News In Tamil : தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை திட்டங்களுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்குக் காணொளி வாயிலாக நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல் பிரிவு ஆகியவற்றைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.68-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.85.01-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.93.40-க்கும், டீசல் ரூ.86.66-க்கும் விற்பனை ஆகிறது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வந்த நிலையில், அங்குக் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். இப்படி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் புதுச்சேரியில் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று புதுச்சேரிக்கு வருகை தருகிறார். காலையில் சோலை நகர் மீனவர்களுடன் கலந்துரையாடிவிட்டு பிறகு, பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை AFT மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்திலும் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரை ஒரு மில்லியன் கன அடி அளவிற்கு சுத்திகரிப்பு செய்யும் மையம் , ராணிபேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தபடி, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “பெங்களூரு மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்” என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights
அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் என் பெயரில் மட்டுமல்ல.. என் உயிரிலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரிக்கு ஆளுநராக வந்துள்ளேன் என இருமுறை அழுத்தி கூறினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம் நாளை காலை12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு
சிறிய மாநிலமாக இருந்தாலும் புதுச்சேரி முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம். இந்தியாவில் உள்ள பல மொழிகள், கலாச்சாரங்கள் நாட்டை வலிமையாக வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமையை பாதுகாக்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய 85% எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாடு, வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கவுளளதாகவும் பிதரமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார் மேலும் சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்
நாகை பனங்குடியில் அமைய உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டது
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக திமுக எம் பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை சிம்மக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிடியின் வெண்கலச் சிலையை திறந்து வைத்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் சிலை அமைக்க அரசு பல்வேறு தடைகளை விதித்தது. சட்ட போராட்டம் நடத்தி மதுரையில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சிலையை திறக்க சட்ட போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி. இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறபோகிறது” என்று கூறினார்.
மதுரையில் உள்ள சிம்மக்கல் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதி சிலை பீடம் மற்றும் சிலை என மொத்தம் 23 டன் எடை கொண்டது. சிலையை உருவாக்கிய சிற்பி தீனதயாளனுக்கு மு.க.ஸ்டாலின் மோதிரம் அணிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, தற்போது தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் நாளை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்கிறார்.
திருச்செந்தூரில் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: “தேர்தல் முடிந்தால் வாக்குறுதிகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். தேர்தல் நேரத்தில் தரப்படும் வாக்குறுதிகளை அதிமுக உடனே நிறைவேற்றும். ஏழை மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி அதிமுகதான்.” என்று கூறினார்.
பிப்ரவரி மாதம் 25ம் தேதி அன்று புதுவை வருகிறார் நரேந்திர மோடி. புதுவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் மோடியின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். வாக்குச்சாவடிகள், வாக்காளர் பட்டியல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் பேசி வருகிறார். கட்சியின் துவக்க விழா, விருப்ப மனு விநியோகம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அறிவிப்பு.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக ராகுல்காந்தி புதுச்சேரி வந்துள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சிறப்பு வரவேற்பு அளித்துள்ளனர். முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்திருப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார்.
மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல், மத்திய அரசின் பட்டியலில் இருந்து வேறுபட்டிருக்கலாம் என்றும் மாநில அரசுப்பணி, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பது மாநில அரசு சார்ந்த விஷயம் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டூ பிளஸ்சிஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
பொதுத்தேர்வு அட்டவணையை தயாராக வைத்திருந்ததாகவும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என்றும் திடீர் தேர்வு அறிவிப்பு குறித்து செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
மே 3 முதல் 21ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மே 3 - மொழித்தாள், மே 5 - ஆங்கிலம், மே 7 - கணினி அறிவியல், மே 11 - இயற்பியல் தேர்வு, மே 17 - கணிதம், மே 19 - உயிரியல், மே 21 - வேதியியல் தேர்வு நடைபெறும்.
"புதுச்சேரி துணை நிலை ஆளுநராக அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்பட்டேன். இங்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றி. புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அது தற்போது மக்களின் கைகளில்தான் இருக்கிறது" என துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரண்பேடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலூரைச் சேர்ந்த ரவுடி வீரா நேற்று தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலை வழக்கில் கிருஷ்ணன் என்பவரை கைது செய்ய சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு கிருஷ்ணன் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நிகழ்த்தப்பட்ட என்கவுன்ட்டரில் கிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டார். கிருஷ்ணன் தாக்கியதில் போலீஸ் எஸ்.ஐ. ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.