பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 86-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
காஷ்மீர் தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு. பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு. பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி கண்டனம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 11, 2024 00:07 ISTவரிப்பணம் பகிர்வு : தமிழகத்திற்கு ரூ. 5700 கோடி விடுவிப்பு
தமிழகத்திற்கு வரி பகிர்வாக ரூ. 5700 கோடி விடுவிப்பு மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரி பகிர்வு பங்காக ரூ.1,39,750 கோடி விடுவிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
-
Jun 10, 2024 20:55 IST3 துறைகளை தன்வசம் வைத்துக்கொண்ட பிரதமர் மோடி
மத்திய பணியாளர் நலன், அணுசக்தி துறை, விண்வெளி துறை ஆகியவற்றை மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டார் பிரதமர் மோடி. மேலும் முக்கிய கொள்கை விவகாரம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார்.
-
Jun 10, 2024 20:53 ISTதேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு!
தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு!
இரும்பு, கனரக தொழில்கள்துறை - குமாரசாமி
விமான போக்குவரத்துத்துறை - ராம்மோகன் ராயுடு
வணிகம் மற்றும் தொழில்துறை - பியூஷ் கோயல்
கம்யூனிகேஷன், வடகிழக்கு மாநில வளர்ச்சித்துறை - ஜோதிர்த்தியா சிந்தியா
-
Jun 10, 2024 19:57 ISTமோடி புதிய அமைச்சரவை: சற்றுநேரத்தில் அமைச்சர்கள் பட்டியல்
மோடி புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்களின் பட்டியல் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
-
Jun 10, 2024 19:17 ISTமோடி புதிய அமைச்சரவை; யார் யாருக்கு எந்தத் துறை ஒதுக்கீடு?
அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு மீது அனைவரது பார்வையும் உள்ளது
புதிதாக அமைக்கப்பட்ட என்.டி.ஏ அரசின் மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது, இலாகா ஒதுக்கீட்டில் அனைத்து கண்களும் உள்ளன. -
Jun 10, 2024 18:50 IST3 கோடி பிரதமர் ஆவாஸ் கிராமின் வீடுகளுக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்
அதன் முதல் முடிவாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை, கூடுதல் உதவியுடன் 3 கோடி பிரதமர் ஆவாஸ் கிராமின் வீடுகளுக்கு ஒப்புதல் அளித்ததுள்ளது.
-
Jun 10, 2024 18:39 ISTவிஜய், கமலுக்கு நன்றி; நாம் தமிழருக்கு வாழ்த்து: தொல். திருமாவளவன்
“தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற வி.சி.க.வுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து ஆகியோருக்கு நன்றிகள்.
இத்தேர்தலில் எம்மை போல் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்” என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற எமது கட்சிக்கு மனமுவந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் @actorvijay அவர்களுக்கும்; மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் அண்ணன் @ikamalhaasan அவர்களுக்கும் கவிப்பேரரசு அண்ணன் @Vairamuthu… pic.twitter.com/dePWK2A7h8
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 10, 2024 -
Jun 10, 2024 18:21 IST'மக்களின் பிரதமர் அலுவலகமாக' மாற்ற முயற்சி செய்து வருகிறேன் - மோடி
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் தனது முதல் உரையில், நரேந்திர மோடி, “பிரதமர் அலுவலகத்தை ஒரு சேவை நிறுவனமாகவும், மக்களின் பிரதமர் அலுவலகமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில் இருந்தே தனது முயற்சி” என்று கூறினார்.
-
Jun 10, 2024 18:19 ISTஎங்களின் வெற்றிக்காக அரசு ஊழியர்களுக்கு மதிப்பு கிடைக்கும் - மோடி
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் தனது முதல் உரையில் நரேந்திர மோடி, வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்காக தங்களை அர்ப்பணித்த இந்திய அரசின் ஊழியர்களும் தகுதியானவர்கள் என்று கூறினார். இந்த வெற்றியில் பெரும் பங்கு உள்ளது என்று கூறினார்.
-
Jun 10, 2024 18:14 ISTடெல்லியில் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
-
Jun 10, 2024 18:08 ISTநான் பணியாற்றுவதற்காக பிறந்தவன், ஓய்வு எடுப்பதற்காக அல்ல - மோடி பேச்சு
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், பிரதமர் அலுவலக ஊழியர்கள் இடையே பிரதமர் மோடி பேச்சு: “நான் பணியாற்றுவதற்காக பிறந்தவன், ஓய்வு எடுப்பதற்காக அல்ல; பிரதமர் அலுவலகம் மக்களுக்கான அலுவலகமாக இருக்க வேண்டுமே தவிர மோடிக்கான அலுவலகமாக இருக்கக் கூடாது” என்று பேசியுள்ளார்.
