/tamil-ie/media/media_files/uploads/2023/06/cv.jpg)
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வகையில் தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரயில்
கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் - சம்பல்பூர் இடையே முன்பதிவில்லா ரயிலை இயக்குகிறது தெற்கு ரயில்வே. நாளை இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சம்பல்பூர் புறப்படுகிறது; மறுமார்க்கமாக வரும் 24ம் தேதி சம்பல்பூரில் இருந்து தாம்பரம் வரை ரயில் இயக்கப்பட உள்ளது . 13 பொதுப்பெட்டிகள், 3 இருக்கை வசதி பெட்டிகள், 1 லக்கேஜ் பெட்டி ரயில் இணைக்கப்பட்டுள்ளது.
நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 328 கனஅடியில் இருந்து 258 கனஅடியாக சரிவு; ஏரியில் நீர்இருப்பு 2244 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 36 கனஅடியில் இருந்து 12 கனஅடியாக சரிவு; ஏரியில் இருந்து 200 கனஅடி நீர் வெளியேற்றம். கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 419 மில்லியன் கனஅடியாக உள்ளது; 21 கனஅடி நீர் வெளியேற்றம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:45 (IST) 22 Jun 2023சமூக நீதியின் மண்ணிலிருந்து போர் முழக்கம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
சமூக நீதியின் மண்ணிலிருந்து போர் முழக்கம் தொடங்குகிறது என எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பீகார் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்
- 20:05 (IST) 22 Jun 2023வெள்ளை மாளிகைக்கு சென்றார் பிரதமர் மோடி
அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது
- 19:44 (IST) 22 Jun 2023சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் தீ விபத்து
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே, சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு பின் அணைக்கப்பட்டது
- 19:44 (IST) 22 Jun 2023சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் தீ விபத்து
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே, சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு பின் அணைக்கப்பட்டது
- 19:26 (IST) 22 Jun 2023சென்னை, சென்ட்ரலில் இருந்து செல்லும் சந்த்ரகாச்சி அதிவிரைவு ரயில் ரத்து
சென்னை, சென்ட்ரலில் இருந்து வரும் 25ம் தேதி காலை 8.10க்கு புறப்பட இருந்த, சந்த்ரகாச்சி அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
- 19:10 (IST) 22 Jun 202322 மீனவர்கள் கைது; இ.பி.எஸ் கண்டனம்
தமிழ்நாட்டை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
- 19:00 (IST) 22 Jun 2023லியோ அக்டோபர் 19 வெளியீடு
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து, அப்படத்தில் உள்ள விஜய்யின் குரலில் உருவான 'நா ரெடி' பாடல் வெளியானது. விஜயின் பிறந்தநாளையொட்டி இந்தப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
- 18:39 (IST) 22 Jun 2023நாளைய முதல்வரே.. விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்
நடிகர் விஜய் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், நாளைய முதல்வரே என அவரது ரசிகர்கள் மாவட்ட தலைநகரங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
- 18:30 (IST) 22 Jun 2023பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்தியதாக பா.ஜ.க பெண் பிரமுகர் கைது
சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியில் குழந்தைகளை துன்புறுத்தியதாக பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மீனாட்சி கைது செய்யப்பட்டார்.
