/indian-express-tamil/media/media_files/2025/08/02/sukla-2025-08-02-00-09-30.jpg)
Today Latest Live News Update in Tamil 1 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
-
Aug 02, 2025 00:07 IST
இந்திய தேசிய கொடி என் பின்னால் பறந்ததும் மகிழ்ச்சி: சுபான்ஷு சுக்லா
விண்வெளி பயணத்தில் பார்வையாளராக இருந்த இந்தியா பங்கேற்பாளராக மாறியுள்ளது. இந்தியா விண்ணில் பறப்பவராக மட்டும் இல்லாமல், வழி
நடத்துபவராகவும் இருக்கப்போகிறது. விண்வெளி பயணத்தில் இந்திய பிரதமரிடம் பேசியதும், இந்திய தேசிய கொடி என் பின்னால் பறந்ததும் மகிழ்ச்சி தரும் தருணங்கள் என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். -
Aug 02, 2025 00:06 IST
முதல் தேசிய விருது
33 ஆண்டுகள் திரைப் பயணத்தில் முதல்முறையாக தேசிய விருது பெறுகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் நடித்ததற்காக 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் தேர்வு
-
Aug 01, 2025 21:07 IST
எடப்பாடி பழனிசாமிக்கு அருண் நேரு எம்.பி. பதிலடி!
சூரியனைப் போன்று ஒளி வீசும் நம் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயரையும் புகழையும் எதனாலும் மறைக்க முடியாது என்பதைப் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இது மக்கள் மத்தியில் முதலமைச்சர் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குப் பெருகும் ஆதரவு அலையைக் கண்டு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சத்தையே காட்டுகின்றது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில்கூட அம்மையார் ஜெயலலிதாவின் பெயரும், படமும் பல திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது தங்கள் அரசியல் சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டு அரசியல் மரபை மறுதலிக்கும் - மறுக்கும் வகையில் திராவிட இயக்கத் தலைவர்களின் பெயர்களையும் படங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக கூறுவது வெட்கக் கேடானது என்று அருண் நேரு எம்.பி கூறியுள்ளார்.
-
Aug 01, 2025 21:06 IST
ஆகஸ்ட் 9-ந் தேதி பா.ம.க பொதுக்கூட்டம்: அன்புமணி அறிவிப்பு
ஆகஸ்ட் 9-ந் தேதி பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஆகஸ்ட் 17-ந் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், அவருக்கு போடடியாக அன்புமணி தற்போது அறிவித்துள்ளார்.
-
Aug 01, 2025 20:27 IST
ஆகஸ்ட் 11 முதல் இ.பி.எஸ் 3-ம் கட்ட சுற்றுப்பயணம்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 11-ல் கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது என அ.தி.மு.க அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 11ல் தொடங்கி 23ம் தேதி வரை 8 மாவட்டங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 23ம் தேதி திருப்போரூர் தொகுதியில் தனது 3வது கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
Aug 01, 2025 20:14 IST
குவைத் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு
சென்னையில் இருந்து குவைத் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது ஏற்பட்ட இயந்திர கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. விமானி உரிய நேரத்தில் இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால் 191 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து குவைத் புறப்பட்ட விமானத்தில் 185 பயணிகள் உள்பட 191 பேர் இருந்தனர். இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
-
Aug 01, 2025 20:09 IST
ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ராமதாஸ்
பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலினிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். முன்னதாக, வைகோ, சீமான், பிரேமலதா விஜயகாந்த் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Aug 01, 2025 19:43 IST
முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி மரணம்
திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87. வசந்தி தேவியின் உடல் சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் வசந்தி தேவி.
இவர் சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர். கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர வசந்தி தேவி பாடுபட்டுள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்துள்ளார். சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்திதேவி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார். 1973ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் கல்வியாளர் வசந்தி தேவி. 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.
-
Aug 01, 2025 19:37 IST
தேசிய விருது வென்ற ஜி வி பிரகாஷ் - நன்றி தெரிவித்து பதிவு!
