/tamil-ie/media/media_files/uploads/2022/07/eps-general-secretary.jpg)
Tamil news updates
பெட்ரோல்,டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
5ஜி சேவை
டெல்லியில் ஆகஸ்ட்டு 1ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. முதற்கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுகிறது.
லாஸ் வேகாஸ் நகரில் பொன்னியின் செல்வன்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மணிரத்தனம் இயக்கிய அடுத்த வாரம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:49 (IST) 25 Sep 2022நாளை மறுநாள் புதுச்சேரியில் பந்த் அறிவிப்பு
தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக புதுச்சேரியில் நாளை மறுநாள் திட்டமிட்டபடி பந்த் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் தெரிவித்துள்ளார்
- 21:12 (IST) 25 Sep 2022வடகிழக்கு பருவமழை - நாளை முதல்வர் ஆலோசனை
சென்னை கலைவாணர் அரங்கில் நாளை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்
- 20:46 (IST) 25 Sep 2022டிம் டேவிட், கிரீன் அதிரடி; இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்கு
டி20 இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது
- 20:13 (IST) 25 Sep 2022அக்டோபர் 9-ம் தேதி தி.மு.க பொதுக்குழு
சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அதற்கான முடிவுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
- 19:52 (IST) 25 Sep 2022ஆஸ்திரேலியா 10 ஓவர்கள் முடிவில் 86/4
ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது
- 19:31 (IST) 25 Sep 2022பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மிரட்டும் விதமாக பேசி வருகிறார் - ஷேக் அன்சாரி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மிரட்டும் விதமாக பேசி வருகிறார். பா.ஜ.க.,வினரே பெட்ரோல் குண்டு வீசி விட்டு, பாதுகாப்பு தேடி வருகின்றனர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை முஸ்லிம்களை நோக்கி திருப்பி விடாதீர்கள். உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என பி.எஃப்.ஐ தமிழக தலைவர் ஷேக் அன்சாரி தெரிவித்துள்ளார்
- 19:14 (IST) 25 Sep 2022டி20 இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- 19:07 (IST) 25 Sep 2022கோவை குனியமுத்தூர் வன்முறை - இருவர் கைது
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் மண்ணெணெய் பாட்டில் வீசிய சம்பவத்தில் குற்றவாளிகள் இலியாஸ், ஏசுராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது
- 18:41 (IST) 25 Sep 2022பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; தமிழக அரசிடம் அறிக்கை கேட்பு - மத்திய அமைச்சர்
தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
- 18:29 (IST) 25 Sep 2022படகு கவிழ்ந்து விபத்து - 23 பேர் பலி
வங்கதேசத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
- 18:01 (IST) 25 Sep 2022ஜனநாயகத்திற்கு எதிராக கைது நடவடிக்கை; பி.எஃப்.ஐ தமிழக தலைவர் ஷேக் அன்சாரி பேட்டி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஷேக் அன்சாரி பேட்டி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்ய எந்த ஆதாரமும் இல்லை; ஜனநாயகத்திற்கு எதிராக கைது நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள என்று கூறினார்.
- 17:29 (IST) 25 Sep 2022பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - அரசிடம் அறிக்கை கேட்பு - மத்திய அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா
தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
- 16:49 (IST) 25 Sep 2022பா.ஜ.க தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை விரும்பவில்லை - அண்ணாமலை பேட்டி
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி: “சட்டம்-ஒழுங்கு சீர்குலைய கோவை மாநகர காவல்துறையே காரணம். காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும். கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன். பா.ஜ.க தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வன்முறையை பாஜக விரும்பவில்லை” என்று கூறினார்.
- 16:45 (IST) 25 Sep 2022ராஜஸ்தான் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்துக்கு இன்னும் நேரம் இருக்கிறது; காங். எம்.எல்.ஏ.க்கள் தகவல்
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மாநில பொறுப்பாளர் அஜய் மாக்கன் ஆகியோரை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்புவது அல்லது அடுத்த முதல்வரின் பெயரை முடிவு செய்வதற்கு முன் எம்.எல்.ஏ.க்களின் கருத்தை கேட்டறிவது போன்ற நடைமுறை காங்கிரஸ் தரப்பில் இருந்து வருகிறது. மாநிலத்தில், பல கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெயரை ஏற்கனவே கட்சி தலைமை முடிவு செய்துவிட்டதாக நம்புகிறார்கள். அவர்கள் சம்மதத்துடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
முதல்வர் அசோக் கெலாட் அடுத்த காங்கிரஸ் தலைவராக வரவுள்ளதால், அவருக்கு அடுத்து முதல்வர் யார் என்று முடிவு செய்ய ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது இல்லத்தில் முக்கியமான காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
- 16:40 (IST) 25 Sep 2022ஓமலூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்தவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்திற்கும் மேல் இழந்ததால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி. தனியார் லாட்ஜில் விஷம் அருந்தி மயங்கி கிடந்த நிலையில் கணவன், மனைவி, குழந்தை என 3 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- 15:55 (IST) 25 Sep 2022பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை
ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 15:54 (IST) 25 Sep 2022பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை
ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 15:27 (IST) 25 Sep 2022விழுப்புரம், 50 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து
திண்டிவனம் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 50 பயணிகள் காயமுற்றனர்.
காயமுற்ற பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
- 15:16 (IST) 25 Sep 2022அரசியலில் இருந்து விலகத் தயார்- செல்லூர் ராஜூ
கூட்டுறவுத் துறையில் ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
- 15:01 (IST) 25 Sep 2022சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர்!
சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயரை சூட்டி பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
- 15:01 (IST) 25 Sep 2022அரசியலில் இருந்து விலகத் தயார்- செல்லூர் ராஜூ
கூட்டுறவுத் துறையில் ஊழல் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
- 15:01 (IST) 25 Sep 2022கோவை பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு
கோவையில் நாளை நடைபெறவிருந்த பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கோவையில் ஆ. ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக அனுமதி கோரியிருந்தது.
- 14:05 (IST) 25 Sep 2022முதலமைச்சர் விழித்துக் கொள்ள வேண்டும்: கு. அண்ணாமலை
கோவை மாவட்டத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தொண்டர்கள் நிர்வாகிகள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை.
இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விழித்துக் கொள்ள வேண்டும் என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
- 14:01 (IST) 25 Sep 202250 ஆயிரம் கிலோ காய்கறி விற்பனை
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சேலம் ஆத்தூரில் உள்ள உழவர் சந்தையில் 50 கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
- 13:30 (IST) 25 Sep 2022பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவ குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவர் - டிஜிபி சைலேந்திரபாபு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவ குற்றவாளிகளில் பெரும்பாலானோர் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவர் - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உறுதி
உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளும் அளவு மோசமான சூழல் இல்லை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர் - டிஜிபி சைலேந்திர பாபு
- 13:12 (IST) 25 Sep 2022தனது படங்களை மார்பிங் செய்து பரப்புவதாக நடிகை லஷ்மி வாசுதேவன் கண்ணீர்
தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்புவதாக சீரியல் நடிகை லஷ்மி வாசுதேவன் கண்ணீர்
ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருப்பதாக கூறி, நண்பர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவதாக புகார்
மார்பிங் செய்த புகைப்படங்களை தனது அம்மாவிற்கும் மர்ம நபர்கள் அனுப்புவதாக நடிகை கண்ணீர்
செல்போனிற்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததால் போன் ஹேக் செய்யப்பட்டதாகவும் புகார்
கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ள சீரியல் நடிகை லஷ்மி வாசுதேவன்
- 12:52 (IST) 25 Sep 2022விழுப்புரம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் மயிலம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம்
- 12:52 (IST) 25 Sep 2022அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் தர்ணா
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தரையில் அமர்ந்து தர்ணா
தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தி மாவட்ட செயலாளரை நியமிக்க கோரிக்கை
- 12:13 (IST) 25 Sep 2022தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கன்னியாகுமரி கருமண்கூடலில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கன்னியாகுமரி: கருமண்கூடல் பகுதியில் கல்யாணசுந்தரம் என்ற தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
- 12:13 (IST) 25 Sep 2022சண்டிகர் விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்
சண்டிகர் விமான நிலையத்திற்கு வரும் 28ஆம் தேதி பெயர் மாற்ற முடிவு. பகத்சிங் பிறந்தநாளை ஒட்டி சண்டிகர் விமான நிலையத்திற்கு, அவரது பெயரை சூட்ட முடிவு - பிரதமர் மோடி
- 11:34 (IST) 25 Sep 2022சிறுத்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர் - மோடி யோசனை
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர் சூட்டலாம் என பிரதமர் மோடி யோசனை.
பொதுமக்கள் 'மை காவ்' இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சிறுத்தைகள் குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி உரை
- 11:31 (IST) 25 Sep 2022டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களை தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
- 10:36 (IST) 25 Sep 2022தமிழகம் முழுவதும் இன்று 38வது மெகா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் இன்று 38வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைப்பெற்று வருகிறது
- 10:36 (IST) 25 Sep 2022வேட்புமனு மீது திமுக தலைமை நாளை, நாளை மறுநாள் பரிசீலனை
திமுக மாவட்ட அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட திமுகவின் நிர்வாக ரீதியான 16 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் . வேட்புமனு மீது திமுக தலைமை நாளை, நாளை மறுநாள் பரிசீலனை
- 09:51 (IST) 25 Sep 2022பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
எண்ணற்ற சமூக நீதி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம் . அனைத்து சமூகத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான், திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் - கனடாவில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- 09:50 (IST) 25 Sep 2022ரேசன் ஊழியர்கள், அரிசியை விற்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் மீது கைது நடவடிக்கை . ரேசன் ஊழியர்கள், அரிசியை விற்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் - ராதாகிருஷ்ணன்
- 09:50 (IST) 25 Sep 2022சோனியா காந்தி உடன் நிதிஷ் குமார் இன்று சந்திப்பு
டெல்லியில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடன் நிதிஷ் குமார், லாலு பிரசாத் இன்று சந்திப்பு
- 09:49 (IST) 25 Sep 2022பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி சாமி தரிசனம்
அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்து வரும் பக்தர்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடி வரும் பக்தர்கள் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி சாமி தரிசனம்
- 09:49 (IST) 25 Sep 2022சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல். நாட்டின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக பரவும் சமூக வலைதள வீடியோக்களால் பரபரப்பு
- 09:48 (IST) 25 Sep 2022அண்ணாமலை கடிதம்
தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் உள்ளன - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.