- 17:59 (IST) 22 Jun 2023சீனா: உணவகத்தில் தீ, 31 பேர் பலி
சீனாவின் யின்சுவான் நகரில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கியாஸ் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
- 17:54 (IST) 22 Jun 2023நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம்: பீகார் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலமாக பாட்னாவுக்கு புறப்பட்டார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
- 17:32 (IST) 22 Jun 2023தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியை தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
- 17:15 (IST) 22 Jun 2023எதிர்க்கட்சிகள் கூட்டம்: கெஜ்ரிவால் நிபந்தனை
மத்திய அரசின் அவசர சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் ஆதரிக்கவில்லையெனில் பாட்னா கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
- 16:45 (IST) 22 Jun 2023பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்; புறக்கணிப்பதாக மாயாவதி அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போது வரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 16:38 (IST) 22 Jun 2023வேலூரில் இடி, மின்னலுடன் கனமழை
வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. காட்பாடி, விருப்பாட்சிபுரம், பாகாயம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
- 15:58 (IST) 22 Jun 2023பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
சென்னை, மெரினா கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
- 15:57 (IST) 22 Jun 2023அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 15:15 (IST) 22 Jun 2023பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக் கட்சிக் கூட்டம் - ராகுல் காந்தி
ராகுல் காந்தி ட்வீட்: “மணிப்பூர் 50 நாட்களாக பற்றி எரிகிறது. ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார். பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக் கட்சி கூட்டம்; இந்தக் கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்பது தெளிவாகிறது” என்று கூறியுள்ளார்.
- 15:11 (IST) 22 Jun 2023வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் தொடர்பாக் சேகர் பாபுவிடம் இந்து முன்னணி சார்பில் மனு
வேலூர், ஜலகண்டேஸ்வரர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளித்துள்ளனர்.
- 14:52 (IST) 22 Jun 2023முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
தாம்பரம் - சாம்பல்பூர் மற்றும் சாம்பல்பூர் - சென்னை கடற்கரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம். வியாழன் இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30க்கு சாம்பல்பூர் சென்றடையும். சனிக்கிழமை காலை 5 மணிக்கு சாம்பல்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
- 14:48 (IST) 22 Jun 20234வது நாளாக நடைபெறும் இந்தியன்-2 படப்பிடிப்பு!
சென்னை விமான நிலையத்தில் 4வது நாளாக நடைபெறும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. விமான நிலைய ஆணையகத்திடம் ரூ.1.24 கோடி செலுத்தி முன் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடக்கிறது.
500க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பயணிகள் போன்று வேடமணிந்து நடித்து வருகின்றனர். விமான தாக்குதலில் இருந்து தப்பிப் செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவதால், விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 14:46 (IST) 22 Jun 2023பழனி: ரோப் கார் நாளை இயங்காது!
திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ரோப் கார் நாளை இயங்காது என்றும் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 14:03 (IST) 22 Jun 2023செந்தில்பாலாஜியை கைது: 'சட்டவிதிகளை பின்பற்றவில்லை' - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ
செந்தில்பாலாஜியை கைது செய்த போது சட்டவிதிகளை பின்பற்றவில்லை. இயந்திரத்தனமாக நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அதிகாரமில்லை. சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கப் பிரிவு கோரிக்கைக்கும் எதிர்ப்பு என்று செந்தில்பாலாஜி தரப்பில் தனது வாதத்தை நிறைவு செய்தார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.
- 14:01 (IST) 22 Jun 20235 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வரும் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:41 (IST) 22 Jun 2023செந்தில் பாலாஜி வழக்கு: போலி அறுவை சிகிச்சை!
'கடந்த ஜூன் 14ல், செந்தில்பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அமலாக்கப்பிரிவு தான். அவருக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும். அறுவை சிகிச்சைக்கு பின் அவரை விசாரிப்பது முறையல்ல என்ற அமலாக்கப் பிரிவின் முடிவுக்கு நன்றி.' செந்தில்பாலாஜி மனைவி தரப்பு கூறியுள்ளது.
- 13:39 (IST) 22 Jun 2023ஆளுநருக்கு அமைச்சர் கண்டனம்!
வள்ளலார் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட ஆளுநர் அறியவில்லை.
வள்ளலார் வழிகாட்டிய நெறிமுறைகளை சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்த ஆளுநர் முயற்சி. தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை. ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
- 13:24 (IST) 22 Jun 2023மாலை 6.30 மணிக்கு 'லியோ' முதல் பாடல்!
லியோ படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள 'நா ரெடி' பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- 13:22 (IST) 22 Jun 2023செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வாதம்!
காவேரி மருத்துவமனைக்கு மாற்றவும், நீதிமன்ற காவலில் நீடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தெரிந்தே, அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்க கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.
விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு பொருந்தாது என அமலாக்கப்பிரிவு கூற முடியாது. குற்ற விசாரணை முறைச் சட்ட பிரிவை பின்பற்றாதது அடிப்படை உரிமையை மீறியது என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது" என்று செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
- 13:21 (IST) 22 Jun 2023அமலாக்கப் பிரிவு விளக்கம்!
அமலாக்கப் பிரிவு உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது என்று செந்தில்பாலாஜி மனைவி தரப்பு கூறிய நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் இக்காரணத்தை குறிப்பிடலாம். ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என அமலாக்கப்பிரிவு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
- 13:19 (IST) 22 Jun 2023இலாகா இல்லா அமைச்சர் செந்தில்பாலாஜி: அ.தி.மு.க மனு
செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில்பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை. செந்தில்பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும்' என்று அ.தி.மு.க அதன் மனுவில் தெரிவித்துள்ளது.
- 12:58 (IST) 22 Jun 2023என்.ஆர்.இளங்கோவன் வாதம்
குற்றவியல் நடைமுறை சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணங்களும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதித்து இயந்திரத்தனமாக உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீது உள்நொக்கத்துடன் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது; ஆட்கொணர்வு மனுவுக்கு அப்பால் வாதங்களை முன் வைக்க முடியாது;
இது அமலாக்கத்துறை செய்த மிகப்பெரிய சட்ட விரோதமாகும்- என்.ஆர்.இளங்கோவன் வாதம்
- 12:19 (IST) 22 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது.
கைது குறித்த தகவல், கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது சட்டப்பிரிவு 15ஏ படி அடிப்படை உரிமை . நீதிமன்ற காவல் சட்டவிரோதமாக இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான்- என்.ஆர்.இளங்கோவன் வாதம்
- 11:42 (IST) 22 Jun 2023மீனவர்கள் கைது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது; இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- 11:35 (IST) 22 Jun 2023என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும்; அது அடிப்படை உரிமை. அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம்.
வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் – நீதிபதிகள்
- 11:33 (IST) 22 Jun 2023என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும்; அது அடிப்படை உரிமை. அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம்.
வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் – நீதிபதிகள்
- 11:01 (IST) 22 Jun 2023இசை கலைஞர் தேவ் ஆனந்த் கடத்தல்
சென்னை, திருவேற்காடு அருகே இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் கடத்தல் நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடிந்து திரும்பிய போது காரை மறித்து கடத்தல் . நிதி நிறுவனம் நடத்திய அவரது சகோதரர் ரூ. 3 கோடி மோசடி செய்ததால் கடத்தல் என தகவல் தேவ் ஆனந்தை கடத்தி சென்ற மர்மகும்பலுக்கு தனிப்படை போலீசார் வலைவீச்சு
- 10:21 (IST) 22 Jun 2023தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது ஒரு கிராம் தங்கம் ரூ. 5,485க்கும், சவரன் ரூ. 43,880க்கும் விற்பனை
- 10:19 (IST) 22 Jun 2023அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு விலை உயர்ந்த நினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு விலை உயர்ந்த நினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி!
- 09:37 (IST) 22 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை . நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு . 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் .
- 09:04 (IST) 22 Jun 202310ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து அரசாணை
2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது!
- 08:58 (IST) 22 Jun 2023பணம் வராமல், கார்டு மாட்டிக் கொண்டதால் ஏ.டி. எம் இயந்திரத்தை சேதப்படுத்தியவர்கள் கைது
சென்னை மதுரவாயல் அருகே ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வராமல், கார்டு மாட்டிக் கொண்டதால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபருக்கு போலீசார் வலைவீச்சு; சிசிடிவி காட்சிகளை வைத்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 08:15 (IST) 22 Jun 2023எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது
நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
- 08:14 (IST) 22 Jun 2023அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாகவும் விசாரணை நடைபெறும் என தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.