-
Jun 10, 2024 18:05 ISTசிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்
பிரேம் சிங் தமாங் சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார். அவருக்கு சிக்கிம் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
Jun 10, 2024 17:37 ISTசென்னையில் ரூ. 33 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல்; இந்தோனேசிய இளைஞர் கைது
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ. 33 கோடி மதிப்பிலான 3.3 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. லாவோஸ் நாட்டில் இருந்து தாய்லாந்து வழியாக போதைப் பொருளைக் கடத்தி வந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 10, 2024 17:19 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க சார்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிமாக நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ புகழேந்தி மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ல் இடைத்தேர்தல் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர்
-
Jun 10, 2024 17:05 ISTகோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற 5 பேர் கைது
கோவையில் ரூ. 2.5 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த அஞ்சலி, மகேஷ் குமார், பூனம் தேவி, மேகா குமாரி, விஜயன் உள்ளிட்ட 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைதான பீகார் தம்பதியிடம் இருந்து 1.5 வயதான ஆண் குழந்தை, பிறந்து 15 நாட்களான பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
-
Jun 10, 2024 16:32 ISTபுதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடக்கம்
புதிதாக சுமார் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடக்கம் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் அறிவித்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது கடந்த மார்ச்சில் நிறுத்தி வைக்கப்பட்டது
-
Jun 10, 2024 15:49 ISTபிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
வீடியோ வழக்கில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா கடந்த 31ம் தேதி கைது செய்யப்பட்டார். 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமின் மனு விசாரணையில் உள்ளது
-
Jun 10, 2024 15:44 ISTஇன்றைய முட்டை கொள்முதல் விலை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 60 காசுகள் உயர்ந்து ஒரு முட்டையின் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
Jun 10, 2024 15:05 IST'தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம் தான்': ஓ.பி.எஸ் பேட்டி
"தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். அதிமுகவினர் ஒன்றிணையாவிட்டால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது.
அண்ணாமலையின் கடின உழைப்பே பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க காரணம். அண்ணாமலை 24 மணி நேரமும் பா.ஜ.க வளர்ச்சிக்காக உழைத்தார்." என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
Jun 10, 2024 15:02 ISTவெள்ளத்தில் சிக்கி திணறிய முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய குழித்துறை தரைப்பாலம் மூடியது. தடையை மீறி பாலத்தில் நடந்து சென்ற முதியவர் வெள்ளத்தில் சிக்கி திணறிய நிலையில், கயிறு மூலம் பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று முதியவருக்கு பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டது. பின்னர், முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் கரைக்கு அழைத்து வந்தனர்.
-
Jun 10, 2024 14:28 ISTஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய சூரியன் புகைப்படம் வெளியீடு
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் ஏற்பட்ட சூரியப் புயலின் போது விண்கலம் எடுத்த புகைப்படம். சூரியனில் ஏற்படும் காந்த விசை புயலுக்கு எக்ஸ் மற்றும் எம் வகை சூரிய கதிர்கள் தான் காரணம். சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்களுடன் எக்ஸ், எம் வகை சூரிய கதிர்களுக்கு தொடர்பு" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
Jun 10, 2024 14:24 ISTகள்ளக்குறிச்சி - திடீரென தீப்பிடித்த கார்
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் ஒன்று தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேகமாக பற்றி எரிந்த நெருப்பு கார் முழுவதும் பரவி சேதமானது. காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சுபநிகழ்வில் பங்கேற்க காஞ்சிராங்குளத்திற்கு புறப்பட்ட போது, கார் தீ பற்றி எரிந்துள்ளது.
