/tamil-ie/media/media_files/uploads/2023/06/senthill.jpg)
செந்தில் பாலாஜி
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் மழை
ஒரே நாளில் சென்னையை புரட்டிப்போடும் மழை..சென்னை தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை.
விளையாட்டு
டிஎன்பிஎல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:11 (IST) 20 Jun 2023செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை : தமிழக சுகாதாரத்துறை தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் நாளை அதிகாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதயத்தில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- 21:06 (IST) 20 Jun 2023பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’
இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112 , 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் என தமிழ்நாடு காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது!
- 20:10 (IST) 20 Jun 20231500 பேரின் சொத்துக்களை முடக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
நிதி மோசடி நிறுவனங்களுக்கு முகவர்களாக செயல்பட்ட 1500 பேரின் சொத்துக்களை முடக்கும் பணியினை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். முதலீட்டு நிறுவனங்களில் ஆரம்ப காலங்களில் சேர்ந்து பெரும் லாபம் அடைந்த முதலீட்டாளர்களிடமிருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு டிஜிபி அறிவுறுத்தல்!
- 19:45 (IST) 20 Jun 2023கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர் - அண்ணாமலை
கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர். கைது செய்தால் தான் கட்சி வளரும்" "ஒரு நாள் சிறைக்குப் போனால் ஒரு வருட கட்சி பணியை செய்தது போலாகும் என பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்
- 19:39 (IST) 20 Jun 2023பீகார் முதல்வரின் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் முடிவு
பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23-ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டியிருக்கும் பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு காவி கட்சியை எதிர்க்கும் கட்சிகளின் கரங்களை வலுப்படுத்தப் போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 19:31 (IST) 20 Jun 2023ஆருத்ரா வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை
ஓரிரு நாட்களில் 3,000 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு
- 19:30 (IST) 20 Jun 2023ஆருத்ரா வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை
ஓரிரு நாட்களில் 3,000 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு
- 19:29 (IST) 20 Jun 2023தற்கொலைக்கு முயன்ற மாணவி மீட்பு
சிவகங்கை, காரைக்குடியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 12ம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து தொங்கியதால் பரபரப்பு பத்திரமாக மீட்டு அறிவுரை கூறி பொற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
- 19:04 (IST) 20 Jun 2023தற்கொலைக்கு முயன்ற மாணவி மீட்பு
சிவகங்கை, காரைக்குடியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 12ம் வகுப்பு மாணவி மீட்கப்பட்டார்.
முன்னதாக, மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பத்திரமாக மீட்டு அறிவுரை கூறி பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- 18:52 (IST) 20 Jun 2023எல். முருகன் பொய் கூறுகிறார்: நாராயண சாமி தாக்கு
புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில், மாநில காங்கிரஸ் கமிடிட்டியின் புதிய தலைவர் பொறுப்பேற்பு விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயும், சட்டமன்றம் கட்ட 600 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பொய்யை கூறியுள்ளதாக குற்றம் சாட்டினார். பாஜகவினர் நாகப் பாம்பை விட கொடியவர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
- 18:25 (IST) 20 Jun 2023ஆபாச நடனம்: வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
கோவில் விழாக்களில் ஆபாச நடனங்கள் நடைபெற்றால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- 18:15 (IST) 20 Jun 2023லியோ படத்தின் "நா ரெடி" பாடல் புரோமோ வெளியீடு
விஜய்யின் பிறந்த நாளான வரும் 22ஆம் தேதி நா ரெடி பாடல் வெளியாகிறது. இந்த "நா ரெடி" பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ளார். தற்போது அதன் புரோமோ வெளியீடப்பட்டுள்ளது.
- 17:55 (IST) 20 Jun 2023செந்தில் பாலாஜி மனைவி புகார்: அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- 17:35 (IST) 20 Jun 2023பா.ஜ.க பரப்பிவரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பரப்பிவரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்கும் கடமை நமக்கு இருக்கிறது. மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கேடாக முடியும் என திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- 17:15 (IST) 20 Jun 2023சமூக நீதியை நிலை நாட்டி, நாட்டையே பேச வைத்தவர் கலைஞர் - தேஜஸ்வி யாதவ்
சமூக நீதியை நிலை நாட்டி, நாட்டையே பேச வைத்தவர் கலைஞர் என கலைஞர் கோட்ட திறப்பு விழா நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்
- 17:02 (IST) 20 Jun 2023சுவாமிநாதன் ஜானகிராமன், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம்
எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ள சுவாமிநாதன் ஜானகிராமன், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
- 16:56 (IST) 20 Jun 2023லியோ பட பாடல் ப்ரோமோ, இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் - படக்குழு
லியோ படத்தின் NAA READY பாடலின் ப்ரோமோ, இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
- 16:38 (IST) 20 Jun 2023சென்னை பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ20,000-ல் இருந்து ரூ30,000-ஆகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் ரூ.15,000-லிருந்து ரூ.20,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2023-24ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
- 15:47 (IST) 20 Jun 2023திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- 15:25 (IST) 20 Jun 2023ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கு; 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ரூ.2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில், 3000 பக்க குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர். இவ்வழக்கில் இதுவரை பாஜக நிர்வாகி ஹரீஷ் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 22 கார்கள், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.96 கோடி டெபாசிட், ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன
- 15:14 (IST) 20 Jun 2023நாளை 11ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் – தேர்வுத்துறை
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
- 14:48 (IST) 20 Jun 2023‘பா.ஜ.க-விற்கும் சீமானுக்கும் ஒரு விஷயம் ஒத்துப்போகிறது’ - அண்ணாமலை
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பீகாரில் இருப்பவர்கள் பிழைப்பு தேடி தமிழகம் வருவதாக பேசும் திமுகவினர்தான், பீகார் முதல்வரை வைத்து கலைஞர் கோட்டத்தை இன்று திறக்க இருப்பதாகக் கூறினார்.
மேலும், சிமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே அடிப்படையில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நிறைய சித்தாந்த வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் ஒரு புள்ளியில் எங்கே ஒத்துப்போகிறோம் என்றால் இரண்டு பேருமே தமிழகத்தில் ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு விஷயத்தில் ஒத்துப்போகிறோம்” என்று கூறினார்.
- 14:32 (IST) 20 Jun 2023ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவு உண்மையில்லை - தெற்கு ரயில்வே
"ஒடிசா பாலாஷோரில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவு என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை என்று தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
- 14:26 (IST) 20 Jun 2023செஞ்சியில் போலி சாமியார் கைது
மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னைத் தானே கூறிகொண்டு, பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் நாடகமாடிய, செஞ்சி சந்தோஷ்குமார் என்ற போலீ சாமியாரை போலீசார் கைது செய்தனர். தன்னை மகா விஷ்ணு எனவும் தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி எனவும் கூறி வந்துள்ளார்.
- 14:11 (IST) 20 Jun 2023சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை - பேரவை செயலாளர்
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன என்று பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
- 13:58 (IST) 20 Jun 2023தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை - வானிலை மையம்
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 21,22 ஆகிய இரு தினங்கள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 13:43 (IST) 20 Jun 2023மாதம்தோறும் மின் கணக்கீடு எப்போது? - தங்கம் தென்னரசு விளக்கம்
மாதம்தோறும் மின் கணக்கீடு எப்போது, ஸ்மார்ட் மின்மீட்டர் முறையில் குழப்பம் உள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்த நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின் மாதம்தோறும் மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும்.” என்று கூறினார்.
- 13:35 (IST) 20 Jun 2023ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்ய இந்திய சினிமா தொழிலாளர்கள் கோரிக்கை
பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளனர். ராமர், அனுமனை அவதூறு செய்யும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஆதிபுருஷ் படத்தின் வசனம் உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதை புண்படுத்துகிறது. ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
- 13:06 (IST) 20 Jun 2023நடிகர் விஜய்யின் கூற்றை மறுக்க முடியாது - சீமான்
ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விஜயின் கூற்றை மறுக்க முடியாது.
50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவது தொடர் கதையாக உள்ளது - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
- 13:06 (IST) 20 Jun 2023ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து - பள்ளி குழந்தைகள் 8 பேர் காயம்
புதுச்சேரியில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி குழந்தைகள் 8 பேர் காயம்
குழந்தைகளை பார்வையிட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி
விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- 13:05 (IST) 20 Jun 2023சாலை வரி உயர்வு - இ.பி.எஸ் கண்டனம்
தமிழகத்தில் சாலை வரி உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக அரசு சாலை வரியை 5 சதவீதம் உயர்த்த முடிவு எடுத்திருப்பது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை தற்போதைய அரசு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம்.
சொந்த வாகனம் வாங்கும் சாமானிய மக்களின் கனவை கலைக்கும் விதமாக சாலை வரி உயர்வு உள்ளது.
ஏற்கனவே, 2முறை சொத்துவரி, மின் கட்டணம், ஆவின் பால் உள்ளிட்ட வரி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு மேலும் நிதி சுமை -
- 12:37 (IST) 20 Jun 2023செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் "தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"
அமைச்சர் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல்
- 12:36 (IST) 20 Jun 2023இந்தியன்-2 படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெறும் இந்தியன்-2 படப்பிடிப்பு
பலத்த போலீஸ் பாதுகாப்பு உடன் நடைபெறும் இந்தியன்-2 படப்பிடிப்பு
ரூ.1.24 கோடி கட்டணம் செலுத்தி படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றுள்ளது படக்குழு
லைகா தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம்
இந்தியன்-2 படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும் என படக்குழு தகவல்
- 12:35 (IST) 20 Jun 2023திடீர் உடல்நலக் குறைவால் நிதிஷ் வருகை ரத்து
திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை.
அதனால் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சென்னை புறப்பட்டார்
- 12:18 (IST) 20 Jun 202320 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் - ஆட்சியர் ஆய்வு
தொடர் மழையால், வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி முழுக்கொள்ளளவான 24 அடியில் 20 அடியை நெருங்கியது நீர்மட்டம்
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காஞ்சிபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு
ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்தார் ஆட்சியர்
உபரி நீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் ஆட்சியர்
- 12:16 (IST) 20 Jun 2023நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து
உடல்நிலை சரி இல்லாததால் தமிழகம் பயணம் ரத்து என தகவல்
திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்க இருந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
திடீர் உடல்நலக் குறைவால் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என விளக்கம்
- 11:56 (IST) 20 Jun 2023திரவுபதி முர்முவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பொதுவாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன் - முதல்வர் ட்வீட்
- 11:43 (IST) 20 Jun 2023செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை
அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வில் அமலாக்கத்துறை முறையீடு
உடல்நிலையை கருத்தில் கொண்டு செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது
- 11:16 (IST) 20 Jun 2023ராம்சரண் - உபசனா தம்பதிக்கு பெண் குழந்தை
ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் - உபசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
11 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ராம்சரண் - உபசனா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.
- 10:55 (IST) 20 Jun 2023சென்னையில் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்
"தெருக்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கே.கே.நகரில் தண்ணீர் தேங்கவில்லை" "முந்தைய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்"- பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
- 10:51 (IST) 20 Jun 2023தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது ஒரு கிராம் தங்கம் ரூ. 5,535க்கும், சவரன் ரூ. 44,280க்கும் விற்பனை
- 10:38 (IST) 20 Jun 2023பள்ளி வாகனம் மோதி விபத்து: 7 குழந்தைகள் காயம்
புதுச்சேரி, புஸ்சி வீதியில் ஆட்டோ மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்து ஏழு குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கு காயம் - மருத்துவமனையில் அனுமதி
- 09:58 (IST) 20 Jun 2023நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை
நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும். அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. காவேரி மருத்துவனையில் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . மா.சுப்பிரமணியன்
- 09:32 (IST) 20 Jun 2023இத்தாலியில் சென்னை மேயர் பிரியா
திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக, இத்தாலியின் ரோம் நகரில் உள்ள URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்ட சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார்
- 08:23 (IST) 20 Jun 2023பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. தொடர் மழை காரணமாக விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்
- 08:22 (IST) 20 Jun 202314 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், கடலூர், திருப்பத்தூர், தி.மலை, திருவள்ளூர்,மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு
- 08:22 (IST) 20 Jun 2023அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர்
அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி . அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி
- 08:21 (IST) 20 Jun 2023கனமழை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு
சென்னையில் கனமழை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு இலங்கை - சென்னை, சென்னை - இலங்கை செல்லும் 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து இலங்கை- சென்னை ஏர் இந்தியா விமானமும், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானமும் தாமதமாக புறப்பட்டன
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.