வாத்தி படத்திற்கு 'சிறந்த இசையமைப்பாளர்' பிரிவில் தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து ஜி.வி பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.
A Blessing for the second time ❤️ #vaathi pic.twitter.com/26KjmEIvF6
— G.V.Prakash Kumar (@gvprakash) August 1, 2025 -
Aug 01, 2025 19:35 IST
71-வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர், நடிகை
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மஸ்ஸே (12 பெயில்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகை விருதை ராணி முகர்ஜி சாட்டர்ஜி vs நார்வே படத்திற்காக வென்றுள்ளார்.
-
Aug 01, 2025 19:34 IST
71-வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த துணை நடிகர்
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த துணை நடிகருக்கான விருதை ’பார்கிங்’ படத்திற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வென்றுள்ளார்.
-
Aug 01, 2025 18:30 IST
71-வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த திரைக்கதை
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைக்கதைக்காக பார்கிங் படத்திற்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் வென்றுள்ளார்.
-
Aug 01, 2025 18:26 IST
71-வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ் குமார்
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் வென்றுள்ளார்.
-
Aug 01, 2025 18:20 IST
71-வது தேசிய திரைப்பட விருதுகள் - பெஸ்ட் தமிழ்த் திரைப்படமாக 'பார்க்கிங்' தேர்வு
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த தமிழ் படமாக 'பார்க்கிங்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
Aug 01, 2025 18:18 IST
71-வது தேசிய திரைப்பட விருதுகள் - தமிழ்த் திரைப்படம் தேர்வு
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நான்-பிச்சர் பிரிவில் சிறந்த ஒளிப்பதிவிற்காக, 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது
-
Aug 01, 2025 18:13 IST
தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்வு? - விரைவில் வெளியாகும் விபரம்
எரிபொருள், உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்த தனியார் பேருந்து சங்கங்கள் தொடர்ந்த வழக்கு எதிரொலியாக, தமிழகத்தில் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு விபரம் விரைவில் வெளியாக உள்ளது. பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்த நிலையில் ஓரிரு நாட்களில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். ஆம்னி பேருந்துகள், மாவட்டங்களுக்கிடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கட்டணம் உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகிறது. குறைந்த பயண கட்டணத்தில் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு.
-
Aug 01, 2025 17:54 IST
வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் - செல்லூர் ராஜு
ஒரு தலைவரைப் பற்றி இவ்வளவு தரக்குறைவாக பேசுவதே தவறு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். ஓபிஎஸ் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு டென்ஷன் ஆன அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இவ்வாறு பதில் அளித்தார்.
-
Aug 01, 2025 17:29 IST
உண்மையை மறைக்கிறார் நயினார் - பன்னீர்செல்வம் தரப்பு
பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உண்மையை மறைக்கிறார். நயினாரிடம் கூறிவிட்டுதான் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். பலமுறை ஓ.பி.எஸ் செல்போனில் அழைத்தபோதும் நயினார் ஏற்கவில்லை என பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.
