 2024 17:14 ISTகார்டு பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகிய டிஜிட்டல் சேவைகளில் ரூ2000க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு நிறுவனங்கள் விதிக்கும் கேட்வே பீஸ் (GATEWAY FEES)க்கு 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது பற்றி மேலும் ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
Sep 09, 2024 17:08 ISTநடிகர் சங்க கட்டித்திற்கு ஒரு கோடி நிதி: அமைச்சர் உயநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு சொந்த நிதியாக ரூ1 கோடி வழங்கதுடன், நண்பர்கள் மூலம் ரூ5 கோடி நிதி திரட்டி கொடுத்து வங்கியில் டெப்பாசிட் செய்ய பரிந்துரை செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, நேற்று நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
Sep 09, 2024 16:23 ISTமாவட்டம் தோறும் முதியோர் இல்லம்: உயர்நீதிமன்றம் மதுரை கிளை பரிந்துரை
மாநிலத்தின் பல கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் படி மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இத்தகைய இல்லங்கள் நடத்தப்படுவது விதிமீறும் செயல் என நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரிய கெளரி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
-
Sep 09, 2024 16:21 ISTமாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு: தலைமை ஆசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட்
மாணவர்கள் சேர்க்கையை முறைகேடாக தயாரித்த புகாரில் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் வட்டார கல்வி அதிகாரி மேரி சோஸ்பைன் மற்றும் பம்மாத்துகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லதா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
-
Sep 09, 2024 16:20 ISTமீன் கழிவு நீரை திறந்துவிட்ட லாரி டிரைவரை சிறை பிடித்த கிராம மக்கள்
கோவை: பொள்ளாச்சி - உடுமலை சாலையில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் லாரியில் இருந்து மீன் கழிவு நீரை திறந்து விட்ட லாரி டிரைவரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்ட லாரியை கைப்பற்றி ஓட்டுநர் அசோக்கை காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் விசாரணை. ஊராட்சி நிர்வாகம் மூலம் ₹50,000 அபராதம் விதிக்க நடவடிக்கை
-
Sep 09, 2024 15:30 ISTகிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை விவகாரம்: தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
Sep 09, 2024 15:28 ISTபோலி என்.சி.சி. முகாம் வழக்கு: மாவட்ட என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் கைது
கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரத்தில், மாவட்ட என்.சி.சி. ஒருங்கிணைப்பாளரும் காவேரிப்பட்டினம் அரசுப்பள்ளி ஆசிரியருமான கோபு கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட சிவராமன், போலி என்.சி.சி. முகாம் நடத்துவதை கோபு அறிந்தும் அதனை மறைத்ததாக கைது செய்யப்பட்டார்.
-
Sep 09, 2024 15:27 ISTஆயுள் தண்டனை கைதியின் ஜாமின் மனு தள்ளுபடி
பல பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாகர்கோவில் காசியின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் சிபிசிஐடி போலீசார் பதில்மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
Sep 09, 2024 14:50 IST"மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் செலவிடவில்லை" - மல்லிகார்ஜூன கார்கே
“ ‘எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் விரும்பவில்லை?” என மணிப்பூர் மக்கள் கேட்கிறார்கள். மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் செலவிடவில்லை. கடந்த 16 மாதங்களில், மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் நரேந்திர மோடி செலவிடவில்லை;
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்ததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்த அம்மாநில முன்னாள் ஆளுநர் அனுசுயா உய்கே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரினார். மணிப்பூர் சூழல்’ பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான தோல்வி, அதை மன்னிக்க முடியாது” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Sep 09, 2024 14:18 ISTவந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற சரக்கு ரயில் எஞ்சின்!
புதுடெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது. 3 மணிநேரம் போராடியும் கோளாறை சரி செய்ய முடியாததால் சரக்கு ரயில் எஞ்சினை பயன்படுத்தி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
-
Sep 09, 2024 14:16 ISTமகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி
"மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி செய்யப்பட்டுள்ளது. புதிய 500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.101 கோடி மதிப்பில் கடனுதவி செய்யப்பட்டுள்ளது.
25,000க்கும் மேற்பட்டோருக்கு ரூ.297 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் 12,233 பேருக்கு ரூ.75.60 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அரசு எப்படி செயல்படுகிறது என்பதை தேர்தல் என்ற தேர்வு மூலம் மக்கள் மதிப்பெண் வழங்குகிறார்கள். கடந்த மக்களவை தேர்தலில் திராவிட மாடல் அரசுக்கு 100% தேர்ச்சி அளித்தீர்கள். தென் மாவட்ட மக்கள் மகிழும் அளவிற்கு மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது." என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Sep 09, 2024 14:14 ISTகுரங்கம்மை நோய் தடுப்பு - மாநிலங்களுக்கு கடிதம்
"மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார ஆயத்த நிலை குறித்து மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குரங்கம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குரங்கம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது" என்று மத்திய அரசு அதன் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
-
Sep 09, 2024 14:13 ISTசாம்சங் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
சம்பள உயர்வு, 8 மணி நேர பணி உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
Sep 09, 2024 13:56 ISTத.வெ.க மாநாடு தேதி - விஜயுடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை
மாநாடு தேதி குறித்து த.வெ.க தலைவர் விஜய் உடன் ஆனந்த், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். செப்.23 குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா? என்பது பற்றியும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 09, 2024 13:05 ISTதிடீரென வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்
காஞ்சிபுரத்தில் திடீரென வயல்வெளியில் தரையிறக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர். இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை சரி செய்யும பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
Sep 09, 2024 12:29 ISTமனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
-
Sep 09, 2024 12:18 ISTபயிற்சி மருத்துவர் கொலை: சி.பி.ஐ அறிக்கை தாக்கல்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் உச்ச நீதின்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல். இயற்கைக்கு மாறான மரணம் குறித்து விளக்கமளிக்க மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதின்றம் அறிவுறுத்தல்.
