பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 190-பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 31.1% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 29.96% ;
புழல் - 64.97% ; பூண்டி - 1.98% ; சோழவரம் - 5.36% ; கண்ணன்கோட்டை - 59.6%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Sep 23, 2024 23:26 ISTஉறுதியாக முதலீடாக மாறும் ஒப்பந்தங்கள் மட்டுமே பலன் தரும்; இ.பி.எஸ்-க்கு ஏன் தெரியவில்லை - டி.ஆர்.பி. ராஜா கேள்வி
தொழில், முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிக்கை: “முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போதே, முதலீடுகள் வருவதாக பல மாநிலங்கள் அறிவிக்கின்றன. ஆனால், பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியாக முதலீடு வந்து சேரும் என கணித்த பிறகே, தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போடுகிறது. இதனாலே, எம்.ஓ.யு நிறைவேறும் விகிதம் மற்ற மாநிலங்களைவிட நமக்கு அதிகம். நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்களை எல்லோராலும் போட முடியும். ஆனால், உறுதியாக முதலீடாக மாறும் ஒப்பந்தங்கள் மட்டுமே பலன் தரும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் தெரியவில்லை. KIA ஆலை ஆந்திராவுக்கு போனதே, அ.தி.மு.க அரசின் லட்சனத்திற்கு உதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 23, 2024 21:47 ISTசிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும்; கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Sep 23, 2024 21:44 ISTபுதுக்கோட்டை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு முடக்கம் - சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
புதுக்கோட்டை ஆட்சியர் அருணா பெயரில் போலி முகநூல் கணக்கு வைத்திருந்தனர்; ஆட்சியர் அருணா பெயரில் போலி முகநூல் கணக்கை சைபர் கிரைம் போலீஸ் முடக்கியுள்ளது.
-
Sep 23, 2024 21:30 ISTதனியார் ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு வைக்க போக்குவரத்து காவல்துறை தடை
சென்னையில் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ (No Parking) அறிவிப்பு பலகை வைக்க போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 116-ன் படி போக்குவரத்து பலகை வைக்க அதிகாரிகளுக்கே அதிகாரம். அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ (No Parking) அறிவிப்பு பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
-
Sep 23, 2024 20:34 ISTஜம்மு காஷ்மீர் தேர்தல்: குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித் தொகை - ராகுல் காந்தி வாக்குறுதி
ஜம்மு காஷ்மீர் தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதிகளை அறிவித்தார். “ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும்; குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித் தொகை, சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்; குடும்ப ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும்; ஒவ்வொரு தாலுகாவிற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல் கிளினிக் தொடங்கப்படும்; காஷ்மீர் பண்டிட்களுக்கான மன்மோகன் சிங் திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும்; ஜம்மு காஷ்மீரில் காலியாக உள்ள 1 லடம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒவ்வொரு நபருக்கும் 11 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும்” என்று கூறினார்.
-
Sep 23, 2024 20:27 ISTநெல்லையில் பூணூல் அறுக்கப்பட்டதாக சொல்வது வெறும் கற்பனை; அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை - காவல்துறை
நெல்லையில் இளைஞர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், இந்த சம்பவம் உண்மையல்ல, வெறும் கற்பனை என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.