-
Aug 01, 2025 17:26 IST
பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்பதற்கு ஒப்புதல்
சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்பு திட்டத்திற்கு ரயில்வே வாரியம் கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. வேளச்சேரி - சென்னை கடற்கரை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் மெட்ரோ நிறுவனம் சமர்ப்பித்திருந்த திட்ட அறிக்ககைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
Aug 01, 2025 17:23 IST
கார் மோதி தூய்மை பணியாளர் பலி
சென்னை தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த ராணி என்பவர், சேலையூர் அருகே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
-
Aug 01, 2025 16:59 IST
ஓபிஎஸ் உடன் தொலைபேசியில் பேசினேன் - நயினார்
கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் உடன் தொலைபேசியில் பேசி உள்ளேன். கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதற்கு சொந்த பிரச்சினையா, வேறு காரணமா என தெரியவில்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
Aug 01, 2025 16:54 IST
ஓ.பி.எஸ், ஸ்டாலின் சந்திப்பு - நயினார் விளக்கம்
ஓபிஎஸ் முதல்வரை சந்தித்த காரணம் தெரியவில்லை, தொகுதி பிரச்சனைக்காகவோ, சொந்த பிரச்சனைக்காகவோ சந்தித்து இருக்கலாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
Aug 01, 2025 16:37 IST
நீட் தேர்வு எழுதவோ, எம்.பி.பி.எஸ் படிக்கவோ வயது உச்ச வரம்பு இல்லை - ஒன்றிய அரசு
நீட் தேர்வு எழுதவும் எம்.பி.பி.எஸ் படிக்கவும் குறைந்தபட்ச வயது வரம்பாக 17 உள்ளது. அதிகபட வயது வரம்பை தேசிய மருத்துவக் கவுன்சில் நிர்ணயிக்கவில்லை. 60 வயதுள்ளோர் எம்.பி.பி.எஸ் படிக்கச் சேர்வது குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
-
Aug 01, 2025 16:09 IST
திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களை தடுக்க முடியவில்லை - அன்புமணி
தூத்துக்குடியில் தகராறை தட்டிக்கேட்ட இரு சகோதரர்கள் கஞ்சா போதை கும்பலால் கொலை செய்யப்பட்டனர். சட்டவிரோத செயல்களை பார்க்கும் மக்கள் அரசும் காவல்துறையும் இருக்கிறதா என கேள்வி எழுகிறது என அன்புமணி கூறினார்.
-
Aug 01, 2025 15:59 IST
பறக்கும் ரயில் சேவையை, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க, முதற்கட்ட ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம். இந்தாண்டு இறுதிக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில், பறக்கும் ரயில் சேவை இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 01, 2025 15:54 IST
2030க்கான மனிதவளத் திட்டம் உருவாக்கம்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
2030க்கான மனிதவளத் திட்டம் ஸ்கூல் ஆப் செமிகண்டக்டர் இனிஷியேடிவ் பெயரில் செயல்படுத்தப்படும். இதுவரை இந்தியாவில் இல்லாதவகையில் முதல்முறையாக இது நடைபெறுகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
-
Aug 01, 2025 15:40 IST
அரசியல் சூழல்களை மாணவர்கள் உற்றுநோக்கி ஆராய வேண்டும் - திருமாவளவன்
பிரபலம் அரசியலுக்கு வந்தால் ஈர்ப்பு இருக்கும். தலைமை பண்பு இல்லாவிடில் தக்கவைக்க முடியாது. அரசியல் சூழல்களை மாணவர்கள் உற்றுநோக்கி ஆராய வேண்டும். மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை சிந்திக்க வேண்டும் என்று 'மதச்சார்பின்மை காப்போம்' கருத்தரங்கில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
-
Aug 01, 2025 15:24 IST
பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் - நயினார் நாகேந்திரன்
ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினேன். ஓ.பன்னீர்செல்வத்தைப் போலவே டிடிவி. தினகரனிடமும் பேசினேன். ஓ.பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்சினையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பழனிசாமி அழுத்தத்தின் காரணமாக பன்னீர்செல்வத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். பன்னீர்செல்வம் முதல்வரை சந்தித்தது தொகுதி பிரச்சினைக்காக இருக்கலாம் என்றும் கோரினார்.
-
Aug 01, 2025 15:02 IST
ரவுடி காதுகுத்து ரவி துப்பாக்கி முனையில் கைது
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி காதுகுத்து ரவி துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சேலத்தில் பதுங்கியிருந்த காதுகுத்து ரவியை துப்பாக்கி முனையில் கைது செய்தது தனிப்படை போலீஸ். வடசென்னையைச் சேர்ந்த இவர் மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
-
Aug 01, 2025 14:54 IST
மக்களைத் தேடி மருத்துவம் – 2.42 கோடி பேர் பயன்
தமிழ்நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பேணுவதற்காக, திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக, “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 42 லட்சம் பேர் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
-
Aug 01, 2025 14:34 IST
ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் ராஜு பிஸ்வகர்மாவுக்கு ஆகஸ்ட் 8 வரை சிறை
ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் ராஜு பிஸ்வகர்மாவுக்கு ஆகஸ்ட் 8 வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ராஜு பிஸ்வகர்மா காவல் முடிந்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்த போலீசார் 3 நாட்களில் விசாரணை முடித்து ஆஜர்படுத்தினர்.