-
Jun 10, 2024 14:22 IST4 மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வு - கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கு இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வு நடைபெறும் என்றும், நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்றும் இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 10, 2024 13:37 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு .விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது" ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
-
Jun 10, 2024 13:26 ISTமத்திய அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற அமித்ஷாவுக்கு யோகி ஆதித்யநாத் வாழ்த்து
மத்திய அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
-
Jun 10, 2024 13:16 ISTவெளியுறவுத் துறையை தக்கவைக்கும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
வெளிநாட்டு தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருடன் சந்திப்பு . மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து ஜெய்சங்கர் ஆலோசனை . பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை வெளியுறவு துறையின் அமைச்சர்கள் தான் சந்தித்து பேசுவது வழக்கம் துறை ஒதுக்காத நிலையில், வெளிநாட்டு தலைவர்களை ஜெய்சங்கர் சந்திப்பதால் வெளியுறவுத்துறையை மீண்டும் தக்க வைப்பது உறுதியாகி உள்ளது.
-
Jun 10, 2024 13:09 IST40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற புதிய நடைமுறை
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு பதிவு பெற்ற மருத்துவரின் மருத்துவச் சான்று கட்டாயம். தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவு 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவும் இந்த நடைமுறை பொருந்தும். போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை. "தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை பயன்படுத்தி, மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியும்"
-
Jun 10, 2024 12:40 ISTஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும் ஜூன் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
-
Jun 10, 2024 12:08 ISTவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு .ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.
-
Jun 10, 2024 12:08 ISTவிவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி
விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி. 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20,000 கோடி தொகையை விடுவித்தார் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 17வது தவணையை விடுவிக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி.
-
Jun 10, 2024 11:27 ISTதிருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட்
திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட். அதிமுக முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர் வைத்த நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான தடகளப் போட்டி நடந்தது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன இந்த சம்பவத்தின் காரணமாக, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Jun 10, 2024 10:53 ISTதங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040 விற்பனை, கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,630க்கு விற்பனை
-
Jun 10, 2024 10:37 ISTமாணவர்களுக்கு பாராட்டு விழா: விஜய்யின் த.வெ.க அறிவிப்பு
10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஜுன் 28, ஜூலை 3 என இரு கட்டங்களாக பாராட்டு விழா நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகம்
அறிவிப்பு. மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி தவெக தலைவர் விஜய்
கெளரவிப்பார் என புஸ்ஸி ஆனந்த் அறிக்கை -
Jun 10, 2024 10:21 ISTபரந்தூர் விமான நிலையம்: நிலம் கையப்படுத்த அறிவிப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பு.
முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
நிலம் குறித்த பாத்தியதை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு
-
Jun 10, 2024 10:21 ISTபரந்தூர் விமான நிலையம்: நிலம் கையப்படுத்த அறிவிப்பு
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பு.
முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
நிலம் குறித்த பாத்தியதை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு
-
Jun 10, 2024 09:44 IST4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.
-
Jun 10, 2024 09:41 ISTபொறியியல் படிப்பு: அவகாசம் நீட்டிப்பு
பொறியியல் படிப்புக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். 2024-25-ம் கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கை விண்ணப்ப பதிவு மே 6 முதல் ஜுன் 6 வரை நடைபெற்றது. இதில் விண்ணபிக்கத் தவறிய மாணவர்கள் இன்றும், நாளையும் TNEA ஆன்லையில் தளத்தில் விண்ணப்பிக்கலாம்
-
Jun 10, 2024 09:34 ISTகுரூப் 4 தேர்வில் 15.8 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 15.8 லட்சம் பேர் பங்கேற்பு. 4.48 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை எனத் தகவல். 6244 பணியிடங்களுக்கு 20.36 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
-
Jun 10, 2024 09:33 ISTமாணவர்களுக்கு 2 கட்டங்களாக பரிசுகளை வழங்க விஜய் திட்டம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பரிசுகளை வழங்க விஜய் திட்டம். இம்மாத இறுதியில் ஒரு நாளும், ஜூலை மாதத்தில் ஒரு நாளும் என 2 கட்டங்களாக நிகழ்ச்சிகளை நடத்த திட்டம். பொதுத் தேர்வில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுகளை வழங்கும் விஜய்
-
Jun 10, 2024 08:22 ISTதி.மு.க முப்பெரும் விழா: தேதி, இடம் மாற்றம்
முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றம்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த விழா கொடிசியா மைதானத்திற்கு இடமாற்றம்.
14ம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி 15ம் தேதிக்கு மாற்றம். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முப்பெரும் விழா கொண்டாட முடிவு. போக்குவரத்து நெரிசல், பருவமழை காரணங்களால் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்
-
Jun 10, 2024 08:20 ISTஇன்று பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறப்பு. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், சீருடைகளை இன்றே வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.