போலிசார் விசாரணையில், இளைஞர் கூறுவது போல் அந்த நேரத்தில் எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை; பூணூல் அறுக்கப்பட்டதாக இளைஞர் தெரிவித்த நேரத்தில், சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இது போன்று ஒரு சம்பவம் நிகழவேயில்லை என்று தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Sep 23, 2024 19:59 ISTமீனவர், தமிழக நலனில் கடிதத்துடன் நிறுத்திக் கொள்வது ஏன்? எங்கே சென்றார்கள் 40 எம்.பி.க்கள்? - இ.பி.எஸ் கேள்வி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மீனவர் நலனுக்கோ, தமிழக நலனுக்கோ ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்வது ஏன் என்று கடிதத்துடன் நிறுத்திக் கொள்வது ஏன்? எங்கே சென்றார்கள் 40 எம்.பி.க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் தமிழக மீனவர்கள். இனியாவது மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Sep 23, 2024 19:14 ISTரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் - மாஜிஸ்திரேட் ஆய்வு
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் சோழிங்கநல்லூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் ஆய்வு செய்தார். உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினார்
-
Sep 23, 2024 18:59 ISTதிருப்பதி லட்டு சர்ச்சை; திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரிக்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ்
திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த நெய் கம்பெனிக்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஏ.ஆர்.டைரி நிறுவனத்தில், கடந்த சனிக்கிழமை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Sep 23, 2024 18:33 ISTடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு ஆன்சர் கீ வெளியீடு
செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதனிலைத் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
-
Sep 23, 2024 18:14 ISTலட்டு சர்ச்சை; திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சபதம்
லட்டு பிரசாதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, உனது நைவேத்தியம், சர்வதேச புகழ்பெற்ற லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்திருந்தால் நானும், என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும் என்று சபதம் செய்துள்ளார். ஏழுமலையான் கோவில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன், கோவில் எதிரில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த கருணாகர ரெட்டி கருணாகர ரெட்டியை, போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஜெகன் மோகன் ஆட்சி, அவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஆட்சிகளில் 2 முறை அறங்காவலர் குழு தலைவராக இருந்தவர் கருணாகர ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
-
Sep 23, 2024 18:01 ISTமத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென சந்தித்த காங்கிரஸ் எம்.பி.,
கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகன் காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸை சந்தித்தார். அப்போது மத்திய அமைச்சரின் அறைக்குள் சென்று காங்கிரஸ் எம்.பி நலம் விசாரித்தார். சாப்பிடுமாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு விடுத்த நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ் சாப்பிட்டு வந்ததாக கூறினார். காங்கிரஸ் எம்.பி., திடீரென பா.ஜ.க அமைச்சரை சந்திக்க வந்ததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால், நமது ஊருக்கு வந்த மத்திய அமைச்சரை சந்திக்க வந்ததாக காங்கிரஸ் எம்.பி. கூறினார்
-
Sep 23, 2024 17:21 ISTசேற்றில் சிக்கிய மத்திய அமைச்சர் கார்
ஜார்கண்ட் மாநிலம் பஹரகோராவிற்கு பிரசாரத்திற்காக சென்றபோது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகானின் கார் சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளானது
-
Sep 23, 2024 17:14 ISTலெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 50 பேர் மரணம்
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக்கியுள்ள நிலையில், 50 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தது. தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
-
Sep 23, 2024 16:43 ISTஅமைதி பேரணிக்கு அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். வழக்கு
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, அனுமதி கோரிய மனுக்களை பரிசீலித்து வருகிறோம்என காவல்துறை பதில் அளித்துள்ள நிலையில், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும், பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை என மனுதாரர்கள் தரப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 23, 2024 16:41 ISTகள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்: 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சடையன், வேலு, கெளதம் ஆகிய 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஷச்சாராய சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் முழுவீச்சில் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 23, 2024 16:38 ISTநர்சிங் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியை, இன்று காலை பழைய பேருந்து நிலையம் அருகே காரில் கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத சிலர் பாலியல் வன்கொடுமை செய்து திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டுச் சென்றதாக, அம்மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாணவியிடம் போலீசார் விசாரணை. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அந்த நபர்கள் மற்றும் காரை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம்
-
Sep 23, 2024 14:35 ISTகுட்கா முறைகேடு வழக்கு - விஜயபாஸ்கர், பி.வி.ரமணா நேரில் ஆஜராக உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் பெற அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் 250 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் என சுமார் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட நகல்கள் தாக்கல் செய்யப்பட்டது.
கூடுதல் குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொள்வதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Sep 23, 2024 13:36 ISTசி.வி.சண்முகம் மன்னிப்பு கோர உத்தரவு
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Sep 23, 2024 13:18 IST97வது ஆஸ்கர் விருதிற்கு 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரை
மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா படங்களை பரிந்துரைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 23, 2024 13:07 ISTசில்க் ஸ்மிதா பிறந்த நாள் - அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்
ஈரோட்டில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளையொட்டி, அவரின் தீவிர ரசிகர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
டீக்கடை வைத்திருக்கும் இவர், தனது கடை முழுவதும் நடிகையில் புகைப்படங்களால அலங்கரித்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளுக்கும் நினைவும் நாளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருவதாக நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
-
Sep 23, 2024 13:04 ISTநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை
சென்னையைச் சேர்ந்த இளைஞர் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்ததை எதிர்த்து குழந்தைகள் உரிமை அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல; அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் தவறு' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பிற்கு தடை விதித்தது.
மேலும், "ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக Child Sexual and Exploitative and Abuse Material பயன்படுத்தும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். குழந்தைகள் ஆபாச படம் என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது" என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
-
Sep 23, 2024 13:02 ISTசத்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.
தியாகராயர் நகரில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடி சொத்து சேர்த்ததாகவும், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 35 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை எனவும், வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரி இருந்தார்.
-
Sep 23, 2024 13:01 ISTஎஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் - சரண் கோரிக்கை
மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கடைசி வரை வாழ்ந்த காம்தார் நகரினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் கோரிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Sep 23, 2024 12:41 ISTலட்டுவில் தப்பு நடக்கவில்லை - முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு
"திருப்பதி தேவஸ்தானம் குழுவில் உள்ள பாஜகவினர் ஏன் இவ்வளவு நாள் மோடி அமித்ஷா ஆகியோரிடம் புகார் சொல்லவில்லை. சந்திரபாபு நாயுடு தன் சுயநல அரசியலுக்காக கடவுளையும் பயன்படுத்துகிறார். லட்டுவில் தப்பு நடக்கவில்லை, சந்திரபாபு நாயுடு தவறு செய்துள்ளார் என்ற பயத்தில் பவன் கல்யாண் இன்று 11 நாள்கள் விரதம்" என்று முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
-
Sep 23, 2024 12:39 ISTகண்டலேறு அணையில் இருந்து நீர் திறப்பு
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாட்டு எல்லையான ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தது. தமிழ்நாட்டு எல்லைக்கு வந்தடைந்த நீரை கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் மலர் தூவி வரவேற்றார்
-
Sep 23, 2024 12:37 ISTலட்டு தயாரிக்கும் இடத்தில் புனித நீர் தெளிப்பு
திருப்பதியில் பூந்தி, லட்டு தயாரிக்கும் இடம் மற்றும் லட்டு விநியோகிக்கும் இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டுள்ளது. லட்டு சர்ச்சையை தொடர்ந்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் திருப்பதியில் மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. மகா சாந்தி ஹோமத்திற்கு பின் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் வளாகத்தில் தெளிக்கப்பட்டு வருகிறது.
-
Sep 23, 2024 11:52 ISTசீசிங் ராஜாவுக்கு தொடர்பு இல்லை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இல்லை. வேளச்சேரி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டியதாக சீசிங் ராஜா மீது வழக்கு உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் வைத்து சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு மற்றும் 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என தெரியவந்துள்ளது என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி கூறினார்.
-
Sep 23, 2024 11:27 ISTடைடல் பூங்காக்களை திறந்து வைத்தார்
தமிழகத்தில் 3 இடங்களில் மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.50 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்கா. சேலம் ஆனைகவுண்டன்பட்டி, கருப்பூரில் ரூ.29.50 கோடியில் மினி டைடல் பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டது.
-
Sep 23, 2024 11:25 ISTகுழந்தைகள் ஆபாச படம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
"போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம்" - உச்சநீதிமன்றம்
குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த நபரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
-
Sep 23, 2024 11:00 ISTஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை
ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை, தொடக்கக் கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆசிரியர் சங்கங்கள் சார்பில் 12 பேர் பங்கேற்பு.
வரும் 30, அக்.1ஆம் தேதிகளில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ள டிட்டோ ஜாக் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளனர்.
-
Sep 23, 2024 10:38 ISTஅனுரா குமார திசநாயகே பதவியேற்பு
அனுரா குமார திசநாயகே அதிபராக பதவியேற்றார். இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே, கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழா. புதிய அதிபரின் கீழ் 15 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
-
Sep 23, 2024 09:32 ISTமது ஒழிப்பு மாநாடு - ஆளுங்கட்சிக்கு நெருக்கடி
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்பது தெரியும். ஆனால் மக்கள் நலன் தான் முக்கியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
Sep 23, 2024 08:40 ISTமேலும் 5 மீனவர்கள் கைது
தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை படகுடன் சேர்த்து கைது செய்தனர். ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Sep 23, 2024 08:25 ISTசெய்யாத குற்றத்திற்காக கொலை
சென்னையில் இன்று அதிகாலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா. ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள், "செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே" என கதறி அழுத மகள், ராயப்பேட்டை பிணவறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Sep 23, 2024 07:43 ISTமினி டைடல் பூங்கா - இன்று திறப்பு விழா
தஞ்சை, சேலம் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
Sep 23, 2024 07:43 ISTதிருப்பதியில் சிறப்பு ஹோமம்
லட்டு பிரசாத சர்ச்சையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா சாந்தி ஹோமம் நடத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம், மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு இன்று சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.