-
Sep 09, 2024 12:02 ISTஇ.பி.எஸ் குற்றச்சாட்டு
அ.தி.மு.க என்பது ஒரு கடல், மிகவும் வலிமையான இயக்கம்
பிரச்சினையை தீர்க்கவும் பேசவும் அரசு குழு அமைக்க வேண்டும்
தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடு
எதிர்க்கட்சி குற்றச்சாட்டு குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்
மக்களின் குறைபாடுகளை தீர்ப்பது ஆளும் அரசின் கடமை- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
-
Sep 09, 2024 11:40 ISTமகாவிஷ்ணு விவகாரம்- அறிக்கை தாக்கல் செய்ய தாமதம்
மகாவிஷ்ணு விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம். பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், 3 நாட்கள் விசாரணை நடத்த உள்ளார்.
நாளை தான் விசாரணை நிறைவு பெற உள்ளது, அதன் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது- பள்ளிகல்வித்துறை
-
Sep 09, 2024 11:38 ISTமதுரை மருத்துவமனையில் உதயநிதி திடீர் ஆய்வு
மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு. மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் உதயநிதி.
-
Sep 09, 2024 11:28 ISTஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை அரசு வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
-
Sep 09, 2024 10:53 ISTகுட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்.
முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
-
Sep 09, 2024 10:51 ISTஅமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
வடசென்னை மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது;
இந்தியாவில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் டிராக் இன்ஃபர்மேஷன் சென்டர் (எ) மருந்து தகவல் மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையம் சி.எல்.பெய்டு மேத்தா நிறுவாகத்துடன் ஒருங்கிணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
- சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி -
Sep 09, 2024 10:10 ISTசிறப்பாக செயல்படும் மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா? மு.க.ஸ்டாலின்
தேசியக் கல்விக் கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக கல்வியில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது தான் மத்திய பாஜக அரசின் தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் திட்டமா?
- மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு
-
Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the objectives – Is this how the Union BJP Government plans to promote quality education and equity?
— M.K.Stalin (@mkstalin) September 9, 2024
I leave it to the wisdom of our nation… pic.twitter.com/6whhTjD3bG
- மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு
-
Sep 09, 2024 09:55 ISTதிமுக பவள விழாவை கொண்டாடுவோம்: ஸ்டாலின்
திமுக 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, 2024ம் ஆண்டு பவள விழா நிறைவைக் கொண்டாடுகிறது. பவள விழாவை முன்னிட்டு, திமுகவினரின் இல்லங்கள், அலுவலகங்களில் கழகக் கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.
திமுகவின் பவளவிழா நிறைவை முன்னிட்டு ஸ்டாலின் அறிக்கை
-
Sep 09, 2024 09:16 IST54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது
-
Sep 09, 2024 09:14 ISTதிரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்
திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு இயற்கை எய்தினார். பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில் உடல் கொண்டு வரப்பட்டு, மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
-
Sep 09, 2024 08:54 ISTசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Sep 09, 2024 08:45 ISTமாற்றுத்திறனாளி குறித்து அவதூறு பரப்பிய வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்
பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசிய வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
-
Sep 09, 2024 08:22 ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12,000 கன அடியாக குறைவு
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 12,000 கன அடியாக குறைவு;
9வது நாளாக ஆற்றில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. -
Sep 09, 2024 08:08 ISTமகாவிஷ்ணு விவகாரம்: விசாரணை அறிக்கை இன்று சமர்பிப்பு
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்.
-
Sep 09, 2024 07:34 IST3 நாட்கள் பயணமாக இன்று மதுரை செல்கிறார் உதயநிதி
நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் பங்கேற்க, 3 நாட்கள் பயணமாக இன்று மதுரை செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
-
Sep 09, 2024 07:21 IST4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Sep 09, 2024 07:20 ISTதமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.9) முதல் செப்.14-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.9, 10 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Sep 09, 2024 07:20 ISTவிநாயகர் ஊர்வலத்தில் 3 சிறுவர்கள் பலி
தேனி மாவட்டம் தேவாரத்தில் விநாயகர் ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Sep 09, 2024 07:20 ISTஇபிஎஸ் அறிக்கை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதில்
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அடிப்படை ஆதாரங்கள் இல்லாமலும் திசை திருப்பும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது
ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதில்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.