Tamil News Updates: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதன்படி12ம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11ம் வகுப்பு தேர்வில் 2.58 லட்சம், 10ம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சி!
பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சியாக அவசர முன்பதிவுக்கு ரூ. 5,000 கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். அவசர கால ஆவணப் பதிவிற்கான முன்பதிவு தட்கல் முறையில் வழங்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை திருத்தும் பணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.
Tamil News Latest Updates
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி, மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் சலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? பாக்கெட்டும் இல்லை, பர்ஸும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் வரித்தொகை உடன் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் வணிகர்களுக்கு வணிகவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் 3.26 இலட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது
செம்மரம் கடத்தல் வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி தலைவரின் கணவர் பெருமாளை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்
மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில் பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிவடையும் வரை ஓய்வு பெற அனுமதி இல்லை என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரூ1 கோடி மதிப்பிலான செம்மர வேர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
ஜி.எஸ்.டி கடந்த ஆண்டை விட மே மாதத்தில் 44% அதிகரித்து ரூ.1.40 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகவும், தொடர்ந்து 4வது முறையாக ஜி.எஸ்.டி வசூல் 1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. 3வது இடத்துக்கான போட்டியில் ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
இன்று நடைபெற்ற அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். துறை அமைச்சர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உடன் இணைந்து நிறைவேற்றிட வேண்டும் .
மக்கள் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். தாமதமான திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் கைதி முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்க கோரி நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பரோல் வழங்க கோரி அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும், மருத்துவ காரணங்களுக்காக பரோல் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
“ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் பங்கேற்பதில் நடிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்; நடிகர்களை திரையரங்குகளோடு ரசிப்பது மட்டுமே ஆகச்சிறந்தது” என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 10 சிலைகள் இன்று மாலை 4 மணிக்கு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் சிலைகள் ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாடகர் கே.கே. மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவர் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது பதிவில், “அன்புள்ள கேகே, என்ன அவசரம் நண்பா, உங்களைப் போன்ற திறமையான பாடகர்களால் தான் வாழ்க்கை இனிமையாகிறது” என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவன் திருமுருகன் (17) தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் தான் உயிரிழந்தார் என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 24ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்ததாக புகார் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4ஆம் தேதி வெளியிட உள்ளோம். ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும் திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது. அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை; புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் முழுவதும் படிக்கவில்லை என்று திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உயிரிழந்த பிரபல பாடகர் கே.கே.வின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாடகர் கே.கே. உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மே மாதம் 47.87 லட்சம் பேர் பயணித்துள்ளதாகவும், இது கடந்த ஏப்ரல் மாதத்தை காட்டிலும், 2.41 லட்சம் பேர் அதிகம் என்றும் மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரை விசாரித்த நிலையில், தற்போது இவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
முகக்கவசம், தலைக்கவசம் அணியாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் காவல்துறையினர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் டிசல் விலையை குறைக்க வேண்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, இந்தியாவில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு அனைத்தும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இவை அனைத்திற்கும் காரணம் மத்திய பாஜக அரசுதான் ஆனால் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழக அரசை எதிர்த்து போராட்டம் செய்வதாக நினைத்து மத்திய மோடி அசசை எதிர்த்து போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 8,023 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும் 2010ஆம் ஆண்டு முதல் யானைக்கால் நோயாளிகளுக்கு ₨1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகம் முன்பாக ரயில்வே ஊழியரிடம் கடனாக வழங்கிய பணத்தை மீட்டுத் தரக் கோரி பொன்னுச்சாமி என்பவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்
ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தாம்பரம் காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்ற நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் விஐடி பல்கலைக்கழகத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலை. நிர்வாகம் தகவல்!
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது
சென்னை, விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு. பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றார்
சென்னையில் போதைப் பொருள் கடத்தியதாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 5 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ10 லட்சம் மதிப்புள்ள மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்
பிரபல பின்னணி பாடகர் கேகே’ கொல்கத்தாவில் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 101 பேரில் 71 பேர் ஆஜரான நிலையில் இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.
குஜராத்தில் நடைபெறும் 2 நாட்கள் கல்வி மாநாட்டில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெறுவதால் புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு, ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம். ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து 19 துறைகளின் செயலாளர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ280 குறைந்து ரூ37,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ35 குறைந்து, ரூ4,470க்கு விற்பனையாகிறது.
நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு கர்நாடக மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது. நதநீர் இணைப்புத் திட்டத்தின் திட்ட அறிக்கைக்கு அனுமதி பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்தவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை
இந்தியாவில் மேலும் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு. 6 பேர் உயிரிழப்பு , கொரோனாவில் இருந்து 2,236 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 18,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்
தமிழ்நாட்டிற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்காக தாக்கலான 13 வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற உள்ளது. 6 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டால், போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.
சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ. 20 குறைந்து ரூ.50க்கு விற்பனையாகிறது.
சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்; அது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என புதுக்கோட்டையில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.135 குறைந்து ரூ.2,373க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
இலக்கை துல்லியமாக தாக்கும் அதி நவீன ஏவுகணையை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் இன்று காலமானார். தமிழில் கில்லி, அந்நியன், காக்க காக்க, 7ஜி ரெயின்போ காலனி உட்பட ஏராளமான படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீர் நிலை தூர்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. மகசூலை பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாதி, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. சூப்பர் 4 பிரிவில் தென் கொரிய அணிக்கு எதிரான போட்டி 4க்கு 4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதால் இந்தியாவிற்கு ஏமாற்றமானது.