Petrol and Diesel Price
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வனத்துறை தேர்வு
வரும் 27ம் தேதி வனத்துறை தேர்வு வனத்துறை சார்ந்த குரூப் 6 பணிகளுக்கான தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு
நயன்தாராவின் திரைப்படம் இன்று வெளியானது
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “ connect”. இதுதொடர்பாக நயன்தாரா ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில் அவர் பேசியது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் பின்பற்றும். ஆனால் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஒருபோதும் நிறுத்தப்படாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
புகையிலை குறித்து அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளத்தில் புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.
பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுகறைகளை கடைபிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளி மற்றும் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, மருத்துவமனையின் உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவிலிருந்து மக்களை காக்க அரசு தயார் நிலையில் உள்ளது பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திமுக எம்.பி., ஆ.ராசாவின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் 45 ஏக்கர் நிலத்தை பினாமி பெயரில் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவினை அறிவித்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கை திண்டுக்கல் ஏ.எஸ்.பி. விசாரிக்கவும் உத்தரவு
கரூரில் நடைபெற்ற பஞ்சாயத்து துணை தலைவருக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு மனுதாரர் வாக்களித்திருந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது.
'காலா பாணி' நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்த பின் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மதுரை விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு தரப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துளளார்.
சென்னை பெரம்பூரில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என்றும் பராமரிப்பு காரணமாக நிறுத்தம் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மன்சூக் மாண்டவியா, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி காஜாபேட்டை பகுதியில் காலி இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்களில் பிடித்த தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே கடும் புகைமூட்டமாக காணப்பட்டது. தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் தீவிரம் முயன்று வருகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் நாள் ஆட்ட நேர இந்தியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணி இந்தியாவை விட 208 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தாஜ்மஹாலை பார்வையிட வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு அனைத்து தமிழக மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ.7 லட்சமும், மற்ற 4 சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்பில்லாத நபர்களையும் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டி பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், மயிலாடுதுறை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும் என கொரோனா நிலவரம் குறித்து மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார்
நெய்வேலி என்.எல்.சி.,யில் உள்ள புதிய அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகை, புதுவை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 11 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து மீன்வளத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 75 அவசரகால வாகனங்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அவசரகால வாகனங்கள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பண்டிகை கால விடுமுறை காரணமாக சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.
நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து மீன்வளத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 600 கி.மீ. தொலைவில் தெற்கு – தென்கிழக்கே தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தின் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டிசம்பர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
ஓபிஎஸ் நட த்தியது கட்சி கூட்டமே இல்லை, ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய – சீன எல்லை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் கடும் அமளி கிளம்பியதை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் என உலக சுகாதார அமைப்பில் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வகை வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய வகை கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான CUET UG நுழைவுத் தேர்வு, மே 21ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் CUET PG நுழைவுத் தேர்வு ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக விளக்கம் கேட்டு அதிமுக தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர் – அதிமுக தலைமை உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருகிறார். கட்சியின் பொறுப்பு இபிஎஸ் வசம் இருப்பதால், ஓபிஎஸ் இது போன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் விடுக்கப்பட்டுள்ளது – அதிமுக தலைமை
சென்னையில் 33 இடங்களில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் உரிய அனுமதி பெறவில்லை என கூறி, தனித்தனியாக 33 வழக்குகள் பதிவு – காவல்துறை
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வீட்டில் வெங்காய மூட்டைகளுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடை கொண்ட 50 மூட்டை குட்கா பறிமுதல் – இருவர் கைது!
வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 17ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர ஆலோசனை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு டிசம்பர் 25ம் தேதி, தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 – 31ம் தேதிகள் வரை நடைபெறும் CUET முதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் – பல்கலை. மானிய குழு அறிவிப்பு