-
Aug 01, 2025 14:34 IST
மக்களவை ஆக.4 வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஆகஸ்ட் 4ம் தேதி காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Aug 01, 2025 14:28 IST
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு
பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஹசன் தொகுதி எம்.பி.யாக இருந்தபோது பல பெண்களை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததும் அம்பலமாகியுள்ளது. தனது வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டார். வெளிநாடு தப்பிய பிரஜ்வல் ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கை அடுத்து மஜத கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
Aug 01, 2025 14:07 IST
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(ஆக.01) கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 01, 2025 13:45 IST
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆக. 3-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
-
Aug 01, 2025 13:32 IST
செப். 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவின் புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில், துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதைத் தொடர்ந்து புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
-
Aug 01, 2025 12:54 IST
'அன்புமணி' பெயர், புகைப்படம் இல்லாமல் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டு அழைப்பிதழ்! - புறக்கணிப்பா?
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் மற்றும் புகைப்படம் இல்லாமல், வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாட்டிற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பூம்புகாரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்த மாற்றம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Aug 01, 2025 12:41 IST
அரசு திட்ட பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை அனுமதிக்க முடியாது - ஐகோர்ட்
தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் இடம்பெறக்கூடாது என்றும், அரசு திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெறுவதை எதிர்த்து, அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
-
Aug 01, 2025 12:36 IST
சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான அசாம் இளைஞர் நீதிமன்றத்தீல் ஆஜர்
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா, விசாரணைக் காவல் முடிந்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
Aug 01, 2025 11:42 IST
அ.தி.மு.க பொதுச் செயலாளர் வழக்கு; இ.பி.எஸ் மனு தள்ளுபடி
அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Aug 01, 2025 11:02 IST
ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை - ராமதாஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்கவில்லை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
Aug 01, 2025 11:00 IST
ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.
-
Aug 01, 2025 10:57 IST
சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
நோய் வராமல் தடுக்கும் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும் `நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம் முடிவுகள் அன்றைய தினமே எஸ்.எம்.எஸ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன என கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
-
Aug 01, 2025 10:35 IST
ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு; மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை
ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு தொடர்பாக மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதற்காக ஆணையத்தின் துணைத் தலைவர் இமையம், அண்ணாமலை உள்ளிட்ட உறுப்பினர்கள் நெல்லை வருகை தந்துள்ளனர். முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்து இன்று மதியம் நேரடியாக களத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்
-
Aug 01, 2025 10:27 IST
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனே பத்திரங்களை வழங்க வேண்டும்: ஓபிஎஸ்
கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான அபராத வட்டி உள்ளிட்ட வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்குமாறு தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
-
Aug 01, 2025 09:57 IST
அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
அனில் அம்பானி குழும நிறுவனங்கள், பல கோடி ரூபாய் அளவிற்கு கடன் மோசடியில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் அனில் அம்பானி வருகிற 5ஆம் தேதி டெல்லி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
Aug 01, 2025 09:02 IST
இனி CMRL பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது
இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற்றம் ஆனது. இனி CMRL பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது. பயணிகள் CMRL அட்டையை மெட்ரோ ரயில் நிலையத்தில் கொடுத்து NCMC அட்டையை பெறலாம்
- மெட்ரோ ரயில் நிறுவனம்
-
Aug 01, 2025 08:13 IST
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் (19 கிலோ) விலை ரூ.34.50 குறைந்து ரூ. 1,780-க்கு விற்பனையாகிறது. வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.868.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 01, 2025 08:13 IST
கவினின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
நெல்லை ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் கவினின் உடலை வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Aug 01, 2025 08:12 IST
ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழைப் பொழிவுக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழையின் 2ம் பாதி காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமான மழைப் பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை நாட்டில் 47.43 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமான மழைப் பொழிவை விட 6 % அதிகம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.