பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வீடு கொடுத்த முதல்வர்
அரியலூர், இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ்.கார்த்திக்கிற்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இன்றைய ஆட்டம்
இரவு 8.30 மணிக்கு : ஈக்வடார் – செனகல் அணிகள் மோதல், இரவு 8.30 மணிக்கு : நெதர்லாந்து – கத்தார் அணிகள் மோதல். நள்ளிரவு 12.30 மணிக்கு : ஈரான் – அமெரிக்கா அணிகள் மோதல். நள்ளிரவு 12.30 மணிக்கு : வேல்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதல்
சென்னை வந்துள்ள தேசிய புலனாய் முகமையின் இயக்குனர் தினகர் குப்தா, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் ஆலோசனை நடத்தினார். தென்னிந்தியாவில், கோவை சிலிண்டர் வெடிப்பு, மங்களூர் குக்கர் வெடி குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், என்.ஐ.ஏ இயக்குனர் தினகர் குப்தா தமிழ்நாடு வந்துள்ளார். அவர் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து விவாதித்ததாகவும், கோவைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்க கோரிய வழக்கில், வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாதாவரத்தில் இயங்கி வந்த மதரஸா பள்ளியில் குழந்தைகள் 5 முதல் 12 வரையுள்ள 12 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்புக்கு வந்த புகாரை தொடர்ந்து அங்கு சோதனை நடைபெற்றது.
இது தொடர்பாக அக்தர் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அக்தர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தன் மீதான சொத்துக் குவிப்பு, டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பு நாளை (புதன்கிழமை, நவ.3) வெளியாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெரினாவில் மாற்றுத் திறனாளிகள் நடைபாதையை கண்காணிக்க காவலரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
மெரினாவில் மாற்றுத் திறனாளிகள் பாதை நேற்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனா ஐ.நா., சாசனத்தின் அடிப்படை பகுதிகளுக்கு எதிராக உள்ளது. உக்ரைனில் ரஷ்யா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை பார்த்தோம் என்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
வேலூர் சிஎம்சி ராகிங் விவகாரத்தில் மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மின்பொறியாளர் நடேசன் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மீனவர்கள் கைதை கண்டித்து புதன்கிழமை (நவ.30) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கால்பந்து உலக கோப்பை போட்டியில் செர்பியா-கேமரூன் ஆட்டம் சமனில் முடிந்தது.
பள்ளிகளில் பாலியல் தாக்குதல் மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது.
பள்ளிகளில் மாணவ-மாணவியரை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது முக்கியமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக http://tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் அறிவித்துள்ளார்.
சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் டிச.1 முதல் அறிமுகம் செய்ப்பட உள்ளது. முதலில் சோதனை அடிப்படையில் 4 நகரங்களில் வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ள நிலையில், டிஜிட்டல் ரூபாயின் மதிப்பு, தற்போதைய ரூபாய் நோட்டிற்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகிங்கை தடுக்க 24 மணி நேரமும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி அறிக்கை அளித்துள்ளது. கல்லூரி அறிக்கையை ஏற்று தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கன்னகப்பட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை நடுக்கடை பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி, கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நவ.19ல் நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இதில் 4 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டத்துக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்
மேகாலயா மாநிலத்தில், ஆளும் தேசிய மக்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏ என மூன்று பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த எம்எம்ஏக்கள் மூன்று பேரும் பாஜகவில் இணைய போவதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் அலெக்சாண்டர் லாலு ஹெக் தெரிவித்தார்.
ஆளுநராகவும் ஆரோவில் அறக்கட்டளை தலைவராகவும் இரட்டை பதவி வகிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
“சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது” – மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திட்டங்கள் துவக்க விழாவிற்கு வருகை தந்த போது லிப்டில் சிக்கிய அமைச்சர்
அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டின் இயக்கம் தடைபட்டதால் பரபரப்பு
லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணையை 13ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை
ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், திட்டமிட்டபடி டிசம்பர் 6ஆம் தேதி விசாரணை நடைபெறும் என அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை .
பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது .
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை.
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
அனைத்து துறை செயலாளர்களுடன் இன்று மாலை தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை
அரசு திட்டங்களின் நிலை, துறை வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், முதல்வரின் அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்கிறார்
எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டம் அரியலூர்
தொல்லியல் துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கி உள்ளோம்
அரியலூரில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பயோ மைனிங் முறையில் மறு சீரமைக்கப்பட உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கு. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க, மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்” தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சூரங்கோட்டை, பேராவூர், பழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் அவதி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை