Advertisment

Tamil Breaking News Highlights: நாடு முழுவதும் இன்று நடைபெறும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு

Tamil Nadu News Update Today- 10 August 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet exam

Tamil news today live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

3 நாட்களுக்கு தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது

தாம்பரம் ரயில்வே யார்டு பணிகள் நடைபெற்று வருவதால் விரைவு ரயில்கள் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது

எழும்பூர் நோக்கி செல்லும் விரைவு ரயில்கள் அதற்கு பதிலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கும்

-தெற்கு ரயில்வே அறிவிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் இத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

  • Aug 10, 2024 22:38 IST
    வினேஷ் போகத் செய்ததை யாரும் மறந்துவிட வேண்டாம்: நீரஜ் சோப்ரா

    பதக்கங்களை வென்றால் நம்மை சாம்பியன் என்று அழைப்பார்கள். அதே சமயம்,  பதக்கம் வெல்லவில்லை என்றால் மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். நாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை யாரும் மறந்துவிட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வதாக ஈட்டி எரிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.



  • Aug 10, 2024 22:10 IST
    சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை

    தமிழ்நாட்டில் நேற்று (09.08.2024) 5979 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முந்தைய சாதனையான 5704 MW-ஐ (02.08.2024) விஞ்சியுள்ளது. மேலும், 41.40 MU மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் முதன்மையை உறுதிப்படுத்துகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.



  • Aug 10, 2024 20:50 IST
    8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிதாமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • Aug 10, 2024 20:19 IST
    தமிழில் பேசி அசத்தினார் நடிகை மாளவிகா மோகனன்

    "வணக்கம்.. எப்படி இருக்கீங்க? தங்கலான் ட்ரெய்லர் நல்லாருக்கா?" மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற ‘தங்கலான்’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் தமிழில் பேசி அசத்தினார் நடிகை மாளவிகா மோகனன்.



  • Aug 10, 2024 20:12 IST
    கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

    கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோவின் நேரடி விமான சேவை இன்று தொடங்கியது. பயணத்திற்கு முன் விமானப் பயணிகளிடம் பேசிய கேப்டன் விவேக் கந்தசாமி, “நானும், துணை கேப்டன் வினோத் குமார் சந்திரன் இருவருமே கோயம்புத்தூர்தான். ரொம்ப பெருமையாக இருக்குஎனப் பேசினார்.



  • Aug 10, 2024 19:07 IST
    பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்பது தான் முக்கிய பணி: பிரதமர் மோடி பேச்சு

    நிலச்சரிவு தொடர்பாக வயநாடு மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் "பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்பது தான் முக்கிய பணி" தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



  • Aug 10, 2024 19:06 IST
    கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்த 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

    திருவள்ளூரில் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்த 20 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளார்.



  • Aug 10, 2024 17:40 IST
    'வயநாடு பேரிடர் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை சிதைத்துவிட்டது': மோடி பேச்சு 

    'வயநாடு பேரிடர் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை சிதைத்துவிட்டது': மோடி பேச்சு வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "வயநாடு பேரிடர் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவை சிதைத்துவிட்டது. நிலச்சரிவு ஏற்பட்டது முதல், ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து வந்தேன். நிலச்சரிவு பாதிப்புகளை தொடர்ந்து கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

    வயநாடு பேரிடர் சாதாரணமானது அல்ல. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன். பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்திற்கு நாம்தான் பொறுப்பு. கேரளாவிற்கு தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படும்." என்று கூறினார். 

     



  • Aug 10, 2024 17:18 IST
    மெட்ரோ ரயிலுக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை - தயாநிதி மாறன் எம்.பி.

    "சென்னை மெட்ரோ ரயிலுக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை. இதை நான் சொல்லவில்லை.  மத்திய அமைச்சரே அவையில் சொன்னது" என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். 



  • Aug 10, 2024 17:08 IST
    ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா?  - அன்புமணி கேள்வி 

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:- 

    பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு வசதியாக வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையில் நேற்று பேரணி நடத்திய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, 2 வயது குழந்தை உள்ளிட்ட 1500&க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. நீதி கேட்டு போராடுவோருக்கு நீதி வழங்காமல் வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது.

    பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5&ஆம் நாள், சென்னை பெரம்பூரில் அவர் புதிதாக கட்டி வந்த வீட்டின் முன் வைத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொலையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார்? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்யும்படி கூலிப்படைகளை ஏவி விட்டவர்கள் யார்? என்பதைக் கண்டறிய வேண்டும்; உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்; அதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், பகுஜன்சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பகுஜன் சமாஜ் கட்சி, நீலம் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் எழும்பூர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை பேரணியும், போராட்டமும் நடத்தப் பட்டன. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்று கோரி போராட்டத்தில் பங்கேற்ற  ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவரது 2 வயது மகள் சாவித்திரி பாய், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500&க்கும் மேற்பட்டோர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. காவல்துறையின் இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகார அத்துமீறல் ஆகும்.

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அவரது கொலையின் பின்னணியில் உள்ள சதி குறித்து அறிந்து கொள்ளும் உரிமை அவரது குடும்பத்தினர், பகுஜன் சமாஜ் கட்சி, அவரது ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணி நியாயமானது. அதற்காக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது.

    ஜனநாயகத்தில் நியாயமான குரல்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதை நசுக்க தமிழக அரசும், காவல்துறையும் முயலக் கூடாது. அனுமதியின்றி பேரணியும், போராட்டமும் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி, குழந்தை, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 



  • Aug 10, 2024 16:35 IST
    வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!

    வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 



  • Aug 10, 2024 15:43 IST
    "தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

    திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், கள்ளகுறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, பட்டுகோட்டை, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 22 மாவட்டங்களில்  இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

     



  • Aug 10, 2024 14:52 IST
    வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு

    இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு தொடர்பாக இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு

    ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார்

    மேல்முறையீட்டை மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நேற்று 3 மணி நேரம் விசாரித்தார்

    50 கிலோ எடைப்பிரிவில், 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

    தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க கோரி மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகத்



  • Aug 10, 2024 14:06 IST
    6 மாவட்டங்களில் இன்று கனமழை

    தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

    ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் தி.மலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு



  • Aug 10, 2024 14:06 IST
    சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு

    காரைக்காலில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ரேஸ் சென்ற இளைஞர்களை மடக்கி பிடித்த போலீசார்

    20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

    ரேஸ் சென்ற சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு. இளைஞர்களை எச்சரித்து, சாலை விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்த போலீசார்



  • Aug 10, 2024 13:36 IST
    தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் கடிதம்

    தன் மீதான குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பெற வேண்டும் - விஷால்

    குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறாவிட்டால், சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் கடிதம்



  • Aug 10, 2024 13:22 IST
    வயநாடு - ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி.

     



  • Aug 10, 2024 12:54 IST
    சித்ரா மரண வழக்கு: 7 பேரும் விடுதலை

    சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட  7 பேரும் விடுதலை- திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு

    சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரது கணவர் ஹேமநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு



  • Aug 10, 2024 12:51 IST
    நிவாரண பொருட்களை கவுன்சிலர் எடுத்து செல்ல முயற்சி

    வயநாட்டில் நிவாரண பொருட்களை கவுன்சிலர் ஒருவர் எடுத்து செல்ல முயன்றதால் பரபரப்பு

    இரவு 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் நிவாரண பொருட்களை எடுத்து செல்ல முயற்சி

    பெண் கவுன்சிலரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

    நான் இந்த ஏரியா கவுன்சிலர், மக்களுக்கு கொடுக்கவே எடுத்து செல்கிறேன் என கவுன்சிலர் பதில்

    இரவு 1 மணிக்கு ஏன் வந்தீர்கள்? தனியாக ஏன் வந்தீர்கள்? என பொதுமக்கள் சரமாரி கேள்வி



  • Aug 10, 2024 12:20 IST
    பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை

    சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

    பொய் வழக்கு பதிவு செய்து சிலைக்  கடத்தல் பிரிவு முன்னான் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்தது தொடர்பாக  2023ம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது, 

    2019ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி காதர் பாட்ஷா அளித்த புகாரில் விசாரணை

    பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக காதர் பாட்ஷா வழக்கு

    சிலைக் கடத்தல் வழக்கில் தீனதயாளனை தப்பிக்க வைக்க, தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்ததாக புகார்

    காதர் பாட்ஷாவின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, பொன் மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது



  • Aug 10, 2024 11:48 IST
    கேரளா சென்றடைந்தார் பிரதமர் மோடி

    வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட கேரளா சென்றடைந்தார் பிரதமர் மோடி



  • Aug 10, 2024 11:47 IST
    முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

    சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

    2023ம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.



  • Aug 10, 2024 11:10 IST
    நெல்லை மேயர் பதவியேற்பு

    நெல்லை மாநகராட்சியின் 7வது மேயராக பதவியேற்றார் கிட்டு என்ற ராமகிருஷ்ணன்



  • Aug 10, 2024 11:10 IST
    மழைநீர் வடிகால்கள் கூடுதலாக தேவைப்படுகிறது: மேயர் பிரியா

    மழைநீர் வடிகால்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. புதிய மழைநீர் வடிகால் பணிகளை தொடங்கியுள்ளோம். கொசஸ்தலை ஆற்றில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது 

    மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் பணிகளுக்கு சவாலாக உள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தே, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகிறது.

    மேயர் பிரியா



  • Aug 10, 2024 11:07 IST
    ஆம்ஸ்ராங்கின் மனைவி, பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

    சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ராங்கின் மனைவி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1,500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய கோரி நேற்று வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



  • Aug 10, 2024 10:28 IST
    ஹனுமான் கோயிலில் மணீஷ் சிசோடியா பிரார்த்தனை

    டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் இன்று காலை பிரார்த்தனை செய்தார்.



  • Aug 10, 2024 10:23 IST
    குற்றாலத்தில் கடைகள் அடைப்பு போராட்டம்

    குற்றாலத்தில் வாடகை தொடர்பாக அறநிலையத் துறைக்கும், வியாபாரிகளுக்கும் இடையே பிரச்சினை

    கோயில் நிர்வாகத்தை கண்டித்து கடைகள் அடைப்பு போராட்டம்



  • Aug 10, 2024 10:16 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6445-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,560-க்கு விற்பனையாகிறது.



  • Aug 10, 2024 09:52 IST
    வேளச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

    வேளச்சேரி உள்வட்ட சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.11, 18, 25) HAPPY STREETS நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை ஒட்டி, அன்றைய தினங்களில் அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை



  • Aug 10, 2024 09:35 IST
    திருச்செந்தூர் கோயில் ஆகஸ்ட் வருவாய் ரூ.5.82 கோடி

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.5.82 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • Aug 10, 2024 09:15 IST
    தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த  4 நாட்களுக்கு 7- 11 செ.மீ அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Aug 10, 2024 08:35 IST
    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Aug 10, 2024 07:46 IST
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து நேற்று மாலை வரை 8000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை  19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு



  • Aug 10, 2024 07:41 IST
    பிரேசில் பயணிகள் விமானம் விபத்து: 61 பேர் உயிரிழப்பு

    பிரேசில், பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலில் இருந்து கேரோலியோஸ்-ல் உள்ள சாவ் பாலோ சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ATR 72- 500 பயணிகள் விமான விபத்துக்குள்ளானது.

    இதில் விமானத்தில் பயணித்த 57 பயணிகள் உட்பட 4 விமான ஊழியர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.



  • Aug 10, 2024 07:33 IST
    பாரிஸ் ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்

    பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் செஹ்ராவத் மற்றும் பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் இருவரும் பலபரீட்சை நடத்தினர்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது.



  • Aug 10, 2024 07:33 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் கைது

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை கைது செய்தது செம்பியம் போலீஸ்.

    ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



  • Aug 10, 2024 07:33 IST
    மோடி வயநாடு பயணம்: ராகுல் காந்தி நம்பிக்கை

    நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட வயநாட்டை நேரில் பார்வையிட மோடி முடிவெடுத்து இருப்பது வரவேற்கதக்கது. நிலச்சரிவின் கோரத்தை நேரில் பார்வையிட்டவுடன் அதனை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புகிறேன்

    ராகுல் காந்தி



  • Aug 10, 2024 07:32 IST
    பிரதமர் மோடி இன்று வயநாடு பயணம்

    வயநாடு நிலச்சரிவு - நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று (ஆக.10) வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி;
    இன்று காலை டெல்லியில் இருந்து கண்ணூர் வந்தடைந்து, அங்கிருந்து வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் வான்வழி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 



  • Aug 10, 2024 07:31 IST
    புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment